Blog Archive

Thursday, February 04, 2021

திருமணம் என்ற நல்ல பந்தம்.


வல்லிசிம்ஹன்



  வாழ்வில் சில நாட்கள் பெற்றோருடன்.


சில நாட்கள் நண்பர்களுடன். சில நாட்கள் சகோதர சகோதரிகளுடன்.

வாழ்வு முழுமை பெறுவது , துணை என்று  ஒருவரோ ஒருத்தியோ
கிடைக்கும் போதுதான்.

பல உயிர்களுக்குக் கிடைக்கக் கூடிய நல்ல துணை
என்றும் மனத்திற்கு ஊட்டம் அளிக்கும்.

பரஸ்பரம் புரிந்தவர்கள் ஆக மாற சில வருடங்கள் 
ஆகும்.
ஆனால் ஒருவர் இல்லாமல் மற்றவரால்
தனியே இயங்குவது கடினமே.
பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா '' ஜோக் 
எல்லாம் சும்மா சொல்வது. அவர்களுக்கே மனதில்
உறுதியாக இறுதியாக நம்முடன் இருக்கப்
போவது இவள் அல்லது இவர் என்னும்
உண்மை.
இந்தத் திண்மை நிறைந்த ஆளுமையால்
வளர்க்கப் பட்ட குழந்தைகள்,
அவர்கள் திருமணத்திலும்  ,அனத பந்தத்திலும் நிலைத்து இருப்பார்கள்.

என் பெற்றோர் அப்படி இருந்ததால் நான்ம் மண வாழ்க்கையில்
உறுதியாக இருந்தேன்.
என் கணவர் என் கரத்தைப் பற்றிய நாள் 
இருவருக்கும் தோன்றிய ஒரே எண்ணம்
இந்த உறவு நிலைக்க நாம் தான்
உறுதியாக இருக்க வேண்டும் என்பதுதான்.
விளையாட்டுக் கோபங்கள் ,தாபங்கள்
எல்லாம் வந்து போனவை.
எங்களைப் பிரிக்க யாராலும் முடியாது என்பதே
நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம்.

எங்கே வேலை விஷயமாகச் சென்றாலும் 
இரவு சாப்பாடு வீட்டில் தான். அந்த வண்டியோ , 
பைக்கோ வந்து நிற்கும் ஓசைக்காக
நான் காத்திருப்பேன்.

என்னளவு அத்தனை பேசாவிட்டாலும் செய்கையால்
உணர்த்தி விடுவார் சிங்கம்.

அவரை என்னுடன் 47 வருடங்கள் இணைத்து வைத்திருந்த
இறைவனுக்கு நன்றி.
இனி வருங்காலமும் அந்த துணை என்னுடன் இருக்கும் 
என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.

இல்லறங்களை நல்லறங்களாக மாற்றுவது நம் 
பொறுப்பு. இறைவன் துணை இருப்பான்.
நம் மக்கள் சுகம் பெற வேண்டும். அதற்கும் அவனே துணை.
தந்தையின் ஆசிகள் அவர்களுக்கு
என்றும் உண்டு. வாழ்க வளமுடன்.
நம் கோமதி அரசுக்கும் சேர்ந்தே இந்தப் பதிவு.
7 ஆம் தேதி மண நாள் அவர்களுக்கு.
திரு அரசுக்கும் தங்கச்சி கோமதிக்கும் மண நாள்
வாழ்த்துகள்.




21 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

திருமண பந்தத்தை பற்றி விவரித்து கூறியது அருமை. அத்தனையும் உண்மை. சகோதரி கோமதி அரசு அவர்களுக்கும் திருமணநாள் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் அக்கா

மனதை தொட்ட பதிவு.

//நம் மக்கள் சுகம் பெற வேண்டும். அதற்கும் அவனே துணை.
தந்தையின் ஆசிகள் அவர்களுக்கு
என்றும் உண்டு. வாழ்க வளமுடன்.//

ஆமாம் அக்கா, ஆறை ஆசியும் தந்தையின் ஆசியும் என்றும் உண்டு.


இனி நம் பிரார்த்தனை விருப்பங்கள் எல்லாம் நம் குழந்தைகள் அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

என் மண நாளுக்கும் வாழ்த்து சொன்னதற்கு நன்றி அக்கா.

ஸ்ரீராம். said...

உண்மை.  பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா ஜோக்கே தனக்கு அந்த வேதனை இருக்கிறது என்பதை மறைக்கத்தான் என்று தோன்றும்!  மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா ,
இனிய காலை வணக்கம் அம்மா.

ஒரு நல்லவரை மணந்து நல்ல வாழ்வு தான்
வாழ்ந்திருக்கிறேன்.
நன்றி சொல்லக் கடமை உண்டு அல்லவா.



