Blog Archive

Tuesday, October 01, 2019

மசால் வடை மகாத்மியம்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும். 
இன்று எங்கள் கடைக்குட்டி பேரனுக்குப் பிறந்த நாள். 

அந்தச் செல்லம் நிறைவாழ்வு,நிறை செல்வம், நிறை மங்களம் பெற்று அமோகமாக வாழ வேண்டும்.

Image result for masala vadai


நெல்லைத்தமிழனுக்கு  மிக நன்றி.
அவர் எழுதின   மசால் வடையைப் பார்த்து மனசில் ஏக்கம் ஏகமாகப் பெருகியது.
இந்த வீட்டில் எண்ணெய்ப் பண்டங்களை மகள்
அதிகமாக அனுமதில்லை.
ஆஞ்சநேயர் பூஜைக்கு மட்டும் மிளகு வடை 108 தட்டி,அற்புதமாகச்  செய்வாள் அதுவும் கோவிலில் செய்வது போல தட்டையாக மிளகு கரகரவென்றி ருக்க அமிர்தமாக இருக்கும்.

அம்மா செய்யும் வடை     மெது  வடை.  அப்பா கேட்டால் 
ஆமவடை என்று பருப்புகள் சேர்த்து கறிவேப்பிலை எல்லாம் போட்டு,
அரைக்கக் கொடுப்பாள்.

ஒன்னு ரெண்டா அரைச்சுக்கோ. மொத்தம் மாவாக்கிடாதே 
என்று இன்ஸ்ட்ரக்ஷன் வந்து கொண்டே இருக்கும்.

ஏ ம்மா பருப்பு மட்டும் தான் இருக்கும். வடையே இருக்காதே என்று புலம்புவேன். எல்லாம் தெரியும்டி. நீ சொன்னதைச் செய் 
என்று  சமயல றைக்குள் போய்விடுவாள். நானும் கிணற்றங்கரையில் 
தேவயானியிடம் பேசிக்கொண்டே 
அரைத்துவிடுவேன்.

அதற்குப் பிறகு சின்னவெங்காயம் சேர்க்கும் வேலை. ஞாயிறு மட்டும் அல்லவட் .

ஒரு நாலு மணிக்குப் பெரியவன் படிப்பை மூடிவைத்து வந்துவிடுவான்.

எண்ணெய்  அடுப்பில் வைத்ததும் சின்னவனும் நானும் அம்மா பக்க்க்க்க்கத்தில் உட்கார்ந்து விடுவோம். 
கடலெண்ணெய் தான் அப்போ எல்லாம். 

அம்மா, பசின்னு பாட ஆரம்பிப்பான். இருடா எண்ணெய் காயட்டும் என்று துளி புளியைப் போடுவாள்.
அது எண்ணெயில் சுற்றி வரும். அம்மா கறுப்பாயிடுத்து 
எடுத்துட்டு வடையைப் போடு என்பேன்.
 அசர மாட்டாள் அம்மா. 
அழகாக மாவைத் திரட்டி பதம் பார்த்து, கொஞ்சம் கடலை மாவை தூவி, மீடியம் சைஸ்  வடையைப் போடுவாள் எண்ணெயில் . அடுத்தது என் முறை.
 தம்பிக்கு அந்த வேலை கொடுக்கப் பட மாட்டாது.:}

நாலே  நாலு வடை.
உம்மாச்சிக்கு காண்பிக்கணும் இல்லையாமா 
என்று சமத்தாக பெரிய தம்பி சொல்வான்.
வெங்காயம் போட்டிருக்குடா கிருஷ்ணர்  சாப்பிட மாட்டார்"
இது நான்.

மனசில நினைச்சுக்கோங்கோ.  காஸ் தொந்தரவு வராது " இது அப்பா அறிவுரை.

