Blog Archive

Tuesday, March 30, 2021

வாழும் வரை.......

வல்லிசிம்ஹன்



செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள்
ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே
விரிந்து ஏற்கிறது.

வலைப்பதிவுகளால் என்ன லாபம்
என்று ஒரு உறவினர் வெகு நாட்களுக்கு முன் கேட்டார்.

தமிழ்ல எழுதறியாமே ?? அத்தனை படித்திருக்கிறாயா?
என்று கேட்கும் போது எனக்கு சிரிப்பே வரும்.
எங்கள் திண்டுக்கல் ஆசிரியர்களைப் பற்றி 
இவர்கள் அறியவில்லையே.:(

அந்தத் தங்க ஆசிரியைகள், ஒரு நிமிடம் கூட 
வீணாக்காமல் 45 நிமிடங்களில்  நம் அறிவை எத்தனை 
விசாலப் படுத்த முடியுமோ
அவ்வாறு போதிப்பார்கள். அதை முழுவதும் மனத்தில் பதிய வைத்தால்
எந்தத் தேர்விலும் வெற்றி பெறலாம்.
எங்கள் பள்ளியில் படித்தவர்கள் சோடை போனதாகச் சரித்திரமே
கிடையாது.

தம்பிகளும் நானும் வாழ்வின் நற்பாடங்களைக் 
கற்றது அங்கேதான். அன்பான ஆசிரிய சகோதரிகள்
மதம், பண வலிமை, இல்லாமை பார்க்காது
அனைவரையும் அருமையாக நடத்தினார்கள்.
இப்போது எப்படி இருக்கிறதோ 
தெரியவில்லை. நம் திண்டுக்கல் தனபாலன் சொல்வார்.

காலங்கள் கருத்துகள் கட்டிடங்கள் மாறி இருக்கலாம்.

இள வயதில் கற்பிக்கப் பட்ட ஒழுக்கம் என்றும் 
மாறுவதில்லை.
என் வலை சகோதரிகள், கீதா சாம்பசிவம், கோமதி அரசு, 
கமலா ஹரிஹரன் ,அன்பின் காமாட்சி அம்மா

எல்லோருமே தென் தமிழகத்திலிருந்து
வந்தவர்கள்.
பல சகோதர்களையும் என் வட்டத்தில் சேர்த்திருக்கிறது
நெல்லை மாவட்டம்.மற்றும் மதுரை மாவட்டம்.
 கோடை காலம் கண்கள் வறண்டு போகின்றன.

அதனால் நிறைய கதைகள் கேட்கிறேன்.
நம் கோமதி சொல்வது போல கேட்பது 
கண்ணுக்கு ஓய்வு தரும்.

வெய்யில் காலம் கடுமையானது தான். அனைவரும் 
நிறைய நீர் அருந்த வேண்டும்.
பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
வாழ்வில் மகிழ்ச்சி கூட வேண்டும்.
அனைவரும் வாழ்க வளமுடன். இணையத்துக்கு நன்றி.

24 comments:

Angel said...

ஆமாம் வல்லிம்மா மெண்டல் ஹெல்த் தும் இம்யூன் சிஸ்டமும்  தொடர்புள்ளவை .நல்ல காணொளி ..வலைப்பதிவுகள் அன்பால் இணைய வைத்திருக்கு நம் அனைவரையும் .டேக் கேர் வல்லிம்மா   

ஸ்ரீராம். said...

இனிய நினைவுகள்.  வலைச்சொந்தங்கள் அன்பால் இணைந்த உறவுகள்.

ஸ்ரீராம். said...

இன்று டெல்லியில் கடந்த 76 வருடங்களாக இல்லாத அளவில் மார்ச்சில் கடும் வெயில் என்று செய்தி சொல்கிறது.  உண்மையில் சென்னையிலும் இன்றும் கடும் வெப்பம், அனல், வெயில்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. கடந்த காலங்களை நன்றாக நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். தாங்கள் எழுதிய வரிகளை மிகவும் ரசித்தேன். ஆரம்பத்திலிருந்து பள்ளியில் அன்பு ஆசிரியர்களிடம் நற்பண்புகளை முறையாக கற்றதுதான் நம் வாழ்க்கை அனுபவ பயணங்களிலும் பெருமளவு துணையாக வந்துள்ளது. மாதா,பிதா,குரு என வரிசைப்படுத்தி நாம் நல்ல விஷயங்களை பேசியும்,கேட்டும் வந்திருக்கிறோம். வளர்ந்துமிருக்கிறோம். இப்போது இறைவன் நாமாவை இடையறாது சொல்லியபடி அவன் அருள் நமக்கும், நம் சந்ததிகளுக்கும், உலகவாழ் மக்களனைவருக்கும் பூரணமாக கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்தபடி இருக்கிறோம். எல்லாம் அவன் செயல்...

