காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய நன்றிகளைக் கடவுளுக்குச் சொல்லிவிட்டு,
நல்ல எண்ணங்களே மனதில் மந்தில் இடைவிடாது ஓட அவனருள் தேட வேண்டும்.
சிறு கோபம் தலை எடுத்தால் உடனே நீக்கினால் நல்லது.
இந்தக் கடும் சொல் என் ஆத்மாவைப் பாதிக்காது.
இதை நான் ஏற்றூக் கொண்டு சுமை ஏற்றிக் கொள்ள மாட்டேன்.
தினம் தினம் பூக்கும் புதுப் பூவைப் போல
மனதைச் சுத்தமாக மலர்ச்சியாக வைத்துக் கொண்டால் பாதி துன்பங்கள் தானே அகன்று விடும்..
மிகக் கடுமையான பயிற்சிதான்.
மேலும் மேலும் காழ்ப்பு உணர்ச்சிகளை மனதில் ஏற்றி,
அடுத்த பிறவிக்கும் அதை எடுத்துக் கொண்டு போக வேண்டாமே.
அனைவருக்கும் வரும் புத்தாண்டு மகிழ்ச்சியே கொண்டு வர என் பிரார்த்தனைகள்.
வாழ்க வளமுடன்.
இது 2006 இல் நான் துபாயிலிருந்து ஸ்விட்சர்லாண்ட் பயணம் தனியே தன்னந்தனியே செய்த பயணம் பற்றியது.
அப்பொழுதெல்லாம் நம் முதுகெலும்பு கொஞ்சம் பழுதடைந்து இருந்ததால்
உடல் பருமனும் கூடி
நம்மை நிலை தடு மாற வைத்த நாட்கள்.
எந்த ஊர் மண்ணாக இருந்தாலும் என் நெற்றி அதைப்
பதம் பார்க்காமல் இருந்ததில்லை.
வழக்கமாகக் கணவரின் இரும்புக் கைகள் என்னைக் காப்பாற்றும்.
இந்தத்தடவை அவர் பத்து நாட்கள் கழித்து வருவதாக ஏற்பாடு.
போய்ச் சேர வேண்டிய இடம் சிகாகோ. நடுவில் நிறுத்தம் சிறியன் வசிக்கும் பாசல்,ஸ்விஸ்.
எங்கும் விழும் அம்மா பத்திரமாகப் போய்ச்சேர ஏற்பாடு செய்யச் சொன்னான் பெரியவன்.
எனக்கு அது தெரியாததால், ஸ்பெஷல் கவனிப்பாக டூனா, கீரை சாண்ட்விச் கொடுத்தபோதும் புரியவில்லை.
மகன் சொல்லி இருந்த டயபெடிக் மீல்ஸ் தான் அது.
தேவுடான்னு பட்டினி கிடந்து 6 மணிப் பிரயாணத்தை முடித்தபோது,
காவலாளி போல நீல உடை ஹோஸ்டஸ் வந்து நின்று கொண்டாள்.
ப்ளீஸ் கம் வித் மீ என்று அழைத்துச் சென்றாள்.
அந்த நீல உடுப்பின் முதுகைப் பின்பற்றி வெளியே வந்தால் இன்னோரு
இனிமையான குரல், நாராசிமான் என்று கூவியது.
நானும் விட்டுக் கொடுக்காமல் நரசிம்ஹன் என்றதும்,
சரி சரி இப்ப என்னோட வா...என்கிற புன்னகையோடு,
மெயின் காரிடார்க்கே அழைத்து வந்துவிட்டது.
my luggage, என்று இழுத்தவளை, ஓ எல்லாம் பத்திரமாக இருக்கு.
உங்க மகன் காத்திருக்கிறார் , என்று ஜேம்ஸ்பாண்ட் படத்தில்
வருவது போல் ஒரு சிறிய லிஃஃப்டில்
அழைத்துச் சென்று ஒரு பெரிய வால்வோ வண்டி அருகில் நிறுத்தினார்.
நீங்கள் உங்கள் மகனிடம் போகலாம் ,இவர் உங்களை மெயின் டெர்மினலில் விடுவார் என்றார்.
இதை உங்கள் தோளீல் இருந்து எடுக்கலாமா என்றபடி நானே உணராமல்
என் தோளில் சேர்க்கப் பட்டிருந்த எஸ்கார்ட் சர்வீஸ் என்று பெரிய பட்டனை
எடுத்தார்.
பட்டை கட்டப் பட்ட பூனை, குழந்தை இது போல அந்த
வண்டியில் ஏறிக்கொண்டேன்.
வெளிச்சத்துக்கு வந்ததும் அந்த நவம்பர் காலைக் குளிரில் மகன்
பூங்கொத்தோடு நின்றிருந்தான். என்னடா ராஜா இந்த மாதிரி கண்கட்டிக் கூட்டி வருவது போல அழைத்துவதார்கள் என்றால்.
நான் தான் ஏற்பாடு செய்தேன் மா. அப்பாவை விட்டுத் தனியா வர.
பயப்படுவியேன்னு செய்தேன் என்று சிரித்தான்,. இதற்கு 500 ஃஃப்ராங்க்ஸ் எஸ்கார்ட் ஃஃபீஸ்.
குழந்தைக்கு செலவு வைத்தேனே என்று வருத்தமும், அவனுடைய கரிசனத்துகாகச்
சந்தோஷமும் போட்டியிட, ஸ்டார்பக்ஸ் காப்பிக்கு விரைந்தோம்.
