Blog Archive

Wednesday, February 27, 2019

நினைவுகள் கூட்டம் போடும் நேரம்

வல்லிசிம்ஹன்


எங்கள் வீட்டு எஜமானருக்கு 79 வயதாகிறது. இருந்திருந்தால்,அடுத்த வருடம் சதாபிஷேகம் செய்திருக்கலாம்.
மகன்கள்,மக்கள் எல்லோரும் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

நான் அவருக்குப் பிடித்த பாடல்களைக் கேட்டு ரசிக்கிறேன்.

https://drive.google.com/file/d/0B0EMbkYS23jkV0lkYTZFNXN1OVU/view?usp=sharing

மேலிருக்கும் லிங்கை right click and go to google drive. செய்தால்  சிங்கம் வருவார்.

24 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நினைவுகள் என்றுமே இனிமையானவை

Geetha Sambasivam said...

உங்கள் நினைவுகள் போற்றத்தக்கவை. சிங்கம் உங்களுடனேயே தான் இருக்கிறார். இருப்பார்.

Geetha Sambasivam said...

உங்க சென்னை வீட்டில் எடுத்த வீடியோவா? படத்தின் பின்னணியில் மாப்பிள்ளை குரலா? பேரன்கள் இருவரும் உங்கள் மகள் வழிப் பேரன்கள். கிருஷ்ணாவும் அவன் அண்ணாவும் இல்லையா? தெளிவாகவும் நன்றாகவும் வந்திருக்கு வீடியோ. ஆடியோவும் நன்றாக வேலை செய்கிறது.அறையின் வெளிச்சம் எல்லாம் அருமையாக வந்திருக்கு. மிகத் தெளிவான வீடியோவுக்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

நினைவுகள் சங்கீதமே...
இணைப்புக்கு சென்று காணொளி கண்டேன் அம்மா.

நெல்லைத்தமிழன் said...

உங்க சென்னை வீடு மாதிரி இருக்கு. ஸ்ரீராம் வந்திருந்தபோது ஒரு பதிவு போட்டிருந்தாரோ (அவர் கைவினைப் பொருள் செய்துகொண்டிருக்கிற மாதிரி).

இனிமையான காலத்தை மீட்ட இதுபோல் காணொளிகள், படங்களைவிட உபயோகமாக இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Anuprem said...

பசுமையான நினைவுகள் என்றும் மனதில்...

கோமதி அரசு said...

உங்கள் எழுத்தும் சாரின் வீடியோவும் அருமை.
என்றும் நினைவுகள் அருமை.
நினைவுகள் அழிவதில்லை. உங்களுடன் தான் எப்போது இருப்பார். உங்களையும் குடும்பத்தினரையும் காப்பார்.
சாருக்கு வணக்கங்கள்.

கோமதி அரசு said...

தாத்தாவும், பேரனும் விளையாடும் காட்சி கண்கள் நிறைந்து விட்டது.

ராஜி said...

நினைத்தாலே இனிக்கும்

ராமலக்ஷ்மி said...

நினைவுகளே ஆறுதல்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, ஆமாம் எல்லாத்துக்கும்.2012 ல எடுத்த வீடியோ.
சின்ன மகன் எடுத்தது. அப்பாவின் மேல் அபாரப் ப்ரியம் அவனுக்கு.
அவரும் குட்டி ,குட்டின்னு அவனை அழைப்பார்.
விஷ்ணு,கிருஷ்ணா இருவருக்கும் விவாதம் அப்போது.

இந்த வீடியோ எடுத்த நாளை என்றும் நினைவில் வைத்திருக்கிறேன்.

நம் வீட்டு கூடத்தில் எடுத்தது. நன்றி மா.நினைவில் தான் வாழ்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டைஜி.மிக மிக நன்றி மா.
நீங்கள் எல்லோரும் அவரைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை.எளிமையான அன்பான கணவன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் மனம் நிறை நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் முரளி மா. குழந்தைகள் எல்லோரும் வந்திருந்த ஒரு ஜூலை மாதம்.
கும்பகோணம், திருவெண்காடு,பட்டீஸ்வரம் எல்லாம் போய் வந்த நேரம்.
வீட்டுக் கூடத்தில் எங்கள் மகன் ஹரி எடுத்த வீடியோ.

ஸ்ரீராம் வீடியோ எடுத்தாரா தெரியாதே.

நான் எடுப்பேன். ஐய்ய என்னம்மா படுத்தறே என்பார்.நினைவுப் பொக்கிஷங்கள் இவை. நன்றி மா.எல்லோரும் நலமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா. அனுராதா ப்ரேம்குமார்.
நல்ல நினைவுகளே வாழ்க்கையின் ஆதாரம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, பொன்னான மனிதர்.
எனக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை. இந்த
வீடியோக்களாவது இருக்கின்றனவே என்று
ஆறுதல் அடைகிறேன். நன்றி மா.
ஆமாம் சின்னப் பேரன் சதா அவருடன் மல்லுக்கு நிற்பான்.
அவருடைய பொறுமைக்கு அளவே இல்லை.

உங்கள் அன்பு வார்த்தைகளுக்கு மிக நன்றி. வாழ்க வளமுடன் கோமதி.

வல்லிசிம்ஹன் said...

அன்புமிகு ராஜி மா. மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி, உங்கள் அன்பும் என் நினைவுகளுமே வாழ்வின் ஆதாரம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

Thank you Karanthai Jeyakkumaar.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா நினைவுகள் எப்பவுமே இனிமைதான். காணொளியும் கண்டோம். இப்படியானவை அவர்கள் நம்மோடு இருப்பது போலவே ஒரு ஃபீல் தரும் இல்லையா அம்மா. உங்கள் சிங்கம் உங்களோடுதான் எப்பவும் இருப்பார் அம்மா.

துளசிதரன், கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, கீதா.
ஆமாம் எப்பொழுதும் என் நினைவில்
இருக்கிறார். அதனால் தான் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் இருக்கிறதுமா.
நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நினைவுகள் என்றுமே சுகமானவை. பட்டீஸ்வரம் துர்க்கையைக் கண்டு மகிழ்ந்தேன். என் கும்பகோணம் பயணத்தின்போதெல்லாம் பெரும்பாலும் பட்டீஸ்வரம் செல்வது வழக்கம். இறையருள் துணை என்றும் உங்களுக்குத் துணை நிற்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா வணக்கம். அந்த துர்கை அம்மா என்னை நினைத்து அழைத்தே விட்டாள்.
என்ன ஒரு கம்பீரமும் கருணையும் அவள் முகத்தில்.

அன்னையின் அருளும் உங்களைக் காக்கும். நன்றி ஐயா.