வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்
இரும்புத்திரை படம். அதில் சில காட்சிகள். என் விருப்பம்
ஒரு பாடல்
2
இந்தப் படத்தை மதுரை தங்கம் தியேட்டரில் ,பள்ளி சுற்றுலா
போனபோது பார்த்த ஞாபகம். 1959 ஆம் வருடம் என்று நினைவு.
நல்ல பாடல்கள். சுப்பையா, சிவாஜி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி , ரங்கா ராவ், வசுந்தரா தேவி என்று நட்சத்திர பட்டாளம்.
ஜெமினி ஸ்டுடியோவின் தயாரிப்பு.
இந்தியிலும் வந்தது என்று நம்புகிறேன்.
எல்லோரும் உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருப்பார்கள். கொஞ்சம் கூட
செயற்கையாகவே இருக்காது. நல்ல கதை.
கொஞ்சம் பொதுவுடமைக் கருத்தும் கலந்து,குடும்ப வாழ்வோடு ஓட்டிப்
போவது ம்,
இடையூ டும் தங்கவேலு, சரோஜா அவர்களின்
இணைந்த நகைச்சுவைக் காட்சிகள் எல்லாமே அருமை.
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்
இரும்புத்திரை படம். அதில் சில காட்சிகள். என் விருப்பம்
ஒரு பாடல்
2
இந்தப் படத்தை மதுரை தங்கம் தியேட்டரில் ,பள்ளி சுற்றுலா
போனபோது பார்த்த ஞாபகம். 1959 ஆம் வருடம் என்று நினைவு.
நல்ல பாடல்கள். சுப்பையா, சிவாஜி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி , ரங்கா ராவ், வசுந்தரா தேவி என்று நட்சத்திர பட்டாளம்.
ஜெமினி ஸ்டுடியோவின் தயாரிப்பு.
இந்தியிலும் வந்தது என்று நம்புகிறேன்.
எல்லோரும் உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருப்பார்கள். கொஞ்சம் கூட
செயற்கையாகவே இருக்காது. நல்ல கதை.
கொஞ்சம் பொதுவுடமைக் கருத்தும் கலந்து,குடும்ப வாழ்வோடு ஓட்டிப்
போவது ம்,
இடையூ டும் தங்கவேலு, சரோஜா அவர்களின்
இணைந்த நகைச்சுவைக் காட்சிகள் எல்லாமே அருமை.
19 comments:
காத்திருந்து பார்த்தும் இணையத்தொடர்பின் மெது படுத்துகிறது. காணொளிகள் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. தமிழ் டைப்பிங்கே அடித்துவிட்டு அது தமிழாக மாற பலநொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
'நெஞ்சில் குடியிருக்கும்' பாடலும் இந்தப் படத்தில்தானே? 'குப்பையைக் கிளறிவிடும் கோழியே' பாடல்?
ஊரெல்லாம் கடன் வாங்கிவிட்டு சம்பள தினத்தன்று எல்லாப் பணத்தையும் கடன்காரர்களுக்குக் கொடுத்துவிட்டு தங்கவேலு சோகத்தோடு, "கையில வாங்கினேன் பையில போடல்லெ - காசு போன எடம் தெரியல்லெ" என்று பாடிக்கொண்டே போகும் காட்சி இன்றும் என் கண்ணில் நிற்கிறது. நடுத்தர வர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்ற பீதியை என் மாணவப் பருவத்திலேயே உண்டாகிவிட்ட பாடல் அது!
இணையம் சரியில்லையோ. இணைப்பு சரியில்லையோ தெரியவில்லை.
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம். நெஞ்சில் குடியிருக்கும் இதில் தான்.
குப்பையைக் கிளறிவிடும் கோழி, பதிபக்தியில் வருகிறது.
தங்கவேலு பாடும் கையில வாங்கினேன் பையில போடலே காசு
போன இடம் தெரியலே பாட்டு நன்றாக இருக்கும்.