ஏண்டா ,அவா எனக்கு ஒரு காஃஃபி கொடுத்திருக்கலாமே என்றேன் நான்.
அவசரமாக ஓடிய நாட்கள் சில. ஆனந்தமாக ஓடிய நாட்கள் சில.
வருத்தத்துடன் பதிந்த பதிவுகள் சில. வரம் கொடுத்த சாமிகளாக பேரன் பேத்திகள் விஷமங்கள், பேச்சுக்கள் சில.சென்று கழித்த இடங்கள் பல. துணயை இழந்து ,நினைவில் பதிந்த நிகழ்ச்சிகள் சில.
நண்பர்கள் குழாம் பெருகி இருந்த காலம் சில. இப்பொழுது இன்னும் வல்லி ம்மாவுக்காகப் படிக்க வரும் நாலைந்து நட்புகள்.
பூனை கண்ணை மூடிக் கொள்வது போல என்னிலேயே நான் மூழ்கி விட்டால் யார் தான்
அசராமல் படிக்க முடியும்.
ஆரம்ப காலத்திலிருந்து தொடர்ந்து வந்த பலரின் உறுதுணையால் வளர்ந்த வலைப்பூ இது.
சாப்பாட்டுக்கடை வாசலில் திகைப்புடன் உட்கார்ந்த
சரவணன் ஐயாவைப் பார்த்த அவரது கிராமத்தவர்கள்
அதிர்ந்து போனார்கள்.
செய்தி கேட்டதும் பதறிப் போய் அவருடைய பையின் அடையாளங்களை
ஒலிபெருக்கியில் சொல்லச் சொன்னார்கள்.
அடுத்த பத்து நிமிடங்களில் பையும் கையுமாக நால்வரைப் பிடித்தனர் போலீசார்.
அவர்களை ஐய்யா அவர்களின் அருகாமையில் கொண்டு வந்ததும் அதிர்ச்சியில்
திகைத்தார் ஐய்யா.
ஏண்டா பக்கத்து நிலத்துப் பங்காளிகள என்னைப் பாதுகாப்பீங்கன்னு நினைச்சேனே /
என் மடியிலிலேயே கை வச்சிட்டீங்களே பசங்களா.
பங்காளின்னால் இப்படியா.
என் அண்ணன் பிள்ளைகள் என்னைத் தாங்கிப் பிடிப்பதை விட்டு
வெட்டிப் போடப் பாத்தீங்களா என்று கண்ணீர் விட்டார்.
பெரியப்பா, தண்டனை கொடுங்க.
நிலத்துல தண்ணி இல்ல, எங்களுக்கு நெஞ்சிலயும்
தண்ணீ இல்ல.
பெரிய மனசு செய்யணும் என்று அவர்களும் அழ, நம்ம சீமைக்கு வந்த
நட்டத்தைப் பாத்தியா.
பாசம் ஓடிவிட்டதே ..பாசனம் எப்படிச் செய்வோம்.
இந்த எட்டாயிரம் எத்தனை நாளுக்குக் காணுமடா உங்களுக்கு.
சரி பேச்சு வேண்டாம்.
எல்லாம் சாப்பிடுங்க. ஒரு வழி செய்யலாம் என்று அவர் சொல்லும்போதே சூறைக்காற்று
அடிக்கத் தொடங்கியது.
ஏதோ கஜா புயலாம், நாம ஊரைப் பார்க்க ஓடுவோம்,
பொண்டு பிள்ளைக் காக்கணும்னு அவசரமாக சாப்பிட்டு
அதே லாரியைப் பிடித்து வீடு நோக்கி விரைந்தார்கள்.
வழி எங்கும் தோப்புகளும்,பசுமையை இழந்து சரிந்து கிடந்தன.
அனைவர் மனங்களும் பதைக்க ஊர் வந்து சேர்ந்த போது இரவாகிவிட்டது.
மழை வீர்யம் கொண்டு முழங்கிக் கொண்டிருந்தது.
இது அரியாங்கோட்டை தானா என்று கேள்வி கேட்க்கும்படி இருந்தது. எங்கும் தண்ணீர்.
ஒரே இருட்டு. அவரவர் தம் மனைவி,பிள்ளைகள் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்தனர். ராமலிங்க சாமி, எங்க பாவத்தை மன்னிச்சுடு. இனித் திருட நினைக்க மாட்டோம். பெரியம்மாவையும் குடும்பத்தையும் காட்டிகொடு. உயிர் இருந்தால் போதும். பணம் மண் எதுவும் வேண்டாம் என்றூ கூக்குரலிட ஆரம்பித்தனர்.
ஏதோ வண்டி வெளிச்சம் கண்ணில் பாட சாலை நடுவில் நின்று
பார்த்தனர். அது காவல் நிலைய வண்டி. ஓட்டுனர் இறங்கி, ஏன் வழியில் நிக்கறீங்க,புயல் அடிக்கப் போகுதே எங்களுடன் வாருங்கள் என்று வண்டியின்
பின்னால் ஏறிக்கொள்ளச் செய்தனர்.
தங்கள் விவரங்களைச் சொன்னதும், சமூகக் கூடத்தில் நிறையபேருக்கு இடம் இருக்கு. நீங்க அங்க இறங்கிப் பாருங்க..
வெளியே மட்டும் வரவேண்டாம். நாளைக்காலையில்
புயல் கரையைக் கடந்துடும்.காத்து மட்டுப் படும். அப்போ நாங்களே உதவறோம் என்று சொல்லி ,சமூகக் கூடத்தில் இறக்கிவிட்டனர்.