வலைத்தளங்கள் மூலமாக நல்ல நட்புகளை அவன் தந்திருப்பது கண்டு பெருமையுடன், இறைவனுக்கு நானும் நன்றி கூறிக் கொள்கிறேன். என்னையும் தங்கள் பதிவில் நல்ல நட்பாக குறிப்பிட்டு கூறியிருப்பதற்கு உங்களுக்கு என் பணிவான நன்றிகள்.

இங்கும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குளிர் முடிந்து தீடிரென வெய்யில் அதிகரித்திருப்பதால், எனக்கும் சில தினங்களாக உடம்பு அசதி அதிகமாகத் தெரிகிறது.இறைவன் அனைவருக்கும் நல்லதையே நடத்தி தரட்டும். அந்தப் பிராத்தனை ஒன்றே நம்மால் இயன்றது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

படம், காணொளி , பதிவு அனைத்தும் அருமை.
பள்ளி நினைவுகள், நல் ஆசிரியர்களின் நினைவுகள் பகிர்வு அருமை.

சிறு வயதில் இருந்தே நமக்கு கதை கேட்க பிடிக்கும் தானே!

நமக்கு படிக்க முடியாத போது கண்களுக்கு ஒய்வாய் கதை கேட்கலாம்.


மற்ற புலன்களுக்கு ஓய்வு கொடுக்க முடிகிறது, மனதுக்கு தான் ஓய்வு கொடுப்பது கஷ்டமாய் இருக்கிறது. ஏதாவது நினைத்து கொண்டே இருக்கிறது. அதை அமைதி படுத்த தான் இப்படி ஏதாவது எழுதி, படித்து நட்புகளுடன் உரையாடி என்று பொழுது போகிறது.


கோமதி அரசு said...

வலை சொந்தங்கள் அன்பால் இணைந்த சொந்தங்கள் தான் ஸ்ரீராம், ஏஞ்சல் நீங்கள் சொன்னது போல்.

இந்த அன்பு வலை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அனபை மட்டும் பின்னும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
மீண்டும் மீண்டும் இந்த மெண்ட்டல் ஹெல்த் இங்கேயும்
வலியுறுத்தப் படுகிறது.

இணையமும் உங்கள் எல்லோரையும் போல
நட்புகள் இருப்பதாலேயே
கொஞ்சமாவது ரிலாக்ஸ் செய்ய
முடிகிறது.
முன்பிருந்த இணையக் காலம் போல இல்லாவிட்டாலும்
நாமெல்லாம் ஒன்று கூடுவது எவ்வளவ் நிம்மதி
அளிக்கிறது.

மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம்.

இணையம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

நீங்கள் எல்லோரும் என் மிகச் சிரம காலங்களில்
கூடவே இணைந்திருக்கிறீர்கள்.
அதற்கே கடவுளுக்கு என்றும் நன்றி சொல்கிறேன்.
எதையும் எதிர்பார்க்காமல் செலுத்தப் படும் அன்பு.

வல்லிசிம்ஹன் said...

தில்லியில் அவ்வளவு வெய்யிலா.
நம் வெங்கட் சிரமம் இல்லாமல்
இருக்க வேண்டும்.

எங்கள் பக்கத்து வீட்டு அம்மா
அனல் காற்று அடிப்பதாகச் சொன்னார். இப்போதுதானே
பங்குனி!!!

அவர் ஏ ஸீயை விட்டே வரமாட்டார்.
மாலை வேளையில் வீட்டுக்கு வெளியே
உட்காருவார்.
அது போல வந்து உட்கார முடியவில்லை
என்றார்.பத்திரமாக இருங்கள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
இனிய காலை வணக்கம்மா.

நினைவுகளும் நட்புகளும் நம்மை ஏமாற்றுவதில்லை.
ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதி நாள் மார்ச் 31 ஆம தேதி வரும்.
அப்போது எழுதி வைத்த கட்டுரை ஒன்றைப்
படிக்க நேர்ந்தது.

உடனே அதை இங்கேயும் பதிய வேண்டும் என்று தோன்றியது.

