வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும். தொற்றில்லா
வாழ்வு அனைவருக்கும் கிட்ட இறைவன் துணை.
கண்கள் மனதின் வாசல். உள்ளத்தின் ஜன்னல் என்றெல்லாம் பழைய
கவிதைகள் வரும்.
விழிகள் பற்றிய பாடல்கள்.
பார்வை பற்றிய பாடல்கள் எல்லாம் கொஞ்சம் பதிந்திருக்கிறேன்.
உண்மையில் கண்களைப் பரிசோதித்ததால்
ஒரு உயிர் காப்பாற்றப் பட்டது.அந்தக் கதையே இங்கே.
இன்று கண்ணுக்குள் பார்க்கலாம்.
அண்மையில் இங்கே இருக்கும் குடும்ப நண்பர் ஒருவருக்கு
சர்க்கரை நோய்க்கான கண் பரிசோதனையின் போது
ரெடினா, கண்ணிலிருக்கும் இரத்தக் குழாய் ப்பரி
சோதனையில் ஆஞ்சியோ செய்த போது'
செலுத்தப்பட்ட டை( சாயம்) ஒத்துக்கொள்ளாமல்
வாந்தி வந்திருக்கிறது.
அதன் பின் உடல் நலம் சரியில்லை .வெறும் அசிடிட்டி என்று நினைத்துப்
பின் அதுவும் சரிப்படாமல் திகைத்து, ஓமிக்ரான் டெஸ்ட்.....
அதுவும் இல்லை.ஆனால் மூச்சுத் திணறல்.
உடனே இருதயப்
பரிசோதனை. அடைப்பு கண்டுபிடித்து இரண்டு ஸ்டெண்ட்கள்
பொருத்தப் பட்டிருக்கின்றன.
என்னடா இது என்று வருத்தமாக இருந்தது.
48 வயதுதான் ஆகிறது.
நல்லவேளை இத்துடன் போச்சே என்று
அவர் மனைவிக்கு ஆறுதல் சொன்னோம்.
அவர் வீட்டுக்கு வந்து வேலையும் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
பெரிய கம்பெனி வைத்திருக்கிறார்.
நல்ல சம்பாத்யம்.
எதற்காக இத்தனை வேலை.?
சம்பாதித்தது போதும் என்று நிறுத்த முடியாதோ?
சம்பாதித்தது போதும் என்று நிறுத்த முடியாதோ?
இறைவன் துணை.
இந்தப் பதிவில் நண்பரைப் பற்றி எழுதினதற்குக்
காரணம் நெடு நாட்களாகக் கண் பரிசோதனையைத் தள்ளிப்
போட்டார்.
ரத்த அழுத்தம், சர்க்கரை,கொலெஸ்டிரால்
என்று வேறு தொந்தரவுகள்.
சரியான சமயத்தில் வெங்கடாசலபதி, நம் அரோரா பாலாஜி
ஆட்கொண்டார்.
நமக்குத்தான் கவலைப் படத்தெம்பில்லை.
19 comments:
நண்பர் நலம் பெற எனது பிரார்த்தனைகளும்.., பாடல்களை கேட்கிறேன்.
அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள் ராஜா.
தொற்று பரவும் வேகம் திகைக்க வைத்தாலும்
மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
நான் சொன்ன பையனும் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. மன அழுத்தம் கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.
நலமுடன் இருக்க வேண்டும்.
வணக்கம் சகோதரி
தங்கள் குடும்ப நண்பர் பல வித இன்னல்களுக்கு நடுவே நலம் பெற்று திரும்பி வந்திருப்பது அறிந்து மகிழ்ந்தேன். அவர் என்றும் நலமாக இருக்க நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
தாங்கள் தொகுத்து பகிர்ந்த கண்களைப் பற்றிய பாடல்கள் அருமை. முதலில் அந்த சிவாஜி, பத்மினி பாட்டு கேட்டு ரொம்ப நாளாகி விட்டது. ரசித்து கேட்டேன். இரண்டாவதாக புது பாட்டு இதுவரை கேட்டதில்லை. மூன்றாவது பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். அதில் அமலா நடிப்பு நன்றாக இருக்கும். மூன்றுமே இப்போது கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நண்பர் நலம் பெற வேண்டுகிறேன் அம்மா.
மனிதன் பணத்தின் பின்னே ஓடத்துவங்கிய பிறகுதான் நோய்களும் பெறுகி விட்டது.
அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
நண்பர் நலமடைந்து வருகிறார்.
இந்த ஊரில் உறவினர் யாரும் இல்லை. மனைவி குழந்தைகளையும். ஆஸ்பத்திரியில்
உள்ளே அனுமதிக்கவில்லை.
நாலு நாட்களில் வீட்டுக்கு வந்தாச்சு. எப்படியானாலும் சங்கடம் சங்கடம் தானே:(
எப்படியும் இறைவன் அவர்களுடன் இருக்க வேண்டும்.
இந்தப். பாடல்களை முன்பே ஷெட்யூல் செய்து வைத்திருந்தேன் அம்மா. இந்த செய்தியையும் சேர்தது விட்டேன்.
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி தான் பதிவு. மிக நன்றி மா.
அன்பின் தேவகோட்டை ஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
உங்கள் கருத்து தான் எனக்கும்.
போதும் என்ற மனம் வேண்டும் இல்லையா.
இறைவன் துணை.