அன்புடன் வந்து படித்ததற்கு மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. என்றும் வாழ்க வளமுடன்.
நம் எல்லோர்க்கும் உரித்தான நல்ல பந்தங்களை
எப்பொழுதும் மதிப்பதில் தானே நமக்குப்
பெருமை.

என்றும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்
சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடன் இருக்க ஆசிகள்.

சார் எப்பொழுதும் உங்களுக்குத் துணை
இருப்பார்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம்.
ஆமாம் நம் உள்ளங்களில் மனைவி கணவன் உறவு
நல்ல அஸ்திவாரத்தில் தான் ஆரம்பிக்கிறது.

அனைவருமே அந்தக் கட்டுப் பாடுகளை மதித்துதான் நடக்கிறோம்.
என்றும் நலமுடன் இருக்க ஆசிகள்.

நெல்லைத்தமிழன் said...

பெண்டாட்டியோ கணவனோ கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இயங்குவது கடினம். எனக்கெல்லாம் என்ன வேணும்னாலும் பண்ணமுடியும் எஎன்ற தைரியம் இருந்தாலும், நாலாம் நாள் அவள் வந்து பண்ணிப்போட்டால்தான் திருப்தி. அதனாலத்தான் இதை ஆயிரம் காலப் பயிர் என்கிறார்கள்.

நெல்லைத்தமிழன் said...

முதல் படம் இப்போதான் பார்க்கிறேன். திருமணமான புதிதோ?

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள் அம்மா. திருமணம் எனும் பந்தம் - விட்டுக் கொடுத்துப் போவதிலும், ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதிலும் தான் இருக்கிறது அல்லவா.

பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா ஜோக் - எனக்கும் இப்படியான ஜோக்குகள் பிடிப்பதில்லை - ஏதோ சொல்கிறார்களே தவிர அப்படி இல்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

சம்சாரம் இல்லையேல் சகலமும் போச்சி...

Geetha Sambasivam said...

அருமையான பதிவு. என்னதான் சண்டை போட்டாலும், வாக்குவாதங்கள் நிகழ்ந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்வதே திருமண பந்தத்தில் முக்கியத்துவம் பெறும். நம் குழந்தைகளுக்கு நாம் விட்டுச் செல்லும் மாபெரும் சொத்தும் அதுவே!

Geetha Sambasivam said...

கோமதி அரசுவுக்கும், திரு அரசு சாருக்கும் வாழ்த்துகள். என்றென்றும் தோன்றாத் துணையாக அரசு சார் கோமதியின் கூடவே இருப்பார். மன அமைதியுடன் வாழ்க்கையைக் கழிக்க கோமதிக்கும், உங்களுக்கும் எங்கள் பிரார்த்தனைகளும்.

Bhanumathy V said...

மிக நல்ல பதிவு. நீங்கள் உணர்வதை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். எனக்கும் ஜனவரியில்தான்(29) மனா நாள் வரும். உங்கள் மனா நாள் ஜனவரி 26 என்று நினைக்கிறேன். 

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
நீங்கள் சொல்வதுதான்.
நடு வயது வந்ததும் நம் கோப தாபம் மறைந்து
வாழ்வின் ஆதாரம் எது என்று தெரிந்து விடும்.
பிறகு விட்டுக் கொடுப்பது இருவருக்குமே பழகிவிடும்.
சம்சாரம் பெரிய அனுபவம்.

கடைசிப்படம் தான் திருமணப்படம்.
முதல் படம் 1974 திருமண நாள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் வெகு யதார்த்தமான வார்த்தைகள்.
உண்மையான அன்பு வம்பு வார்த்தைகளுக்கு இடம் கொடுக்காது.

நீங்களும் ,குடும்பமும் சேர்ந்திருக்கும் காலம் வரவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்.
மிக உண்மையான வாக்கு.
நிறை வாழ்வு வாழ ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
மிக மிக உண்மை. நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு
வழிகாட்டுவது நம் வாழ்க்கைதான்.

அடிக்கடி வாக்குவாதம் செய்யும் பெற்றோரின்
மகளோ மகனோ இல்லறம் நடத்தும்போது
அதே சாயலைப் பார்க்க முடியும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி சார்பில் மிக நன்றி மா.
மனதை விட்டு அகலாத பிம்பம் கணவருடையது. நமக்கு தைரியம் கொடுப்பதும் அவர்தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமா.
தாமதமாக வாழ்த்துகிறேன். என்றும் உங்களுடன் இருக்கும் சாருக்கும் சேர்த்து
என் வாழ்த்துக்கள். எங்கள் மண நாள் ஃபெப்ருவரி 4.

Geetha Sambasivam said...

உங்கள் மண நாளுக்கு தாமதமான வாழ்த்துகள் வல்லி.

Geetha Sambasivam said...

உங்களுக்கும் தாமதமான மணநாள் வாழ்த்துகள் பானுமதி!