Blog Archive

Tuesday, July 16, 2019

ஒப்பந்தம் .....

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

ஒப்பந்தம்
++++++++++++

75 வயது ராகவனும் 70 வயது ஜானகியும் 
இது போல ரயிலேறுவதும் இறங்குவதுமே வாழ்க்கையாகி விடுமா
என்று கேட்கும் மனைவி ஜானுவைப் பார்த்தார் ராகவன்,.

//உடம்பில் தெம்பு இருக்கும் வரை .பிறகு இருக்கவே இருக்கிறது
நம் இடம்.//
எங்கே புதுக்கோட்டையா.

இல்லம்மா ரிஷிகேசம். மறந்துவிட்டாயா. நாம் பதினைந்து வருடங்கள் முன்பு போனபோது

நான் வாங்கின இடம்.இப்போது நல்ல பராமரிப்பில் இன்னும்
அழகாகி இருக்கிறது. நல்ல மருத்துவ வசதிகள், சுத்தம் பாதுகாக்க பண்புடைய 
உதவியாளர்கள்.
 நம்மை ஒத்த பெரியவர்களுக்கு ஏற்ற சாப்பாடு படைக்கும் 
சமையல் மையம்.
ஹரி நாராயணர்களின் கோவில்.
தினசரி கங்கை ஆரத்தி. சுவாமி சிவானந்த ஆசிரமம்.
படிக்க நிறைய நூல்கள்
பக்தி மார்க்கம் உரை நிகழ்த்த வரும் ஞானிகள்.
என்று அடுக்கிக் கொண்டே போகும் கணவனை 
நோக்கி புன்னகைத்தாள் ஜானு.
 ஹ்ம்ம். கற்பனை நன்றாகத்தான் இருக்கு.
நம் மகன்கள் மகள் இதற்கு சம்மதிக்க வேண்டுமே.

நிறைய எதிர்ப்புகள் உங்களை நோக்கி வீசுவார்கள்
சமாளிப்பீர்களா என்ற மனைவியைக் கண் சிமிட்டி உத்சாகப் படுத்தினார். ராகவன்.

எல்லோரும் நல்வழியில் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.
உன் பெண்ணின் மகளுக்கே திருமண வயது வந்துவிட்டது.

நடுவில் எனக்கு வந்த உடல் நலிவினால்
சென்னை புதுக்கோட்டை என்று அலைய வேண்டி வந்தது.
இப்பொழுது கடவுள் கிருபையில்
 உடல் நலம் தேறி வருகிறது.
பயப்படத் தேவை இல்லை என்று உத்திரவாதம் கொடுத்து விட்டார்கள்.
உனக்குத்தான் சிரமம் இந்த நாலு வருடங்களாக.
எத்தனை அலைச்சல்.ரமணா க்ளினிக், அறுவை சிகித்சை,
பின் வந்த சிகித்சைகள்.
அப்பப்பா. ஆதாரம் நீயே என்று ஒரு அஷ்டோத்திரமே பாட வேண்டும்.
அப்படிக் கவனித்துக் கொண்டாய்.

பதில் பேசாமல் கணவன் அருகே சாய்ந்து கொண்டு கண்ணுறங்க
ஆரம்பித்தாள் ஜானு.
ராகவன் ,நினைவுகள் தங்கள் கடைசிப் புதல்வனின் திருமண
நிகழ்வுகளும், புதுக்கோட்டை திரும்பியதும் 
நிழலாடின. அதற்குப் பிறகுதான் எத்தனை மாற்றம் வாழ்க்கையில்....தொடரும்

24 comments:

KILLERGEE Devakottai said...

நினைவுகள் தொடரட்டும்... அம்மா

நெல்லைத்தமிழன் said...

முன்பு படத்துக்கு எழுதின கதையை நீங்கள் இங்கு பகிர்கிறீர்களோ?

இதைப் பார்த்தவுடன் இதற்கும் ஒரு கதை எழுதலாமா என்று தோன்றுகிறது.

ஸ்ரீராம். said...

எங்கள் தளத்தில் படம் கொடுத்து எழுதப்பட்ட கதைதானே? தொடக்கிறேன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு தேவகோட்டைஜி.
தொடரலாம் நன்மைகளை.

வல்லிசிம்ஹன் said...

குட் மார்னிங்க் முரளி மா. அது வேறு கதை.
அதே தம்பதிகளை வைத்து இது வேறு கதை.
அப்போது மகன் கல்யாணம் முடிந்து
ரயிலேறிய தம்பதிகளின் ஒரு இரவுப் பயணம். இது இனி தொடரப்
போகும் பயணம் மா.

ஸ்ரீராம். said...

ஆஹா... புதுக்கதையா? இன்னும் உற்சாகத்துடன் தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

This is that story
https://naachiyaar.blogspot.com/2018/10/blog-post_12.html

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம்.
எபிக்கு நன்றி சொல்ல விட்டு விட்டது.
ஆமாம் அந்தக் கதையின் புதுத் தொடர்ச்சி.
என் கற்பனைக் காசிப் பயணத்தின் இன்னோரு முகம்.
நன்றி மா.

கோமதி அரசு said...

//அப்பப்பா. ஆதாரம் நீயே என்று ஒரு அஷ்டோத்திரமே பாட வேண்டும்.
அப்படிக் கவனித்துக் கொண்டாய்.

பதில் பேசாமல் கணவன் அருகே சாய்ந்து கொண்டு கண்ணுறங்க
ஆரம்பித்தாள் ஜானு.//


அவர்கள் பயணம் எங்கும் நிற்காமல் அவர் எண்ணியபடி ரிஷிகேசம் போகட்டும்.

