Blog Archive

Tuesday, August 20, 2019

பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3

Sea to Sky Highway



வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 

பயணத்தின் ஏழாம் நாள்   பகுதி 3
 Vancouver லிருந்து  கிளம்பி  பிரிட்டிஷ் கொலம்பியாவின் 
கடலோரமாகச் செல்லும்  கடற்கரை  சாலை புகழ் பெற்றது.
ஏழாம்  நாள்   காலை 
விடுதியின்  காலை உணவை முடித்துக் கொண்டு 
கிளம்பினோம். கனடா நாட்டின் இயற்கைக்கு காட்சிகளும்  மிதமான உஷ்ணமும் எல்லோருக்கும் பிடித்திருந்தது.
காலையிலே மதிய உணவுக்கான  ஏற்பாடாக கத்திரிக்காய்  சாதமும்  பலவிதமான  நொறுக்குத் தீனிகளும்    கூ டவே ஏறின. 
மாப்பிள்ளையும், பெரிய பேரனும் பழவகைகளை  சிறிய அளவில் நறுக்கிக் கொண்டு  ஐந்து பைகளில் போட்டு வைத்தார்கள்.
Image result for sea to sky highway
இரு வழிச்சாலை கள் நிறைய விரையும்  பலவித  வண்டிகள் 

முதல் நிறுத்தம்  இந்தப் பாலம். கண்ணுக்கெட்டிய  வரை  நீல நிறம் தான்.
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும்  நீல நிறம் பாடல் நினைவுக்கு வந்தது.
   ஊசி இலைக்காடுகள் கடலின் காட்சியை  மறைத்தாலும்  வெண்மேகங்கள் பலவித வடிவங்களில்  எங்களைத் தொடர்ந்தன.

Image result for sea to sky highway
ஒரு  இடத்தில்  நிறுத்த பலமைல்கள் போக வேண்டி இருந்தது 
மலையும்  மடுவும்
பாறைகளாகச் சில மலைகள்.  பச்சை வண்ணம் போர்த்திய சில மலைகள். தூரத்தில் தெரிந்த நீலமலைகள்  என்று கண்கொள்ளாக்காட்சிகள். மேலே  போகும் சாலையிலிருந்து 

கீழே  தெரியும்  சாலை. என்று  பல காட்சிகளை 
காமிராவில் பாதி ,மனதில் மீ தி என்று இருத்திக் கொண்டோம் 

18 comments:

ஸ்ரீராம். said...

வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் பாடல் அருமையான பாடல். உங்கள் பயணத்தில் நாங்களும் தொடர்கிறோம்...

வல்லிசிம்ஹன் said...

காலை வணக்கம் ஸ்ரீராம். படங்களை எடுப்பதை விட இயற்கையில் மூழ்குவது இனிமையாக இருந்தது மா. நன்றி.

KILLERGEE Devakottai said...

அழகிய காட்சிகளை எங்களுக்கும் விவரிக்கின்றீர்கள் நன்றி அம்மா.

கோமதி அரசு said...

அங்கு எல்லாம் ஒரு இடத்தில் நிறுத்த பலமைல்கள் போக வேண்டி இருப்பது உண்மை.

பல சங்கடங்களை சந்திக்க வேண்டியும் இருக்கும் அதனால்.

பயணத்தில் கண்ட காட்சி படங்கள் அழகு, நினைவுக்கு வந்த பாடல் அருமை. இயற்கையை ரசிக்க தெரிந்து விட்டால் கவலைகள் ஓடி விடும்.

பகிர்ந்த பாடல் மிகவும் அருமை.

'பரிவை' சே.குமார் said...

பயணப் படங்கள் அழகு.

Geetha Sambasivam said...

அருமையான காட்சிகள். அருமையான பாடலைக் கேட்டுக் கொண்டே படித்தேன். இந்தப் படம் ஷோபா யாருமே மறக்க முடியாதவர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள். பயணம் இனிமையாக அமைந்திருக்கிறது என்று தெரிகிறது. மகிழ்ச்சி மா...

மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
மிக நன்றி மா. என் எழுத்துக்கு மேலே அதிகமான
உயரத்தில் கண் கண்ட காட்சிகளைச் சரியாக
விவரிக்க முடியாமல் சின்ன அளவில் இந்தப் பதிவை
எழுதினேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.
இந்தத் தடவை காமிராவை அதிகம் பயன் படுத்தவில்லை.
நிறையப் பார்த்தேன்.

மனசில் நிற்கணும் என்பதற்காக எழுதுகிறேன் மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா குமார். நலமாப்பா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான், கீதா மா.
மாப்பிள்ளையும்,பெண்ணும் இரண்டு மாதங்கள்
யோசித்து இந்த இடங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

வருடத்துக்கு ஒரு முறை என்பதால்
நிறைய உழைப்பு தேவைப் பட்டது.

ஆமாம். ஷோபா ரொம்பப் பாவம்.
இந்தப் பாடலும் ,படமும் உயர்ந்த ரகம்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் வெங்கட்.
ஆமாம் அவர்கள் இருவரின் உழைப்புதான் காரணம்.
மிக நல்ல பயணம்.

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது அம்மா...

காணொளி பாடல் கேட்கும்போதெல்லாம், மனம் குற்றாலம் சென்று விடும்...

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா படங்கள் அனைத்தும் அத்தனை அழகு. என்ன அழகான காட்சிகள். சாலையும் கடலும் ஊசி இலைக்காடுகள் என்று ரம்மியமான காட்சிகள். இந்த உலகம் தான் எத்தனை அழகு. காணக் கண்கோடி வேண்டும்...

பாடல் அருமையான பாடல் வானமும் கடலும் நீல நிறம் என்பதும் செந்தாழம் பூவில் செமையான பாடல்

தொடர்கிறோம் அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பயணத்தின் படங்களைப்ப் பார்க்கும் போதே தெரிகிறது உங்கள் பயணம் மிக மிக அருமையான இனிமையான பயணம் என்று.

அழகான படங்கள். தொடர்கிறோம் வல்லிம்மா உங்கள் பயண நினைவுகளுடன்

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

Dear Geetha ma .Many many thanks kanna. am in a hurry to go for a review. will come back after sometime.

வல்லிசிம்ஹன் said...

Dear Thulasidharan. ellaam nallaa nadakkum. thanks ma.

மாதேவி said...

கண்கொள்ளாக் காட்சிகள்.