பெரியப்பனைக் கையில் தாங்கியபடி உள்ளே விரைந்தனர்
அந்த வாலிபர்கள். குளிரும் பசியும் வாட்ட,அங்கே கூடி இருந்த மக்களில் தங்கள் குடும்பத்தைதேடினர்.
அப்பா, தாத்தா, என்னாங்க என்ற குரல்கள் வந்த திசையில் பார்த்தால்,
பர்வதம்மா, மருமகள்கள்,பிள்ளைகள் என்று ஒரே இடத்தில் இருப்பதைப்
பார்த்து ,சரவண ஐய்யாவுக்கு மனம் நெகிழ்ந்தது.
பர்வதம்மா கேட்ட முதல் கேள்வி சாப்பிட்டிங்களா என்பதுதான்.
பெரியம்மா காலில் விழத்தயாராய் இருந்த தம்பி மகன் களைக்
கண்ணால் தடுத்து நிறுத்திய, பெரியப்பா எப்படித் தப்பி இங்க வந்தீங்க எல்லாரும். வர வழி எல்லாம்
மரம் சாய்ஞ்சு கிடக்கே என்று வினவினார்.
நீங்க முந்தின நாள் கிளம்பும்போதே ரேடியோ, டிவில சொல்லிட்டாங்கப்பா.
கிடைத்த வரை எடுத்துக் கொண்டு இங்க வந்துட்டோம்.
நம்ம பந்து ஜனமெல்லாம் இங்கதான் என்றார் பர்வதம்மா.
பெரியம்மா இல்லாட்டா நாங்க நிலத்துலயே மடிஞ்சிருப்போம் என்றாள்
ஒரு மருமகள்.
அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எல்லாம் நல்லதுக்குத்தான்.
குடும்பம்னா இப்படித்தான் இருக்கணும்.
வறுமை வந்தால் விலகிப் போகணும்னு யாரும் சொல்லலியே.
இருக்கிறதைப் பகுந்து கொண்டா,மனசும்,குடும்பமும்
வளரும் பிள்ளை என்றாள் பாசத்தோடு.
வெளியே அடிக்கும் புயல் பெரிசா, மனசில் அடித்த புயல் பெரிசா
என்று யோசித்தார் பெரியய்யா சரவணன்..
தாயார் அளித்த கூழை உண்டு தகப்பனார் அருகில் வந்தமர்ந்த பிள்ளைகள்,
பெரியப்பா, இந்தமழை நம் குடும்பத்தை ஒண்ணாக்கிடுச்சு.
உங்க நிலமும் எங்க நிலமும் சேர்த்து நாங்க பாடுபடறோம்.
மண்மாதா வஞ்சிக்க மாட்டாள்.
ஒரு போகம் முடிந்ததும் ராமேஸ்வரம் போயீ சாமி கும்பிட்டு வரலாம்
என்று சொல்லி முடித்தனர்.
ஆமாண்டா இனிப் பழைய பகை இல்லை. புது சோறு பொங்கி
,புதுக்காளை வாங்கி, இனி எல்லாம் புதுசு தான்.
பெரியய்யா காளைகளை மீட்கணும் முதல்ல.
ஆமாண்டா முதலில் நம்மைக் கடனுக்காகக் கழுத்தை நெரிச்சதுனால
தான, பெரியய்யாவுக்குத் துரோகம் செய்யப் போனொம்.
நம்ம எட்டு காளைகள்ள இரண்டு ஜோடியைக் கொடுத்துட்டுப் பெரியய்யாவுக்குக் காளைகளை
மீட்டுடுவோம்.
இத்தனை முடிவுகளையும் தீர்மானம் செய்து
அவரவர் குடும்பங்களுடன் தூங்கச் சென்றனர்.
சரவண ஐய்யாவும் பர்வதமும் வெகு நாட்களுக்குப் பிறகு
விடியல் சீக்கிரமே கிடைக்கும் என்ற நிம்மதியோடு
உறங்கச் சென்றனர். வீடு புயலைத் தாங்குமா,மீண்டும் தமக்குக் கிடைக்குமா
என்ற கேள்விகள் மனதின் மூலையில் இருந்தாலும் இன்று
காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்லியபடி
மழையின் சத்தத்தில் லயித்தபடி கண்களுக்கு ஓய்வு கொடுத்தனர்.
நமக்கு என்று இருப்பது பறிபோவது போலத் தோன்றினாலும்
மீண்டும் அது நமக்குக் கிடைக்கக் கடவுள் அருள்
உண்டு .நம்பிக்கையே வாழ்க்கை. வாழ்க வளமுடன்.
#பத்துப்பட பதிவுகள்,
#பத்தாவதுபடம்திருமலைதென்குமரி
#இயக்கம்#எபி நாகராஜன்,
#நடிகர்கள்சீர்காழிகோவிந்தராஜன்,சிவகுமார்,சகுந்தலா, குமாரி பத்மினி,
கோபாலகிருஷ்ணன்,காந்திமதி,மனோரமா,சுருளிராஜன் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள்.
இசை குன்னக்குடி வைத்திய நாதன் .
1970 இல் பார்த்த படம். ஒரு புதுவித முயற்சி. இயக்குனர் தேர்ந்தெடுத்த கருத்து பல
மொழி பேசும் குடும்பங்கள் கொண்ட ஒரு அடுக்கு மாடிக் குடி இருப்பிலிருந்து , ஒரு பேருந்தை ஏற்பாடு செய்து திருமலையிலிருந்து தென் குமரி வரை, திருத்தணி, மைசூர்,மதுரை, குருவாயூர்
என்று எல்லா இடங்களுக்கும் செல்கிறார்கள்.
