வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
சங்கீத ஸ்வரங்கள் 2
இரண்டு நாட்கள் பயிற்சியிலும் சிறு தூக்கத்திலும் சென்றது.
ஹரன்,மஹி இருவருக்கும் அமெரிக்க சூழல்
பொருந்த அந்த நாட்கள் தேவைப்பட்டன. சிபா இயக்கம் அனைத்து இசைக்கலைஞர்களை யம் அரவணைத்து நிகழ்ச்சிகளைத் தொகுத்திருந்தது.
உள்ளுர்க் கலைஞர்கள் ஒரு நேரம், இந்தியக் கலைஞர்கள் , பெரிதாக வளர்ந்துவிட்ட பிரபலங்கள் என்று வித விதமாக
கச்சேரிகள் தொடர்ந்து கொண்டிருந்தன .
LA TO SFO வந்தடைந்த குழுவில் மஹியுடன்,
பரணிகுமார், அவன் தங்கை மானசி இருந்தனர்.
மானசி , அமெரிக்க வளமையுடன், மிக அமைதியான குணத்துடன் எல்லோரையும் ஈர்க்கும் பாங்கு கொண்ட மங்கையாக இருந்தது அவளது நடனத்தை மிகவும் அலங்கரித்தது .
அவளது பெற்றோரும் இசை,நடனக் கலைஞர்களாக
இருந்தது ஒரு கூடுதல் ஆதரவு.
நன்றாக அறியப்பட்ட நடனமணியாக விளங்கினாள்.
சான்ப்ராசிஸ்க்கோ கலை அரங்கம்
மிகுந்த கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டு விசாலமான மேடையில்
நடனமாடுபவர்களுக்கு இசைவாக அமைந்திருந்தது.
இசைக்கலைஞர்களுக்கும் எதுவாக Acoustics arrangement அமர்க்களமாக
அமைந்திருந்தது.
அனைவரும் அந்த நகரத்தின் முக்கிய பிரமுகர் வீட்டில் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது .
மிகப் பிரபலமான தெலுங்கு தொழிலதிபர்.
எனக்கென்னவோ இந்த இடத்தில் மதன் பூ ர் மஹாராஜா அரண்மனை நினைவுக்கு வந்தது.:)
மஹி,ஹரன் புதிய இடத்தில் மிக ஆனந்தமாக வளைய வந்தனர்.
இங்கேயே இருக்கலாம் போல இருக்கு என்று
சொன்னவனை மறுத்துப் பேசினாள் மஹி. எல்லாமே ஒரு மேல்பூச்சு போலத் தோன்றுகிறது எனக்கு.
என்றவளை மறுத்துப் பேசினான் ஹரன் . உள்ளன்போடு தானே இருக்கிறார்கள்.
நாம் எடுத்துக் கொள்ளும் வகையில் அது இருக்கும் என்றான்.
ம்ம்ம்.யூ மீ பி ரைட் என்று பேசியபடி அந்த வீட்டின் மெயின் ஹாலுக்கு வந்தார்கள்.
அங்கே சுருதி சேர்த்தாலும், தபலா மிருதங்க ஒலி யும், வயலின்
தம்புரா ,சலங்கை என்று பலவித ஓசைகள் கலந்து ஒலித்தன.
வீட்டின் உரிமையாளர் ,அவர்களின் கலைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் வெங்கட்
மனைவியுடன் அங்கே இருந்தார்.
வாங்க வாங்க எல்லோரும் அவரவரது திறமையை இங்கே அரங்கேற்றுங்கள் என்றதும்.
சிரிப்பலை படர்ந்தது.
முதன் முதலாக பரணி புல்லாங்குழல் வாசிக்க, அப்பா மிருதங்கம் வாசிக்க, அம்மா பதம் பாட மாநஸியின் நடனம் ஆரம்பித்தது.
இனிமையான திருமதி.எம்.எல்.வசந்தகுமாரியின் பாடலுக்கு எளிமையாக முத்திரைகளை நளினமாக அபிநயித்த மானசிக்கு
கரகோஷம் எழுந்தது.
பரணியின் குழல் அனைவரையும் கட்டிப் போட்டது.
அடுத்து வந்த மஹி, தனக்கு மிகவும் பிடித்த , எம்.எஸ் அம்மாவின் "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்" பாட, சுற்றி இருந்தவர்கள் சொக்கிப் போனார்கள்.
ஹரனின் இறைவன் புகழ் பாடும் பஜன் அனைவரையும்
மீண்டும் கேட்கத் தோன்ற,,, மீண்டும் பாடினான். அவன் குரல் மகிமை அப்படி.
