எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
அழகான ஆரத்தியைப் பார்த்துவிட்டு
பக்தி நிறைந்த மனதுடன் விடுதி வந்து சேர்ந்தனர் தம்பதியினர்.
லக்ஷ்மிமாவுக்குச் சிறிதே கால்வலி.
சமையலறையில் ஸ்பஒல்லி வேன்னீர் வாங்கி ஒத்தடம்
கொடுத்துக் கொண்டார். நல்ல சாப்பாடு. ஊரிலிருந்து வந்த மாவடு பசியைக் கிளப்பியது.
மிளகு ரசம், பருப்புத்துகையல், புடலங்காய்க் கறி, பொரித்த அப்பளம் என்று திருப்திகரமாகச் சாப்பிட்டனர்.
நடேசன் வந்து கட்டில்களுக்குக் கொசு வலைக் கட்டினார்.
நடேசன் சாப்பிட்டீர்களா எங்களோடு உட்காருங்கள் என்று கேட்டுக் கொண்டார் வாசு. இதோ அரைமணியில் கதவுகளை மூடிவிட்டு வருகிறேன்
என்று சென்று வந்தார்.
அதற்குள் நால்வரும் சீட்டுக் கச்சேரி ஆரம்பிக்க அவர் வந்ததும்
மூடிவிட்டு அவரிடம் பேசத் தயாரானார்கள்.
உங்களை எல்லாம் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது வாசு சார்.
வருடா வருடம் வரவேண்டும். ஒரு மாசம் முன் கூட்டியே சொல்லுங்க.
மற்ற இடங்களையும் பார்க்க ஏற்பாடு செய்கிறேன். அம்மா உடம்பும் அதற்குள்
நன்றாகத் தேறிவிடும் என்றார்.
கட்டாயம் செய்யலாம்.
நீங்கள் எப்போதிலிருந்து இங்கே இருக்கிறீர்கள் .காரைக்குடி ஊர் என்று தெரியும்.
குடும்பம் அங்கே இருக்கிறார்களா என்று வஞ்சுமா கேள்விகளை அடுக்கினார்.
இளையாத்தங்குடி எங்க ஊர். நம்ம செட்டினாட்டரசர் குடும்பதுக்கு அப்பா
கணக்காளராக இருந்தார்.
அவர்களே எனக்கும் படிப்பும் சொல்லி வைத்து
மணமும் முடித்துவைத்தார்கள். பத்துவருடமாக நான் இங்கிருக்கிறேன்.
அங்கே மனைவியும் ,குழந்தைகள் இருவரும் பெற்றோரும் இருக்கிறார்கள்.
ஆச்சி அவர்களை நல்லபடியாகக் கவனித்துக் கொள்வ்தால்
எனக்கு நிம்மதியாக இருக்கிறது.
மகளும் மகனும் 9, 11 வயதில் பள்ளிகளில்
படிக்கிறார்கள்.
நான் வருடத்துக்கு ஒரு முறை ஆகஸ்ட் மாதம் சென்று வருவேன். எனக்குப் பதிலாக இங்கு இன்னொருவர் வந்து இரண்டு மாதம் இருப்பார் என்றார்.
நாராயணன் நாங்களும் அங்கே இருந்திருக்கிறோம். எங்கள் மகனும் அழகப்பா
ஆர்ட்ஸ் காலேஜில் தான் படித்தான். கிட்டத்தட்ட
13
வருடங்களுக்கு முன். இப்போது கோவையில்
இருக்கிறான். அவனுக்கும் இரு மகன்கள். 28 வயதில் திருமணம்
முடித்தான்.முதல் பேரனுக்கு 2 வயதாகிறது ,இரண்டாவது
பேரனுக்கு இப்போதுதான் ஆறு மாதமாகிறது.
என்று சொன்ன நாராயணனின் முகத்தில் மகிழ்ச்சி பூரித்திருந்தது.
சென்னையில் ஒரு மகளும் ,இன்னோரு மகனும் இருக்கிறார்கள்.
அவர்களுக்குப் பெரிய பசங்க. மூத்த பேரன் கல்லூரியில் சேரப் போகிறான்
என்றார்.
வாசு ஐய்யா மகனை எனக்குத் தெரியும். என்றார் நடேசன்.
காரைக்குடிக்கு ஒரு பிறந்த நாள் சான்றிதழ் வாங்க வந்திருந்தார்.
ஆமாம் ஒரு பேரன் காரைக்குடியில் பிறந்தான்.
மருமகள் தந்தை அங்கே செக்ரியில் வேலையில் இருந்தார்.
என்றார் வாசு.
நலமாக இருக்கிறார்களா. வேறு குழந்தை ஏதும் உண்டா.
என்று கேட்டார் நடேசன். வரவேண்டும் என்று சிரித்துக் கொண்டார் வாசு.
நாளைக் கோவில்களைத் தீர்மானம் செய்தாச்சா என்று
கேட்டார் நாராயணன்.
உங்க பெயர் கொண்ட பெருமாளையும் ,அவர் தங்கை துர்க்கா மா கோவிலும் தான்
பார்க்கணும்.
நாளன்னிக்கு கயா கிளம்பணும் என்றார் வாசு.
நல்லதாப் போச்சு. அப்ப நீங்கள் உறங்கச் செல்லுங்கள். நாளை வண்டிக்குச் சொல்லிவிட்டு நானும்
உறங்கப் போகிறேன் என்று சொல்லி எழுந்தார் நடேசன்.
இந்தத் தடவை சென்னை பங்களூர் வரவேண்டும்.
குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு வரவேண்டும்
என்று அழைப்பு விடுத்தனர் இரு தம்பதிகளும்.
மீண்டும் நாளை பார்க்கலாம்.

Add caption |
3 comments:
இந்த இடங்கள் என் பெற்றோர்கள் சென்று வந்து என்னிடம் சொன்ன
கதை.
எதிலாவது தவறிருந்தால் அது என் பொறுப்பே.
நாளை கயாவில் நடக்கும் சம்பவங்களை காண ஆவல்.
புகைப்படம் அருமை.
நல்ல மனிதர்கள். இப்படி எல்லாம் ஆத்மார்த்தமாகத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளுவது பார்க்கவே முடியாது! அருமையாகச் செல்கிறது.
Post a Comment