வல்லிசிம்ஹன்
தசரதன் மைந்தன் ராமனை நினைக்காத நாளில்லை.
சந்தோஷம் வந்தாலும் அவன் நாமம்.
சங்கடம் வந்தாலும் அவன் நாமம்.
நோய் வந்தாலும் அவனே
அதைத் தீர்த்து வைப்பவனும் அவனே.
எப்போதும் படபடக்கும் இதயத்தின் துடிப்பை
அப்போதைக்கப்போதே நிதானம் செய்வதும் அவன் நாமமே.
மனதை நிலைப் படுத்தும் அவனது விசாலமான கண்கள்
கருணை ஒன்றை மட்டுமே பொழியும்.
என்றும் ஓடிக்கொண்டிருக்கும் புன்னகை
அவன் முகத்திலிருந்து நம்மை ஈர்த்துக் கொண்டே இருக்கும்.
அந்தக் காருண்ய மூர்த்தியை
சீதை கண்ட நாள் முதல் அவன் சீதாராமனாகவே
ஒன்றி ராமாயணக் காவியத்தை
நமக்குக் கொடுத்து
அனுமன் வழியே சுந்தரமாகக் கொண்டு சென்றான்.
லவகுசர் வழியே பூர்ட்தி செய்தான்.
லக்ஷ்மண,பரத சத்ருக்கினர்,குக,சுக்ரீவ,விபீஷணனுடன்
நாமும் பயணித்தோம். இன்னும்
பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.
என்னாளும் மறவாமல் அவன் நாமம்
நாவில் இனிக்க ராமா ராமா என்று கூவும்
குயிலாகக் கிளியாக இருப்போம்.
ஜெய் ஸ்ரீராமா. சீதா ராமா. அனுமந்த ராமா.
15 comments:
அருணாச்சலக் கவிராயரைப் பற்றிக் குறிப்பிட நினைத்து மறந்து விட்டேன்.
என்றும் ராம நாமத்துடன் அவரும் வாழ்வார்.
பகிர்ந்த பாடல்களும், பதிவும் அருமை.
கண்டேன் கண்டேன் சீதையை ராகவா! பாடலும் நன்றாக இருக்கிறது.
வணக்கம் சகோதரி
பதிவு அருமையாக எழுதி உள்ளீர்கள். உண்மை.. என்றும் சொல்லச் சொல்ல திகட்டாத நாமம் ஸ்ரீராம நாமமே. கூடவே அஞ்சனை மைந்தனும், அதற்கு உதவுவார்.அவரை நினைத்தாலே போதும்... இவர்
உதவிக்கு எப்போதும் துணையாக வந்து நின்று காத்தருள்வார். ராமரின் பாதம் தினமும் பணிவோம்.இந்த சம்சாரசாகரத்தை கடக்க அவர் இனிய நாமம் நல்ல படகாக துணையிருந்து துன்பங்களெனும் பாறைகள் தட்டி சேதம் விளைவிக்காமல், நம்மை அக்கரைப் சேர்க்க வேண்டுமென தினமும் பிரார்த்தனை செய்த வண்ணம் உள்ளேன். தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான் என்ற டி.எம்.எஸ் அவர்கள் பாடல் காதில் ஒலிக்கிறது பதிவை படிக்கும் போது.
நேற்று ராமநவமி சாக்கில் பத்ராச்சலர் கீர்த்தனைகள் சில கேட்டேன்! எஸ் பி பி யின் 'சீதாராமஸ்வாமி', 'ஏமிரா ராமா' பாடலும் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. பாலமுரளிதான் கேட்டேன்!
பதிவும் பாடல்களும் அருமை. நல்லதொரு பதிவு. ராமநாமமே துதி செய்வோம்.
அம்மா ராமனை துதித்தோம் துதிப்போம்!
ஆம்மா பதிவு அருமை.
