Blog Archive
Saturday, March 28, 2015
Tuesday, March 17, 2015
துபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January
காலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு
வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,.
இன்று 12 மணி ஆகிவிட்டது. இன்னும் காணவில்லையே
என்று பாலகனிக்கும் உள்ளுக்கும் நடந்து கொண்டிருந்தேன்.
சாப்பிடும் நேரமும் வந்ததால் சங்கடமாக இருந்தது.
வாசல் மணி சத்தம் கேட்டு விரைந்து திறந்தேன்.
என்னப்பா இவ்வளவு நேரம் னு கேட்க
இரு இரு என்று தண்ணீர் குடித்துவிட்டு
நடந்ததைச் சொன்னார்.
கராமா வரை நடந்து விட்டு திரும்பி வருவது பஸ்ஸில் வந்து விடுவார். அதற்கான பாஸும் உண்டு.
இன்றைய பஸ்ஸீல் அந்த ஸ்வைப்பிங் மெஷின் வேலை செய்யவில்லையாம்.
வண்டி ஓட்டுபவரும்,இறங்கும் வழியில் இருக்கும் மெஷினில் அட்டையைத் தேய்க்கலாம் என்றதும் இவரும் தேய்த்திருக்கிறார்.
அந்தநேரம் பார்த்து செக்கிங் அதிகாரிகள் பஸ்ஸில் ஏறி எல்லோருடைய பாஸ்களையும் பார்த்துவிட்டு இவரிடம் வந்திருக்கிறார்கள்.
உடனே கீழே இறங்கச் சொல்லி இருக்கிறார்கள். 250 திரம் கட்டவேண்டும். நீங்கள் இறங்கும் ஸ்டேஷன் தாண்டியாகிவிட்டது.
இதற்கு அபராதம் கட்டவேண்டும் என்றதும் இவருக்கு புரியவில்லை.
நான் போகவேண்டிய இடம் இரண்டு ஸ்டாப்புக்கு அப்புறந்தான் என்றதும்
உங்கள் ஐடி ஏதாவது இருந்தால் காட்டலாம் என்று, சொன்னதும் இவர் தன் ட்ரைவிங் லைசென்சைக் காட்டி இருக்கிறார்.
1940 பார்ன்? ஓகே சார். இனிமேல் கார்ட் ஸ்வைப் செய்யும்போது பச்சை விளக்கு வருகிறதா என்று பாருங்கள்.
மெஷின் செய்த தவறுக்கு நாங்கள் வருத்தப் படுகிறோம் என்று சொல்லி விட்டார்களாம்.
அடுத்தாற்போல் வந்த 44 ஆம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்கு வந்திருக்கிறார்.
மகன் அதற்குள் ஃபோன். அப்பா வரலியா இன்னும் என்று.
நீ இனிமேல் மொபைல் எடுக்காமல் வெளியில் போனால் அப்புறம் எனக்கு ரொம்பக் கோபம் வருப்பா
என்று வீட்டுக்கே வந்து விட்டான்.
எப்பவும் க்ரெடிட் கார்ட் தான் வைத்திருப்பார்.30 திரம் ,அதற்கு மேல் எல்லாம் எடுத்துப் போவதில்லை.
கேட்டதிலிருந்து மனம் சங்கடப் பட்டது.
சரி இதுவும் ஒரு பாடம். இத்தோடு விட்டார்களே என்று நன்றியோடு நினைத்துக் கொண்டேன்,..
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Friday, March 13, 2015
பாட்டி --திக்குத் தெரியாத ஊரில் January 2007
நாம்தான் முன்ஜாக்கிரதை முத்தண்ணா ஆச்சே. பெண் பேறு காலம் நெருங்கிவிட்டது
வேணும்கிற வீட்டுப் பொருள் எல்லாம் வாங்கி வைத்துக்கலாம்.
பால் கொண்டா,தயிர் கொண்டானு தேட வேண்டாம்னு வெளில காய்கறி ' டாமினிக்ஸ் ' கடைக்கு வந்தோம்.
பெண் காரிலேயே இருக்க நான் உள்ளே போனேன்.