ஆளுக்கொரு தட்டு எடுத்துக் கொண்டு வடா ஒவ்வொன்றாக விழ 

அது போகும் ஆறு மணி வரை.  அம்மா நன்றி.😃😃😃😃😃😃😃😃

அடுத்தது கீரை வடை .எஜமானர் வாங்கி வருவது.
அவர் பகவானிடம் செல்வதற்கு முதல் நாள் கூட,ராசிக்குப் பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் வாங்கிச் சுவைத்தபடியே திரும்பினோம்.
என் ருசி நன்கு தெரிந்தவர். என் அருமை சிங்கம்.

வாழ்க வளமுடன்.

Keerai Vadai / Spinach Lentil Balls recipe main photo







23 comments:

நெல்லைத்தமிழன் said...

முதல் படத்தைப் பார்த்த உடனேயே வெங்காய வாசனையுடன் மசால்வடை வாசனை மூக்கிற்கு வந்துவிட்டது.

ராசி சில்க் பக்கத்துல கற்பகாம்பாள் மெஸ் தானே...

குனுக்கு, வடை இதெல்லாம் பொரிக்கும்போது, முதல் கவலை, எப்போடா பொரித்து பெருமாளுக்கு கண்டருளப்பண்ணி நம்ம தட்டுல போடப்போறாங்கன்னு இருக்கும். சின்ன வயசுல, நாள் முழுவதும் ஏகப்பட்ட இனிப்புகள் செய்து (ஸ்ரீஜெயந்தி அன்று), நாங்க எப்படா தருவாங்கன்னு ஆசையோட நினைத்து, தூங்கினப்பறம், நடு இரவில் எழுப்பி தட்டில் போட்டுத் தருவார்கள் (எல்லா பாராயணங்கள், ஆராதனை முடிந்து). மசால் வடைக்கு உங்க தம்பி காத்திருந்தது, என் காத்திருத்தலை நினைவுபடுத்தியது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா,
மூதலில் வந்த் விட்டீர்களா. இதோ ரெண்டு வடை
சட்டினியோடயும், இரண்டு வடை வெறன சாப்பிடவும் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆமாம் கற்பகாம்பாள் மெஸ் தான். அங்கே பாதாம் ஹல்வா இவருக்கு மிகவும் பிடிக்கும்.

ஸீசந்தி ,பாட்டி மொழி ,,,அன்னிக்கு காயும் பாருங்கோ வயிறு.பசியே தாங்காது. திரட்டிப் பால், தேங்காய் பர்பி, முறுக்கு, சீடை என்று லிஸ்ட் நீளும். அப்பா அன்று முழுவதும் பட்டினி.
எனக்க்க் கோலம் போடும் வேலை. செம்மண்,கிருஷ்ணன் பாதம் என்று பொழுது போய் விடும்.
அம்மா கொண்டு பெருமாள் முன்னால் வைத்துவிட்டு,
அம்சிப் பண்ணி,சஹஸ்ரனாமம், கண்ணன் பிறந்தது எல்லாம்
படித்து 9 மணியாவது ஆகும்.
அம்மா தன் பங்குக்குப் பாசுரம் சொல்லிக் கொண்டிருப்பாள்.

நீண்ட நாளாகும்.:))))))))

Geetha Sambasivam said...

