Blog Archive

Friday, May 01, 2020

ரசமான விஷயம்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
 ரசமான  விஷயம்.

பேரன், வெளியில் தங்கி இருக்கும் போது
க்ரப் ஹப்பில் உணவு இணைய வழி ஆர்டர் செய்து
சாப்பிட்டு,
அஜீரணம் அதிகமாகி பருப்பு போட்டு எதுவும்
சுவைக்கவே முடியவில்லை.
இத்தனை சின்ன வயதில் இப்படிக்கூட
வருமா என்று வேதனையாக இருந்தது.
பயத்தம்பருப்பு மட்டுமே ஒத்துக் கொண்டது.

அப்பொழுதோ  வெளியில் போய் வாங்கி வருவதில் தயக்கம் வந்து விட்டது.
நம் ஊர்க்காய்கறிகள் விற்கும் இந்தியக் கடைகள்
பொருட்களைக் கொண்டு வருவதில் தாமதமாகிறது.
இப்பொழுதுதான் கொஞ்சம் சரியாகி வருகிறது.

இதோ இன்றுதான் மயூரி என்ற கடையில் வீட்டில் கொண்டு வந்து தருவதாக
ஒத்துக் கொண்டார்கள்.
 விலையும் வேலையும் கூடுதல் தான்.
எதற்கு இத்தனை முன்னெச்சரிக்கை என்று யோசனை
வருகிறது இல்லையா. என்னை முன்னிட்டுதான் இந்த ஏற்பாடு.

வெளியில் செல்லும் எத்தனையோ தம்பதிகளைப் பார்க்கிறேன்.
அவர்களும்  ஒரு நாள் கணவன்  சென்று வந்தால்,
இரண்டு மூன்று கழித்து மனைவி சென்று வருவார்.
இதோ இன்று வெய்யில் வந்திருக்கிறது.
யார் வெளியில் சென்றாலும் பத்தடி தள்ளி நின்றே
பேசுகிறார்கள்.
வெய்யில் அடித்தாலும் குளிரும் இருக்கிறது.
பைத்தாரக் காத்துன்னு பாட்டி சொல்வது கேட்கிறது.
அந்தக் காற்று காதில் புகுந்தால் சைனஸ்
பிரச்சினை வரும்.:)
இதெல்லாம் இளைய தலைமுறையினருக்கு.
எனக்கு இல்லை! இது இருக்கட்டும்.

60 வயதுக்கு மேல், உள்ள முதியோருக்குச் சீக்கிரம்
நோய் தொற்று வர வாய்ப்பு இருப்பதால்
சிறுவர்கள், இளையவர்கள் வெளியே போய்
அதை வாங்கிக் கொண்டு வந்துவிடக்கூடாது
என்பதில் இங்கிருப்பவர்கள் அதிக கவனம்
வைக்கிறார்கள்.

அதனால்தான் இத்தனை கட்டுப்பாடுகள்.
சரி, பேரன் பிரச்சினைக்கு வரலாம்.
அவனுக்கோ ரசமே பிடிக்காது.
பாஸ்தா, குழம்பு, நன்றாக வதக்கின காய்கறி இதெல்லாம்
பிடிக்கும்.
குழம்போ காரமே இல்லாமல் வைத்தாலும்
ஏப்பம் வந்து கொண்டிருக்கிறது.
ஒருனாள் ,பாட்டி செய்கிற கீரையும் ரசமும் சாப்பிடுடா
என்று கெஞ்சி தயவாய்க் கேட்டுக் கொண்டேன்.
அரைமனதாகச் சம்மதித்தான்.