அந்த நட்புகள், பள்ளி நாட்கள் நினைவுடன்
தற்போதைய நட்புகளைக் கொண்டாட வேண்டியது தான்
தர்மம் இல்லையா மா.
என் சகோதரிகள் உங்கள் எல்லோரிடமும்
அன்பும் அத்துடன் ,நல்ல செய்திகளையும் அறிய முடிகிறது.
எப்பொழுதும் இந்த அன்பு நம்முடன் இருக்க வேண்டும்.
அதையே இறைவனிடம் வேண்டுகிறேன்.
நலமுடன் இருங்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன். சுற்றம் ,நட்பு எல்லோரும்
நலமாக இருக்க வேண்டும்.

நேற்று பேசியதைப் போல கேட்பதே இதமாக இருக்கிறது.
இறைவன் நம் கட்செவி திறனைப்
பாதுகாக்க வேண்டும்.

என்ன செய்தாலும் அமைதி என்பது சில நேரத்துக்கு மட்டுமே.
மனம் நம்மை விட்டு ஓடாது. நாமும் ஓட முடியாது.

அதற்கு மாற்றாகத்தான் இணையம் உதவுகிறது.
பண்டை காலத்து வானொலி போல.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம், நீங்கள் மற்ற எல்லோரும் யாரையும்
விட்டுக் கொடுப்பதே இல்லை.
நானும் அவர் பின்னூட்டம் இல்லாத இடத்தைப்
பார்த்ததில்லை.

எத்தனை வேலைகள் இருந்தாலும்
இதைக் கடமையாகச் செய்து வருகிறார்.
வேலைபாரங்கள் குறைந்து நலமாக இருக்கட்டும்.
நன்றி தங்கச்சி.

Geetha Sambasivam said...

எல்லோரும் உறவு மாதிரிப் பழகி வருகிறோம். தில்லியில் கடும் வெயில் என்னும் செய்தி கலக்கத்தைத் தருகிறது. நான் அதிகமாய்ப் பேச்சுக்களைக் கேட்பதில்லை. எனக்கு நேர்மாறாக அவர் யூ ட்யூப் தான் அதிகம் பார்க்கிறார். அப்போது எல்லாம் காதில் விழும். எல்லோரும் நலமாக இருக்கப் பிரார்த்திப்போம். இங்கேயும் கடுமையான வெயில்!

KILLERGEE Devakottai said...

எனது இன்றைய வாழ்வில் ஒரு பிடிமானத்தோடு வாழ்வது வலைப்பூ நட்புகளால்தான் என்பதே உண்மை.

இதை எழுதும்போதுகூட எனது விழிகள் கசிந்து விட்டது அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

வலையுலகம் நமக்குத் தந்த உறவுகள் குறித்து தெரிந்தவர்கள் எதுவும் பேசுவதில்லை. தெரியாதவர்கள் தான் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னையும் இப்படி எழுதுவதால் உனக்கு என்ன கிடைக்கிறது என்று கேட்கிறவர்கள் இப்போதும் உண்டு வல்லிம்மா. அதையெல்லாம் கேட்டுக்கொண்டு தான் தொடர்ந்து எழுதுகிறோம். தொடர்ந்து எழுதுவோம்! :)

எப்போதும் இல்லாத அளவு கோடை - தலைநகரில். ஆமாம் வல்லிம்மா. லூ என்று ஹிந்தியில் சொல்லக் கூடிய அனல்காற்று கடந்த இரண்டு நாட்களாக இங்கே அடிக்கிறது. வெளியே செல்வதில்லை என்பதால் தெரிவதில்லை. வெளியே சுற்றுபவர்கள் பாடு தான் திண்டாட்டம். என்னைக் குறித்தும் இங்கே சொல்லி இருப்பதற்கு நன்றி. கவனமாகவே இருக்கிறேன் மா.

காமாட்சி said...

உங்களின் இந்தப்பதிவு பார்த்து கண்ணில் ஒரே நீர். உங்களின் பாசப் பிணைப்பிற்கு. டில்லியில் ஆந்தி என்று சொல்லும் இந்தக்காற்று மணலை வாரி இறைத்துக்கொண்டு சுற்றி சுற்றியடிக்கும். என் பிள்ளையும் போன் செய்திருந்தார் நேற்று. நான்கூட பெரிய எழுத்தாளி இல்லாவிட்டாலும் வலையுலக அன்பிற்கு மிக்க நன்றிக்கடன் பட்டவள்தான். திறன்களெல்லாம் மிக்கக் குறைந்து விட்டது. உங்களுக்கு பதிலெழுத ஆவல். யாவரும் நன்றாக இருக்க வேண்டும். நன்றி. அன்புடன்

Bhanumathy Venkateswaran said...

