எல்லோரும் வளமுடன் வாழவேண்டும்
மனதைக் கவர்ந்த. பழைய பaaடல்கள் வரிசையில் இந்தப் பதிவும்:)
படம் சண்டிராணி!
படம் வாழ்விலே ஒருநாள். ஜி வரலக்ஷ்மி சிவாஜி.
நம் ராஜா ராணி. பத்மினி சிவாஜி.காத்திருந்த கண்கள் படம் நடிகையர் திலகம் ஜெமினி.
பார்க்காதபடங்களின் பாடல்களை மட்டும் கேட்டு வளர்ந்தோம்.
இடையில் அப்பாவின் கையில் வானொலி போய் விட்டால்
டிசம்பர் சீசனின் கச்சேரிகள் தொடரும்.
அதுவும் இரவு ஒன்பது மணிக்கு.
அம்மா அப்பா இருவருக்கும் கர்னாடக இசை எவ்வளவு பிடிக்குமோ
அவ்வளவு எனக்கு சினிமா பாடல்கள்
மேல் மோகம்.
பெரிய தம்பிக்கு எதுவும் வேண்டாம். விளையாட்டு,
சினிமா எதுவுமே வேண்டாம்.
படிப்பும் புத்தகங்களும் இருந்தால் போதும்.
சின்னவனுக்குப் படிப்பு வேப்பங்காய். விளையாட
எப்பொழுதும் தயார். அவன் வெளியே போவான்.
இல்லையெனில் அவர்கள் நம் வீட்டு முற்றத்துக்கு
வந்துவிடுவார்கள்.
பாப்பா மலர் என்று ஒரு நிகழ்ச்சி.
அதைக் கேட்க நான் வெளியே பக்கத்து வீட்டுக்குப்
போகிறேன் ,
என்பதற்காக அப்பா மதுரை சென்று
வாங்கி வந்த ரேடியோ எங்கள் குடும்பத்தோடு
26 வருடங்கள் தொடர்ந்தது.
என் திருமணத்துக்குப் பிறகு சிங்கம் வாங்கிக் கொடுத்த ஃபிலிப்ஸ்
பெரிய ரேடியோ.
புஷ் டிரான்ஸிஸ்டர் எல்லாமே என் பிரிய சினேகிதிகள்.
1978இல் அப்பா வீட்டுக்கு
முதல் சாலிடேர் டிவி வந்ததும் பழைய
ரேடியோவை எங்கள் வீட்டுக்கு எடுத்து வந்து
விட்டேன்.:)
என் அருமை ரீஸா ரேடியோ நன்றாக உழைத்து, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா,பிபிசி,
ரேடியோ சிலோன் என்று உலகத்தின்
பலபாகங்களை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது.
ரேடியோ குவைத் கூட சில வருடங்கள் கேட்டிருக்கிறேன்.
ஏன் இந்த ரேடியோ நினைவுகள் என்று தெரியவில்லை.
இப்போது இணையத்திலேயே வானொலி
இசையையும் கேட்கலாம்.
அப்படியும் கையடக்கமாக மகன் வாங்கிக் கொடுத்த
லண்டன் ரேடியோ அலமாரியில் பத்திரமாக
இருக்கிறது.
இறைவன் அள்ளிக் கொடுக்கும் இசை அனுபவங்களை இங்கே பதிவதில்
ஒரு மகிழ்ச்சி. வெளியே பனி மழை. ஐஸ் மழை..:)பனிஸ்னொ மழையை விட ஐஸ் மழை மிக
ஆபத்தானது.
ஸ்னோ வழுக்காது .ஐஸ் வழுக்கிவிடும்.
அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
இறைவன் காக்க வேண்டும்.
