ரியாலிட்டியில்
நான்uம் பங்கெடுத்து
அந்தக் கண்ணaடியைக் கண்களில் மாட்டிக் கொண்டதுதான்
தெரியும் இன்னோரு புதிய உலகத்துக்குப் போய் வந்து விட்டேன்.
இந்த ரோலர் கோஸ்டரில் சென்று வந்தேன்.
வாழ்வில் முதன் முறை சென்று வந்தது
மிக அருமை.
அப்படியே நிஜத்தில் நடப்பது போல
இருந்தது.
வயிறு கொஞ்சம் மேலே கீழே சென்று வந்ததுதான்
பயங்கரமான த்ரில்.அந்த வளைவுகளில் உடலும் வளைந்து கொடுப்பதைப்
போலத் தோற்றம்.
12 comments:
காணொளி கண்டு ரசித்தேன் அம்மா வாழ்த்துகள்.
புதியதோர் அனுபவம்... பொங்கி வரும் புது யுகப் புனலில் நாமும் நீராடுவோம்...
வணக்கம் சகோதரி
நல்ல திரில் அனுபவம்தான். உற்சாகமாக எந்த செயல்களையும் பார்க்கும் போது நாமே அதில் கலந்து கொண்டது போல ஒரு உணர்வு வருவது இயல்புதானே.. நீங்களும், உங்கள் பேரனுடன் உற்சாகமாக விளையாட்டில் கலந்து கொண்டு சந்தோஷித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. காணொளியும் நன்றாக உள்ளது பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காணொளியில் சாதாரணமானது தெரிகிறது. அந்தக் அக்கருவியை கண்களில் மாட்டிக்கொண்டால் முழு அனுபவம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்!
வாழ்த்துக்கள்
வாழ்வில் முதன் முறை சென்று வந்தது
மிக அருமை.//
சின்ன குழந்தையாக மாறி அனுபவங்களை அனுபவிக்கும் போது சுகம் தான்.
நான் இதை பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன் மக்கள் பயமில்லாமல் இதில் பயணம் செய்கிறார்களே என்று!
நமக்கு நம் குழந்தைகள், பேரக்குழந்தைகளால் பலவித அனுபவங்கள் கிடைக்கிறது.
காணொளி அருமை.
அன்பு தேவகோட்டைஜி,
இனிய காலை வணக்கம்.
இணையத்தில் காண்பதைவிட, கண்களில் பொருத்தி அந்தக் கண்ணாடி வழியே காணும்போது
சற்றே தலை சுற்றியது:)
நன்றி மா.
அன்பு துரை செல்வராஜு,
உண்மைதான் அப்பா.
இந்த கருவிகள் இரண்டு மூன்று வருடங்கள் முன்பே வந்து விட்டது.
பேரன் இப்போது வாங்கினான்.
புது அனுபவம் தான்.
மிக நன்றி அப்பா.
அன்பு கமலாமா.
இனிய காலை வணக்கம்.
ஒரு பத்து நிமிடம் அதில் லயிக்கலாம்.
கண்ணுக்கு மிக அருகில் காட்சி
விரியும் போது கொஞ்சம் திகைப்பாக இருக்கிறது:)
இன்று திருச்சி மலைக் கோட்டை பார்த்தேன்.
இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு
முறை பார்க்கலாம்.
பேரன் அதில் விளையாட்டுகள் வைத்திருக்கிறான். அவன் மட்டும் விளையாடலாம்.
மிக நன்றிமா.
உண்மைதான் ஸ்ரீராம். அந்தக் கருவி வழியே நல்ல
அனுபவம் கிடைக்கும்.
இந்தக் காணொளி
உதாரணத்துக்குப் பதிவு செய்தேன்.
நல்லதொரு பொழுது போக்குதான். நன்றி மா.
மிக நன்றி சிகரம் பாரதி.
அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன்.
உண்மையாக அந்த சுற்றில் போயிருந்தால்
அலறி இருக்கலாம்:)
இது சற்றே கலக்கம் கொடுத்தது.
எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடலாம்.
அதுதான் இதில் உள்ள சிறப்பு.
இளவயதில் அனுபவத்திருந்தால்
அது வேறு விதம்!!!!!!
இப்போது இருந்த இடத்தை விட்டு நகருவதோ,,
நடக்கப் போவதில்லை.
பேரன் வாங்கியதால் வீட்டில் அனைவரும் அனுபவிக்கிறோம்.
மிக நன்றி மா.
Post a Comment