முதலில் கவர்ந்தது வெள்ளைப்பூசணி.சேப்பங்கிழங்கு,
சாதா கத்திரிக்காய், பெரிய கத்திரி,
சௌசௌ அப்படியே காய்ஞ்ச மாடு கம்பன்கொல்லை
டைப்பில்,
போடு வண்டிக்குள்ள,(கார்ட்)
இப்படியே ஒரோர் பக்கமா நின்னு நின்னு
வண்டி நிறைந்து போச்சு.
மஞ்சள்கிழங்கு கொட்டி வைத்து இருந்தது.தை மாதம் வந்தா வெத்திலைபாக்கு வச்சு கொடுக்கலாமேனு அதை ஒரு கிலோ வாங்கினேன்.
வேர்க்கடலை வறுத்த மாதிரி ஒண்ணு இருந்தது.
நம்ம ஊரு காரக்கடலை போல இங்கேயும் இருக்கே என்று அது ஒரு கிலோ. (அள்ளு அள்ளுனு மனசில பாட்டு வேற):-)
அப்படியே நம்ம நீல்கிரீஸ் போன உற்சாகத்தில் கவுண்டருக்கு வந்து
ஹை! சொல்லி கணக்குக் கூட்டி கழிச்சுப் பார்த்தால் வந்த
பில்,
கையிலிருந்ததற்கு ஐம்பது $ மேலே!:-)
பேபேனு சொல்லாத குறைதான்.
அந்தப் பெண் புருவத்தை உயர்த்துகிறாள்.
எங்க 'செலக்ட் ஸ்டொரா' இது.
வீட்டுக்குப் பையனை அனுப்புப்பா.
மீதிப் பணம் அனுப்பறேன்னு சொல்ல.
அவளிடம் (கவுண்டர் பெண்:-0))
வேண்டாத சில(பல) பொருட்களை விட்டு விட்டு
கவனமாக எண்ணிக் காசைக் கொடுத்துவிட்டு
மண்டைகாய வெளியில் வந்தேன்.
துளசி(நம்ம டீச்சர்தான்) சொல்லற மாதிரி இருபது கைகள் போதாது அடித்துக் கொள்ள!
பெண் வண்டியைக் கொண்டுவந்து பக்கத்தில் நிறுத்த
அவளுக்கு ஒரே சிரிப்பு.
கடைலே ஏதாவது பாக்கி இருக்காம்மா?
என்ற கேள்வியோட பொருட்களை உள்ளே தள்ள:-)
உதவி செய்தாள். அடுத்த வருஷம்
பெரிய டிரக் வாங்கரேன்மா,
நீ சந்தோஷமா ஷாப்பிங் செய்யலாம்னு
கேலி செய்த வண்ணம் வண்டியைத்
திருப்பினாள்.
பெட்ரோல் போட்டுவிட்டு வீட்டுக்குப் போலாம்னு
வண்டியை அந்த இடத்தில்
நிறுத்தும்போது நினைத்தேன்.
நல்ல வேளை இங்கே காசு வேண்டாம். கார்டு போதும்
நாம பண்ண அசட்டுத்தனம் வீடு போய் சொன்னால் போதும் என்று.
அதன் பிறகு என்னைக் காய்கறி,குரோசரி
என்று ஒரு இடம் கூடத் தனியாய் விடுவதில்லை!!

Thursday, March 12, 2015
லண்டனைச் சுற்றிப் பார்க்கப் போனேன்..
Add caption |
எங்க போனாலும் உன்னை விட மாட்டேன்னு சொல்வது இந்திய குணம் போல. நேற்று நாங்கள்
லண்டன் தெருக்களில் மிதமான குளிரில் அலைவது மற்ற நாட்களாக இருந்தால் இனிமையாக இருந்திருக்கும். இதுவரை பார்த்திராத லண்டன் ஐ,பிக் பென்,வெஸ்ட் மினிஸ்டெர் ஆபி,செயிண்ட் பால்ஸ் கதீட்ரல் எல்லாவற்றையும் பஸ் ,டாக்சி என்று அலைந்து இந்திய ஹை கமிஷன் போக வேண்டி வந்தது.
காரணம் திடும் என்று வந்த மெயில் உங்களை பாஸ்போர்ட் வெரிவஃபிகேஷனுக்காகப் பார்க்க வந்த போது நீங்கள் இல்லை. அருகாமையில் இருக்கும் இந்தியன் ஹை கமிஷனிடம் நேரில் சென்று நீங்கள்தான் ரேவதி என்று நிரூபிக்கவும் என்று மகனுக்கு மெயில்.
