தை மாதக் காட்சிகள் பல.
செவ்வாயும் வெள்ளியும் வீதி நிறை மாதர்கள்.
வண்ண வண்ண ஆடையுடுத்திக்
கபாலி உடனுறை கற்பகத்தைக் காணவும்,
அலர்மேல் மங்கை உறை மார்பன் திருவேங்கடத்தானைத்
தரிசிக்கவும் விரைந்த படி இருப்பார்கள்.
தைமாதம் திருமாங்கல்யம் சேர்த்த மஞ்சள்
மங்கலக் கயிற்றை மாற்ற விரையும்
மங்கைகளும்,
வாசல் தோறூம் விற்கப்படும் பசுமஞ்சள்
கிழங்குகளும்,
பலபல பச்சைக் காய்கறிகளும், மணம் பரப்பும் மல்லிகையும்
நம் ஊரைச் சொர்க்க புரியாக மாற்றும்.
எல்லா மங்கலங்களும் என்றும் நிறைந்திட இறைவன்
அருளட்டும்.
4 comments:
பகிர்ந்த பாடல்கள் அருமை.
பகிர்ந்த செய்திகளின் காட்சிகளை நேரில் பார்த்த உணர்வு.
பதிவில் பகிர்ந்திருக்கும் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் - இனிமையான பாடல்கள்.
தொடரட்டும் பதிவுகள்.
அன்பு கோமதிமா.,
நினைவுகள் தேங்காமல் ஓடிக் கொண்டிருக்க
இசை ஒரு நல்ல வழி.
இறைவன் நம் எல்லோரையும் ஏதாவது ஒரு வகையில் வழி நடத்திச்
செல்வான். நன்றி மா.
அன்பு வெங்கட் ,
மிக நன்றிமா.
பெண்ணின் பெருமை படப் பாடல்
காணொளி எனக்குக் கேட்கவில்லை.
நீங்களும் வந்து ரசித்ததற்கு மிக மிக நன்றி மா.
நலமுடன் இருங்கள்.
Post a Comment