தடுப்பூசிகள் போடப்படும் வேகத்தில்
தொற்றும் அதிகரிப்பது
ஒரு வேதனைதான்.
தடுப்பூசி போட்டால் எல்லாம் சரியாகி விட்டது என்றும் இன்னும் கூட்டம்
அதிகமாகி விட்டது.
இப்போது ஈஸ்டர் விடுமுறையில் அனைவரும்
சந்தித்து ,ஏர்போர்ட்டில் குழுமி,
வேறு ஊர்களுக்குச் சென்று.,
தங்களால் ஆன (பரப்பும்)சேவைகளைச் செய்கிறார்கள்.
முகக் கவசம் அணிவது ஒரு வேடிக்கையாகி விட்டது.
இந்தியாவில் ஒரு திருமணத்தில்
எல்லோரும் பத்திரமாக இருங்கள் என்று சொன்னதே
தவறாகி விட்டது.
Spoilsport பட்டம் வேற. மனது கேட்காமல் தான் சொன்னேன்.
நாங்கள் எல்லோரும் மிக சௌக்கியமாக இருக்கிறோம்.
உன் வார்த்தை பலிக்கவில்லை
என்ற கேலி வேறு.ஒரே நாளில் 100000 க்கு மேல் பாதிப்பு.
நம்மூரில் எண்ணிக்கை கேட்கவே வருத்தமாக இருக்கிறது.
திருமணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
குறைவான கூட்டம் என்று 200 நபர்கள் கூடுகிறார்கள்.
சின்ன மண்டபத்தில் தான் நடக்கிறது.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் போட்டுக் கொள்ளாதவர்கள்
கலந்துதான் நடக்கிறது.
என் தோழி முகக் கவசம் போட்டுக் கொண்டதால் கேலி செய்தார்களாம். அவள் மதிய உணவுக்கே
போகவில்லை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்கள் அக்கம் பக்கத்தில் எல்லோரும் இரண்டு ஊசியையும்
போட்டுக் கொண்டாகிவிட்டது.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி
ரியாகஷன்.
ஊசி போட்ட இடத்தில் இன்னும் வலி.மூன்று முழு நாட்கள்
ஆனபிறகும்!!
நோய்த்தடுப்பு நன்மை என்பதால் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
++++++++++++++++++++++++++++++++++++++++
என் வயதொத்தவர் திருச்சியில் திடீர் என்று மறைந்தார்.
தடுப்பூசி போட்ட பிறகும் பத்து நாட்களில்
வெளியே வரப்போக இருந்திருக்கிறார்.
அவர் வேலை அப்படி.
அவர் மனைவியிடம் அழைத்துப் பேசக்கூட
தயக்கமாக இருக்கிறது.அத்தனை பூஜை,புனஸ்காரம் என்றிருப்பவர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னையில் ஆன்லைனில் வாங்கி இருந்த புடவைகள், மருந்துகள் ,பிந்தி
எல்லாவற்றையும் நண்பர் ஒருவர் பணம் கொடுத்த உலகப்
பிரசித்தி பெற்ற நிறுவனம் மூலம் அனுப்பி இருந்தார்.
ஒருமாதமாக அந்தத் துறைமுகத்தில் தங்கி இருந்தது.
என்ன புடவை,பொட்டுகள் எப்படி செய்தார்கள் இத்யாதி
செலவுக்கு 110$ அனுப்புங்க என்று சொல்லிவிட்டார்கள்.
அனுப்பிய பிறகு இதோ நேற்று வந்தது.
சுண்டைக்காய் கால் சுமைகூலி முக்கால்
நினைவுக்கு வருகிறதா!!!!!