14 comments:
அருமையான நினைவுகள். சண்டிராணி படம் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் "திகம்பர சாமியார்" நாவலை ஒட்டி எடுக்கப்பட்டிருந்தது என என் அம்மா சொல்வார். எல்லாமே அருமை. எங்க வீட்டில் ரேடியோவெல்லாம் லக்சுரினு அப்பா வாங்கவே இல்லை. அறுபதுகளில் அண்ணா வேலைக்குப் போனதும் முதலில் வாங்கிய ஃபிலிப்ஸ் ட்ரான்சிஸ்டரை எனக்காகக் கொண்டு வந்து கொடுத்தார். அது வந்தப்புறம் அதன் வாயும் ஓயாது. கூடவே பாடும் என் வாயும். அப்பாவிடம் திட்டு வாங்கிக்கொண்டு தான் ஓயும். :)))))
பாடல்கள் எல்லாம் அருமை. மலரும் நினைவுகளும் மிக அருமை.
பனி மழை கஷ்டமே, பார்க்க அழகு.
உடம்பை பாரத்து கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் போது வருகிறேன் பதிவுகளை படிக்க. அனைவருக்கும் என் அன்பு .
வாழ்க வளமுடன்.
கவனமாக இருங்கள் எல்லா இடமும் பனி மழை பெய்வதாக செய்தியில் பார்ததேன்.
அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.
திகம்பர சாமியார் புத்தகம் பின்னாட்களில் படித்திருக்கிறேன்.
நம்பியார் சாமியாராக நடித்திருப்பார்.
சண்டி ராணி அந்தப் படமா.
அட!
இந்தப் படமும் நான் பார்த்ததில்லை. ஆனால்
பாடல் கேட்டிருக்கிறேன்.
என் தோழிகள் அனைவர் வீட்டிற்கும் வந்த பிறகு தான்
எங்கள் வீட்டிற்கும் வானொலி வந்தது.
1956இல் இருக்கும் என்று நினைக்கிறேன்.
பாடல்களைக் கேட்டு ரசித்ததற்கு மிக நன்றி மா.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
உங்கள் எழுத்தப் படிக்க முடியவில்லை. நம் கீதா சாம்பசிவத்திற்கும்
நேரம் ஒழியவில்லை.
வேலைகள் முடித்துக் கொண்டு பிறகு வாருங்கள்.
இப்போது மகன் மருமகள், பேரனோடு
அமைதியாக இருக்கவும்.
இந்த நோய்த் தொற்று அதிகரிப்பது
மனதைச் சங்கடப் படுத்துகிறது. ஓயவே ஓயாதா
என்று அலுப்பு எல்லோருக்கும் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
என்ன செய்யலாம். கவனமுடன்,மன உறுதியுடன்
இருங்கள். நன்றி மா.
அன்பின் கோமதிமா
நலமுடன் இருங்கள்.
ஐஸ் மழை, பனிமழையை விடக்
கடினமாக இருக்கிறது.
பேரனுக்கு வேற வேறு இடத்துக்கு ஒரு போட்டிக்காகச்
செல்ல வேண்டிய நிலைமை.
அவர்கள் போய் வரும் வரை
நமக்கு அமையில்லை.
இந்த ஊர் அப்படி என்ன செய்வது.
நன்றி மா.
ரேடியோ நினைவுகள் அருமை. இந்தப் படங்கள் எதுவும் தெரியலை இப்போதுதான் அறிகிறேன் அம்மா. அப்பா கை அடக்க ட்ரான்சிஸ்டர் வைத்துக் கொண்டு காதருகே வைத்துக் கொண்டு கேட்பார்.
பெரிய மர்ஃபி ரேடியே உயரத்தில் பீரோ மேலே மாமா வீட்டில் இருக்கும். நாங்கள் எல்லாம் ஒரே வீட்டில் வளர்ந்ததால் அந்த ரேடியோ மட்டும் அதை மாமா பெண்ணில் பெரியவள் மட்டும்தான் ஆப்பரெட் செய்வாஅள் அதுவும் வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றால் மட்டுமே. பாட்டு கேட்க அனுமதி கிடையாது...
உங்கள் பொக்கிஷமான நினைவுகள் ரசனை.
கீதா
பனிஸ்னொ மழையை விட ஐஸ் மழை மிக
ஆபத்தானது.