அந்தக் குடுபத்தோடு நான்கு கல்லூரி மாணவர்களும், பக்கத்தில் குடி இருக்கும் ஏழைத்தம்பதிகளான மனோரமா ,சுருளிராஜன் தம்பதிகளும் சேர்ந்து கொள்கிறார்கள்.
வண்டி முழுவதும் கலகலப்புக்குப் பஞ்சமில்லை,
சுருளிராஜனைக் குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்க மனோரமா முயற்சிக்கிறார். வெற்றியும் பெறுகிறார்.
கல்லூரி மாணவர்கள்+காதலர்களாக சிவகுமார்,குமாரி பத்மினியும், சகுந்தலாவும் அவர் காதலரும்.
இதைத்தவிர, ஒரு தெலுங்குக் குடும்பம், ஒரு கேரளக் குடும்பம், ,ஒரு கன்னடத்தம்பதியினர், ஒரு தமிழ்க் குடும்பம். தமிழ்ப் பேராசிரியர் அழகாகக் கவிதை புனைபவர்,அவரது மனைவி..ஒரு
பிராமணக் குடும்பம் கோபாலகிருஷ்ணன்,மனைவி,மகள்,மகன்,
ஒரு பாட்டியும் ,அவள் பேரனும்.
திருப்பதி உண்டியலில் மோதிரத்தைச் சேர்க்க மனமில்லமல்
பதிலாகப் பணம் செலுத்த நினைக்கும் போது மோதிரமும் கூட விழும் அற்புதம்,
திருத்தணியில் தொலைந்து போகும் மகனுக்கு,திரும்பக் கிடைத்ததும்,
முடியிறக்கி பிராத்தனை நிறைவேற்றும் அழகு,குருவாயூரில் சொல்லப்படும் மகிமை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சீர்காழியின் அற்புதப் பாடலும், வந்திருக்கும் மங்கைகளின் நடனம்,
ஒவ்வொரு கோவிலிலும் திரு கோவிந்தராஜனின் இசை மழை,
கடைசியில் கன்னியா குமரியில் காதலர்களின் பிரிவும் ,பின் இணைவதும்
மறக்க முடியாத நிகழ்ச்சிகள்.
அந்தக் காலத்து தமிழ்னாடும் , கோவில்களும் ,சுற்றுப்புறமும் எப்படி இருந்தன என்பதற்காக எடுக்கப்பட்ட ஆவணப் படமாக இருக்கிறது. இந்தச் சித்திரம்.
ஒரு விகல்பம் இல்லை,கவர்ச்சி நடனம் இல்லை. இருந்தும் வெற்றி பெற்றது. திரு.நாகராஜன் அவர்களின் இயக்கத்தில்.
முடிந்தபோது காண மறக்காதீர்கள். வாழ்க வளமுடன்.
குத்துக்காலிட்டு நடைபாதையில் உட்கார்ந்த சரவணன் ஐய்யாவுக்குக்
கண் இருட்டிக் கொண்டுவந்தது.
திருச்சி சந்தைக்கு வந்தவரின் பையை யாரோ பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்கள்.
காளை மாடுகளைச் சந்தையில் விற்க வந்து நல்ல லாபத்துக்கும் விற்றுவிட்டு
உணவு அருந்த, பணம் வைத்திருந்த துணிப்பையை வெளியே
Add caption
Add caption
கிடைச்சிறுமியா கவலையை விடு ..
எடுத்த பையை யாரோ பறித்துவிட்டார்கள்.
ஏமாற்றப் பட்ட விவசாயி.
இணைய நட்பு திரு வெங்கட் நாகராஜனின் புகைப்படம் ஒன்று எல்லோரையும் பாதித்தது நினைவிருக்கலாம்.
++++++++++++++++++++++
நம் சரவணன் அய்யாவும் அதை போல விவசாயிதான்.
எப்போதும் வானம் பார்த்த பூமியின் சொந்தக்காரர் .
ஆமாம் ராம நாதபுரம் ஜில்லாவைச் சேர்ந்தவர்.
இந்த 75 வயதில் பல அராசாங்கங்களையும் கண்டவர்.
அவர் தந்தை காலத்தில் ரயில்வே லைன் வந்த பொது சில நிலங்களை இழந்தாலும் புஞ்சைப் பயிர்கள்,வரகு,சாமை என்று விளைவித்து
சந்தையில் வியாபாரம் செய்வார்.
அவர் காலத்துக்குப் பிறகு மதுரை ராமேஸ்வரம் சாலை வந்தது.
அதில் இவருக்கு நாட்டம் சில ஏக்கர்.
அசரவில்லை சரவணன். கையில் இருந்த பணத்தைப் போட்டு சொட்டு நீர்ப் பாசனம் செய்து ,கத்திரி,வெண்டை,என்று மாற்றுப் பயிர்கள் விளைவித்தார் வயதும் ஆச்சு. எல்லாப் பிள்ளைகளையும் போல அவர் மக்களும் மதுரையைப் பார்க்கப் போய்விட்டார்கள்.
மனைவி பர்வதம் அவருக்கு உறு துணை.
எதற்கும் அசராத உடற்பாங்கு. மனப்பாங்கு.