வடைன்னா இது தான் வடை. பார்க்கும்போதே சாப்பிட ஆவலாக இருக்கே! நெல்லைத் தமிழர் செய்தது வடையே அல்ல. குணுக்கு. குணுக்குக் கூட எங்க வீட்டில் கொஞ்சம் பெரிசா இருக்கும். கீரை வடைன்னா மயிலை கற்பகாம்பாள் மெஸ் தானே! எனக்கும் அங்கே பண்ணும் கீரை வடை ரொம்பப் பிடிக்கும். வெந்தயத் தோசையும், கீரை வடையும் அங்கே போனால் கட்டாயமாய்ச் சாப்பிடுவோம். வீட்டில் கீரை வடை செய்வது எனில் முளைக்கீரையோ, அரைக்கீரையோ போட்டு உளுந்தில் தான் செய்வேன். பிறந்த வீட்டில் எப்போதும் முப்பருப்பு வடை தான். உளுந்து அதிகம் போட்டால் உளுந்து வடை. பருப்புக்கள் அதிகம் போட்டால் ஆமவடைனு அம்மா பண்ணுவா. ஆனால் இந்த வெங்காயம் போட்ட மசால் வடை அதிகம் பண்ணியதில்லை. நான் கீரை வடை பண்ணும்போது கொஞ்சம் துவரம்பருப்புச் சேர்ப்பேன். வடை மொறுமொறுப்புக்கும் நிறத்துக்கும். பாலக் அல்லது பசலைக்கீரை போட்டால் நீர் விட்டுக்கும், மாவு நீர்த்துவிடும் என்பதால் உடனே போட்டு எடுக்கும்படி இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா. அம்மாவும் வெறும் உளுந்து மட்டும் போடக் கூடாது என்று பருப்பும் ஊற வைப்பார்.
மூணு பருப்பு வடையில் து.பருப்பு அதிகம்
இருக்கும். ஆமவடைன்னு தான் சொல்வோம்.அம்மா கைப் பக்குவமும் சுத்தமும் எனக்கு வரவில்லை. பேத்திக்கு வந்திருக்கு. நன்றி மா.
இங்க ஸ்பினச் கெட்டியா இருக்கறதனால உளுந்து வடை தட்டும்போது

வடை தட்டும் போது நறுக்கின இலைகளைத் தூவி செய்தேன் .நன்றாக வந்தது.

ஸ்ரீராம். said...

வடையை அதன் இயற்கை நிறத்தில், இயற்கை குணத்தில், இயற்கை மணத்தில் கிடைக்கப்பெறுவதே பாக்கியம்.  மசால் வடை சூடாய்ச் சாப்பிட்டால் ஒரு ருசி.   ஆறிச்ச் சாப்பிட்டால் ஒரு ருசி....   ஆஹா...

ஸ்ரீராம். said...

மெதுவடை என் முதல் காதலி.   மசால்வடை இரண்டாவது.   கீரைவடை எப்போதாவது தெருவில் போகும் அழகிய பெண்ணைப் பார்ப்பதுபோல்!!!!    ஹா... ஹா... ஹா....

ஸ்ரீராம். said...

பேரனுக்கு அன்பு வாழ்த்துகள்.    எல்லா வளமும், எல்லா நலனும் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

ஆமவடை என்று பருப்புகள் சேர்த்து கறிவேப்பிலை எல்லாம் போட்டு,//

ஆமாம் அம்மா நம் வீட்டிலும் இதை ஆமைவடை (என் மகன் விளக்கம் கேட்டப்ப ஆமைக்கு மேலே ஓடு போல இதில் பருப்புகள் கர கரவென்று மேலே ஓடு போன்று உள்ளே மெதுவாக இருப்பதால்னு ஹ ஹா ஹா உடனே என் மகன் அம்மா ஆமைக்கு ஓடு ரொம்ப கரகரனு இருக்காதே கொஞ்சம் மொழு மொழுனுதானே இருக்கும் நாம தொட்டுருக்கோமே என்று சொல்லிட்டு முதலைனு சொல்லலாமா என்றான்...ஹா ஹா ஹா ஹா ஆ

கீதா

Avargal Unmaigal said...

முன்பு எல்லாம் ஈவினிங்க் ஸ்னாக்கு வடை போட்டு சாப்பிட்டுவிட்டு அதன் பின் இர்வில் டின்னர் சாப்பிடுவோம்.. இப்ப ஈவினிங்க் வடை போட்டு சாப்பிட்டால் இரவு நேரத்தில் பசிக்கவே மாட்டேங்கிறது..... எந்த வடையாக இருந்தாலும் அதற்கு சட்னி உரப்பாக இருந்துவிட்டால் வடை அது பாட்டுக்கு உள்ளே போய் கொண்டே இருக்கும்

Thulasidharan V Thillaiakathu said...

வடை படம் செம...பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கே...செஞ்சுடலாமானு யோசனை...நவராத்திரி முடியணும் என்று வீட்டில் பதில் வருமோ னும் யோசனை...சிவெ போட!!!!!

