Blog Archive

Monday, April 05, 2021

அன்னையும் தந்தையும் தானே.


வல்லிசிம்ஹன்

பெற்றோர் நினைவு நம்மை விட்டு அகலாது என்பது
எல்லோரும் உணர்ந்தது.
அவர்களும் எங்கிருந்தாலும் நம்மை
நினைத்து அருள் செய்வார்கள்,
அவர்களின் புண்ணியங்கள் நம்மைக் காக்கும்

எண்ணங்கள் நம்மைத் தொடரும் 
என்பதை நிரூபித்திக் கொண்டே இருக்கும் ஒரு நிகழ்வு.
தினமும் அப்பா அம்மா படத்தை வணங்கிவிட்டு
படுக்கச் செல்வேன். ஒரு நாள் இரவில் 
"வெளிச்சமே போதவில்லையே''  என்று குரல் 
கேட்டது.
மகள் அறையை நோக்கினேன். குறட்டை சத்தம். பேரன் 
இருவர்களின் அறை நிசப்தம்........
நானே உளறினேனா என்று யோசித்ததில்
அதை எல்லாம் நிறுத்தி 25 வருடங்கள் ஆனது நினைவுக்கு வந்தது.;0)
மீண்டும் படுத்துக் கொண்டால் உறக்கம் வரவில்லை.
காலை 5.30க்கு  இறங்கி வரும்போது கீழே நல்ல இருட்டு.
என் கணினி இருக்கும் அறைக்குச் சென்று
விளக்கைப் பொறுத்தி மீண்டும் பெற்றோரை வணங்கிவிட்டு
காப்பி ஏற்பாட்டில் இறங்கும் போது,

நினைவுக்கு வந்த விஷயம் இதுதான்.
அப்பா எப்பொழுதும் தன் படுக்கைக்குப் பக்கத்தில் ஒரு நாற்காலியில்
நல்ல டார்ச் லைட், மற்றும் சொம்பில் தண்ணீர் வைத்துக்
கொண்டுதான் படுப்பார்.
அம்மாவுக்கு உடல் நலம் இல்லாத போது, 
அவருக்கு இரவில் எழுந்து கழிவறைக்குச் செல்ல 
டார்ச் போட்டுக் கொண்டுதான் வழிகாட்டுவார்.

அம்மா திரும்பி வந்ததும் தான் மீண்டும் தூங்குவார்.

ஏதோ மனதில் தோன்ற மகளிடம்,
தாத்த பாட்டி படத்துக்குச் சின்னதாக விளக்கு வைக்கலாமா
என்று கேட்டேன்.
அதுக்கென்ன பாட்டரி செல் போட்டு
எல் இ டி விளக்கு கிடைக்கும். 
 40 மணி நேரம் எரியும் . மீண்டும் சார்ஜ் செய்யலாம் என்றாள்.

அதையே ஒரு டஜன் அமேசானில் சொல்லி வந்தும் விட்டது.
இங்கே அலங்கார விளக்குகள் எப்பொழுதும் 
கிடைக்கும்.

நானும் தூங்கப் போகும் சமயம் அந்த விளக்கை
ஏற்றி விட்டுச் செல்வது வழக்கமாகிவிட்டது.
கீழே காலையில் வந்ததும்  விளக்கை அணைத்து விடுவேன்.
ஆறாம் நாள் அதை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று நினைத்த போது
அதன்  wire காணோம்.:(

ஒரு வேலையைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்று வருந்தியவாறு
சரி இருக்கிற வரை வெளிச்சம் தரட்டும்.
என்று குட்டி விளக்கை பெற்றோர் படம் 
பக்கத்தில் வைத்துவிட்டுச் சென்றேன்.
அடுத்த நாள் காலையில் எனக்கு அதிசயம் காத்திருந்தது.
அந்த விளக்கு எரிந்து கொண்டுதான் இருந்தது.

இது நடந்து 40 நாட்கள் ஆகிறது. இன்னும்
ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரம்
எரிந்து கொண்டுதான் இருக்கிறது.

இது எப்படி என்றே புரியவில்லை.
Any time...any help , ஃபோன் பண்ணு என்று அப்பா,
அம்மா இருவரும் சொல்வதுதான் 
நினைவில் நிற்கிறது.
நன்றி அப்பா.


12 comments:

கோமதி அரசு said...

//Any time...any help , ஃபோன் பண்ணு என்று அப்பா,
அம்மா இருவரும் சொல்வதுதான்
நினைவில் நிற்கிறது.
நன்றி அப்பா.//

அற்புதம் அக்கா.
அருமையான பதிவு.

அம்மா, அப்பா எப்போதும் உங்களுடன்.
அவர்களின் நல்ல நினைவுகள் வழி நடத்தும்.

ஸ்ரீராம். said...

குட்டி விளக்கு என்றால் எண்ணெய் திரி விளக்கா?  ஆச்சர்யமான நிகழ்வுகள்தான் அம்மா.  இடையிலேயே காணாமல்போன வொயரையும் தேடி எடுத்து விடுங்கள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அருமையான பதிவு. பெற்றோர்கள் நம்முடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பது உண்மைதான். அவர்களின் ஆசிர்வாதங்கள் நம் இக்கட்டான நேரத்தில் நம்மை காப்பாற்றி அணைத்துக் செல்லும்.