அய்யா அசரும் யோசனைகளை சொல்லி ஊக்கம் கொடுப்பதும், வானொலியில் சொல்லும் நல்ல செய்திகளை அவரிடம் பகிர்ந்ந்து உற்சாகப படுத்துவதும் அவள் வேலை.
நிலங்கள் சுருங்கி மழை இல்லாமல் பிளந்து கிடப்பது மனதை உறுத்த, பத்து வருடங்களாகக் கூட இருக்கும் மாடுகளை நல்ல நிலைமையில் இருக்கும் போதே விற்றுவிட்டு, தன் சிறிய இடத்துக்கு பி பக்கத்திலே ஏற்றக் கிணறு போட்டு மிச்ச நாட்களைக் கழிக்க
அவளுக்குத் தோன்றியது. மானம் கண் திறந்தால் மீண்டும் வெள்ளாமை ஆரம்பிக்கலாம் என்று ஆக்கம்
கொடுத்ததும் அவள்தான்.
அக்கம்பக்கத்து விவசாயிகள் திருச்சி சந்தையில் மாட்டு வியாபாரம் நேர்மை என்று சொன்னதும் சரவணனும் மனமில்லாமல், லாரியில் மாடுகளைக் கொண்டு வந்து இறக்கினார்.
அப்போது நிகழ்ந்ததுதான் இந்தத் திருட்டு.
தொடரும்.
அன்னை படம் 1962இ வெளிவந்த ஏவீஏம் ஸ்தாபனத்தின்
அற்புதமான படம். இதுவரை யாரும் தொடாத கரு.
இரு சகோதரிகளில் பானுமதிக்குப் பிள்ளைப்பேறு இல்லை என்றாகிவிடுகிறது.
சகோதரி சௌகார் ஜானகி,தந்தையின் விருப்பத்துக்கு எதிராகத் திருமணம் செய்ததால்
சொத்துரிமை இழக்கிறர்,.
பானுமதியின் சகல ஆதரவுகளையும் ஏற்று குழந்தையும் பெற்றுக் கொள்கிறார்.
கணவன் நல்ல மானஸ்தன். ஏதோ தவறான நபருக்கு காரண்டார் கையெழுத்துப்
போட வழக்கில் மாட்டிக் கொளிக்றார்.
பானுமதியின் கணவர் சமயதில் உதவ் தம்பதிகள், வெளினாடு சென்று பிழக்க எண்ணுகிறார்கள்.
அக்காவுக்குத் தங்கையின் குழந்தையிடம் இயற்கையாகவே
பாசம். இப்பொழுது பிரிய வேண்டுமே என்ற ஏக்கத்தில்
தங்கையிடம் பிள்ளைப் பிச்சை கேட்கிறார்.
ஆரம்பத்தில் மறுக்கும் தங்கை நிலைமையைக் கருதி விட்டுக் கொடுக்கிறார்.
குழந்தை செல்வத்தைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து மருத்துவராக ஆக்கிவிடுகிறார்.
பாசம் என்றால் கொஞ்ச நஞ்சம் இல்லை. அவனுக்குத் தலைவலித்தால் இவருக்கு நெஞ்சே வலிக்கும்.
நடுவில் தங்கைக்குப் பணம் அனுப்பவும் மறக்க மாட்டார்.
ரங்கராவ் புகழ் பெற்ற வக்கீலாக வருகிறார்.
நேர்மையான மனிதருக்கு எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பும்
உண்டு. பர்மாவில் ஏற்பட்ட விபத்தொன்றில் காலை இழக்கும் தங்கை கணவருக்காக வேண்டி இருவரும் சென்னை திரும்ப உத்தேசிக்கிறார்கள்.
அதன் பிறகுதான் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.
பலவித உணர்ச்சிப் போராட்டங்களுக்கு நடுவே எப்படிக் குடும்பம் ஒன்று சேர்கிறது
என்பதே கதை.
அருமையான வசனங்கள்.அற்புத நடிப்பு
லாபாயிண்ட் பேசும் ரங்கராவ். அவரையும் மேற்பார்வை செய்யும் பானுமதி.
நகைச்சுவைக்கு சந்திரபாபுவு, கூடத் தங்கி இருக்கும் உறவினர்களும்.
நளினமான காதலுக்கு ராஜாவும் சச்சுவும்.
பானுமதி அம்மாவின் ஆளுமை நிறைந்த படம்.இது போல
நடிப்பெல்லாம் இனிக் காண்போமா என்பது சந்தேகமே.
நீங்களும் ரசித்திருப்பீர்கள். இன்னோரு தடவையும் பார்க்கலாம் தப்பில்லை.
#பத்துப்படவரிசையில்எட்டாவது. படம். #ஒளிவிளக்கு #எம்ஜிஆர்,ஜெயலலிதா,சௌகார்ஜானகி #எம்ஜிஆரின் நூறாவதுபடம்.100.#மதுவிலக்கு உயர்ச்சி#Music by M.S.VISWANATHAN. நான் இந்தத் தொடரை ஆரம்பிக்கக் காரணமான Raji Muththukrishnan, தொடர்ந்து கௌரவித்த Hemashrinivasan,Gomathy Arasu,Priya charles Antony, Laitha Murali, நான் அழைக்க நினைக்கும் சினேகிதிகளிடம் அனுமதி வாங்கிக் கொண்டு அழைக்கிறேன்.