கீரையை நன்றாக அலசிச் சுத்தம் செய்து
தேங்காய், சீரகத்துடன் வேகவைத்து மசித்து வைத்தாச்சு.
கடுகு தாளித்ததுமே வந்துவிட்டான்.
ஒரு கிண்ணத்தில் கீரையைப் போட்டுக் கொண்டு
முதல் பசி ஆற்றிக் கொண்டான்.
ரசம் எப்படி செய்யப் போறேன்னு கேட்டுக் கொண்டு
பக்கத்திலேயே நின்றவனிடம் விளக்கினேன்.
நம்ம ஐந்து பேருக்கு ஒரு சின்ன அளவு புளி ,உப்பு
போட்டுக் கரைத்துக் கொள்ளணும்.
சரி. நீ கை அலம்பிண்டியான்னு உறுதி செய்தான்.:)
பிறகு அவன் அம்மா வைத்திருக்கும் சின்ன உரலில்
ஜீரகம், பூண்டு, மிளகு போட்டுப் பொடித்துக் கொண்டேன்.
அப்புறம் அந்த ஸ்பைசி பொடி போடுவியா என்றான்.
அவன் சொன்னது சாம்பார்ப் பொடியை.
இல்ல ராஜா, பயப்படாதே என்றபடி அடுப்பில் வாணலியை ஏற்றி
நல்லெண்ணெய் விட்டு
சீரகம் போட்டுப் பொரிந்ததும் கருவேப்பிலைதாளித்து
சீரகப்பூண்டு மிளகை அதில் போட்டு வதக்கும் போது
வந்த வாசனையை முகர்ந்து.
ம்ம்ம்.இட் ஸ்மெல்ஸ் குட் என்றான்.
கூடவே புளி ஜலத்தை விட்டதும்,
ஐந்து நிமிடத்தில் அது பொங்கியது.
ஆச்சு என்று அடுப்பை அணைத்து விட்டேன்.
 பக்கத்தில் இன்ஸ்டண்ட் பாட்டில் சாதம் தயார்.

இருடா, பெருமாளுக்குக் கை காண்பித்துவிட்டு சாப்பிடலாம்
 என்று ஒரு சுத்தமான தட்டில் சாதம்  பயத்தம்பருப்பு மசியல்,நெய் ,
மகள் வளர்க்கும் துளசிச் செடியிலிருந்து இரண்டு துளசி
இணைத்து ,குழந்தைக்கு ஒத்துக்க வேண்டும் பெருமாளே
 என்று தியானித்தபடி அவன் தட்டில்  வைத்தேன்.
எனக்குப் பாட்டி ?என்று  கேட்ட இளையவனுக்கும் அதே.
நோ புக், நோ மொபைல் என்று சொன்னதும்
''நீ ரொம்ப ஸ்ட்ரிக்ட் பாட்டி'' என்று சொன்னபடி
கைகளைக் கழுவிக் கொண்டு வந்தான்.
கீரையைத் தொட்டுப் போட்டுக் கொண்டு,
நோ க்ரன்ச்? என்றவனிடம், அது இல்லாமல்
இன்று சாப்பிடு.அதுவே வயிற்றுக்குக் கேடு
என்றேன். உ .கிழங்கு வறுவல் இல்லாமல்
முதல் தடவையாகச் சாப்பிட்டு முடித்தான்.
அடுத்தாற்போல் நல்ல தயிர் சாதம்.
கிட்டத்தட்ட இரண்டு வாரமாக ஏப்பம் காணோம்.

சரியாகத் தூங்கி,சரியாக எழுந்தாலே பாதி வியாதி
போய்விடும். பார்க்கலாம். இறைவன் துணை.

Tomato Rasam from Homemade Rasam Powder Recipe | Pepper On Pizza

23 comments:

Geetha Sambasivam said...

பேரனின் வயிற்றுக்கோளாறு சரியாகப் பிரார்த்தனைகள். இவங்கல்லாம் இந்த அவசர உணவு சாப்பிட்டே வயிற்றைக் கெடுத்துக்கொள்கின்றனர். அங்கே ஹூஸ்டனில் பெரிய பேத்திக்கும் இதே தொந்திரவு. இப்போ ஒரு மாசமாக வீட்டில் இருப்பதால் பிரச்னை இல்லை.

ஸ்ரீராம். said...

பாட்டி வைத்தியம் என்றால் சும்மாவா? அதுவும் உங்களை மாதிரி ஒரு பாட்டி அமையக் கொடுத்து வைத்திருக்கணுமே பேரன்கள்...

ஸ்ரீராம். said...

பாஸ் கீரை செய்த உடன் நான் அதைப் பெருமளவு சாப்பாட்டுக்கு முன்னரே கப்பில் போட்டுச் சாப்பிட்டு விடுவேன்! செய்யும் முன் " உங்க வீட்டு பாணியா? எங்க வீட்டு பாணியா?" என்று கேட்டுக் கொள்வார். அவர்கள் வீட்டு பாணியில் பாசிப்பருப்பு வேகவைத்து தேங்காய் சீரகம் மிளகாய் அரைப்பது. எங்கள் வீட்டு பாணி து.ப பச்சையாக தேங்காய் ப்ளஸ்ஸுடன் அழைத்துச் சேர்ப்பது.

