வல்லிசிம்ஹன்.
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
மார்கழியின் சிங்கம் வருகிறது. யாதவ சிங்கம்.
23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில்
+++++++++++++++++++++++++++++++++++++++
தன் சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ ஆண்டாள்.
கோதையின் யாதவ ஸிம்ஹம்
யாதவ கண்ணனாகிய சிங்கம்
மாரி பொழிந்து மனங்கள் குளிர்ந்திருக்கும் காலம் இணையுடன் மகிழ்ந்திருந்த மிருகங்கள் குகையை விட்டு வெளியே வரும் நேரம்.
இதுகாறும் உறங்கியிருந்த சிங்கம் சட்டென்று அடியார்கள் குரல் கேட்டு விழிக்கிறது.
மெதுவாக எழுந்து உடம்பில் மிஞ்சியிருக்கும் சோம்பலை முறித்து உடல் சிலிர்த்து
கேசத்தை உலுக்கி ஒரு கர்ஜனை செய்ய,அதன் பகைவர்கள் ஓடி ஒளிய
கம்பீரமாகக் குகைவாயிலுக்கு வருவதாகக்
கோதை விவரிக்கிறாள் .
வேரி மயிர் போங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்படுகிற கண்ணனாகிய சிங்கம்.
அவ ன் சிங்காதனமோ பொய்யறியாதது.
ராமனின் சொல்போல் மாறாதது. உண்மையை விளம்பும்.
அரசன் கண்ணன் பொய்யுரையான்.
அவன் மாளிகையிலிருந்து சிம்ம நடைபோட்டு,
சிங்காதனத்தில் வந்து அமர வேண்டுகிறாள் கோதை.
அவன் நடையழகை அன்றொரு நாள் சீதை ரசித்தது போல் நம் ஆண்டாள் கண் நிறைய அந்த அழகைக் காண விரும்புகிறாள் .
கண்ணா வா வந்து அமர்ந்து எங்கள் வார்த்தையைத் தயை செய்து கேள் .
உனக்காக நோம்பு நோற்ற பாவையர் நாங்கள்.
அமர்ந்து கேட்டு எங்களுக்கு அருள் செய்.
உன்னை அடையவே எங்கள் அவா பூர்த்தியாகும் .
இந்தக் கோதையை அடைய அவன் அல்லவா கொடுத்து வைத்திருக்கிறான்.
வாழி கோதை நாமம். வாழி கண்ணன் நாமம்.

7 comments:
நல்ல விளக்கம். சிறப்பு.
அருமையான சுருக்கமான விளக்கத்திற்கும் அழகான படங்களுக்கும் நன்றி.
பாடல் விளக்கமும் படங்களும் அருமை.
பாடல் கேட்டேன்.
மிக மிக நன்றி ஸ்ரீராம்.
வீரத்துக்கும் நேர்மைக்கும் என்றும்
மேன்மைதான்.
அன்பு கோமதி,
அழகான மார்கழி மாதத்தின் மிகச் சிறப்பான
நாட்கள் இவை.
நம் கோதையின் தமிழில் இறைவனை வழிபடுவது எவ்வளவு
இனிமை.அனுபவிப்போம்.
அன்பு கீதா மா. மிக நன்றி.
திருப்பாவை கேட்கவும்,தமிழில் எழுதவும்
இறைவன் அருளி இருக்கிறான்.
சிறப்பான விளக்கம். நன்றிம்மா...
Post a Comment