எல்லோரும் வளம்பெற வாழ வேண்டும்
கனைத்திளங் கற்றெருமை மார்கழி 12
ஸ்ரீ கோதை நாச்சியார் ஆறு தோழிகளை எழுப்பிவிட்டாள் .
இப்போது ஏழாவது வீட்டை அணுகி,
அந்தப் பெண்ணின் வீட்டுப் பெருமையைச் சொல்லி
கண்ணனின் அவதார மகிமைகளையும்
உணர்ந்து பாடி , கண்ணனின் நினைப்பிலேயே மயங்கித் துயிலும் இந்த பக்தையையும் எழுப்புகிறாள் .
கறவை க்கணங்கள் பற்றி முந்தைய பாசுரத்தில் உரைத்தவள்
இன்று பால் கறக்காமலேயே தானே சுரந்து வழிந்தோடி வெள்ளமாக இருக்கும் காட்சியைக் கண்களுக்கும் மனதுக்கும் எடுத்துரைக்கிறாள்.
கேட்காமலேயே அருளுரையை வழங்கும் ஆச்சார்ய வள்ளல்களை போன்றே இந்த
இளம் வயதுப் பசுக்களும் எருமைகளும்
கன்றுக்குட்டிக்கு ஊட்டியது போக மிச்சம் இருக்கும் பாலை
வடிய விடுகின்றனவாம்.
சேறு போலத் தேங்கி இருக்கும் பாலுக்கு நடுவே இப்போது ஆண்டாளும் தோழிகளும்
நின்று வீட்டு மகளை அழைக்கிறார்கள்.
" கீழே பால் வெள்ளம் சில்லென்று இருக்கிறது.
தலை மேலே பனி கொட்டுகிறது.
நீயோ அயர்ந்து கண்ணனைப் பற்றிய நினைவில் ஆழ்ந்து
இருக்கிறாய்.
இந்தப் பசுக்கூட்டங்களின் உரிமையாளனான் தனவானின்
அருமைத்தங்கையே,
தன் மனைவியை அபகரித்த தென்னிலங்கை கோமான் இராவணனை இராமனின் சினம் கொன்றது.
அதே ராமன் நம் மனதுக்கு இனியவனாகிறான் .
மனதுக்கு இனியவன் நமக்கு இனிக்கிறான்.
அக்கம்பக்கத்தில் உள்ளோர் அறியும் முன் நீ எழுந்து வந்து எங்களுடன் இணைந்து விடு.
இந்தப் பேருறக்கம் உனக்கு அழகல்ல என்று இதமாக
உரைக்கிறாள்.
அழைக்கும் குரலுடன் இணைந்து நாமும் பாடுவோம்.
சரணம் தாயே.
13 comments:
இன்றும் பதிவில் எழுத்து பதிவாகவில்லை.
எல்லாரும் வளம் பெற வேண்டும்..
கோதையின் நோக்கமே இது தான்...
ஆண்டாள் திருவடிகள் போற்றி...
கேட்டு ரசித்தேன் அம்மா
MLV அவர்களின் இனிய குரலில் திருப்பாவை... கேட்டு ரசித்தேன் வல்லிம்மா. நன்றி.
இனிய காலை வணக்கம் அன்பு துரை.
உலகம் உய்ய வேண்டும் எனபதற்காகப் பிறப்பெடுத்த பூமா தேவியின் அவதாரம்
அவள் சொல் வளம் கொடுக்கும்.
நன்றி மா.
அன்பு தேவகோட்டைஜி ,வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி மா.
நலமாக இருங்கள்.
அன்பு வெங்கட்,
பாசுரம் போதும் என்று ஆண்டாள் தீர்மானித்துவிட்டாளோ என்னவோ.
எழுதாமல் பதிவு வெளி வந்து விட்டது.
MLV அவர்களின் திருப்பாவை, தெருவெம்பாவை கேஸட் இரண்டும் எங்களிடம் இருக்கிறது மார்கழி மாதம் போட்டு கேட்போம்.
இங்கும் கேட்டேன். இனிமை.
பாடலுக்கு நன்றி வல்லி. விளக்கம் வரலைனா என்ன?
நன்றி கீதா, இதை எனக்கு ஒரு பயிற்சியாகவே செய்கிறேன். அதுதான் முயறசி வீணாகிறதோ என்று கவலைவருகிறது.
அன்பு துரை மிக மிக நன்றி ராஜா.
அன்பு கோமதி,
விடுமுறை நாட்களில் வெளியே சென்று வருவது வழக்கம் ஆகிவிட்டதால்
பதில் எழுதவும் தாமதமாகி விட்டது.
எம் எல் வி அம்மா நம் இளைய பிராயத்தின்
அடையாளம். நலமே வாழ்க.
இனிய பாடல் என்று சொல்லிவிட்டார்கள் கேட்கிறேன். மிகுதி தொடர்வேன்.
Post a Comment