ஸ்ரீராம். said...

ஆமாம், ரசம் பற்றிய குறிப்பில் தக்காளியைக் காணோமே...

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய சூழலில் மனதில் சோம்பல் மட்டும் வரவே கூடாது அம்மா....

வெங்கட் நாகராஜ் said...

junk food சாப்பிடுவதை விட இப்படி நம் ஊர் சமையல் சாப்பிடுவதே நல்லது. அதுவும் பாட்டி சமைத்துச் சாப்பிடக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

பேரனுக்கு விரைவில் சரியாகட்டும்.

ரசம் பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது.

KILLERGEE Devakottai said...

பெயரனின் வயிற்றுப்போக்கு நலமாகட்டும்.

கோமதி அரசு said...

பேரனின் உடல் நலமானதில் மகிழ்ச்சி.
பாட்டியின் அன்பான பத்திய சாப்பாடு உபசரிப்பு, கடவுள் கிட்டே பிரார்த்தனை எல்லாம் சேர்ந்து அஜீரணம் மாயமாச்சு.

பயத்தம்பருப்பு வறுத்து அரைத்த துவையலும் நன்றாக இருக்கும் வாய்க்கு.

Geetha Sambasivam said...

@ஸ்ரீராம், உங்க பாஸ் செய்வது கீரை மொளகூட்டல்! உங்க வீட்டுப் பாணி பொதுவானது. :))))))

Angel said...

//அந்த ஸ்பைசி பொடி// ஹாஹா என் மகளும் இதே போலத்தான் சொல்லுவாள் அந்த ஸ்பைசி பவுடர்னு 
நான் நினைக்கிறன் வெளிஉணவு அதிகமா வயிற்றை பாதித்திருக்குன்னு.அவியல் நல்லது .இங்கே நாங்க வெளியுணவுகள் வாங்குறதில்லை ..இப்போலாம்மா அடிக்கடி ரசம் .kale ஸ்பினாச் போன்ற  கீரைகள் தான். இங்கும் ஆன்லைன் ஆர்டர் கஷ்டம் .மார்ச் 30 கொடுத்த அர்டே ஹாலண்ட் அண்ட் பேரேட்ஸில் எனக்கு க்ளூட்டன் இல்லா ஒட்ஸ் அது நேற்றுதான் வந்துசேர்ந்துச்சி.வெறும் ரசம் மோர் சாதம் போதும் வயிற்றை சரியாகிடும் பழையபடி .

நெல்லைத்தமிழன் said...

ரசம் சாதம் சாப்பிட்டு சரியாகப் போகாத வயிறு இருக்கா என்ன... அதுவும் பெருமாள் கண்டருளிய, அனுபவம் வாய்ந்த கைகள் செய்து... நல்லா எழுதியிருக்கீங்க.

மாதேவி said...

பாட்டியின் சமையல் கைமணம் சுவைத்தது.
பேரன்கள் விரும்பி சாப்பிட்டது மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா, வெளியூரில் இருந்தால் குழந்தைகள் என்ன தான் செய்யும்.
அவர்கள் கஷ்டப்பட்டால் நாமும் சேர்ந்து வேதனை அடைகிறோம்.
இந்த லாக்டவுன் வந்தது ஒரு விதத்தில் நன்மை. வீட்டு உணவை
சாப்பிட முடிகிறது.
இப்போது சமையல் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறான்.
நலமுடன் இருக்கட்டும். உங்கள் பேத்திக்கும்
நலமுடன் இருக்க பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். நன்றி மா.
நம்மால் குழந்தைகளின் சிரமத்தைப் பார்க்க முடியவில்லையேம்மா.

