Blog Archive

Wednesday, January 08, 2020

கோலங்கள்.2020

வல்லிசிம்ஹன்.
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.


 

அனுராதாசுரேஷ், மகளின் பள்ளித்தோழி.
அவள் ஒவ்வரு மார்கழி மாதமும் அதிகாலை எழுந்து
குளித்து  ,காலை வேலைகளை.  முடித்து, அவர்களது. குடி இருப்பின் வாயிலில் நான்கு மணி நேரம். செலவழித்து.   பெரிய பெரிய கோலங்களை. இடுவது  இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் தான் தெரியும். எனக்கு மகள் அனுப்பிய. கோலங்களை இங்கே பதிவிடுகிறேன். மைலாப்பூர்வாசிகளுக்கு. இது பெரிய வரம்.

காலையில் அங்கே நடக்கும் அனைவருக்கும் தினம் ஒரு அதிசயமாய்
இந்தக் கோலங்கள் மலர்கின்றன. திருமதி அனுராதா சுரேஷ்க்கு மனம் நிறை ஆசிகள்.   
அவர்  மைலாப்பூர்  கோலப் போட்டிகளுக்கு ஜட்ஜாகக் கூட இருக்கிறார்.
தினம் அவர் கோலங்களை பார்ப்பவர்கள் வளையல்கள் ,பூங்கொத்துகள் என்று கொண்டு வந்து கொடுப்பார்களாம்.

கூட்டுக குடும்பத்தில் வசிக்கும்  போதும் அழகுக்கலையை வளர்த்து மற்றவர்களையும் மகிழ்விக்கும்  அனுவுக்கும்  அவரது குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.

.






17 comments:

கோமதி அரசு said...

கோலங்கள் அனைத்தும் அழகு, அருமை.
உங்கள் மகளின் தோழிக்கு வாழ்த்துக்கள்.

KILLERGEE Devakottai said...

கோலங்கள் ஏதோ பிரிண்டிங் போல அவ்வளவு தெளிவு அழகு அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
மிகப் பண்பான பெண் மா. அந்தக் குழந்தை. துளி கர்வம் கிடையாது.
இவ்வளவு கலையை விரல்களில் அடக்கி வைத்திருக்கும் அனு,
சகல சௌபாக்கியங்களுடன், ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டைஜி,
இவ்வளவு பாராட்டுகளும் கௌரவமும் கிடைத்தும் அடக்கமாக இனிய
பண்புடன் இருக்கும் அந்தக் குழந்தையை நினைத்தால் பெண்குலத்துக்கே பெருமை. நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

கோலங்கள் ஒவ்வொன்றும் அசர வைக்கிறது அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் இனிய நாளுக்கான வாழ்த்துகள்.
உண்மைதான் அப்பா. இப்படிக் குனிந்து அழகு செய்ய
எவ்வளவு பொறுமை வேண்டும்!!
இந்தப் பெண் சீரோடும் சிறப்போடும் நன்றாக இருக்கணும்.
நன்றி மா.

Ranjanijay said...

அருமையான கோலங்கள்

Anuprem said...

மிக அழகு மா ..

வெள்ளை மற்றும் செம்மண் வண்ணத்திலையே வானவில்லாய் மிளிர்கின்றன ..

Angel said...

கோலங்கள் செம அட்டகாசம் வல்லிம்மா ..மிக நேர்த்தியா கண்ணை கொள்ளை கொள்ளுது .நாங்கள் அனைவரும் ரசித்தோம்னு சொல்லுங்க அவரிடம் .

வல்லிசிம்ஹன் said...

கண்டிப்பா சொல்றேன் அன்பு ஏஞ்சல்.
அவருக்கு முகனூலில் அழைப்பு கொடுத்திருக்கிறேன்.
பெண் வழியாகவும் சொல்கிறேன்.
மிக அடக்கமான பெண். நன்றாக இருக்க வேண்டும்.
நன்றி டா.

வல்லிசிம்ஹன் said...

Ranjanijai.
thank you so much.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனுப்ரேம்,
அந்தப் பெண்ணின் பொறுமை தான் வியக்க வைக்கிறது.
அந்த பார்டர் லைன்லியே எவ்வளவு பாட்டெர்ன் பாருங்கோ.
நன்றி மா.

Geetha Sambasivam said...

அற்புதமான கோலங்கள். அந்தப் பெண்ணிற்கு எங்கள் வாழ்த்துகளையும், ஆசிகளையும் சொல்லிவிடுங்கள். பொறுமையும், செய்நேர்த்தியும் மிக அருமையாக வரமாக வந்து வாய்த்திருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா. மிக அடக்கமான பெண்.
மைலாப்பூர் டைம்ஸ் ல வீடியோ கூட வந்திருக்கு.
ஏதோ பாரம்பரியத்தை விடாமல் செய்கிறது.
அவள் மாமியாரும் மாமனாரும் வீட்டுக்காரரும்
மிக நல்லவர்கள்.
இந்தப் பெண்ணின் கலை தழைக்கட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

கோலங்கள் அனைத்துமே அழகும்மா...

கோலமிட்டவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
மிக நல்ல பொறுமையான ,கலையார்வம் உள்ள பெண்.
ஆசிகள் அவளுக்கு எல்லோரிடமிருந்தும்
நிறைகின்றன.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
மிக நல்ல பொறுமையான ,கலையார்வம் உள்ள பெண்.
ஆசிகள் அவளுக்கு எல்லோரிடமிருந்தும்
நிறைகின்றன.