அண்மையில் இந்தியா சென்றபோது பார்த்திருக்கிறான். உடனே அண்ணனுக்கு மெயில் தட்டி,தொலைபேசி விஷயம் சொன்னால் உடனே கிளம்ப முடிகிறதா. அலுவலகத்துக்கு ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு ரயில் பிடித்து லண்டன் விக்டோரியா வந்தோம். கையில் கூகீள் ஃபோன் அதில் விவரம் கண்டு பிடித்துப் போன இடம் நேரு செண்டர். அவர்கள் கதவைக் கூடத் திறக்கவில்லை.
பையனுக்குக் கஷ்டமாகிவிட்டது. அம்மா நம்ம டாக்சியில் போயிடலாம் .அவரு க்குச் சரியாகத்தெரிந்திருக்கும் என்று ஹீர்க்யுள் பைரோ வருகிற புகழ்பெற்ற லண்டன் டாக்சியில் முதல் தடவையாக ஏஏஏறினேன். இதுவரை பயணித்தது சாதாரண ரேஞ்ச்ரோவர்,இல்லாவிட்டால் பியூஜோ என்ற வகை வண்டிகள்.
இது கால்களை வலி தீர நீட்ட முடிந்தது. சுகமான 15 நிமிடப் பயணத்தில் எக்சக்த்லி ஹைகமிஷன் முன்பு நிறுத்திவிட்டார் 17 பவுண்டைத்தூகி அவர் தட்டில் வைத்துவிட்டு நன்றி சொல்லி உ ள்ளே நுழையப் போனோம்.
வந்தார் செக்யுரிட்டி. என்ன விஷயம்.
இது போல எங்களுக்கு மெயில் வந்தது. என்றதும் இது போலக் கேள்விப் பட்டதே இல்லை. அந்த மெயிலைக் கண்பிக்கமுடியுமா என்றார். அந்த சமயத்தில் கரெக்டாகத் தம்பி கைபேசியில் சார்ஜ் தீர ,,,,,,,,, அவர் என்னை
உட்காரச் சொல்லி அன்புடன் அமரச் செய்தார்.
எதற்கு இத்தனை கஷ்டம்.
2011இல் நானும் இவரும் பாஸ்போர்ட் புதுப்பித்தோம்.
அப்பச் செய்யாத வெரிபிகேஷன் இப்பச் செய்ய வேணும்னால் கேவலமாக
இருந்தது.
அதற்குப் பிறகு நான்கு தடவை இந்தியாவை விட்டு வெளியே போய் வந்தாச்சு.
பையனும் வேறு ஏதோ இடத்தில் சார்ஜ் செய்து,மெயிலை எடுக்கப் பார்த்தால் ,யாஹு ஒத்துழைக்கவில்லை.
அவர்கள் இடமிருந்து ஒரு பாரம் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று அலுவலகம் சென்ற பிறகு அந்த பிரிண்ட் எடுத்து அங்கே கொண்டுபோய்க் கொடுக்கவேண்டும்.
இந்த ஊரிலோ சீ ராக இருந்தாலே விமான நிலையத்தில் நூறு கேள்வி
கேட்பார்கள். அடுத்த ஞாயிறு சுவிட்சர்லாந்த் கிளம்பணும் .லஸ் பிள்ளையாரைத்தான் நம்பி இருக்கேன் .
இங்கே கணினி எல்லாம் இன்னும் செட் அப் செய்யவில்லை.
நாம துபாய்க்கே போயிடலாம்னு பேத்தி சொல்வது போல எனக்கும் இந்தியாவுக்கே போயிடறேன் என்று சொல்லத்தோன்றுகிறது. >)*(
Add caption |
Add caption |
Sunday, March 08, 2015
Saturday, March 07, 2015
மகளிர் தினம் சிறக்க வாழ்த்துகள்.
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
Add caption |
Thursday, March 05, 2015
சிங்கம் 75.....