ஆஅஹா எண்ணெயில் புளி போடுவது எல்லாம் நானும் என் பாட்டியிடம் கற்றுக் கொண்டது...

அப்புறம் இதே உரையாடல்கள் தான் பாட்டி வெ நா என்றுதான் சொல்வார். வெங்காயம்னு சொல்ல மாட்டார் ஹா ஹா ஹா ஹா அவர் சாப்பிட மாட்டார் ஆனால் எங்களுக்கென்று தனியாக வெ நா சமைக்கும் அடுப்பில் அதே ஞாயிறு அன்று அலவ்ட்...செய்து தருவார். வெ நா போட்டால் சுவாமிக்கு வைக்க மாட்டார்!!!!!!!!!!!!!!!!! ஆனால் நான் கொல்லைப் பக்கம் சென்று எறும்புகளுக்கு, காக்கைகளுக்கு, அணில்களுக்கு அணில்கள் சீண்டாது. காக்கைக்கள் கொத்திக் கொண்டு செல்லும் கொடுத்துவிட்டுச் சாப்பிடுவேன். அதே பழக்கம் என் மகனுக்கும் வந்தது. இத்தனைக்கும் அவன் நான் செய்வதைப் பார்த்து செய்யும் முன்னரேயே!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பண்டிகை என்றால் எப்படா நம் கைக்கு வரும் என்று ஆவல்...ஆனால் பாட்டி அடுக்களைப் பக்கம் யாரையும் அனுமதிக்க மாட்டார். நாங்கள் ஏதேனும் தொட்டு எச்சல் செய்துவிடுவோமோ என்று. என் அம்மாவின் அம்மா என் அம்மாவையோ, மருமகள்ககளையோ கூட அனுமதிக்க மாட்டார் அப்பாவின் அம்மாவும் அப்படியே. செய்து முடித்த பின் க்ளீனிங்க் வேலைகள் தான் நாங்கள்.

ராசியின் அருகில் என்றால் கற்பகாம்பாள் மெஸ் தானே. இந்தக் கற்பகாம்பாள் மெஸ் பற்றி சுஜாதா எதிலோ (கற்றதும் பெற்றதும்??!!) சொல்லி நான் அறிந்தது. ஆனால் நான் லேட்டாகத்தான் அதில் சென்று சுவைத்தேன். எனக்கும் மசால் வடை முதல் சாய்ஸ்...இல்லை என்றால் வெ நா போட்ட உளுந்து வடை!!!!!

கீதா

டிபிஆர்.ஜோசப் said...

அசர மாட்டாள் அம்மா. 
அழகாக மாவைத் திரட்டி பதம் பார்த்து, கொஞ்சம் கடலை மாவை தூவி, மீடியம் சைஸ்  வடையைப் போடுவாள் எண்ணெயில் . அடுத்தது என் முறை.
 தம்பிக்கு அந்த வேலை கொடுக்கப் பட மாட்டாது.:}//

எல்லா அம்மாவும் இப்படித்தான் போல:)

கோமதி அரசு said...

முகநூலில் படித்தேன், இங்கேயும். வடை நினைவுகள் மிக அருமை.

என் சித்தி சித்தப்பாவை, எஜமானர் என்றே அழைப்பார் அந்த நினைவு வந்து விட்டது.
நினைவுகள் பகிர்ந்த விதம் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். அது கூகிள் வடை. நன்றாகத் தான் இருக்கும்.

எனக்கும் மெதுவடை தான் முதல். ஆஹா ஆனந்தம்.

கீரை,மசால் எல்லா நீங்க சொல்ற மாதிரி எப்பவாவது சாப்பிட்டால் ஓகே. வாயு தொந்தரவு. முன்னே மாதிரி மூன்று நாலுன்னு தள்ள முடியாது. நாசூக்கா ஒன்றே ஒன்று.