வீட்டிற்கு வந்தபிறகு எவ்வளவோ தேவலை.
வேலை நிமித்தம் வெளியூர் போனாலும் ,தன் கையால் சமைத்துக் கொள்ளத்
தெரிந்து கொள்ள வேண்டும்.
முன்ன மாதிரி ஏதோ ஒரு ஆள்
வேலைக்கு வைத்துப் பார்க்கவா முடியும். நம்மால் தான் போக முடியுமா.
இந்தப் புது உலகம் என்னைப் பிரமிப்புக்குள்ளாக்குகிறது.
இந்த வேகமும், பணமும் யோசிக்க வைக்கிறது.
சாப்பிட வேண்டிய வயதில் கட்டிப் போட்டால்
அந்தப் பிள்ளைதான் என்ன செய்யும்.

தக்காளியை எழுத்தில் சேர்க்க மறந்தேன் .
அன்பு வார்த்தைகளுக்கு மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
உண்மைதான் காணி சோம்பல் கோடி பெறும்.
சோம்பி இருக்கும் பிள்ளைகளை
இப்பொழுது பார்க்க முடியாது.
மூளை நிறைய வேலை செய்கிறது.
வெளியே போகத்தடை.பொறுத்துதான் போக வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
பேரன் வேலை விஷயமாகக் கலிஃபோர்னியாவில் இருந்த போது,
கிடைத்ததைச் சாப்பிட வேண்டி வந்தது. அதனால்
வந்த தொந்தரவு இது.
ஒரு மாதம் முன்னால் வேலை முடிய,
இங்கே வந்து விட்டான்.
குழந்தையைச் சொல்லி பயன் இல்லை.
நாம் அவனது வேதனையைத் தணிக்க வேண்டும்.
நம்மை அதற்காகத்தானே இறைவன் வைத்திருக்கிறான்,.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி. அஜீரணம் எப்படி எல்லாமோ படுத்துகிறது. உங்களை எல்லாம் நினைத்துக் கொள்வேன்.
யார் சமைத்துக் கொடுக்கிறார்களோ என்று. நலமுடன் இருங்கள். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
பத்தியம் இருக்கத்தான் வேண்டும்.
இன்று நம் ஊர்க்காய்கள் வந்து விடும்.

இனி கவனமாக இருக்கலாம்.
வெளி உணவே கிடையாது.
இஙே உணவகங்கள் மூடி இரண்டு மாதங்கள்
ஆகின்றன. நல் வார்த்தைகளுக்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஏஞ்சல்,
வெளியூரில் தங்கினால் இதெல்லாம் கஷ்டம்.
அவனுக்குக் காரமே ஆகாது.

அவியல் மிகப் பிடிக்கும் . காலை வெறும் வயிற்றில்
வெண்ணேய் சாப்பிட்டாலும் நல்லது.
மகளுக்கும் ஸ்பைஸ் பிடிக்காதா. ஹாஹா.
நல்லது.
சாதுவான உணவுகளையே உண்போம்.
இங்கும் இரண்டு மாதங்களாகக் கடைகள் அடைப்பு. இல்லாவிட்டாலும் வெளியே சாப்பிடுவது கிடையவே கைடையாது.
உடல் நலம் பேணுவோம்.நன்றி ராஜா.



வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
வெளியில் சாப்பிட்டதின் டாக்சிக் தன்மை வெளியில் போக
இனி ஒரு ஒழுங்குக்கு வரும் என்று நம்புகிறேன்.
நல்ல குழந்தை.
இறைவனிடம் நம்பிக்கையும் உண்டு.
இதோ மாலை நேர ஸ்லோகம் சொல்ல இருவரும் வந்துவிட்டனர்.
ஒரு மணி நேரம் நல்லபடியாகச் செல்லும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
நல்லதைச் சொல்லுவோம் .நன்மை விளையட்டும்.
நன்றி மா.

priyasaki said...

உங்க பேர்ன கொடுத்துவைத்தவர். இப்படி ஒரு அன்பான பாட்டி. இப்போ அவருக்கு சுகம்தானே வல்லிம்மா. நலமாக இருக்கவேணும் எல்லோரும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அம்மு,

ஒரு மாதமாகிவிட்டதே. எவ்வளவோ தேவலை அம்மா.
இன்று கூட பக்கோடா செய்து கொடுத்தேன். அளவாக எடுத்துக் கொண்டான்.
நன்றி மா. குழந்தைகளும் நன்றாக இருந்தால் தானே
நமக்கு நிம்மதி.