வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவர்கள் திரு செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் விழா மேடை வீடுதிரும்பல் மோகன்குமார் காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி. பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம். பெரியவர்களை வணங்க முடிந்தது இன்னோரு ஆநந்தம். நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம். கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா, சுபாஷினி தூயாக் குட்டி,அவள் தம்பி எல்.கே, பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி ,சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார் என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம் அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந...
Comments
தேங்காய், மிளகாய் , புளி பெருங்காயம் வறுத்து நற நற என்று அரைத்து கொண்டு கடைசியில் உளுந்து கடுகு தாளித்தவைகளை வைத்து ஒரு ஓட்டு ஓட்டி எடுத்து வைத்து கொண்டு ரயில் பயணத்திற்கு கொண்டு போவார்கள்.
இவர்கள் செய்யும் விதத்தில் பூண்டில்லாமல் நானும்
செய்து இருக்கிறேன்.
பூண்டு பச்சையாக அரைத்தால் நன்றாக இருக்குமோ
என்று கடுகு தாளித்து வதக்குகிறார்கள் போல இருக்கிறது.
நீங்களும் செய்திருக்கிறீர்கள் என்பதுதான் மகிழ்ச்சி.
இது போல அரைத்து, தோசை,இட்லி எடுத்துக் கொண்டு
பயணம் போக ஆவல்!!!
நலம் விசாரிக்க வந்த இடத்தில அருமையான துவையலும் செய்முறை பார்த்துக் கொண்டேன், இப்பவே செய்யோணும் போல ஆசையாக வருது...
நாங்கள் தேங்காய்,உழுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் ,சீரகம் வறுத்து இடித்த பொடிதான் தோசைக்கு,இட்லிக்கு கட்டிக் கொண்டு போவோம். வீட்டில் ஒருவாரம் வைத்தும் எடுக்கலாம். இது துவையல் நன்றாக இருக்கிறது.
இயற்கையாகவே அவர்கள் உடல் உழைப்புக்கு
எல்லா வித ஜீரண சக்தியும் வேண்டும்.
இன்று கூட ஒரு ஓமம் சட்டினி வகையறா பார்த்தேன்.
ஸ்ரீஜயந்திக்கு அடுத்த நாள் ஓமத்துக்குக்
கண்டிப்பாய் தேவை இருக்கும்.:)
அதேதான்.
மோர்சாதத்துக்கு என்று படைக்கப் பட்டது தேங்காய்த் துகையல்.
அம்மியில் அரைப்பது போன்ற மணம் எங்கு கிடைக்கும்.
அந்த அம்மாவுக்கு என்னை விட வயது குறைவாகத்
தான் இருக்கும். இருந்தாலும் பழங்கதை பேசுகிறார்:)
கிராமங்கள் இப்படித்தான் போலிருக்கிறது.
எனப்பா காணவே இல்லையே.
வலையில் ஈயாடுகிறதே நீங்களும் அஞ்சுவும் இல்லாமல்.
நலமாக இருக்கிறீர்கள் என்றே நம்புகிறேன்.
வேலைப்பளு அதிகமோ.
எ ப்ளாகில் எழுதுங்கள் மா.
நான் நலமே .வெய்யில் இங்கு அதிகம்.
அங்கே பத்திரமாக இருங்கள்.