27 comments:
/Spoilsport// பட்டம் ..இதெல்லாம் ஏற்கனவே நான் வாங்கிட்டேன் வல்லிம்மா :) நாத்தனார் வேற சிட்டிலருந்து ஈஸ்டர் விடுமுறைக்கு வரப்போறேன்னு சொன்னார் .நான் தயங்கி வேணாம்னு சொன்னேன் .அவர் வீட்டில் ஸ்கூல் படிக்கும் மகன் உண்டு .ஸ்கூல் பிள்ளை களால்தான் நிறைய தொற்று .நல்லதுக்கு சொன்னாலும் எல்லாரும் தவறாவே எடுக்கறாங்க .அது அவங்க கூல் டைப் எதுக்கும் பயமற்றோர் .. சரி விடுவோம் .இப்போல்லாம் வாய் மூடி இருப்பதே மேல்னு இருக்கிறேன் .
இங்கே நாளை முதல் lockdown ரிலாக்ஸ் செய்றாங்க ,ஹேர் ட்ரெஸ்ஸர் மற்ற கடைகள் திறக்கப்போறாங்களாம் கடவுள்தான் காக்கணும் .ஏற்கனவே லாஃடவுனால் ஸ்கூல் பிள்ளைங்க பழகும் விதம் பண்பு குணம் எல்லாம் மாறியிருக்குன்னு பேப்பரில் படிச்சேன் .
இங்கே ஸ்ட்ரிக்ட் முகக்கவசம் நான் follow செய்றேன் .ரெண்டு வேக்சினும் போட்டாச்சு ஆனாலும் ,என்னால் பரவ சான்ஸ் உண்டு .நம்மூர் பொருட்கள் அங்கிருந்து வருவது எல்லாமே மும்மடங்குதான்மா .
ஆம் அம்மா.. என் வட்டத்திலும் ஒருவர் திருமணத்துக்கு அழைப்பு அனுப்பி வராவிட்டால் என்று மிரட்டுகிறார். மூன்றுநாள் திருமணம். தவிர்க்கவே முடியாதவர் என்பதால் தடுமாற்றம். என் அண்ணன் மகனுக்கே திருமணம் நிச்சயமாகும் சூழல். குழப்பம், பயம்...
இரண்டு ஊசியும் போட்டுக்கொண்டவ தோற்று வராது என்று எப்படி நினைக்கிறார்களோ தெரியவில்லை. விதி.
சுண்டைக்காயும் சுமைக்கூலியும்.. உண்மைதான் அம்மா. காலமும் சூழலும் அப்படி ஆகிவிட்டது.
இப்போதெல்லாம் யாரேனும் வீட்டுக்கு வந்தாலே பயமாகத்தான் இருக்கு.
நானும் சில சேவாகாலங்களைத் தவிர்த்துவிட்டேன்.
அட்வைஸ் சொன்னாலா லைக் பண்ணறதுல்லை.
குழப்பமும் கவலையுமாகத் தான் இருக்கு. என்ன செய்வது என்பதே புரியலை. ஆனால் இங்கே யாரும் கேலி செய்வதில்லை என்பது வரை சந்தோஷமே!
அன்பின் ஏஞ்சல்,
உண்மையில் கலவரமான நிலைதான்.
முக நூல் நண்பர் ஒருவருக்கு அகால மரணம்.
47 வயதுதான்:(
மஹராஷ்டிரா தான் இப்போது நிறைய பாதிக்கப்
பட்டிருக்கிறது.
தீ நுண்மி என்று சரியாகப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
அஞ்சுவதற்கு அஞ்சியே ஆக வேண்டும்.
சொல்பவர்கள் என்ன வேண்டுமானாலும்
சொல்லட்டும். நமக்கென்று கடமை இருக்கிறது இல்லையா.
பிபிசி செய்தியில் உங்கள் ஊர் பற்றிக் கேட்டேன்.
இங்கு அழகு நிலையங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
நாங்கள் தான் செல்வதில்லை.
நீங்களும் ,மகள் ,கணவரும் செல்லங்களும் பத்திரமாக
இருங்கள். இறைவன் துணை.