Phool aur Paththar இந்திப் படத்தின் தழுவலாக எடுக்கப் பட்ட நல்ல படம். எம்ஜியார் முதன் முதலாகக் குடிப்பது போலக் காட்டப்பட்ட படம். அதையொட்டி //தைரியமாகசொல் நீ மனிதந்தானா என்ற பிரபலமான பாடல். அவருக்கு நற்போதனைகளைச் சொல்லி உதவ முனையும் விதவையாக சௌக்கார் ஜானகி. எம்ஜியாரின் காதலியாக ஜெயலலிதா. இந்தப் படத்தில் சௌகார் பாடிய// இறைவா உன் ஆலயத்தில்// என்று பாடிய பாடல் எம்ஜியார் உடல் நலம் பெற பட்டி தொட்டிகளில் ஒலித்தது நினைவில் இருந்தது. வீதிகளேங்கும் அவர் படமும், இந்தப் பாடலும்,பிரார்த்தனைகளும். அவரை மீட்டன என்றே நினைக்கிறேன் . சமூகபிரஞையோடு எடுக்கப் பட்ட படம். பாடல்கள் வழக்கம் போல் இனிமை.
எம் ஜி ஆர் ,சௌகார் மற்றும் அனைவரும் சிறந்த நடிப்புக்காக பெயர் பெற்றார்கள். ஜெயலலிதா அவர்களின் நடனங்களும் மிக அருமையாகஇருக்கும்.
மக்கள் தலைவர் என்றால் எப்பொழுதும் ,
பொழுது போக்குக்கு உகந்த படங்கள் பார்ப்பதே வழக்கம்.
இந்தப் படத்தில் அருமையான சமூக நலன் பற்றிய விழிப்புணர்வைக் கொடுத்திருப்பார்.
#பத்துப்படவரிசையில்
#மேஜர்சந்திரகாந்த்,
#கே.பாலச்சந்தர்,
#மேஜர்சுந்தரராஜன்,முத்துராமன்,நாகேஷ்,ஜெயலலிதா
#லலிதாமுரளி. தான் ,நான் பங்கு பெற அழைக்கும் தோழி.
என் இணையத்தோழி திருமதி #Rajimuththukrishnan
என்னைக் கேட்டுக் கொண்டபோது, என்னுள் இத்தனை ஆர்வம் இருந்தது
தெரியவந்தது.
தமிழ் சினிமாக்கடலில் எத்தனையோ நல்ல படங்கள்.
அதில் பத்து படங்களைப் பற்றி எழுதுவது சிரமமே இல்லை.
எதை எடுப்பது,கோர்ப்பது என்ற நிலைதான்.
இன்று என் மனதில் வந்தது மேஜர் சந்திரகாந்த்.
ஒவ்வொரு காட்சியும் அர்த்தத்தோடு, ஒரு நல்ல கதையை எப்படி
நகர்த்தினால் அனைத்து மக்களுக்கும் அது போய்ச் சேரும் என்று யோசித்து,
அனைத்து நடிகர்களையும்,
அபாரமாக நடிக்க வைத்திருப்பார்.திரு.பாலச்சந்தர்.
கதையும் இதுவரை நாம் அறிந்திராத சப்ஜெக்ட்.
கண்ணிழந்த மிலிட்டரி மேஜராக ,சுந்தரராஜன்,
கல்லூரி மாணவர்களாக ஏவிஎம் ராஜனும் ஜெயலலிதாவும்.
சாதாரண தையற்காரராக, தங்கையிடன் அதீதப் பாசம் வைத்த
அண்ணனாக நாகேஷ்,
தம்பியைத் திருத்த முயலும் போலீஸ் அதிகாரியாக
முத்துராமன்,எல்லோரும் என் மனதில் பதிந்திருக்கிறார்கள்.
வி.குமாரின் இசையில் 1966இல் வந்த படம்.
கொலை செய்த நாகேஷின் கதையைக் கேட்டு நல் தீப்பு வழங்கும் காட்சியும்,
தப்பு வழியில் சென்ற மகனுக்காக உருகும் நேரமும்,
ஏன் அவர்கள் வீட்டு சீசரும், வேலையாளாக வருபவரும் கூட
கச்சிதமாக நடிக்கிறர்கள். 52 வருடங்களுக்கு முன்
வந்த படம். பத்துவருடம் முன்னால் தொலைக்காட்சியில்
பார்த்தபடம்..இப்பொழுது மாதத்துக்கு ஒரு முறையாவது பார்க்கிறேன்.
பாடல்கள், நானே நிலவு,
ஒரு நாள் யாரோ,
கல்யாண சாப்பாடு போடவா அனைத்தும் ரீங்கரிக்கும் இனிமை.
அனைவருமே பார்த்திருப்பீர்கள்.
எனக்கு எழுத ,மீண்டும் ரசிக்க வைத்த இந்தப் படத்துக்கு
Vallisimhan#பத்துப்படவரிசை
#கப்பலோட்டியதமிழன்
#வீரசுதந்திரம்#மஹாகவிபாரதி,#சுப்ரமணியசிவா
Requesting #PriyacharlesAntony to continue.
எளிதில் வார்த்தைகளிலோ,எழுத்துகளிலோ கொண்டுவர முடியாத காவியம்.
ஆங்கிலேயர்களை மிரட்டிய தமிழன். அவருடன் இணைந்த மற்ற தமிழர்கள். நம் பாரதியார், சுப்ரமணிய சிவா, கலெக்டரைச் சுட்ட வைத்தியனாதன்,,குமாஸ்தாவுக்குச் சவரம் செய்ய மறுத்த தொழிலாளி,
அன்னியத்துணிகளை எரித்த தேசபக்தி.
