இன்று இந்த வீடியோ பார்த்து, சந்தகை பண்ணும் மிஷின்லாம் தேடி, நிறைய பார்த்து, 7000 ரூபாய் மதிப்புள்ள மிஷின் ரொம்ப நல்லா இருக்குன்னு நினைத்தேன். (மனைவி நிச்சயம் ஒப்புதல் கொடுக்க மாட்டா... பேசாமல் இப்போ செய்கிற முறையிலேயே பண்ணுவோம் என்பாள். அவள் மாவு அரைத்தல், கிளறுதல், வேகவைத்தல் வேலை, நான் பிழிதல், புளிசேரி செய்தல், அப்புறம் அவள் சேவை மிஷினைச் சுத்தம் செய்தல். சேவைக்கு நான் மட்டும்தான் ஆசைப்படுவேன். பையன், எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும் என்பான். பெண், சேவையை, வேறு வழியில்லாமல் தயிர் சேர்த்து தயிர்சாதம் போல் சாப்பிட்டு என்னை வெறுப்பேற்றுவதால், அவளுக்கு சேவை கிடையாது)
நல்ல பதிவு. இந்த சேவை நானும் அடிக்கடி செய்துள்ளேன். இந்த பிழியறது (நாழி) எங்கள் வீட்டில் இப்போதும் உள்ளது. சங்கிலி கிரைண்டர்,சேவை நாழி,இவற்றை பார்த்ததும் பழைய நாட்கள் நினைவுக்கு வந்தது.சேவையில் இனிப்பு சேவை, பருப்புசிலி சேவை, தேங்காய் சேவை லெமன் என பலவும் அடிக்கடி செய்வேன். இப்போதும் எப்போதாவது செய்கிறேன். திருமங்கலத்தில் இந்த சங்கிலி கிரைண்டரை விட்டு விட்டு இங்கு வரும் போது டேபிள் டாப் கிரைண்டர் வாங்கி வந்தோம்.அது கோதுமை தோசைக்கெல்லாம், முழு கோதுமையை மிகவும் நன்றாக அரைக்கும்.அதை அங்கு விட்டு வந்தது தப்பென இங்கு வந்த பின் அடிக்கடி உணர்ந்திருக்கிறேன். உங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.
அன்பு கோமதிமா, ஆமாம் இந்த உணவை சேவை என்று தான் சொல்வோம், அந்த யந்திரம் சேவை நாழி நம் வீட்டில் மரத்திலும் ,இரும்பிலும் இருக்கிறது. முன்பு அதில் பிழிய பலம் இருந்தது. பிறகு சிங்கம் பிழிந்து கொடுத்தார்.
அந்த சுவை கண்டே நாட்களாகி விட்டது.
இந்தப் பெண்மணி அழகாகச் சொல்கிறார். அதற்காகவே இவரது காணொளிகளைப் பார்ப்பேன். இடியாப்பம் மாதிரி இட்லித் தட்டில் மாவு பிழிந்து வேக வைப்பதெல்லாம் பிடிப்பதில்லை. மிக நன்றி மா.
அன்பு முரளிமா, 7000 ரூபாயா. அம்மாடி!!!!! பழைய வீட்டில், கோபாலன் என்றொரு பரிசாரகர் இருந்தார். பாட்டி அடிக்கடி செய்யச் சொல்லும் டிஃபன் இந்த சேவை. வரிசையாக பேரன் பேத்திகள் உட்கார, வீட்டு மாற்றுப் பெண்கள் பரிமாற ஒரே பந்தியில் அத்தனை சேவை வந்து விழும். அதற்கு தனி மோர்க்குழம்பு.
சேவை நாழியைச் சுத்தம் செய்வதுதான் கஷ்டம்மா. சேவை மிக மதிக்க வேண்டிய பண்டம். உங்கள் மனைவிக்கு என் வாழ்த்துகள். இந்தப் பெண் அழகாகச் செய்கிறார். ரசிக்கத் தெரிந்தவர்கள் தான் நன்றாகச் சமைப்பார்கள். நல்ல பலம் உள்ள மனிதர்களைக் காண்பதே இப்போது அரிதாகி விட்டது.