ஸ்னோ வழுக்காது .ஐஸ் வழுக்கிவிடும். //
ஆமாம் அம்மா. ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும்
கீதா
பனிமழை சிலிர்க்க வைக்கிறது. எப்போது அந்த அனுபவம் கிடைக்கும் என்று தெரியவில்லை. ரொம்ப வயசானப்பறம் கிடைத்து என்ன புண்ணியம் எனக்கு?
மே மாதம் கங்கோத்ரி போகலாமா என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
ரேடியோ அனுபவம் ரொம்பவே ரசிக்கவைத்தது. எங்கப்பாவிடம் இருந்த பிலிப்ஸ் (என்று நினைவு) ரேடியோவிற்கு தோல் கவர் இருந்ததை நினைக்கிறேன். அப்போல்லாம் அதற்கான அனுமதி பாஸ்புக்கையும் பார்த்திருக்கிறேன்.
அன்பின் முரளிமா,
நலமுடன் இருங்கள்.
''பனிமழை சிலிர்க்க வைக்கிறது. எப்போது அந்த அனுபவம் கிடைக்கும் என்று தெரியவில்லை. ரொம்ப வயசானப்பறம் கிடைத்து என்ன புண்ணியம் எனக்கு''
இதற்காகவே நீங்கள் இங்கே வர பகவான் அருள வேண்டும்.!!
நான் சொல்லி இருப்பது
பனி மழை அல்ல. ஐஸ் மழை.
இது மேலே பட்டால் ஊசிபோலக் குத்தும்.
ஸ்னோ என்று நினைத்து ஐஸில் கால் வைத்தால்,
எத்தனை எலும்புகள் முறியும் என்று தெரியாது:)
இயற்கையின் குவாரண்ட்டைன் இது.
பயங்கர ஸ்னோ காலத்தில் ஓடி வரும்
செல்லங்களும் அவைகளிம் ஓணர்களும்,
மூன்று நாட்களாக வெளியே காணோம்!!
இன்று சூரிய பகவான் வந்தால்
உருகலாம் ஐஸ்.
டிரான்ஸிஸ்டர்களுக்குத் தோல் கவர் இல்லாட்டா
ரெக்சின் கவர் உண்டு.
சிலசமயம் கிழிந்துவிடும். அப்போது கடாசிவிட்டு
கைகளில் ஏந்தியபடி,
மாடி ,கீழ், சமையலறை என்று வலம் வரலாம்:)
இணை பிரியா தோழி. நன்றி மா முரளி.
''உங்கள் பொக்கிஷமான நினைவுகள் ரசனை.''
இப்போது நடக்கின்ற வாழ்விலும் சில நன்மைகள் இருந்தாலும்
கபடில்லாத இளம் வயது நினைவுகள்
எப்பொழுதும் மகிழ்ச்சி கொடுப்பவை அம்மா.
பெற்றோர், சிங்கம், தம்பிகள்,
மாமனார் மாமியார் எல்லோருடைய
அருமையான அன்பு வெளிப்பாடுகள்
சிறந்த விழாக்கள் எல்லாமே புதிய
பரிமாணத்தில் பார்க்கிறேன்.
பத்திரமாக இருங்கள்.
ரேடியோ நினைவுகள் இனிமை. எங்கள் வீட்டிலும் ஒரு வால்வு ரேடியோ இருந்தது. அதை இயக்க அனுமதி உண்டு ஆனால் அதனை அக்கக்காக பிரித்து ரிப்பேர் செய்த வால் தனமும் நடந்தது!:) பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள்.
பிரித்து மேயப்பட்ட ரேடியோ.! ஹாஹாஹா.
எங்க வீட்டு ஃபிலிப்ஸுக்கு அது நடந்திருக்கு.
உள்ளே எரியும் சின்ன பல்பின் மேல் ஒரு மோகம்.
ரேடியோ பழுதான போது இதைச் செய்திருக்கிறேன்.
மிக நன்றி மா.
Post a Comment