கண்டேன் கண்டேன் சீதையை பாடலை இதுவரை பாகேஸ்வரி ராகத்தில் தான் கேட்டிருக்கிறேன் பாம்பே ஜெயஸ்ரீ பாடியது அது ஒரு அழகு என்றால்
இப்போது வசந்தாவில் கேட்பதும் இனிமையாக இருக்கிறது அதுவும் சகோதரிகள் ரொம்ப நன்றாகப் பாடியிருப்பதும் ராகம் மனதில் மகிழ்ச்சியை த் தோற்றுவிக்கிறது இதமாக இருக்கிறது....
மிக்க ந்னறி அம்மா இதைப் பகிர்ந்ததற்கு
பலுகே அதுவும் பா மு குரலில் கேட்பது ஆஹா முன்பு தினமும் ரேடியோவில் காலையில் போடுவார்கள் அப்பா வைப்பார் கேட்டதுண்டு. அந்த சீரிஸ் முழுவதும்...ஏகிருகநனு எல்லாம்
கீதா
ஸ்ரீராமநவமி பதிவு சிறப்பு. “பலுகே” பாடல் பிடித்த பாடல்களில் ஒன்று. அனைவருக்கும் ஸ்ரீராமனின் பேரருள் கிடைத்திட எனது பிரார்த்தனைகள்.
அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன்.
எத்தைத் தின்றால் பித்து தெளியும் என்னும்காலம் இப்போது.
ராம நாமத்தையே பற்றிக் கொள்ளலாம் இல்லையா மா.
அன்பின் கமலாமா,
என்றும் வாழ்க வளமுடன்.
நாமும் நம் மக்களும் என்றும் அவன் கையில் பாதுகாப்புடன்
இருக்க வேண்டும்.
கவலைப் பட்டு கவலைப் பட்டு முடியவில்லை.
மிக அருமையாகப் பின்னூட்டமிடும் உங்கள்
அன்பு நெகிழ வைக்கிறது.
பத்திரமாக இருக்க இறைவன் துணை இருக்கட்டும்.
அன்பு கொமதிமா,
இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன.
அருணாச்சலக் கவிராயரின் மொழி எப்பொழுதும் பிடிக்கும்.
எத்தனை மொழியில் சொன்னாலும் தமிழ் ராமனை மிகவும் பிடிக்கிறது.டிஎம் எஸ் அவர்களை
இப்போது கேட்டு கொண்டிருக்கிறேன்.
நன்றி மா.
எழுத்துப் பிழை கோமதி மா. மன்னிக்கணும்.
அன்பு ஸ்ரீராம்.
பால முரளி கிருஷ்ணாவின் பாடல்
மாமியாருக்காக வாங்கியது.மகன் முதன் முதலில்
வேலைக்குப் போகும்போது நிறைய டேப்
செய்து கொடுப்பான்.
நாங்களும் கேட்டுக் கேட்டு
ரசிப்போம்.
எஸ்பிபி நானும் தேடிப் பார்க்கிறேன் மா.
அன்பு கீதாமா,
இறைவன் நாமம் என்றும் நம்மைக் காக்கட்டும்.
வேறென்ன வழி இருக்கிறது நமக்கு.
என்றும் ஸ்மரணை செய்வோம் ராமனை.
அன்பு கீதா ரங்கன் மா,
நலமுடன் இருங்கள் அம்மா.
எனக்கு ராகங்கள் அவ்வளவாகத் தெரியாது. எல்லாம் கேள்வி ஞானம் தான்.
பாம்பே ஜயஸ்ரீ வேறு லெவல் இல்லையா. அப்படியே
உருகிவிடுவார்.
நிறையா நீளமாக இருந்ததால்
பதிவிடவில்லை.
நீங்களும் பாடினால் நன்றாக இருக்கும்.
நன்றி மா. மீண்டும் பதிவிட வேண்டும்==]]]]]]]]]]]]]]]]]]
''''''''''''''''''''''
Post a Comment