அன்பு கமலாமா, திருமங்கலத்தில் விட்டு விட்டீர்களா. அந்த க்ரைண்டர் மாதிரி எதுவுமே உழைப்பதில்லை. சௌபாக்யா வெட் க்ரைண்டர் என்னிடம் இருந்தது. அதை எடுத்து அலம்புவது பிரம்மப் பிரயத்தனம். அப்போதெல்லாம் முடிந்தது. இப்போதெல்லாம் டேபிள் டாப்தான்.
சேவை மாதிரியான பண்டம் உண்டா!!!!!!! செய்யும் போதே வீட்டில் மணம் நிரம்பும். சேவை நாழி சென்னையில் துருப்பிடித்துக் கொண்டிருக்கும். மாவு நன்றாக வெந்துவிட்டால் சுலபமாகப் பிழிந்து விடலாம். மிக நன்றி அன்பு கமலா.நினைவுகள் நம்முடன் வளரட்டும்.
10 comments:
எங்கள் மாமியார் வீட்டில் இந்த மெஷின் உண்டு. கொழுகட்டையாக வேக வைத்து செய்வோம். ஆண் பிள்ளைகள் தான் பிழிவார்கள் நமக்கு பலம் கிடையாது.
இயற்கையான சூழலில் அருமையாக தயார் செய்தார்.
எங்கள் வீட்டில் புளிகாய்ச்சல், எலுமிச்சை, தேங்காய் போட்டு இனிப்பு போட்டு செய்வோம்.(சேவை)
வீடியோ திறக்கலை வல்லி. மறுபடியும் என்னோட கணினியில் வருதானு பார்க்கிறேன்.
இன்று இந்த வீடியோ பார்த்து, சந்தகை பண்ணும் மிஷின்லாம் தேடி, நிறைய பார்த்து, 7000 ரூபாய் மதிப்புள்ள மிஷின் ரொம்ப நல்லா இருக்குன்னு நினைத்தேன். (மனைவி நிச்சயம் ஒப்புதல் கொடுக்க மாட்டா... பேசாமல் இப்போ செய்கிற முறையிலேயே பண்ணுவோம் என்பாள். அவள் மாவு அரைத்தல், கிளறுதல், வேகவைத்தல் வேலை, நான் பிழிதல், புளிசேரி செய்தல், அப்புறம் அவள் சேவை மிஷினைச் சுத்தம் செய்தல். சேவைக்கு நான் மட்டும்தான் ஆசைப்படுவேன். பையன், எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும் என்பான். பெண், சேவையை, வேறு வழியில்லாமல் தயிர் சேர்த்து தயிர்சாதம் போல் சாப்பிட்டு என்னை வெறுப்பேற்றுவதால், அவளுக்கு சேவை கிடையாது)
இடியாப்பத்திற்கு இன்னொரு பெயர் சந்தகையா? அட புதுசா இருக்கே !!! இடியாப்பம் பிழிந்து பிழிந்து "நொந்த கை"தான் காலப்போக்கில் "சந்தகை"யாக மாறியிருக்குமோ ?
