Blog Archive

Tuesday, June 29, 2021

சில பழைய பாடல்கள்.




10 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான பாடல்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நல்ல கருத்துக்கள் கொண்ட பழைய பாடல்கள் கேட்டு ரசித்தேன். ஆனால் இதற்கு முன்பு இப்பாடல்கள் கேட்டதாக நினைவில்லை. இது நான் பிறப்பதற்கு முன்னாடியே வந்த படம். பழைய பாடல்கள் எனக்கும் மிகவும் பிடித்தமானவை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

இந்தப் பாடல்களை கேட்டதில்லை!  இதில் அறிமுகமான ராஜகோபால்தான் குலதெய்வம் ராஜகோபால் ஆனார் இல்லையா?!!

வெங்கட் நாகராஜ் said...

பழைய பாடல்கள் பலவும் எப்போதும் கேட்க இனிமையாவை. நீங்கள் பகிர்ந்த பாடல்களை மாலையில் கேட்க வேண்டும்.

கோமதி அரசு said...

பழைய பாடல்கள் மிக அருமை.
கேட்டு மகிழ்ந்தேன்.

முதல் படம் என்ன படம் என்று தெரியவில்லை, பாடல் நன்றாக இருக்கிறது.
குலதெய்வ பாடல்கள் நன்றாக இருக்கிறது. பண்டரிபாய் தங்கை மைனாவதி நடித்த படங்கள் நிறைய இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
ஹாஹ்ஹா.
இந்தப் படம் குல தெய்வம்,
நான் 1964இல் ஒரு திருமண நிகழ்வில்
திரையிடப் பட்டபோது பார்த்தேன்.
குடும்ப ஒற்றுமைக்காக இதைத் தேர்ந்தெடுத்தார்கள்
என்று நினைக்கிறேன்.

பாடல்கள் அப்பொழுதே பிடித்தது. என் நினைவுகளுக்காகப் பதிந்தேன்.

ஆமாம் அந்த நாட்களுக்கான எண்ணங்களைப்
பிரதி பலிப்பதாக அமைந்திருக்கிறது.

உங்களுக்கும் இந்தப் பாடல்கள் பிடித்ததில்
எனக்கு மகிழ்ச்சியே,.
கருத்திட்டதில் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட் ,இனிய காலை வணக்கம் மா.
இந்தப் பாடல்கள் எல்லாமே வானொலியில் கேட்டு ரசித்தவை.
1958,59 களில் வந்தவை. இன்றும் பசுமையாக நினைவில். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நீங்கள் சொல்வதே சரி. இதற்கு முன்
நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும்.,
இந்தப் படத்தில் அவருக்கு நல்ல பாத்திரம் கொடுக்கப்
பட்டது. அவரும் பரிபூரணமாக நடித்திருப்பார்.
பிறகே அவருக்கு குலதெய்வம் அடைமொழி
வந்தது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி,
வானொலியில் கேட்ட பாடலை இணையத்தில் தேடினேன்.

சொல்லி வைத்த மாதிரி வந்தது.
அதில் படப் பெயர், 'நான் வளர்த்த தங்கை '
என்று போட்டு இருந்தது. நிறையக் கேட்டு
இருக்கிறேன்.

திருமதி பண்டரி பாய், எங்கள் வீட்டு அருகில் தான் வசித்தார்.
பாண்டு ரங்கனுக்கு ஒரு கோவிலும் தன் வீட்டிலியே கட்டி வைத்திருக்கிறார்.
அங்கேயே ராகவேந்திரருக்கு முதல் முதல்
கோவில் கட்டப்பட்டது.
இருவரும் சேர்ந்தே படங்களில் வருவார்கள்.
மிக நன்றி மா.
வாழ்க வளமுடன்.