ஆமாம் ஏஞ்சல் , பள்ளிக் குழந்தைகளின் போக்கு சற்று மாறித்தான்
இருக்கிறது.
ரொம்பப் பரிதாபம். இதோ ஃபால் வந்தால் நேராகப்
பள்ளிக்குச் செல்ல வேண்டும்
பயமாகத் தான் இருக்கிறது.
அன்பு ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
நாம் மட்டும் பயந்து என்ன செய்ய. வேறு யாருக்கும்
கவலை இருப்பதாகத் தெரியவில்லை.
ஏற்கனவே பாதிக்கப் பட்டவர் நீங்கள்.
பகவான் தான் துணை
திருமணத்தை ஒத்திப் போட முடியாது.
ஒரு வேளையாகக் குறைத்துக் கொள்ளலாம்.
ஆமாம் ஸ்ரீராம். தினப்படி செய்தித்தாளைப்
படிக்கவே நடுக்கமாக இருக்கிறது.
நம் ஊர்க் கூட்டங்கள் திருவிழா மாதிரி நடக்கிறது.
யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?
யாரும் இல்லை.
இந்த கூரியர், சென்னையில் பணம் கட்டும்போது
ஒரு செய்தியும் சொல்லாமல், இந்த ஊருக்கு வந்ததும்
நிறுத்தி இப்படி சுங்கம் வசூலிப்பது
அனியாயமாக இருக்கிறது.
என்ன செய்யலாம் அம்மா.? நன்றி.
ஆம் விழிப்புணர்வு இல்லாதவர்கள் மத்தியில் படும் படும் அவஸ்தை சொல்லி மாளாது...அருமையான எச்சரிக்கைப்பதிவு..வாழ்த்துகள்..
கேட்கும் , படிக்கும் செய்திகள் மனதில் பயத்தை உண்டு செய்கிறது.ஒர்ப்படி மகனுக்கு திருமணம் அடுத்த மாதம் எப்படி திருமணம் செய்ய போகிறோம். வரவேற்பு நடத்த போகிறோம் என்ற கவலை ஓர்ப்படிக்கு.
எங்களுக்கும் உறவினர்கள் அனுப்பிய சில பொருட்களை பணம் கட்டி வாங்கும் படி சொன்னார்கள். நிறைய பணம் கொடுத்துதான் வாங்கவேண்டியதாக போய் விட்டது.
சுண்டைக்காய் கால் சுமைகூலி முக்கால்தான், வேறு என்ன செய்வது?
எனக்கும் இரண்டாவது ஊசி போட்டபின் கொஞ்சம் கைவலி இருக்கிறது, தலைவலி, மேல்கால்வலி எல்லாம் இருக்கிறது.
இறையருள்தான் அனைவரையும் காக்க வேண்டும்.
கந்தசஷ்டிக் கவசத்தைப் பழித்ததால், முகக்கவசத்தோடே எப்போதும் அலைந்திரு எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டானோ முருகன்?
கல்யாணத்துக்குப் போகும் 100-150 பேரும் கேமரா, வீடியோவில் வந்துவிடவேண்டுமே என்கிற ஆவலில்தான் வருகிறார்கள். முகக்கவசத்தை எப்படி அவர்களிடம் எதிர்பார்ப்பது? சாப்பிடுகிற இடத்திலாவது ஒரு இலை விட்டு இன்னொரு இலைக்கு இடம் போடுகிறார்களா என்றால்.. சான்ஸே இல்லை. புத்தி இருந்தால்தானே புத்திசாலித்தனத்தை எதிர்பார்க்கமுடியும்!
இந்த தீநுண்மி உலக அளவில் மிகப் பெரிய சூது மறைந்து இருக்கிறது அம்மா.
உலக மக்களுக்கு இறையே துணை
கேட்கும், பார்க்கும் விஷயங்கள் எல்லாம் பூதாகாரமாகவே இருக்கிறது. நாம் சொன்னால், Spoilsport பட்டம் தான்.