மானசி ஹரன் குரலில் மயங்கியே போனாள் .
ஹரன் மனமும் அவள் நடனத்தில் வெகுவாக லயித்ததை மஹி கவனித்துப் புன்னகை செய்தாள் .
அடுத்த நாள் வெவ்வேறு நேரங்களில் நடை
பெறப்போகும் தங்கள் இசை,நடனப் பயிர்ச்சுக்குத் தயாராக எல்லோரும் அவரவர் அறைக்குச் சென்றார்கள்.
நாமும் காத்திருக்கலாம்.

25 comments:
நான்கு காணொளியும் கேட்டு மகிழ்ந்தேன் அம்மா.
நானும் காத்திருக்கிறேன்...
புதுசா மானஸி கதாபாத்திரம்... அடடா இதை வைத்தும் வெவ்வேறு வடிவில் கதையைக் கொண்டுபோலாமே
அன்பு தேவகோட்டைஜி, இனிய காலை வணக்கம்.
ரசித்துக் கேட்டதற்கு மிகவும் நன்றி மா. கதை நல்ல படியாக எழுத முயற்சிக்கிறேன்.
அன்பு முரளிமா,
இந்த அடிஷனல் பாத்திரம் சேர்ந்து கொண்டது. கோணங்கள் எப்படி மாறுகிறது என்று பார்க்கலாம்மா.
உங்கள் மனதில் இன்னோரு கதை உருவானால் எழுதிடுங்கோ.
மஹியின் புன்னகை நிம்மதியைத் தருகிறது. ஹரன் அவளை ஏமாற்றப்போவதில்லை என்கிற நிம்மதி! எதிர்பார்த்த ஈர்ப்பு! அடுத்த ஜோடி எப்போது சேரும்?
எனக்கென்னமோ ஹரன் மானசியிடம் மாறிவிடுவான் எனத் தோன்றுகிறது. இத்தகைய சங்கீதச் சூழலில் இருப்பதற்கு எத்தனை கொடுத்து வைத்திருக்க வேண்டும். அருமையாக எழுதி வருகிறீர்கள். சின்னச் சின்ன வாக்கியங்கள். ஆனால் அதிலே எல்லாப் பொருளையும் ஒன்றாகக் கொண்டு வந்து அடக்கி விடுகிறீர்கள். அருமை.
அன்பு ஶ்ரீராம்,
அவர்கள் அன்பின் மேல்அவளுக்கு இருந்த நம்பிக்கை அந்தப் புன்னகை! இன்னும் இரண்டு மாதங்கள் இந்த
கச்சேரிகள் அமெரிக்கா முழுவதும் தொடர வேண்டும். பொறுத்திருந்து பார்க்கலாம்.:)
அன்பு கீதா மா,மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள். இவர்கள் எல்லோருக்கும் கலைகள் முதலில் வாழ்க்கை பிறகே. தொடருவோம். உங்கள் நுண்ணிய பார்வை யாருக்கும் வராது!
கதை அழகாக நகர்கிறது. கானொளிகளும் அருமை. தொடர்கிறறேன்..
மஹி, ஹரன், மானஸி, பரணி - கதை எப்படியும் போகலாம். கெடுதலாக அமைந்து பிறகு வாழ்க்கை சரியாகலாம். இல்லை எல்லாமே நல்லதாகவும் அமையலாம். இதெல்லாம் அவரவர் ப்ராப்தம்தானே
பொருத்தமான பாடல்கள். அழகான வார்த்தை விவரிப்புகள்.
//மானசி ஹரன் குரலில் மயங்கியே போனாள் .
ஹரன் மனமும் அவள் நடனத்தில் வெகுவாக லயித்ததை மஹி கவனித்துப் புன்னகை செய்தாள் .//
மானசி, ஹரன் ஜோடியா?
//எனக்கென்னவோ இந்த இடத்தில் மதன் பூ ர் மஹாராஜா அரண்மனை நினைவுக்கு வந்தது.:)//
இதுவேறா! நம்பியார் மாதிரி வில்லன் வருவரோ? கதையில்.
கதை நன்றாக போகிறது.
//அவர்கள் அன்பின் மேல்அவளுக்கு இருந்த நம்பிக்கை அந்தப் புன்னகை! //
ஆஹா.... "க்" வைக்கறீங்களே... அப்போ ஒரு ஊடல், சண்டை எல்லாம் உண்டோ? காத்திருக்கிறேன்!
மானசி ஹரன் மயக்கம் ....பார்ப்போம்.
எப்படி போகப்போகிறது என ...