படமும் அருமை... பாடல்கள் அனைத்தும் இனிமை...
இரும்புத் திரை படம் பார்த்த நினைவில்லை. காணொளிகள் மாலை வீடு திரும்பிய பின்னர் பார்க்கிறேன்.
நான் இன்னும் பார்த்ததில்லை.
படம் நன்றாக இருக்கும். பாடல்கள் நன்றாக இருக்கும். படிப்புக்கு ஒரு கும்பிடு பாடத்திற்கு ஒரு கும்பிடு பெண்ணுக்கு படிப்பு ஒன்றா? இரண்டா என்ற பாடல் நன்றாக இருக்கும். தொலைக்காட்சியில் இரண்டு மூன்று முறை பார்த்து இருக்கிறேன்.
நீங்கள் பகிர்ந்த பாடலும் நன்றாக இருக்கிறது.
உரையாடலும் (காணொளி)கேட்டேன்.
படம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். இந்தப் படத்துக்கு அப்புறம் வைஜயந்திமாலா தமிழில் நடிக்கவில்லை என்பார்கள். ஆனால் பார்த்ததில்லை. கதையும் ஆனந்த விகடனில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி வந்ததோ? தெரியலை!
அருமையான படம்
வணக்கம் திரு செல்லப்பா.
அந்தப் பாடல் கேட்க சுவையாக இருந்தாலும்
வெகு யதார்த்தமான நிலையைத் தான் விளக்கியது.
இப்படித்தான் நம் வாழ்க்கையும் இருக்கக் கூடும் என்ற
நினைப்பும் வந்தது.
பிறகுதான் புரிந்தது. கடன் என்ற ஒன்றே நல் வாழ்க்கையின் எதிரி என்று.
அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் .மிக நன்றி மா.
அன்பு தனபாலன், அந்த இளம் வயதிலேயே நான் மிக ரசித்த படம்.
நன்றி மா.
அன்பு வெங்கட்,
நிதானமாகப் பாருங்கள். நன்றி மா.
அன்பு தேவகோட்டைஜி,
நல்ல படம்மா. முடிந்தால், கிடைத்தால் பாருங்கள்.
சிறந்த நடிப்பும் ,பாடல்களும்.
இந்தக் காலத்துக்கு அது பழசுதான்.
அன்பு கோமதி.
ஆமாம் அந்தப் பாடலும் மிகப் பிடிக்கும். //பெண்ணுக்குப் பரிட்சை ஒண்ணா ரெண்டா
பிறந்தது முதலே சோதனைதான்.
காதில தொங்கணும் லோலாக்கு
காத்தில பறக்கணும் மேலாக்கு//
இதெல்லாம் எப்போ.1959 ல. சிரிப்பாக இருக்கும்.
நீங்கள் ரசிப்பதே அருமை. நன்றி மா.
அன்பு கீதா மா.
தேன் நிலவு, பார்த்திபன் கனவு, வஞ்சிக் கோட்டை வாலிபன் எல்லாம்
வந்ததே.
சங்கம் சினிமா வந்த பிறகு இந்தப் பக்கம் அவர்கள் பார்க்கவில்லை.
இரும்புத்திரை விகடனில் கதையாக வந்ததா தெரியவில்லை.
கொத்தமங்கலம் சுப்பு சார் பாடல் எழுதினார் தெரியும்.
மிக மிக நன்றி அன்பு ஜெயக்குமார்.
ஹிஹி, என்னை மாதிரிக்குட்டிக்குழந்தைங்க அப்போ இன்னும் குழந்தையா இருந்திருப்போமே, அதான் தெரியலை! :))))))
ஆமாமா, கீதா மா.
கையில் பேப்பர் கூடப் பிடிச்சிக்கத் தெரியாதே.ஹஹஹா.
அப்புறம் திரைப்பட செய்திகள் எப்படி எட்டும்.😂😂😂😂😂😂😂😂😂😂
Post a Comment