நேற்று நண்பர் ஒருவர், நன்கு படித்தவர், பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் தடுப்பூசி குறித்து சொன்னது - சும்மா குளுக்கோஸ் தண்ணியை தான் தடுப்பு ஊசின்னு போடறாங்க உலகம் பூரா! போட்டு ஒண்ணும் பயனில்லை!
தலைநகர் தில்லி, மஹாராஷ்ட்ரா என பல இடங்களில் தொற்றுப் பரவல் அதிகமாகவே இருக்கிறது. ஒன்றும் சொல்வதற்கில்லை. நாம் கவனமாக இருக்க வேண்டியது தான். எங்கள் அலுவலகத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் அறையிலேயே இரண்டு பேருக்கு தொற்று! :( எல்லாம் நல்லபடியே நடக்க ஆண்டவன் தான் துணை.
எங்கும் மிகவும் மோசமான சூழல்...
அன்புள்ள வல்லிம்மா, இங்கே நிறைய பேருக்கு awareness இல்லை. இப்பொழுதெல்லாம் எங்கும் செல்வதில்லை. உறவுகளிடம் தொலைபேசியிலும் அதிகம் பேசுவதில்லை. நன்மைக்கு சொன்னாலும் அவப்பெயர் தான் மிஞ்சுகிறது. நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வலைத்தளம் இருப்பது மகிழ்ச்சியே! எதற்கும் கவலைப்படாதீர்கள். இந்த pandemic ல் இருந்து வெளி வர இறைவனை பிரார்த்திப்போம்.
அன்பு வானம்பாடி,
உண்மைதான்.
எல்லோரும் விதவிதமாகப் பாதிக்கப் பட்டிருக்கிறோம்.
கீழ் மட்ட மக்கள் படும்பாடு சொல்லி முடியாது.
உணவுக்கு அவர்கள் படும்பாடு சொல்லி முடியாது.
அவர்களுக்கு மத்தியதர, மேல் மட்டத்தினரை விடச் சிரமங்கள் அதிகம்.
எப்படியாவது இந்தத் தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்பதே நம் பிரார்த்தனை. நன்றிமா.
வணக்கம் சகோதரி
தொற்று மீண்டும் தலை தூக்கியதா? இல்லை, இருந்து கொண்டே உள்ளதா எனப் புரியவில்லை. ஆனால் நம் மக்களுக்கு அஜாக்கிரதை உணர்வு நிறைய உள்ளது என்பது மட்டும் புரிகிறது. தொற்று கொஞ்சம் குறைந்தாற் போல இருக்கிறதென்று தாராளமாக வெளியில் நடமாட்டம்,பயணங்கள் மேற்கொள்ளுதல், கடை, விஷேடங்களுக்கு செல்லுதல் என இருந்தால் தொற்றின் பயணமும் தொடர்கிறது. எங்கள் பக்கத்து அப்பார்ட்மெண்ட்டில் இப்போது ஒருவருக்கு தொற்று. அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக இரண்டு நாட்களாக ஜன நடமாட்டம் குறைந்துள்ளது. நீங்களும் நன்றாக விபரமாக எழுதி உள்ளீர்கள். ஆண்டவனை த்தான் பிராத்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு முரளிமா,
இங்கே யாரும் யார் வீட்டுக்கும் போவதில்லை.
வேலைக்குப் போகிற ஆசிரியர்கள் தடுப்பூசி
போட்டுக் கொண்டு விட்டார்கள்.
Take away அல்லௌட். நாங்கள் அதையும் செய்வதில்லை.
கொஞ்சம் சிரமம் தான்.சமாளித்துக் கொள்கிறொம்.
அன்பு கீதாமா,
இங்கேயும் யாரும் யாரையும் சொல்வதில்லை.