அம்மா முதல்பாட்டு சமீபத்தில் வந்த படத்தில் எடுக்கப்பட்ட காட்சி இல்லையா...அந்தப் படம் பெயர் கூட சர்வம் தாளமயம் படம் பார்த்தீங்களாமா? எப்படி இருக்கு இந்தப் படம். க்ரிட்டிக்கல் ரிவியூஸ் நு தெரிஞ்சது ஓடலை போல...
எடுத்த டைரக்டர் ராஜீவ் மேனன் கேரளத்தவர்...அங்கெல்லாம் இப்படியான முழு கர்நாடக சங்கீத சீன் வைத்தால் எடுபடும் தமிழ்நாட்டில் எடுபடுமா என்று தெரியவில்லை. படம் ஓடியதா என்றும் தெரியலை..நெடுமுடிவேணு , பாடகர்கள் உன்னி, கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ(இந்த வீடியோவில் இருப்பது போல) ஸ்ரீனிவாஸ், சிக்கில் குருசரண் எலலம் அப்படியே வராங்கனு சொன்னாங்க...படம் என்ன கதை என்றும் தெரியலை..
ஆனால் இங்கு பொருத்தமாக இருக்கு..
சீன் நன்றாக இருக்கிறது
கதை முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன்
கீதா
ஹரன் மனமும் அவள் நடனத்தில் வெகுவாக லயித்ததை மஹி கவனித்துப் புன்னகை செய்தாள் .//
ம்ம்ம் இருந்தாலும் ஏனோ ஹரனின் மனம் மானசி பக்கம் செல்லுமோ என்றும் தோன்றுகிறது.
அம்மா ரொம்ப அழகாக எழுதறீங்கமமா. நான் எல்லாம் இன்னும் நிறைய கற்க வேண்டும். அழகான தமிழில் சுருக்கமாக அர்த்தமுள்ள வார்த்தைகளால் நிரப்பி விடுறீங்க...மீக்கு எல்லாம் இப்படி எழுதவே வராது...ஹா ஹா ஹா ஹா ஹா..
இப்படியான இசை நிகழ்வுகளுக்கிடையே இருக்க எனக்கு மிகவும் பிடிக்கும். சந்தோஷமான தருணங்கள்.
என் கோ சிஸ்டர் பூனேவில் இருப்பவர் (மைத்துனர் இப்போது இல்லை. அவர் மிருதங்கம் வாசிக்கக் கற்றவர். பாடவும் செய்வார்.) வாய்ப்பாட்டுக் கலைஞர். மகள் நடனம். வயலினும் தெரியும். புகைப்படக் கலைஞி. ஹிண்டுவில் ஓரிரு மாதங்கள் பயிற்சியும். புகைப்படம் எடுத்தது ஹிந்துவில் வந்தது. மகன் அசாத்தியமாகப் பாடுவான் ஆனால் இன்னும் முழு வீச்சாக இறங்கவில்லை. அம்மாவும் தாத்தாவுமே குரு. ஓஎஸ்டி யிடம் கொஞ்ச நாள் தான் கற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் அவன் உள்ளேயே அம்மா அப்பா அம்மா குடும்பத்து இசை அப்படியே இறங்கிவிட்டது. கோ சிஸ்டர் வீட்டில் வகுப்புகளும் எடுக்கிறார். வேலைக்கும் செல்கிறார். கச்சேரிகளும் செய்கிறார். வீடு கல கலனுதான் இருக்கும் எப்போதுமே...எனக்கு மிகவும் பிடித்த இடம் அங்கு. எப்போதும் பாட்டு என்று நேர்மறையாகவே இருக்கும் வீடு...
எனக்கு கலகலப்பு என்றால் மிக மிக பிடிக்கும். ஜாலியாகச் சிரித்துப் பேசிக் கொண்டு என்று....அவர்கள் வந்தாலே வீடு இசையோடுதான் இருக்கும்..சந்தோஷமாக இருக்கும்.
உங்கள் கதையின் இப்பகுதி அந்த நினைவைக் கொண்டு வந்தது...
திறமைகள் இருந்தாலும் அவை வெளிவரவோ இல்லை கூர்த்தீட்டிக் கொள்ளவோ அதற்கான சூழல், உத்வேகம் கொடுக்கும் நபர்கள், கூடவே அருள்... அமையப்பெறும் அருள் அதுவும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
பார்ப்போம் இதில் எந்த சோடி மேச் ஆகிறது என்று...