தங்கள் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. சார்ஜ் இல்லாமல் தொடர்ந்து தினமும் விளக்கெரிவது ஆச்சரியமான நிகழ்வுதான். உங்கள் பெற்றோர்களின் ஆசிர்வாதம் நம் அனைவரையும் காக்க வேண்டும். உங்கள் பெற்றோருக்கு என் பணிவான நமஸ்காரங்களும். நல்ல அன்பான மனங்களுக்கு என்றும் குறைவிருக்காது என்பதை உணர்த்திய பதிவு. நீங்கள் உங்கள் அம்மா சாயலில் அப்படியே உள்ளீர்கள். உங்களின் உருவ ஒற்றுமை வியக்க வைக்கிறது. அருமையான பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

KILLERGEE Devakottai said...

சில அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

நினைவுகள் நன்று. இது போன்ற LED விளக்குகள் இங்கேயும் கிடைக்கின்றன.

Geetha Sambasivam said...

காணாமல் போன வயர் கிடைச்சதா இல்லையா? அம்மா/அப்பா எப்போதும் உங்களுடனேயே இருக்கிறார்கள். அதான் உங்கள் உணர்வில் கலந்திருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கச்சி கோமதிமா,

வாழ்க வளமுடன்.
நிதர்சனமான அப்பழுக்கற்ற அன்பு
என்றால் பெற்றோர் கொடுப்பதுதான்.
நமக்குத் தெரிந்தது அது ஒன்று.
ஆனால் இந்த தீபம் எனக்கு மீண்டும் ஒரு நம்பிக்கை
கொடுக்கிறது.
ஏதோ ஒரு இத்தனூண்டு சுடரில்
இவ்வளவு மகிழ்ச்சி கொடுக்க முடியும்
என்று தெரிகிறது.நீடிக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
எண்ணெய் விளக்கு பெருமாள் சன்னிதியில் மட்டும். எல்லாமே மரம் என்பதால்
நடமாட்டம் இருக்கும் போது மட்டுமே அந்த விளக்கு.
இது ஒன் செல் பாட்டரி விளக்கு.

நான் இதை எழுதும்போது நினைத்துக் கொண்டேன்.
ஏற்கனவே கொஞ்சம் மறை கழண்ட மாதிரி
தோன்றும்:))))))))))
இது நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.
வொயர் என்கிற சமுத்திரம் பெரிசு.

அத்தனை குடும்ப உறுப்பினர்களின் வெவ்வேறு
மின் உபகரணங்கள் காமிராக்கள்,
இப்போது ஆகுலஸ்,கைபேசிகள் , பென்சில் ஷார்ப்பனர்
எல்லாம் சேர்ந்து இரண்டு மேஜை டிராயர்களில்
வழிகின்றன.
என் வொயர் எங்கே மாட்டிக் கொண்டதோ!!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

////தங்கள் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. சார்ஜ் இல்லாமல் தொடர்ந்து தினமும் விளக்கெரிவது ஆச்சரியமான நிகழ்வுதான்////
என்னாலும் நம்ப முடியவில்லை அம்மா. முதலில்
ஆச்சரியப் பட்டேன்.
இப்பொழுது இது தொடரவேண்டுமே என்று
பெற்றோரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
தாங்களும் மகிழ்வது எனக்கு நிறைவு.

மகளிடம் இந்த காயின் செல்லின் ஆயுள் எவ்வளவு என்று கேட்டால்
கூகிளில் பாரும்மா என்றாள்.
எல்லாம் ரிசார்ஜ் செய் என்று தான் வருகிறது.

சரி நடக்கிற வரை நடக்கட்டும் என்று நினைத்துக்
கொண்டேன்.
என் பெற்றோருக்கு மிஞ்சி இருப்பது நான் ஒருத்திதான்.
அதனாலயும் இருக்கலாம்.
அவர்கள் அன்பும் கருணையும்
அவர்களுடைய சந்ததியைக் காக்கட்டும்.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
நீங்கள் சொல்வதுதான் உண்மை.
நம் எண்ணங்கள் தொடர்ந்து
நன்மைகளை நினைக்கும் போது,
முன்னோர்களின் ஆசிகளும் தொடர்வது நிஜம்.

நேர்மறை எண்ண ஓட்டங்கள் பெற்றோரையும் நம்மையும் இணைக்கும் என்றே
நம்புகிறேன்.
நாங்கள் உங்களை ஆசீர்வாதம் செய்கிறோம் என்ற
நினைப்பே எனக்கு,நமக்கு நன்மை செய்யும்.
புரிதலுக்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
இந்த விளக்கு எனக்க் மீண்டும் வாழ்வில் நம்பிக்கை
வைக்கலாம் என்ற எண்ணத்தைப்
புகுத்தி இருக்கிறது.
எனக்கு விஞ்ஞானம் அவ்வளவாகத் தெரியாது.
கண் முன்னே நடப்பதால்
நம்புகிறேன்.
நன்மைகள் தொடரட்டும். நலமுடன் இருங்கள்
அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,

நலமாப்பா. நம் ஊரில் இல்லாத தீபங்களா.
நம் வீட்டில் எப்பொழுதும் பூஜை அறையில் சீரியல் விளக்குகளைப்
போட்டு வைப்பார் சிங்கம்.
கரப்பு அண்டாது என்ற நம்பிக்கைதான்.

ஜோதி வெளிச்சம் எப்பொழுதுமே நன்மைதான். நன்றி மா.