வலையுலகம் நமக்கு தந்திருக்கும் நட்பும், உறவும் சிறப்பானதுதான். அது சரி, என் பெயர் உங்கள் நினைவுக்கு வரவில்லை. 

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இணையத்தின் வழிதான் எல்லாம் நடக்கிறது.

செய்திகள் படிப்பதிலிருந்து,
தேர்தல் விஷயங்கள், பிரார்த்தனைப் பாடல்கள்,
திரைப்படப் பாடல்கள்,கதைகள்
எல்லாமே....

நாம் இணைந்திருப்பதும் அதனால் தான்.
அதற்காகவாவது எழுத வேண்டும் என்றே
தோன்றுகிறது.

அவ்வளவு முக்கியமாகிவிட்டது நம் இணையக் குடும்பம்.
எல்லோரும் நலமாக இருப்போம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டைஜி,

உண்மைதான் அப்பா.
நம் தனிமையைப் போக்க இணையத்தை விட்டால் வேறு வழியில்லை.
உங்கள் அறிவுக்கூர்மை எல்லோருக்கும் பயன் படவேண்டும்.
நிறைய எழுதுங்கள் நாங்கள் எல்லோரும் இருக்கிறோம். இறைவன்
கருணை உள்ளவன்.

நம்மைக் காப்பான்,. மனம் தளராமல் குடும்பமாக இணைந்திருக்கலாம்.
வாழ்க நலமுடன்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு வெங்கட்.

ஆமாம். தெரியாதவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது.
அதனால் என்ன,
நஷ்டம் நமக்கில்லை.
நாம் எழுதலாம். முன்பு கடிதங்கள் செய்த வேலையை
இப்போது பதிவுகள் செய்கின்றன என்று தோன்றுகிறது.
முன்னை விட இப்போது இன்னும் நல்லது.
பல கடிதங்கள் அல்லவா கிடைக்கிறது.

உங்கள் ஊர் வெய்யில் கவலை தருகிறது, வேலைக்கு வெளியே செல்பவர்கள்
பாடு கஷ்டமே.
இங்கே பித்தம் பிடித்தது போல மீண்டும் குளிர் வந்திருக்கு.
க்ளைமேட் சேஞ் என்கிறார்கள்.
நிறைய எழுதுங்கள் மா.
மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு காமாட்சிமா. நமஸ்காரம் மா.

கொடுக்கல் வாங்கல் எதிர்பார்ப்புகள்
இல்லாத நண்பர்கள் நாம்.
உங்களிடமிருந்து படிக்கக் கிடைக்கும் பதிவுகள்
என்னை வேறு உலகிற்கே அழைத்துச் செல்கின்றன.
உண்மையான உறவுகள் இருந்த காலத்தைப்
பற்றி நம்மால் மறக்கவே முடியாது.

நம் வாழ்வின் எத்தனையோ சோகங்கள் இருந்தாலும் நம்
நட்பு அதை மறக்க வைக்கிறது அம்மா.
கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

இந்த அன்பு என்றும் நிலைத்திருக்கட்டும்.
நீங்கள் எத்தனையோ நாட்களாக
எழுதி வருகிறீர்கள்.
எங்களுக்கு அந்த பாக்கியம் தொடர்ந்து
கிடைக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அச்சோ பானுமா.
உங்கள் பெயரை

எழுதாமல் விட்டு விட்டேன் அப்பா.

தில்லி வெயில் பற்றி படிக்கும் போது
உங்கள் மருமகளையும் பேத்தியையும் நினைத்துக்
கொண்டேன்.
பத்திரமாக இருக்க வேண்டும்.
நம் நட்பு சிறக்கட்டும்.

ஜீவி said...

அது என்ன மேலே இருக்கிற படம்?.. Postel Ballot Box - என்று போட்டிருக்கிறரே? ஆஹா.. அந்தப் படமே ஒரு பாடம். எவ்வளவு பொறுப்பாக தங்கள் வாக்குச் சீட்டைக் கையாளுகிறார்கள்?..

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜீவி சார். நாளிதழில் வந்த படம்
என்னக் கவர்ந்தது. என்ன பொறுப்பு அவர்களுக்கு!!
வீட்டிற்கு வந்த அதிகாரிகள்
நல்ல படியாக உதவி செய்தார்களாம்.
முதுமையில் தங்கள் கடமையை
நிறைவேற்றுகிறார்கள். நன்றி சார்.