ஓமிக்ரான் பற்றிக் குறிப்பிட்டிருப்பப்பதால் சம்பவம் புதுசு என்று தெரிகிறது. நண்பர் நல்ல நேரத்தில் விழித்துக் கொண்டார். அதனால் பிழைத்துக் கொண்டார்.
நல்ல பாடல்கள் அத்தனையும்.
பணத்தைத் தேடி ஓடுபவனுக்கு நோய் வருகிறதா? இல்லை இவனுக்கு நோய் வரும், அதற்கு பணம் சேர்த்துக்கொள் என்று இறைவன் சித்தமா?
அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஆமாம் மா.
போன வியாழக்கிழமை இரவு
அவசர உதவி நாடிச் சென்று
பெற்று ஞாயிறு திரும்பி விட்டார்.
பணம் வேண்டியதுதான். நிறைய வேண்டும் .அதில்
மறுப்பதற்கு ஒன்றும் இல்லை.
இந்த ஊரில் இன்ஷுரன்ஸ் நிறைய உதவி செய்யும்.
கொஞ்சமாவது இவர்கள் கொடுக்க வேண்டி வந்திருக்கும்.
அவர் செய்யும் வேலை அப்படிப்பட்டது. ரொம்ப ஸ்டிரெஸ்
ஜாஸ்தி.
அதைதான் சொன்னேன்.
யாரையும் நீதிபதி ஸ்தானத்தில் இருந்து
ஜட்ஜ் செய்ய முடியாது.
ஆனாலும் கொஞ்சமே யோசனையாக இருக்கிறது மா.
உங்கள் நண்பர் நலம் பெற்று வீட்டில் மீண்டும் வேலை செய்வது நல்ல விஷயம். இருந்தாலும் கவனம் தேவைதான்.
கண் கண்ணானது.
துளசிதரன்
நண்பருக்கு டை ஒத்துக்கொள்ளவில்லை போலும். சிலருக்கு ஒவ்வாமை வரும் என்று சொல்லப்படுகிறது. ஓமைக்ரான் இல்லை நல்லகாலம். கண்ணுல பிரச்சனைனா இதய வரை!! இதயத்தை கண்ணும்கருத்துமா காக்க வேண்டும்!!! ஒவ்வொருவருக்கும் என்னென்ன பிரச்சனைகள்..
நலமுடன் வாழ வேண்டும் இத்தோடு போச்சே சின்ன வயது
கீதா
அம்மா எனக்கும் முன்பு கண்ணில் ப்ளாக் ஸ்பாட் இருக்கு என்று இபப்டித்தான் டை எல்லாம் விட்டுப் பரிசோதனை 10 வருடங்கள் மேல் ஆயாச்சு. அப்போது அது ரெட்டினாவை பாதிக்கவில்லை என்று சொல்லி பிரச்சனை இருந்தால் சர்ஜரி என்றும் சொல்லியிருந்தார்கள். ஹப்பா நல்ல காலம் இதுவரை ஓடுகிறது பிரச்சனை இல்லாமல். ஆஸ்பத்திரி என்றாலே முதலில் கவலை வருவது பை/அக்கவுன்ட் கனமாக இருக்க வேண்டுமே என்றே!! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
அதுவும் அங்கு அமௌன்ட் ரொம்பவே ஆகுமே அம்மா.
பணக்கார வியாதி என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது இப்போது ரொம்ப பிராபலியம்! பணக்கார வியாதி சாதாரணமானவர்களுக்கு வந்தால்!? என்ன செய்ய முடியும்? இந்தக் கேள்வி இறைவனிடம்!!!
கீதா
பாடல்கள் இரண்டும் மிகவும் மிகவும் பிடித்த பாடல்கள் கண்ணுக்குள் பொத்தி , கண்ணுக்குள் நூறு நிலவா இரண்டுமே...முதல் பாடல் இப்போதுதான் கேட்கிறேன் அம்மா
கீதா
அன்பின் துளசிதரன்.மிக நன்றி மா.இறைவன் நம்முடன் இருக்க வேண்டும்.
அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
நீங்கள் வாழ்க்கையில் படாத துன்பமே இல்லை என்று நினைக்கிறேன் எல்லாவற்றிலிருந்தும் மீளவும் இறைவனே துணை இருக்கிறான். அந்தச்சின்ன கீதாவுக்கு நான் உதவி இருக்க வேண்டுமே என்று ஆதங்கமாக இருக்கிறது.
இன்று காலையிலிருந்து ப்ளாகர் திறக்கவில்லை. எந்த வலைப் பதிவுக்கும் போக முடியவில்லை.
கைபேசியைத் திறந்து முயல்கிறேன் வலையில் பதிய முடியாதோ என்று நினைப்பில் கடும் தலைவலி வந்து விட்டது. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் பார்கக வேண்டும்.
அன்பின் கீதாமா,
பகவான் பலவிதங்களில் நம்மை எச்சரிக்கிறான்.அதைக் காதில் வாங்க வேண்டியது ஒன்றுதான் நம் பொறுப்பு.
அந்த நண்பர் அலுவலகத்தில் மகளின் தோழி இருக்கிறாள்
வீட்டிலிருந்து வேலை ஆரம்பித்து விட்டாஆராம்
பகவான் துணை.
கண்ணுக்குள் பொத்தி வைத்தேன் எனக்கு மிகப் பிடிக்கும்
உங்களுக்கும் பிடித்ததே அருமை.
Post a Comment