சென்னையில்,
நான் ரொம்ப அவர்களைப்
புத்திமதி சொல்லி அலுக்கும்படி செய்து விட்டேனோ என்னவோ!!!!
அன்பின் ரமணி ஜி,
உழைத்துத்தான் உண்ண வேண்டும் என்று இருக்கிறவர்களை
நாம் ஒன்றும் சொல்ல முடியாது.
பாதிக்கப் படுபவர்களும் அவர்களே.
இந்த அரசியல் கூட்டங்களைத் தவிர்த்திருக்கலாம்.
அனாவசியத் திருமணக் கும்பலைத் தவ்ர்த்திருக்கலாம்.
யாருக்கும் தொற்று வராத வரை நாம்
சந்தோஷப்படலாம்.வேற என்ன செய்ய முடியும்:(
மிக நன்றி மா.
அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் தினசரிகளைப் படித்தால்
போதும் என்ற நிலைமைக்கு
வந்துவிட்டேன்.
உறவினர்கள் அனைவரும் சமூக உணர்ச்சியுடன் தான்
செயல் படுகிறார்கள்.
வீட்டுக்கு வருபவர்களைத் தவிர்க்க முடியவில்லை
என்பதுதான் அவர்களின் சோகம்.
பிரார்த்தனை ஒன்றுதான் நம்மால் முடிந்தது.
உங்கள் வலி இப்போது குறைந்திருக்கும் என்று நம்புகிறேன்.
நலமாக இருங்கள் அம்மா.
உண்மையே ஏகாந்தன் சார்.
அந்த உணவு பரிமாறும் இடமும், சாப்பிடுபவர்கள் நெருங்கி
உட்கார்ந்திருந்ததும்
மிக யோசனையைக் கொடுத்தது.
கந்த சஷ்டிக் கவசத்தைப் பழித்தவர்களுக்கு
ஒன்றும் ஆகவில்லையே.
சாதாரண மக்களை அல்லவா தாக்குகிறது.:(
கூட்டங்களில் தலைமை வகித்தவர்கள்
ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டு,
மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு,
வோட்டுகளை வாங்கிக் கொண்டுவிட்டார்கள்.
இனி என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை.
தெய்வம் நின்று கொல்கிறதா என்று பார்க்க வேண்டும்.
அன்பின் தேவகோட்டை ஜி,
''இந்த தீநுண்மி உலக அளவில் மிகப் பெரிய சூது மறைந்து இருக்கிறது''
நானும் கேள்விப்படுகிறேன்.
இந்தத் தீமையைச் செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்காதா
என்று ஏக்கமாக இருக்கிறது.
நம்மால் முடிந்தவரை உற்றார் உறவினர்,நண்பர் குழாம்
சுகமாக இருக்கும்படி எச்சரிக்கையாகத் தான் இருக்க வேண்டும்.
இந்த தீமை ஒழியும் காலம் வரட்டும். நலமாக இருங்கள் அப்பா.
அன்பு வெங்கட்,
நீங்கள் சொல்வது மிக மிக வேதனை தருகிறது..
படித்தவரே இப்படிப் பேசினால் என்ன செய்வது.
இந்தத் தடுப்பூசியினால் நன்மை வரும் என்று நம்பி
ஏற்றுக் கொள்வோம். அதிகம் வெளியில் செல்லாமல் செல்லும்போது
கவசம் அணிந்து செல்லலாம்.
உங்கள் அலுவலகத்தின் நிலமை
ஏன் இப்படி ஆனதோ!!!!
எல்லோரும் மீண்டு வரட்டும்.
நீங்கள் தான் மிகப் பாதுகாப்போடு இருக்க வேண்டும். கடவுள்
அனைவரையும் பாதுகாக்கட்டும் பா.
அன்பு தனபாலன்,
நலமாக இருங்கள்.
உங்களுக்குத் தெரியாத நீதியா?
நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
Post a Comment