Blog Archive

Tuesday, January 09, 2018

மார்கழிப் பாவை 25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 மார்கழிப் பாவை 25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தருக்கிலானாகித் தான் தீங்கு நினைத்தக்
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றினில்
நெருப்பென நின்ற நெடுமாலே..ஊண்ணாஈ
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++ கண்ணனின் பிறப்பு
மகிமையை ஆண்டாள் நினைத்து நினைத்து மகிழ்கிறாள்.
 இதோ கண்ணெதிரே கோவிந்தன் கம்பீரமாகச் சிங்காதனத்தில் அமர்ந்திருக்கிறான்.
கண்குளிரக் கடாக்ஷிக்கிறான்.
எதை எதிர்பார்த்து என்னைக் காண இத்தனை சிரமம்
எடுத்துக் கொண்டீர்கள் என்று கேட்கிறான். உங்களுத்தேவை என்ன என்று
வினவுகிறான்.
 உன்னையே பரிசாகத் தேடி, விழைந்து வந்திருக்கிறோம் கண்ணா.
 அன்னை தேவகியின் வயிற்றில் உதித்து உன்னை,
கம்சனுக்குப் பயந்து  யசோதை அகத்தில்
ஒளித்து வளர்த்தனர்..
நீ உயிரோடு இருப்பதையே
பொறுக்க முடியாத கம்சன் பல்வகை அசுரர்களை ஏவி உன்னை அழிக்க முயற்சித்தும்
அவனால் முடியவில்லை.
அவனைக் கனவிலும் நினைவிலும் தகித்து வந்தாய்.
கடைசியில் நேருக்கு நேர் யுத்தத்தில்  அவனை.
 முடித்து வைத்தாய்.
உன்னையே வேண்டி எங்கள் வாழ்வின் அர்த்தமாக நினைத்து வந்திருக்கிறோம்.
அந்தப் பரிசை நீ எங்களுக்குத் தந்து அருள்.
எங்களுக்குக் கிடைத்த செல்வத்தைப் பாடிப்பாடி மகிழ்வோம்
என்று பூர்த்தி செய்கிறாள்.
நம் வாழ்வின் அர்த்தமும் கண்ணனாகவே இருக்கட்டும்.

10 comments:

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா ஒவ்வொரு பாவையையும் பார்த்துக் கொண்டே வருகிறேன்...கருத்து இடாமல் போய்விட்டேன்...

நல்ல விளக்கம். பெஹாக் ராகத்தில் எம் எல் வியின் குரல்தான் நினைவுக்கு வரும் திருப்பாவையில் எப்பாடலைப் பார்த்தாலும் அவர் நினைவுதான் வரும். இப்போது எத்தனையோ பேர் பாடிய்ருந்தாலும், எப்படி எம் எஸ் ஸின் குரலில் கேட்ட பாடல்களைக் குறிப்பாக ஸ்ரீ ரெங்க கத்யம், முதக்கராத்த மோதகம், கனகதாரா, அப்படி அந்தத் தொகுப்பில் வரும் எல்லாமே அவர் குரலில் கேட்டு மனதில் பதிந்தது போல், திருப்பாவை எம் எல் வி தான் ஈர்க்கிறது.

கீதா

ஸ்ரீராம். said...

கிருஷ்ணா... நீ வேகமாய் வாராய்...!

Anuprem said...

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...!

அழகிய விளக்கம் கண்டேன் அம்மா ...

நெல்லைத் தமிழன் said...

தொடர்ந்து படித்துக்கொண்டு வருகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

விளக்கத்தினை ரசித்தேன்மா....

தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
உண்மையே.
திருப்பாவையும் MLV அம்மாவும் பிரிக்க முடியாதவர்கள்.
அன்னமய்யா கீர்த்தனையும் MS amma மாதிரி.
இழைந்து ஒலிக்கும் குரல் என்னை எழுப்பிய நாட்கள் எத்தனையோ.
அதுவும் கடைசிப் பாசுரம் வங்கக் கடல் பாடும்போது என்னமாக குரல் இழையும் அம்மாவுக்கு.
ரசனை,பக்தி என்று இழுத்துக் கொண்டு போகும். ஒத்த ரசனைக்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், உலகு போகும் கோலத்தைப் பார்த்தால்
அவன் வந்தே விடுவான் பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனுராதா. நீங்கள் ரசிப்பதால் மனம் பூரிக்கிறது.
நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன்,
புதிய விளக்கம் ஒன்றும் இல்லை.
கேட்டு ரசித்ததுதான். நீங்கள் படிப்பதால் இன்னும்ஜாக்கிரதையாக
எழுதணும்.]]]].

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
தொடரும் நட்புக்கு என்ன நன்றி சொல்வது. என் அன்பு
அனைவருக்கும்.