வயல்வெளிகளில் நடனமாடி பல லட்சம்
உள்ளங்களைக் கொள்ளை கொண்டு வரும் ப்ரியதர்சினி த்யாகி
ஒரு மாணவி.
இந்த வீடியோ எடுக்கும் போது 14 வயது என்று சொன்னார்கள்.
மிகப் பிரபலமான, எல்லோரையும் கவர்ந்த
பாடலுக்கு இந்த இளம் பெண் 'கதக்'
நடனம் ஆடி இருப்பது அனைவரையும்
கட்டிப் போட்டிருக்கிறது.
இன்னும் நிறைய இணையத்தில் இருந்தாலும்
எனக்குப் பிடித்த
பாடலை இங்கே பதிகிறேன்.
இன்னொன்று சிங்கத்துக்குப் பிடித்த தேவ் ஆனந்த்,சாதனா
பாடல்.
இன்னொன்று சின்னத் தம்பிக்குப்
பிடித்த சிவாஜி பாடல்!!!
5 comments:
Piar kiya tho darna kiya ..
மொகல் இ ஆஸம் படத்தின் இந்தப் பாடலல்க் கேட்கும் போதெல்லாம் கண்கள் கலங்கும்...
இந்தப் பெண்ணின் நடனம் மனதைக் கவர்கின்றது...
அன்பு துரை,
வணக்கம் மா. இந்தப் பாடலையும் ,தமிழ் காதல் கொண்டாலே பயம் என்ன பாடலும் 1962 லிரந்தே. மனதில் உறைந்த
கானம்.
கதையாக இருந்தாலும் மரித்த அந்தப் பெண்ணுக்காக, அவள் காதலுக்காகக் கண்ணீர் தான்
வரும். நடித்த மதுபாலாவும் வாழ்வில். சிறக்க வில்லை.
உங்களுக்கும் இந்தப் பாடல் பிடித்ததில் ஆச்சரியமே இல்லை. நம் உளப்பாங்கு அது போல இருக்கிறது.. ஆடிய அந்தப் பெண்
இப்போது நல்ல பிரபலமாகி விட்டார்.
வளமுடன். கலையை வளர்ததுத் தானும் வளம் பெறட்டும் நன்றி மா.
பிரியதர்ஷினி அபார நடனம் ஆடுகிறார். சினிமா என்றால் கட் செய்து கட் செய்து எடுப்பார்கள். ஒரே டேக்கில் அபார திறமை. தேரா மீரா பியர் அமர் பாடல் இனிமை. சிவாஜி பாடல் இங்கு ஓடவில்லை. அங்கு சென்று பார்க்க முடியும்.
அன்பு ஸ்ரீராம்.
இரண்டு பாடல்கள் கேட்கின்றன. மூன்றாவது
பதிவாகவில்லை.
பரவாயில்லைமா.
தேவ் ஆனந்த் பாடல்களுக்குக் கேட்பானேன்!!!
தனி சுவை.
இந்தப் பெண் பிரியதர்ஷினி இப்போது
கல்லூரியில் டிக்டாக் வீடியோ போட்டிருக்கிறாராம். நல்ல திறமை
இந்தப் பெண்ணுக்கு.
நன்றாக இருக்கட்டும்.
மிக மிக நன்றி மா.
இந்தப் பெண்ணின் ஒன்றிரண்டு காணொளிகள் எனக்கும் வாட்ஸ் அப் வழி வந்தது வல்லிம்மா.. என்னவொரு திறமை. நன்றாக இருக்கட்டும்.
Post a Comment