பேரனுக்கு வாழ்த்துகள் சொன்னதுக்கு ரொம்ப நன்றி. இதோ இன்னும் இருபது நாட்களில் அவனைப் பார்ப்பேன். விசா வரட்டும்.
பிறகு உங்களையும் பார்க்கணும்.
15 நாட்களில் என்ன செய்வேனோ.

வல்லிசிம்ஹன் said...

முன்பு போல் முகனூல் என்னை ஆக்கிரமிப்பதில்லை அன்பு கோமதி.
நம்ம எழுத்து யாரையாவது ஈர்க்கிறதான்னு சின்ன டெஸ்ட்.
வடைகள் கூகிளில் இருந்து எடுக்கப் பட்டவை.
நான் அவரைப் பெயர் சொல்லிதான் அழைப்பேன்.அவர் என்னை
எஜமானிம்மா வீட்டில இல்லைன்னு சொல்வார். அதனால் நானும் எஜமானர்னு சொல்ல ஆரம்பித்தேன் ....நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன், முதலை வடைன்னு சொல்லலாமா இனிமேல். ஹாஹா.

உங்கள் மகனுக்கு எல்லா மிருகங்களும் வேண்டுமே.
சமத்து நன்றாக இருக்கணும்.

எங்க அம்மாவோட அம்மாவும் ஒரு சின்னக் கரியடுப்பில் அனாசார
விஷயங்களைச் செய்து தருவார்.
சீனிம்மா செய்கிற பீற்றூட் கரேமது சொல்லி முடியாது.

இந்த மண்ணில் விளையும் எதற்கும் அந்த டேஸ்ட் இல்லை.
ஆமாம். சி வெ நவராத்திரிக்கு நோ நோ தான்.விஜயதசமிக்கு
அப்புறம் செஞ்சுண்டாப் போச்சு கண்ணா.


வல்லிசிம்ஹன் said...

ஆஹா, துரை, உங்களுக்கே இந்தப் பாடா. நானெல்லாம் ஒன்றோடு நிறுத்திக் கொள்வது.
உளுத்தம் பருப்பு உப்புசம் கொடுக்கும்.
முடிந்தால் காலையில் சாப்பிட்டு விடுங்கள்.

இல்லாவிட்டால் கொதிக்கும் ரசத்தில் போட்டு சாப்பிடலாம். அது
தனி சுவை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜோசஃப் சார், உங்கள் தளத்துக்கு வந்து செல்ஃபோன் கதை படித்தேன்.
பிரமிப்பாக இருந்தது.
எத்தனை முன்னேற்பாடு அந்தத் திருடனுக்கு. மனம் நிறை பாராட்டுகள்.
அம்மாவைப் பற்றி எழுத இன்னும் எத்தனையோ இருக்கிறது.
அம்மாக்கள் ஒரே ரகம் .அன்பு உலகம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

கீதா ரங்கன் மா, அதே கற்பகாம்பாள் ஹோட்டல் தான்.
இப்போது எப்படி இருக்கிறதோ.


மாதேவி said...

சுவையான வடை மகாத்மியத்துடன் பேரனிள் பிறந்தநாள், இனிய நல்வாழ்துகள்.சகல நலன்களும் பெறுக.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... சுவையான மசால் வடையும் கீரை வடையும்.

நேற்று நண்பர் வீட்டிற்குச் சென்றபோது அங்கே இப்படி ஒரு வடை கிடைத்தது! பிறகு அதைப்பற்றி எழுதுகிறேன்.

வடை மஹாத்மியம் அருமை.

தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வடையின் சுவை எப்பொழுதும் உயர்ந்தது. தான் மா. .அன்பு. வெங்கட். வடையைப் பற்றி. எழுதினாலும் எழுதினேன். எங்கு போனாலும் வடை உபசாரம் நடக்கிறது். உங்களுக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வடையின் சுவை எப்பொழுதும் உயர்ந்தது. தான் மா. .அன்பு. வெங்கட். வடையைப் பற்றி. எழுதினாலும் எழுதினேன். எங்கு போனாலும் வடை உபசாரம் நடக்கிறது். உங்களுக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி மா. நன்றி.