இந்தச் சிறு பொறிகளே நம்மைச் சுதந்திரத்தை நோக்கி நகர்த்தின.
திரு பி.ஆர் .பந்துலு முன்னின்று தயாரித்த இந்தப் படத்தைப்
பார்த்துதான் நாங்கள் வளர்ந்தோம்.
படம் முழுவதும் பாரதி பாட்டு.
நெஞ்சில் உரமுமின்றி , நேர்மைத்திறமும் இன்றி,
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்,
ஓடிவிளையாடு பாப்பா,
காற்றுவெளியிடை கண்ணம்மா
எந்தக் காட்சியை விட. எந்தக் காட்சியைச் சொல்ல.
திரு.டிகே ஷண்முகம் சிவாவாக உருக்கொண்டதையா,
திரு எஸ்வி சுப்பையா பாரதியாகக் கனல் பொழிந்ததையா,
எல்லோரும் சேர்ந்து வந்தே மாதரம் என்று முழங்கி நம்
நாடி நரம்புகளில்
புது ரத்தம் புகுத்தினதையா,
அவர்களை நினைத்து நெஞ்சில் பாரம் ஏற்றிக் கொண்டதையா,
வ உ சியாகவே வாழ்ந்து காட்டியம் நடிகர்திலகத்தின் கம்பீரத்தையா.
இந்தக் காவியத்துக்கு இணை வீர பாண்டிய கட்டபொம்மனைச் சொல்லலாம்.
அந்தப் படத்தில் ஒரு வீரம். இந்தப் படத்தில் இன்னும் மலிந்துவிட்ட சமூகத்தில் கப்பல்கொடி ஏற்றிய மாவீரர் சிதம்பரனாரைக் கொண்டாடும் காவியம். இந்த வீரம் இன்னும் நம் இளைஞர்களைப் போய்ச் சேர வேண்டும். வாழ்க பாரதம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Revathi Narasimhan
Yesterday at 7:13 AM ·
# பத்துப்படங்கள் வரிசை
#ஐந்தாவதுபடம்
#எதிர் நீச்சல்.
#கே.பாலச்சந்தர்படம்,#Nagesh,#Hemashrinivasan
மாடிப்படி அடியில் வாழ்வு நடத்தும் மாது வாழ்க்கையில் வெற்றி
கண்ட கதை.
மாதுவின் வாழ்க்கை தினம் ஒரு வீட்டில் சாப்பாடு கேட்கும் அவலம். அதற்காக அவனை வேலைக்காரனாக மதிக்கும் மற்ற குடும்பத்தினர்.
மாதுவைத் தோழனாக ஏற்றுக் கொண்ட மேஜர். அந்த ஏண்டா படவா ராஸ்கலுக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
பைத்தியமாகப் பெயர் சூட்டப்பட்டு அவதிப் படும் ஜெயந்தி,
அழகாகப் பட்டுப்புடவையில் ஜொலிக்கும் சௌக்கார் ஜானகி, அசட்டுக் கிட்டுவாக ஸ்ரீகாந்த்,
முரட்டு அன்பு நாயர் அவதாரமாக முத்துராமன்,
மனோரமா அப்பப்பா இவர்கள் எல்லோரும் வாழ்ந்து இருக்கிறார்கள் இந்தப் படத்தில்.
டைரக்டரின் இயக்கும் மகிமை பளிச் பளிச்.
பதட்டத்தில் அடிப்போடி பைத்தியக்காரி என்று பாடிவிடும்
நாகேஷ். அவரிடத்தில் காதல் கொண்ட ஜெயந்தி.
அவர் சரியான நேரத்தில் ஆவேசப்பட்டுப் பழிவாங்கும் கட்டம்
கிணற்றங்கரையில் இருவரும் பரிமாறிக் கொள்ளும் அன்பு
கடிகாரத்தை விட்டுவிட்டியே நாயர்னு நாகேஷ் சொல்லிக்காட்டும் பரிதாபம்.
மேஜர் ஆசி கொடுக்க மறுக்கும் போது, அவரது கைத்தடிக்கு நமஸ்காரம் செய்யும் நாகேஷ்,
கடைசி கட்டத்தில் தில்லிப் பெண்ணை மணந்துவிட்டதாகச் சொல்லி
அனைவரையும் கலங்க வைத்துக்
கடைசியில் மேஜர் வாயால் படவா ராஸ்கல் சொல்ல வைக்கும் மாதுவின் சாமர்த்தியம்,
எல்லாமே நம்மைக் கட்டுப்போட்டு அமர வைக்கும்.
மாதுவுக்கும் நாகேஷுக்கும்,பாலச்சந்தருக்கும்,மேஜருக்கும் ஜே.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
# Moviesformagicalhappiness
#Makkalaip petra Makaraasi.
#4th day preasentation.# Sriram Balasubramaniam,#Bhanumathivenkateswaran.
1957 இல் வந்த நல்ல படம். ஒரு உணர்ச்சிக் காவியம். கண் நிறைந்த கண்ணாம்பா அம்மா,
அவர் மகனாக செங்கோட சிவாஜி.,தங்கை தங்கமாக எம் என் ராஜம்,
அவள் காதலனாக எம் என் நம்பியார்,
செங்கோடனின் முறைப் பெண் துடுக்கு ரங்கம்மாவாக பி. பானுமதி,
வில்லனாக கண்ணாம்பாவின் பணவெறிப் பண்ணையார் வி.கே ராமசாமி.
அவரால் மிரட்டப்பட்டு வீட்டைவிட்டே ஓடிவிட்ட செங்கோடனின் தந்தை.
