Blog Archive

Monday, January 03, 2022

மனைவியே மனிதனின் மாணிக்கம் மாதர்குல மாணிக்கம்

இதைத்தவிர மனிதன் ஒரு மாணிக்கம் வேற வந்திருக்காம்.

இசையைக் கேட்டு ரசிப்போம்.











வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

நெட்ஃப்ளிக்சில் இந்தக் கால ஆங்கிலப் படம் சில 
தமிழ்ப்படம் ஒன்றே ஒன்று 
பார்த்துவிட்டு,
பழைய படப் பாடல்களையும் தங்கவேலு, என்.எஸ் .கிருஷ்ணன் இவர்களைப்
பார்ப்பதும்,
நீதி அடிப்படையில் படங்கள் எடுக்கப் பட்டதை
உணரும்போது. மிகப் பெரிய மாறுதலையும்,
மகிழ்வையும் உணர்கிறேன்..

கண்வழியே புகும் நன்மைகளே நம் மனதைப் 
பலப் படுத்தும்.

நல்ல நட்புகள் ,நல்ல தலைவர்கள்,நல்ல குடும்பம் இவை
நலம் பெற நல்ல எண்ணங்களும் வேண்டும்
என்பதையே புரிந்து கொள்வது அவசியம்.

12 comments:

ஸ்ரீராம். said...

இந்தப் பாடல்கள் நான் கேட்டதில்லை! என் எஸ் கிருஷ்ணன் நகைச்சுவை எப்போதும் / இப்போதும் ரசிக்கும்படி இருக்கும்.

ஸ்ரீராம். said...

//கண்வழியே புகும் நன்மைகளே நம் மனதைப்  பலப் படுத்தும்.  வெறும் சோகங்கள் நம்மைப் பாதிக்கத்தான் செய்கின்றன.//

வரிகள் முன்பின்னாக விழுந்து விட்டன போலும்.  இரண்டாவது வரி முதல் வரியாயிருந்திருக்கலாம்!  அருமையான சிந்தனை.

Thulasidharan V Thillaiakathu said...

நீதி அடிப்படையில் படங்கள் எடுக்கப் பட்டதை
உணரும்போது. மிகப் பெரிய மாறுதலையும்,
மகிழ்வையும் உணர்கிறேன்..

கண்வழியே புகும் நன்மைகளே நம் மனதைப்
பலப் படுத்தும்.//

ஆமாம் அம்மா. அதுவும் சமூக நீதிகள் நாம் பலவற்றைச் செய்ய இயலாத போது அதை படத்தில் ஹீரோ செய்யும் போது மனம் மகிழும்.

நல்ல நட்புகள் ,நல்ல தலைவர்கள்,நல்ல குடும்பம் இவை
நலம் பெற நல்ல எண்ணங்களும் வேண்டும்
என்பதையே புரிந்து கொள்வது அவசியம்.//

ரொம்பவும் சரி.

தலைவர்கள் நல்ல தலைவர்களாக இருந்தாலும் கூட உள்ளவர்களும் அதே அலைவரிசையைல் இருக்க வேண்டுமே அல்லது தலைவரின் வழிநடத்திலில் இருக்க வேண்டும். அதுதானே இங்கு சறுக்கல். நல்ல தலைவர் இருந்தால் அவர் நிலைத்திருப்பது ரொம்பக் கஷ்டம் ஆகிவிட்டது.

அது போல குடும்பமும். நல்ல கருத்துகள் அம்மா.

பாடல்கள் கேட்கிறேன். கேட்டுவிட்டு வருகிறேன்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் பதிவின் கருத்துகளை வழிமொழிகிறேன்.

கருத்துகளை வாசித்த போது ஒரு திரைப்படம் நினைவுக்கு வந்தது. எல்லோரும் நல்லவரே என்று ஒரு படம் வந்தது இல்லையா? அதில் கூட நல்லவரின் வாழ்வு துன்பத்தில். கதை முழுவதும் நினைவில்லை.

பாடல்கள் அருமையான பாடல்கள். ரசித்தேன்

துளசிதரன்

நெல்லைத்தமிழன் said...

கண் வழியே புகும் நன்மைகளுக்கு பழைய படங்கள் பார்ப்பதும், பழைய பாடல்கள் கேட்பதும்தான் நல்லது.

இந்தக் காலப் படங்கள், பாடல்கள் சகிக்கவில்லை

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
அந்த வேண்டாத வரியை நீக்கி விட்டேன். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் . நிறைய பாடல்களைப் புகுத்தி விட்டேனோ
என்று சந்தேகம் வருகிறது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.

''ஆமாம் அம்மா. அதுவும் சமூக நீதிகள் நாம் பலவற்றைச் செய்ய இயலாத போது அதை படத்தில் ஹீரோ செய்யும் போது மனம் மகிழும்.''

இதைத்தான்
நானும் நினைக்கிறேன்.
சும்மா சும்மா தேவை இல்லாத படங்களையும்
பாடல்களையும் கேட்டு
மனத்தை வருத்திக் கொள்ள வேண்டாம்.
அருமையாகப் பின்னூட்டம் இடுவதில்
அன்பின் கீதாவை மீற யாரும் இல்லை.தாங்க்ஸ் டா.

''தலைவர்கள் நல்ல தலைவர்களாக இருந்தாலும் கூட உள்ளவர்களும் அதே அலைவரிசையைல் இருக்க வேண்டுமே ''

இதுதான் வருத்தம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,

எல்லோரும் நல்லவரே பாடலும் இருக்கிறது.

பாடல் வந்த படத்திலும் நல்லவர் சிரமப்படுவார்.
எல்லோரும் நல்லவரே படப்பாடல்கள் பிரபலம்.
முத்துராமன் நடித்த படம் என்று நினைக்கிறேன்.
எனக்கு சரியாக நினைவு இல்லை.
பாடல்களைக் கேட்டு ரசித்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
அதைத்தான் சொல்ல வந்தேன். சிலவற்றைக் கேட்டாலும் பார்க்க முடியவில்லை:)

''இந்தக் காலப் படங்கள், பாடல்கள் சகிக்கவில்லை''

நாம் எல்லோரும் ஒரே போல நினைக்கிறோம்.

வெங்கட் நாகராஜ் said...

இந்தக் கால பாடல்கள் கேட்காமல் இருப்பதே நல்லது. எல்லோரும் சொல்லியிருப்பது போல் கேட்க சகிக்கவில்லை. பதிவில் பகிர்ந்த அனைத்துப் பாடல்களையும் கேட்டு ரசித்தேன். தொடரட்டும் பாடல் பதிவுகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள்.
இந்தப் பாடல்கள் கவிதை வரிகள் கேட்க இதம்.
சொல்லும் நியாயமும் நன்மை.

இப்போது எல்லாமே வர்த்தகமாகி விட்டது.

இசைக்கேற்ற மொழி என்னும் போது,
கற்பனைக்கு ஏது இடம்.
பாடல்களைக் கேட்டு ரசித்தது மிக சந்தோஷம்
அப்பா.