அன்பின் தம்பி முகுந்தன், மதுரை அனுப்பிய செய்தி
[8:39 PM, 1/8/2022] Revathi Narasimhan:
[9:41 PM, 1/8/2022] Muguntan Rajagopal: திருமலையில் நித்ய அன்னதானம் மிகச்சிறப்பாக கோடானு கோடி பக்தர்களுக்கு வயிறார சாப்பாடு போடப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் பக்தர்கள் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை ஏனெனில் முன் பந்தியில் குறைந்த அளவே மக்கள் அமர்ந்து சாப்பிடும் அளவில் மண்டபம் அமைந்து இருந்தது.
நம் கருணைக்கடல் திருவேங்கடவன் மெய் சிலிர்க்கும் ஓர் அற்புத நாடகத்தை நடத்தினார்.
ஒருநாள் மதியம் 2.00 மணி அளவில் திருமலை E.O அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார் .
அங்கிருந்த உதவி செயலாட்சி தலைவரிடம்
அய்யா ஒரு வேண்டுகோள், இங்கு ஸ்ரீனிவாசனை தரிசனம் செய்த பக்தர்கள் அன்னதான கூடத்தில்
நீண்ட நேரம் காத்து இருக்கிறார்களே கொஞ்சம் பெரிய மண்டபம் இருந்தால் இன்னும் நிறைய பேர் சாப்பிட முடியும் அல்லவா என்று கூறினார்.
அதற்கு அவர் நீங்கள் வரிசையில் நின்று சாப்பிட முடிந்தால் சாப்பிடலாம் இல்லை என்றால் செல்லுங்கள் என்று சற்று கோபத்துடன் கூறினார்.
ஐயையோ ! நான் எனக்காக சொல்லவில்லை ஸ்ரீனிவாசனின் பக்தர்களுக்காகத்தான் கூறினேன் என்றார். அப்படி என்றால் நீங்களே ஒரு மண்டபம் கட்டி கொடுங்கள் அதில் நீங்கள் சொன்னபடி சாப்பாடு போடலாம் என்றார்.
உடனே அந்த பக்தர் சரி புதிய அன்னதான கூடம் கட்டுவதற்கு என்ன செலவு ஆகும் என்றார்.
அந்த அதிகாரி மிகுந்த கோபத்துடன் ஓஹோ அப்படியா ஒரு 25 கோடி கொடுங்கள் பெருசா மண்டபம் கட்டி உங்கள் பெயரிலேயே சாப்பாடு போடலாம் போய் வேலைய பாருங்க சார் என்றார்.
உடனே அந்த பக்தர் தான் வைத்திருந்த கைப் பையில் இருந்த காசோலை புத்தகத்தை எடுத்து 25 கோடிக்கு ஒரே காசோலையாக திருமலை தேவஸ்தானத்தின் பெயரில் எழுதி அந்த அதிகாரியிடம் கொடுத்தார்.
ஆனால் அந்த உதவி செயலாட்சி தலைவர் வாயடைத்து போய் மிகுந்த அதிர்சியுடன் வேர்த்து விருவிருக்க விரைந்து சென்றுசெயலாட்சி தலைவரை அழைத்து வந்து நடந்தவற்றை கூறினார்.அவரும் ஆடிப்போனார்.
பின்னர் தாங்கள் யார் என்று மிகுந்த மரியாதையுடன் அவரை அமர வைத்து
கேட்டார்.அவர் அய்யா நான் ஆரம்ப காலத்தில் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டபட்ட குடும்பம் .
அப்படி இருந்தும் எழுமலை ஆண்டவன் மீது மிகுந்த பாசத்துடன் பக்தியும் வைத்து இருந்தேன் .
திருமலைக்கு ஒவ்வொரு முறையும் நடந்தே வருவேன் தர்ம தரிசனத்தில்எவ்வளவு நேரம் ஆனாலும் என் அப்பன் ஏழுமலையானை பொறுமையுடன்தரிசனம் செய்து, எனக்கு ஒருவழி காட்டி நேர்மையுடன் நான் வாழ ஒரு தொழில் வேண்டும் அதில் உனக்கு லாபத்தில் சரி பாதி உன்னிடம் சேர்க்கிறேன் தந்தையே என்று வேண்டி பின்னர் இலவச சாப்பாடு வரிசையில் நின்று என் வயிறார நான் சாப்பிட்டு செல்வேன்.