வணக்கம் சகோதரி
நல்ல பதிவு. இந்த சேவை நானும் அடிக்கடி செய்துள்ளேன். இந்த பிழியறது (நாழி) எங்கள் வீட்டில் இப்போதும் உள்ளது. சங்கிலி கிரைண்டர்,சேவை நாழி,இவற்றை பார்த்ததும் பழைய நாட்கள் நினைவுக்கு வந்தது.சேவையில் இனிப்பு சேவை, பருப்புசிலி சேவை, தேங்காய் சேவை லெமன் என பலவும் அடிக்கடி செய்வேன். இப்போதும் எப்போதாவது செய்கிறேன். திருமங்கலத்தில் இந்த சங்கிலி கிரைண்டரை விட்டு விட்டு இங்கு வரும் போது டேபிள் டாப் கிரைண்டர் வாங்கி வந்தோம்.அது கோதுமை தோசைக்கெல்லாம், முழு கோதுமையை மிகவும் நன்றாக அரைக்கும்.அதை அங்கு விட்டு வந்தது தப்பென இங்கு வந்த பின் அடிக்கடி உணர்ந்திருக்கிறேன். உங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு கோமதிமா,
ஆமாம் இந்த உணவை சேவை என்று தான் சொல்வோம்,
அந்த யந்திரம் சேவை நாழி
நம் வீட்டில் மரத்திலும் ,இரும்பிலும் இருக்கிறது.
முன்பு அதில் பிழிய பலம் இருந்தது.
பிறகு சிங்கம் பிழிந்து கொடுத்தார்.
அந்த சுவை கண்டே நாட்களாகி விட்டது.
இந்தப் பெண்மணி அழகாகச் சொல்கிறார்.
அதற்காகவே இவரது காணொளிகளைப்
பார்ப்பேன். இடியாப்பம் மாதிரி இட்லித் தட்டில்
மாவு பிழிந்து வேக வைப்பதெல்லாம்
பிடிப்பதில்லை. மிக நன்றி மா.
அன்பு கீதாமா,
பரவாயில்லைமா. நாம் செய்யும் சேவைதான்
இட்ந்த சந்தகை. மெதுவாகப் பார்க்கலாம்.
நன்றி மா.
அன்பு முரளிமா,
7000 ரூபாயா. அம்மாடி!!!!!
பழைய வீட்டில், கோபாலன் என்றொரு
பரிசாரகர் இருந்தார்.
பாட்டி அடிக்கடி செய்யச் சொல்லும்
டிஃபன் இந்த சேவை.
வரிசையாக பேரன் பேத்திகள் உட்கார,
வீட்டு மாற்றுப் பெண்கள் பரிமாற
ஒரே பந்தியில் அத்தனை சேவை
வந்து விழும். அதற்கு தனி மோர்க்குழம்பு.
சேவை நாழியைச் சுத்தம் செய்வதுதான் கஷ்டம்மா.
சேவை மிக மதிக்க வேண்டிய பண்டம்.
உங்கள் மனைவிக்கு என் வாழ்த்துகள்.
இந்தப் பெண் அழகாகச் செய்கிறார்.
ரசிக்கத் தெரிந்தவர்கள் தான் நன்றாகச் சமைப்பார்கள்.
நல்ல பலம் உள்ள மனிதர்களைக் காண்பதே இப்போது
அரிதாகி விட்டது.
வணக்கம் சிவா.
நலமா மா.
நாங்கள் இதை சேவை என்போம்.
ஆமாம் கைகள் நொந்துதான் போகும். ஆனால்
சுவை வேண்டி இருக்கிறதே.
நன்றி மா.
அன்பு கமலாமா,
திருமங்கலத்தில் விட்டு விட்டீர்களா.
அந்த க்ரைண்டர் மாதிரி எதுவுமே உழைப்பதில்லை.
சௌபாக்யா வெட் க்ரைண்டர் என்னிடம் இருந்தது.
அதை எடுத்து அலம்புவது பிரம்மப் பிரயத்தனம்.
அப்போதெல்லாம் முடிந்தது.
இப்போதெல்லாம் டேபிள் டாப்தான்.
சேவை மாதிரியான பண்டம் உண்டா!!!!!!!
செய்யும் போதே
வீட்டில் மணம் நிரம்பும்.
சேவை நாழி சென்னையில் துருப்பிடித்துக் கொண்டிருக்கும்.
மாவு நன்றாக வெந்துவிட்டால் சுலபமாகப்
பிழிந்து விடலாம்.
மிக நன்றி அன்பு கமலா.நினைவுகள் நம்முடன் வளரட்டும்.
Post a Comment