பானுமதியின் இனிய குரலில் வரும் பாடல்கள்,
அந்த கொஞ்சும் கோவைத் தமிழ்.
சிவாஜியின் வெட்கம் சேர்ந்த காதல். ரங்கம்மாவின் வீரம் சேர்ந்த மிடுக்கு..
முணுக்கென்று சொல்லும் முன் கம்பெடுக்கும் கிராமத்தார்.
அடியாட்கள்.
நம்பியார் எம் என் ராஜத்தின் கௌரவமான காதல்,
அன்னையிடம் காட்டும் பக்தி.அவளுக்குக் கட்டுப்படும் மரியாதை.
படம் முழுவதும் நிறைந்திருக்கும் செழுமை நம்மைப் பழைய
நாட்களுக்கே கொண்டு போய்விடும்.. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு முத்து.
இசையும் ,தமிழும் வெகு இனிமை. கொங்கு நாட்டுத் தமிழும் பண்பும்
காணவேண்டுமானால் இந்தப் படத்தைப் பாருங்கள்.
நல்ல ப்ரிண்ட் இருக்கிற படம் கிடைக்க என் வாழ்த்துகள்.இந்தத் தொடரைக் கௌரவிக்க எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், மற்றும் தோழி பானுமதி வெங்கடேஸ்வரனை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நேரம் இருக்கும் போது தங்கள் எண்ணங்களைப் பகிரவும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
#போலீஸ்காரன் மகள். #RajiMuththukrishnan,Hema Shrinivasan,GomathyArasu, #Movie marathon #3rd .
ஸ்ரீதரின் இந்தப் படத்தில் ஒருவரும் நடிக்கவில்லை
அத்தனை பேரும் வாழ்ந்தார்கள்.
நான் வெகு நாட்கள் இந்தப் படத்தைப் பார்க்காமல் இருந்தேன்.
சோகம் நம்மைத் தாக்கும் என்ற பயம்.
சஹஸ்ரனாமம் அவர்கள், முத்துராமன், விஜயகுமாரி பின்னும் அற்புத
ஓவியம்.
கறுப்பு வெள்ளையில் 1960களில் வந்த படம் என்று நினைக்கிறேன். சஹஸ்ரனாமம் அவர்களின் கண்டிப்பு,
அவரின் செல்லமகளாக விஜயகுமாரி, துடிப்பான,அடக்கமான் முத்துராமன்,
உல்லாச பாலாஜி.
பூக்கார ஜோடி சந்திர பாபுவும்.
முதல் சீனிலிருந்து, முடிவு வரை ஒவ்வொரு அசைவுகளிலும் சஹஸ்ரனாமம் அவர்களின் போலீஸ் விரைப்பும், முறைப்பும் மிரட்டும் நம்மை. குழைவுக்கு விஜயகுமாரியின்
அற்புத நளினம். தன்னை ஏமாற்றிய காதலனைக் காக்க கோர்ட்டுக்கே சென்று வாக்குமூலம் கொடுத்துக் காதலனைக் காப்பாற்றும் துணிவு.
எல்லோருக்கும் நடுவில் முத்துராமன் படும் பாடு.
படம் முழுவதும் ஒலிக்கும் இன்னிசைப் பாடல்கள்.
எதுவுமே மறக்க முடியாதவை.
ஸ்ரீதரால் தான் இத்தகைய நடிப்பை வெளிக்கொண்டு வர முடியும்.
இந்தப் படத்தின் பாதிப்பிலிருந்து மீள, காதலிக்க நேரமில்லையும் பார்த்துவிடுங்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Revathi Narasimhan
November 30 at 8:10 PM ·
I have been invited to for movie appreciation by Raji Muthukrishnan. As I love old movies ,It’s a pleasure to talk about them. Thookkuth thookki is one of the best movies of my childhood days. The famous five sentences describing life in general is the focal point. How the hero finds the truth behind them is highlighted through out the movie. Needless to say everyone has acted very well,especially Sivaji Ganesan. I want to request my friend. Hema Shrinivasan to write about her favorite movie. This is my second day of movie marathon.
Image may contain: 4 people, including Teem Mangai, people smiling, text
n
Write a comment...
Gomathy Arasu
November 30 at 9:28 AM ·
https://www.youtube.com/watch?v=1NC0D1hWnZs
பழைய படப் பகிர்வு.
எனக்குப் பிடித்த நகைச்சுவைப் படம்.
பாடல்கள் என்றும் இனிமை.
நடித்த நடிகர்கள் அனைவரும் அற்புதமாய் நடித்து இருப்பார்கள். ...
See More
See Translation
YOUTUBE.COM
Adutha Veettu Penn | Anjali Devi, T R Ramachandran, Pakkirsamy | Tamil Comedy Movie | Film Library
Watch the tamil comedy movie "Adutha Veettu Penn"…
3You, Sriram Balasubramaniam and 1 other
Love
Comment
Share
Comments
Revathi Narasimhan
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Revathi Narasimhan
November 30 at 8:10 PM ·
I have been invited to for movie appreciation by Raji Muthukrishnan. As I love old movies ,It’s a pleasure to talk about them. Thookkuth thookki is one of the best movies of my childhood days. The famous five sentences describing life in general is the focal point. How the hero finds the truth behind them is highlighted through out the movie. Needless to say everyone has acted very well,especially Sivaji Ganesan. I want to request my friend. Hema Shrinivasan to write about her favorite movie. This is my second day of movie marathon.