பின்னர் நடைபாதை வழியாக மலையிறங்கி வீட்டிற்கு செல்வேன்.நாட்கள் செல்ல செல்ல பின்னர் என் தொழில் வளர்ச்சி அடைந்து இன்று மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தாலும் இது எல்லாம் என் அப்பன் எழுமலையான் சொத்து.
இன்று வரை நான் தனியாகவே ஒவ்வொரு முறையும் நடந்தே மலைக்கு வந்து தர்மதரிசனத்தில் நின்று தரிசனம் செய்து அவருக்கு சேர வேண்டிய பங்கை உண்டியில் போட்டு விட்டு அன்னதான கூடத்தில் வரிசையில் நின்று ஆனந்தமாய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு செல்வேன் .
நீங்கள் பலமுறை தினசரி பத்திரிக்கையில் அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் உண்டியலில் இரண்டு கோடி ,மூன்று கோடி ஒரே பண்டிலாக
போட்டுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளீர்கள் .
அதை நான் தான் போட்டேன் . ஏனென்றால் இதை தேவஸ்தான அதிகாரி வாயிலாக கொடுத்திருந்தால் என்னை மிகுந்த மரியாதை செய்து சிறப்பு தரிசனம் அளித்திருப்பார்கள் .
ஆனால் அதை நான் விரும்ப வில்லை .
எந்த சூழ் நிலையிலும் என்னுடைய தந்தைக்கும் எனக்கும் உள்ள அந்த ஆரம்ப கால நினைவுகள் மாறிவிடக்கூடாது . இந்த பணம் என்னை என் பழைய வாழ்க்கையை மாற்றினாலும் நான் என்னுடைய நன்றியை மறக்காமல் இன்றும் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் நான் எப்படி திருமலைக்கு வந்தேனோ அதை போலவே இன்றும் நடந்தே வந்து நடந்தே செல்கிறேன் .
என் நண்பர்களையோ என் உறவினர்களையோ நான் அழைத்து வந்தால்அவர்கள் எண்ணப்படி நான் மாற வேண்டும் .இவ்வளவு வசதி இருந்தும் நடந்து செல்வதா , தர்ம தரிசனத்தில் காத்து இருப்பதா இலவச சாப்பாட்டிற்காக வரிசையில் நிற்பதா என்று புலம்பி தள்ளுவார்கள்.அதனால் தான் எப்பொழுதும் தனியாகவே வருவேன் .இன்று தரிசனம் முடிந்து அன்னதான கூடத்தில் வரிசையில் நிற்கும் போது
நிறைய பேர் வரிசையில் காத்து நிற்பதை பார்த்து இன்று திடீரெனஎன் மனதில் இதை விட பெரிய மண்டபம் இருந்தால் ஒரே நேரத்தில் நிறைய பக்தர்கள் அமர்ந்து சாப்பிட முடியும் அல்லவா?
இந்த எண்ணத்தை என்னில் உருவாக்கியதும் என் தந்தை திருவேங்கடவன் தான் .அவர் சொல்ல சொல்ல அவரை சுற்றி இருந்த அதிகாரிகளின் கண்களில்நீர் அருவியாய் பெருகி பெருமாளின் லீலைகளையும் ,அவர் பக்தரின் பக்தியையும் பார்த்து வாயடைத்து அமைதியாய் நின்றிருந்தனர் .
அந்த அறையில் மின் விசிறியின் சப்தம் மட்டுமே இருந்தது.பின்பு தான் அவர் ஆந்திரமாநிலத்தில் ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று அறிந்து ஆச்சர்யத்துடன் அவரிடம் உங்கள் விருப்ப படி புதிய அன்னதான கூடம் கட்டி உங்கள் பெயரையே அதற்கு வைத்து விடலாம் என்றனர்.வேண்டாம்! வேண்டாம் ! சாதாரண ஏழை என்னை செல்வந்தனாக வாழவைத்தது இந்த திருமலை அப்பனே இந்த பணம் என்னுடையதல்ல எழுமலையானுக்கு சொந்தமானது.தேவஸ்தானம் விரும்பும் பெயரில் நடக்கட்டும் என்றதும்,அதிகாரிகள் மெய்சிலிர்த்து போனார்கள்.ஒரே வருடத்தில் கட்டப்பட்ட இந்த புதிய அன்னதான கூடம்ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு கட்டப்பட்டு அதற்கு "மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா" அன்னதான கூடம் என்று பெயரிடப்பட்டு உள்ளது .
