எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
எங்கள் பள்ளி நாட்களில் பிரபலமான ஹீரோ.!
இவர் திண்டுக்கல்லில் பிறந்தவர் என்பதில்
எங்களுக்கெல்லாம் பெருமை.
பேசும்படம் புத்தகம் படிப்பது
ஒரு பெரிய பொழுது போக்கு.
தோழி ஷாந்தி என்ற ஆறுமுகத்தாய்
திண்டுக்கல்லில் பிரபல சமூகத்தாரின் வீட்டுப் பெண்.
திரை போட்ட மாட்டு வண்டியில் வந்து இறங்குவாள்.
மதியம் அண்ணியுடன் அவர்கள் வீட்டு
சமையல் செய்யும் ஆச்சியும் வருவார்கள்.
ஒரு பெரிய டிஃபன் காரியர் கூடவே வரும்.
தோசைகள்,
இட்லிகள், வடை, சாதம் ,குழம்பு ,பொரியல் என்று தனிதனி டப்பாக்களில்
அடைத்து வரும்.
நாசூக்காக மரத்தடியில்
ஜமக்காளம் விரித்து அவர்கள்
உட்கார,
தனக்கு வேண்டும் என்பதைக் கொண்டு எங்கள்
டிஃபன் பாக்ஸில் போட்டு விடுவாள்.
அண்ணியின் அன்புமுகம் இன்னும் நினைவில்.
அவளது சோமு அண்ணன் சிங்கப்பூரிலிருந்து
வாங்கி வந்த கல் பதித்த வாட்ச் கூட
நினைவில் படமாக நிழலாடுகிறது.
அவளையும் அவளின் அன்பையும்
நினைத்து மகிழ்கிறேன்.
அவளுக்குப் பிடித்த பாடல்கள்.
அவளும் கணவர் சிதம்பரமும். பெண்கள்,பையன்
அனைவரும் திருமணமாகி நல்வாழ்வு
வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
மறக்காத அன்புத்தோழி நீ வாழ்க வளமுடன்.
10 comments:
நன்று அம்மா தங்களோடு நானும் வாழ்த்துகிறேன். சி.எல்.ஆனந்தனின் காணொளி கண்டு கொண்டு இருக்கிறேன்.
ஆனந்தன் ஒரே படத்தில் கதாநாயகன் என்றாலும் மறக்க முடியாத பாடல்களுடன் கூடிய படம். பெண்கள் இருவரின் டிஸ்கோ சாந்தி மட்டும் கொஞ்சம் பாடுபட்டு முன்னுக்கு வந்தார். இன்னொருத்தர் பிரகாஷ்ராஜைக் கல்யாணம் செய்து கொண்டு கஷ்டப்பட்டார் போல! :(
அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஆனந்தன் , அறிமுகமான படப் பாடல்கள்
திண்டுக்கல்லில் எல்லா இடங்களிலும் முழங்கும்.
பின்னாட்களில்
தொலைக்காட்சியில் இந்தப் படங்களைப்
பார்த்தேன். மிக நன்றி மா.
பேசும்படம் புத்தகத்தைக் கொண்டு வரும் தோழியை
அன்புடன் நினைக்கிறேன்.
அனைவரும் வாழ்க வளமுடன்.
அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
தொற்றில்லாத வாழ்வு தொடரட்டும்.
ஆனந்தன் நல்ல நடிகர். முகராசி இல்லை என்பார்கள்.
அவர் பெண்களும் நடித்தது தெரியும்.
டிஸ்கோ சாந்தி தெரியும். இன்னோரு பெண் லலித குமாரி என்று நினைக்கிறேன்.
பாலச்சந்தர் படங்களில் வருவார்.
பிரகாஷ் ராஜைத் திருமணம் செய்ததும்
விவாக ரத்தும் செய்தார் இலையா.
என்னவோ.:(
இவர்கள் வாழ்க்கை வினோதம் தான்.
நன்றி மா.
வணக்கம் சகோதரி
தங்கள் நினைவுகள் அருமையாக உள்ளது. உங்கள் தோழிக்கும் என் வாழ்த்துகளையும் சொல்லுங்கள். எங்கிருந்தாலும் நலமாக மகிழ்வுடன் இருக்கட்டும்.அவருக்காக என் பிரார்த்தனைகளும்.
நடிகர் ஆனந்தன் நடிப்பு நன்றாக இருக்கும். சில படங்களில் கதாநாயகனாக பரிமளித்திருக்கும் அவருக்கு பெரும்பாலும் வில்லன் பாத்திரங்கள் தரப்பட்டது என நினைக்கிறேன். ஆனால் அதிலும் கனகச்சிதமாக பொருந்தி நடிப்பார்.அவர் குறித்த காணொளி கேட்கிறேன்.
அந்த நிலா பாடல் எவ்வளவு தடவை கேட்டாலும் சலிக்காது.அருமையான இசை, நல்ல குரல் வளங்கள், மற்றும் மக்கள் திலகம், அபிநய சரஸ்வதியின் நடனம்.என்றுமே மறக்க முடியாதது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
அன்பான பின்னூட்டத்திற்கு மிக நன்றி.
அவள் கணவர் ஆரணியில் புடவைக் கடை ஒன்று வைத்திருந்தார்.
அதுவரை தொடர்பில் இருந்தோம்.
25 வருடங்களுக்கு முன்.
பிறகு அவர்களுக்கு ஏதோ சிரமம். விருது நகருக்குச் சென்று விட்டனர்.
அதன் பிறகு தொடர்பே இல்லை.
அவளை மாதிரி ஒரு நல்ல தோழியைப்
பெற்றதற்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.
காலம் பல தொடர்புகளைத் துண்டித்து விடுகிறது.
அடடே.. ஆனந்தன் உங்கள் ஊர்க்காரரா? தொஹியைப் பற்றிய நினைவுகள் அருமை. வாழ்க நட்பு. அன்று வந்ததும் அதே நிலா செம சாங். படத்தில் எம் ஜி ஆர் கலக்கும் காட்சி அது.
நல்லதொரு பகிர்வு. காணொளிகளை இனிமேல் தான் பார்க்க வேண்டும். பதிவின் கடைசி வரி மனதை தொட்டது. கால ஓட்டத்தில் பல நட்புகளை இழப்பது வருத்தமே.
அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
தொற்றில்லா வாழ்வு தொடர.
வேண்டும்.
2019 இல் கூட விருதுனகரில் வண்டியை நிறுத்தி,
அவள் தொலைபேசியைக் கண்டுபிடிக்க முயற்சித்தேன்.
அங்கே யாரும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
விலாசம் தெரியாது.
திண்டுக்கல்லுக்கே போய் விட்டார்களோ என்னவோ.
அதே இதே நிலா என்றுமே மறக்க முடியாத
க்ளாஸிக்.
அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
இல்லறத்தில் நுழைந்து விட்டால்
இழப்பதில் பழைய நட்புகளையும் தான். அவர்களும்
வேறு வேறு வகையில்
நேரம் ,காலம் இல்லாமல் இருப்பார்கள்.
இந்த சாந்தி என்னிடம் வைத்திருந்த பாசம் கொஞ்ச நஞ்சம் அல்ல.
எப்போதும் சரோஜா தேவி போலவே
நடை உடை பாவனைகள்.
மிக நன்றி மா.நட்புகள் நீடிக்க வேண்டும்.
Post a Comment