அமைதியாக கழிக்கட்டும் நாட்களை.

Bhanumathy Venkateswaran said...

முதியவர்கள்தான் நிறைய கற்பனைகளை தூண்டுகிறார்கள் போலிருக்கிறது.
வல்லி அக்காவிற்கு நீண்ட கதைகளை படிக்க பிடிக்காதோ? தொடர்கதையை கூட சுருக்கமாக எழுதி விடுகிறீர்கள். நல்ல ஆரம்பம்.

Geetha Sambasivam said...

அமைதியான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா! என் தாத்தா பாட்டி!!! (அப்படித்தான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அப்படியே டிட்டோ!! கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல்....)

அட! இன்னொரு கதையா தாத்தா பாட்டிக்கு. எபியில் வந்ததே உங்கள் கதை..நினைவிருக்கு அம்மா...

தாத்தாவின் நினைவுகள் என்ன சொல்லப்போகின்றன என்று அறிய ஆவலுடன் தொடர்கிறேன்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஏற்கனவே இப்படத்திற்கு நான் எழுதிய இரு கதைகள் (சின்னக் கதைகள்!!!!!!) எபியில் வந்தனவே!!!..

அதில் ஒன்றில் நிஜப் பெயர்களையே தான் வைத்திருந்தேன்...

கீதா

மாதேவி said...

தொடரட்டும் நலமாக....

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு கோமதி
இனியாவது அவர்களது ஓய்வு வாழ்க்கை தொடங்க வேண்டும்.
நமக்கு இந்த வயதில் வேண்டுவது அது மட்டுமே.
கடவுள் கொடுக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

@ பானு மா.

நிறைய சேர்த்தாற் போல எழுதவும் முடியவில்லை. படிக்கவும் முடியவில்லை
பானுமா.
கண் அயற்சி அடைகிறது.
வைத்தியர் மாற்றிக் கொடுத்த இரத்த அழுத்த மாத்திரை கண்ணை மூடி
படு என்கிறது.
எழுதாமல் இருந்தால் மனம் கனக்கிறது.
ரெண்டுங்கெட்டான் முதுமை.
அதனால் முதியவர்களைப் பற்றியே எழுதுகிறேன்.
நீங்க ஒரு மைண்ட் ரீடர். நன்றி ராஜா.👌👌👌👌👌❤

வல்லிசிம்ஹன் said...

@கீதாமா,
நன்றாகவே இருப்பார்கள். உடல் அலுப்பு தீரும் .மன அலுப்பு வராமல்
இறைவன் காப்பான்.நீங்களும் சாரும் போல நலம் மட்டுமே கிடைக்க என் பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

@கீதா ரங்கன்,
ஆமாம் அதே தாத்தா பாட்டிதான்.
உங்கள் தாத்தா பாட்டி.

1996இல் கதையை நிறுத்தி இருந்தேன்.
இப்பொழுது 2012இல் நடப்பதாகத் தொடர்கிறேன் மா.
நீங்கள் எல்லாம் ரசித்துப் படிக்க
இருக்கும்போது என் குறுங்கதை மூன்று பாகங்களில்
பூர்த்தி செய்ய எண்ணம்.
நல்லதே நடக்கும் அம்மா.நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... மீண்டும் அதே படத்திற்காக ஒர் கதை. நல்ல ஆரம்பம்.... தொடர்கிறேன்மா...

வல்லிசிம்ஹன் said...

//இதைப் பார்த்தவுடன் இதற்கும் ஒரு கதை எழுதலாமா என்று தோன்றுகிறது.////////
நன்றாக எழுதுங்கள் முரளி மா.புது சிந்தனை உற்சாகம்
கொடுக்கும்.
தாத்தா பாட்டி இன்னோரு ரவுண்ட் வரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், இனிய காலை வணக்கம்.
கதை பிடித்திருந்ததா. நீங்களும் ஆதியும் சேர்ந்து எழுதுங்களேன் மா.
நன்றாக இருக்கும்.

ஜீவி said...

புதுமை கண்ணை விட்டு அகலவில்லை. நிழற்படத்துடன் ஒரு தொடர்!

சின்ன சின்ன வரிகளில் ஒரு காவியமே படைக்கப் போகிற முத்தாய்ப்பு தெரிகிறது.

'ஆதாரம் நீயே' என்று ஒரு அஷ்டோத்திரம் பாட வேண்டும்' இதை விட வயதான தம்பதிகளின் நெருக்கத்தைச் சொல்ல வேறு வார்த்தைகள் உண்டா?
மனம் நெகிழ்ந்தது. ஆவலுடன் தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜீவி சார்,
எங்கள் ப்ளாகில் போன வருடம்,இந்தப் படம் வெளியாகி இருந்தது. ஸ்ரீராம்
கேட்டுக் கொண்ட படி ஐந்தாறு பேர் கதை எழுதினோம்.

இந்தத் தம்பதிகள் யாரோ. என்ன கதையோ.
ஆனால் மனசை விட்டுப் போக மாட்டேன் என்கிறார்கள்.
ஏற்கனவே இவர்களை மையமாக வைத்து எழுதி இருந்தேன்.

மீண்டும் தாத்தா பாட்டியின் உருவில் என் எண்ணங்கள் அபிலாஷைகள்
வருகின்றன.

உங்கள் கவனத்தையும் கவர்ந்தது எனக்கு ஆச்சர்யமே.
நன்றி சார்.

துரை செல்வராஜூ said...

எங்கள் ப்ளாகில் வந்த இந்தப் படத்திற்குக் கதி எழுதினேன்..
இன்னும் முடிக்கவில்லை....