கீதா
பாட்டு நடனம் பஜன் என்று அனைத்தும் ரசித்தேன் அம்மா..சூப்பர்!! பாம்பே ஜெயஸ்ரீ மிக மிக அமைதியாக ஆர்பாட்டம் இல்லாமல் பாடுவார். மிகவும் பிடிக்கும்
கீதா
அன்பு ஜோசஃப் சார் வணக்கம். படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
உங்கள் கதை போலவே பக்கத்து ஊரில் பணம் பறி போயிருக்கிறது.
ரொம்ப பாவம் அந்தக் குடும்பம்.
அன்பு முரளி மா,
பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற வைத்திய அதை மாதிரி உங்கள் பின்னூட்டம்
சுழல்கிறது. இத்தனை பேரோட எதிர்பார்ப்புகளையும்,
மன ஓட்டங்களையும் வைத்து இன்னோரு கதை எழுதலாம் போல இருக்கே. நன்றி மா.
அன்பு கோமதி,
மதன்பூர் மஹராஜா நினைவு அந்த வெங்கட்
பாத்திரத்தினால் வந்தது.
இவர் ரொம்ப நல்லவர் . அவர் வீடு மாளிகை. அதனால் சொன்னேன்.
எங்கேயோ படித்தது எல்லாம் எழுதும்போது நினைவுக்கு வந்து விடுகிறது.
ஏற்கனவே இசையில் உலாவுபவர்கள். நட்பு காதலாக மாறவும்.
காதல் நட்பாக ஆகவும் நம்மூரில் பார்த்த கதையை
எழுதுகிறேன்.
மானசி, பரணி இங்கே வளர்ந்தவர்கள்.
ஹரன் ,மஹி இந்தியாவில் பழக்கப் பட்டவர்கள்.
இந்த ஊர் இளம் பிராயத்தினரின் போக்கு வெகு சகஜமாக இருக்கிறது.
டேக் இட் ஈசி. அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.
இன்று ஒரு நாள் யோசித்து வடிவம் கொடுக்கிறேன். நன்றி என் அன்பு தங்கச்சி.
அன்பு ஸ்ரீராம்,
காதல் என்றால் நு ஒரு பாட்டு வரும். அதுபோல
அதன் அங்கங்கள் ஊடல்,சண்டை எல்லாம்.
என் காலத்தைப் போல இல்லை இந்தக் காலத்து
மனிதர்கள்.
நிறைய நெளிவு சுளிவு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஏமாறுபவர்கள் நிறைய ஆண்களே.
பல கோணங்களில் எண்ணம் போகிறது.காத்திருக்கும்
ஒரு பெண்ணின் மனமும் ஊசலாடுகிறது.
பார்க்கலாமே.நன்றி ராஜா.
அன்பு கீதாம. எத்தனை எண்ணங்கள் ஓடுகிறது உங்கள் மனதில். உங்கள் குடும்பத்தைப் பற்றி அறிய மிக ம்க சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் ரசிப்பது இன்னோரு வரம் எனக்கு. அன்புடன் அதைப் பகிரும் விதமும் ஆத்மார்த்த அன்பைக் காண்பிக்கிறது.
இசையைப் பற்றி அறிந்தவர்கள், நுணுக்கமாக அறிந்தவர்கள் இருக்கும் சபையில் நான் ஜாக்கிரதையாக இருக்கு வேண்டும் என்ற உணர்வுதான் மேலிடுகிறது கீதாமா.
சப்தஸ்வரங்கள் என்று அதனாலதான் பெயர் வைத்தேன். ஒவ்வொரு ஒலியும் வேறு வேறாக இருந்தா;லும் பாடலில் சங்கமிக்கும் போது சுருதி பிசகுவதில்லை.
இந்த ஐந்து உயிர்களின் இதய கீதம் எப்படி
ஒன்று படுகிறதோ பிரிகிறதோ பார்க்கலாம்.
அன்பு மாதேவி,
இசையில் மயங்குகிறவர்கள், சிறு பேதத்துக்கும் ஒத்துக் கொள்ள
மாட்டார்கள்.இவர்கள் எப்படி இணைகிறார்கள் என்று பார்க்கலாம்.
அன்பு கீதாமா. நான் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. இந்தப் பாடல் என் தெலுங்கு இசைஆசிரியர் கற்றுக் கொடுத்தது. அர்த்தம் சொல்லிக் கற்க வைப்பார்.
ராமா நீ இருக்கையில் எனக்கு என்ன விசாரம் என்று ஆரம்பிக்கும்
பல்லவி மிகப் பிடிக்கும் அம்மா.
ஆஹா.... மானஸியா இல்லை முதலில் வந்த மஹி... யாராக இருக்கப் போகிறார்கள்.
தொடர்கிறேன்.
Post a Comment