இது ஆசியாவிலேயே பெரிய அன்னதான கூடமாகும்
11 comments:
புதுமையான கர்ணன்.
அன்பு மாதேவி,
நலமுடன் இருங்கள் அம்மா.
நன்றி.
ஆமாம். கலியுகக் கர்ணன்.
வணக்கம் சகோதரி
தகவல் அறிந்து கொண்டேன். என்ன ஒரு பக்தி..! படிக்கையில் மெய் சிலிர்த்து போய் விட்டது. எல்லாம் அவனருளே..! இந்த நிலையில் வாழ, இந்த நிலையில் எம்பெருமானை காண அவர் ஏழேழு பிறவிதோறும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இறைவன் கருணையே கருணை. தகவலை அனுப்பிய உங்கள் சகோதரருக்கும், பகிர்ந்த உங்களுக்கும் மிக்க நன்றிகள்.
ஓம் நமோ நாராயணாய நமஃ.🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இதை முன்பே படித்திருக்கிறேன். இதுபோலவே சஹஸ்ரதளத்திற்கும் ஒரு நிகழ்வு உண்டு. எல்லாம் அவன் செயல்.
என்ன இருந்தபோதிலும், இருக்கும்போது கொடுப்பதுதான் மகிழ்ச்சி. அதற்கான மனதும் வரவேண்டும்
அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.
இந்த மாதிரி செய்திகளைப் படிக்கும் போது
இறைவனின் மேல் நம்பிக்கை கெட்டிப் படுகிறது.
பழைய செய்தியாகக் கூட இருக்கலாம்.
நன்மை கொடுக்கும் நல்லவர்கள்
செய்யும் செயல்கள் நம்மையும் உயர்த்தும். அந்த வள்ளலும் நன்றாக இருக்க வேண்டும்.
நன்றி மா.
தம்பியிடம் சொல்கிறேன்.
இதை முன்பே படித்திருக்கிறேன். இதுபோலவே சஹஸ்ரதளத்திற்கும் ஒரு நிகழ்வு உண்டு. எல்லாம் அவன் செயல்."
அன்பின் முரளிமா,
நல்லதுதான்.
சஹஸ்ரதளமா? அப்படியொரு வெப்சைட்?
நல்ல செய்திகள் என்னைத் தாமதமாக வந்தடைந்தாலும்
சுகமாகத் தான் இருக்கிறது.
பெருமாளின் கருணையே கருணை.
இது சில வருடங்கள் முன்னரே படித்த நினைவு. என்றாலும் திரும்பப் படிக்கச் சுவைதான். பகிர்வுக்கு நன்றி.
//மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா" அன்னதான கூடம் என்று பெயரிடப்பட்டு உள்ளது .
இது ஆசியாவிலேயே பெரிய அன்னதான கூடமாகும்//
பக்தர் கட்டிக் கொடுத்த அன்னதான கூடம் பற்றிய விவரம் உயர்ந்த மனிதரை அடையாளம் காட்டுகிறது.
அவருக்கு வணக்கங்கள். அவருக்கு இறைவன் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் .
அன்பின் கீதாமா,
மிக மிக நல்ல செய்தி. இது அனைவருக்கும் தெரிந்திருப்பது
புரியக் கூடிய விஷயம்.
இன்னும் இவரைப் போல எத்தனை
புண்ணியவான் களோ.
எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்.
அன்பின் கோமதிமா,,
வாழ்க வளமுடன்.
இவரைப் போன்ற மகானுபாவர்கள்
இருப்பதால் திருமலையின் புனிதம் இன்னும் வளரும்.
இறைவனின் அருள் என்றும்
நம்முடன் இருக்க வேண்டும்.
மிக நன்றி மா.
முன்பே படித்த செய்தி என்றாலும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். எல்லாம் அவன் செயல். படிக்க தந்தமைக்கு நன்றி.
Post a Comment