சென்னையில் இருக்கும் போது
ஜனவரி 29ஆம் தேதி நடைபெறும்
Beating Retreat பார்க்காமல் இருந்ததே கிடையாது.
எனத ஊருக்கு சென்றாலும் இந்த
நிகழ்ச்சியைக் கண்டு மனம் பொங்கிப்
பெருமையில் கண்ணீர் கசியாமல்
இருந்ததில்லை.
யார் தலைவர் யார் தொண்டர் என்றெல்லாம்
கணக்கில் இல்லை.
அந்தப் பாதுகப்புத் தரும் இந்திய வீரர்களுக்கே
நம் மரியாதை உரித்தாகிறது.
வாழ்க பாரதம். வாழ்க இந்தியர்.
9 comments:
காணொளி கண்டு மகிழ்ந்தேன்
வாழ்க பாரதம்!
ஜெய் ஹிந்த்.
எனக்கும் பிடித்த நிகழ்ச்சி. பெரும்பாலான வருடங்களில் பார்த்ததுண்டு. இந்த வருடம் பார்க்கவில்லை. இணையம் வழி தான் பார்க்க வேண்டும்.
ஆமாம், நாங்களும் குடியரசுக்கொடியேற்றத்தை விடக் கொடியை இறக்கும் இந்த நிகழ்ச்சியை விடாமல் பார்ப்போம். ஆனால் இந்த வருஷம் முடியலை. ஏதேதோ வேலைகளில் மறந்து விட்டோம். கடைசியில் "ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸிதா ஹமாரா! ஹமாரா!" என்று பாடும்போது மனசு விம்மும். கண்களில் கண்ணீர் வரும்! தொண்டை அடைச்சுக்கும்.
அன்பு கோமதி மா.
மிக மிக நன்றி.
நம்மை வளர்த்துப் பாதுகாத்த நம் இந்தியத்தாய்க்கு
எப்பொழுதும் நம் வந்தனங்கள்.
ஜெய் ஹிந்த் மா.
அன்பு வெங்கட்,
எது மாறினாலும் நம் மனம் நம் தாய் நாட்டை மறப்பதில்லை.
கொடியை மறப்பதில்லை.
நம் பாதுகாப்பு வீரர்களை மறப்பதில்லை.
இறைவன் நம் நாட்டையும் நம்மையும் காப்பான். நன்றி மா.
அன்பு கீதாமா,
அதுதான் நம் நாட்டின் மேல்
நமக்கிருக்கும் பாசம்.
இந்தக் கொடி இறக்கும் நிகழ்ச்சி எப்பொழுதுமே
நம்மை ஆட்கொள்ளும்.
இந்தியத்தாயே நம் நாட்டைக் காப்பாற்று
என்றே மனம் நினைக்கும்.
அதுவும் ஸாரே ஜகாசே அச்சா'' கேட்டுக் கொண்டு வீர நடை பயிலும் வீரர்களையும்
அந்த செங்கோட்டை எல்லாம் காண்பது விவரிக்க
முடியாத உணர்ச்சி. கண் கலங்கத்தான் செய்யும்.
அது மட்டும் ஒவ்வொரு வருடமும் மாறுவதில்லை.
நன்றி மா. எல்லோரும் நன்றாக இருப்போம்.
Jai Hind! proud to be an Indian!
Post a Comment