Add caption |
இந்த அல்பட்ராஸ் பறவையைக் கடைசியாகச் செய்திருக்கிறார். |
இனிய 75க்கு வாழ்த்துகள் |
Wednesday, March 04, 2015
Monday, March 02, 2015
சில சில் நினைவுகள் 4
இ னிதாக வாழ வேண்டும் 1966 ஏப்ரல் +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏப்ரில் மாதம் வந்தது. சேலத்துக்கு மாற்றல் உத்தரவு வந்தது. சேலம் இதுவரை போகாத ஊர். எப்படி இருக்குமோ தெரியாது. அதற்குள் சென்னையிலிருந்து மாமனாருக்கு உடல் நலம் சரியில்லை என்றும் இருவரையும் உடனே புறப்படச் சொல்லித் தொலைபேசி அழைப்பு வந்தது. ரயில் டிக்கட்கள் வாங்கி வந்துவிட்டோம். மாமனாருக்குக் கழுத்தில் ஏதோ கட்டி வந்து அறுவை சிகித்சை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அது வேறுவிதமாகத் திரும்பலாம் என்ற ஐயத்தில் இவரை அழைத்திருக்கிறார்கள். நாங்கள் சென்ற அடுத்த நாள் ஆபரேஷன். மாமியார் மாமனாரோடு அடையார் கான்சர் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிச் சென்று விட்டார். கூடவே இவரும். அவ்வளவு பெரிய வீட்டில் நானும் பாட்டியும் தாத்தாவும் தான். மாடிப்படி வளைவில் ஒரு பெரிய ஜன்னல் இருக்கும். அதன் உட்புறத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வெளியே தொலைவில் தெரியும் சாலையைப் பார்த்த வண்ணம் இருந்தேன்.
நான்கு மணி நேரம் கழித்து அழைப்பு வந்தது. ஒரு பெரிய கிரிக்கெட் பந்து அளவில் கட்டி எடுக்கப் பட்டதாகவும் ஆனால் அது கான்சர் கட்டி இல்லை என்றும் சொல்லிவிட்டார்கள். ஆஜிப் பாட்டி பகவான் சந்நிதியில் விளக்கேற்றி வணங்கினார். எதற்குமே அஞ்சாத பெண்மணி. கலங்கியதை அப்போதுதான் பார்த்தேன்.
ஆள்கட்டு,வண்டி என்று எதற்கும் குறைவில்லாத நாட்கள். வாழ்வில் ஏதாவது தவறு நடந்துவிடப்போகிறதே என்று பயந்த தாயாக இருந்தார். நீ வந்த வேளை உங்க மாமனாருக்கு இந்த உடம்பு வந்தது என்று யாரும் சொல்லாமல் இருக்கவேணுமே என்று பயந்தேன் என்றார். பாவம்.
அடுத்த இரண்டு நாளில் இவர் புதுக்கோட்டைக்குக் கிளம்பினார். பாட்டி அவள் இங்கே இருக்கட்டும். நல்ல சாப்பாடே சாப்பிடுவது இல்லை போலிருக்கே.என்னடா பாத்துக்கறே அவளை என்று செல்லமாக அதட்டினார். அவள் சாப்பிடுவதே இல்லை ஆஜி. நான் எப்ப வேலையை முடிந்து வருகிறேனோ அதுவரை பட்டினிதான் என்று சிரித்தவண்ணம் சொன்னவரை.,
எல்லாம் தெரியும்டா இப்போதைக்கு ஐந்து மாதத்துக்கு உண்டான பூச்சூட்டல்,புடவை வாங்கிச் செய்யவேண்டியதைச் செய்து அவள் பாட்டியோட அனுப்புகிறேன் என்றார்,. அடுத்த வாரம் வரட்டுமா. நானே கார் கொண்டுவந்து கூட்டிப் போகிறேன் என்ற பதில் வந்தது. ம்ஹூம் சொன்ன பேச்சைக் கேளு. கிளம்பற வழியைப் பாரு. அவளை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். உங்க அப்பா வீட்டுக்கு வந்துடட்டும். அப்புறம் பார்க்கலாம் என்றதும் இவர் முகம் போன போக்கைப் பார்க்கவேண்டும்.
மாடியில் அறையில் அவரது பெட்டியை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு இறங்குபவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. என்னம்மா நான் இல்லாமல் இங்க தைரியமா இருப்பியா என்று கேட்டார். ம்ம்ம் இருப்பேன். நீங்க பத்திரம் என்றவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தினார். என்ன அம்மா பாடு ஜாலி போல இருக்கே. சமைக்க வேண்டாம். ஊஞ்சலாடலாம். பாட்டி வீட்டுக்குப் போகலாம்னு நினைப்பா.
.....சரி சரி இரு. நாந்தான் வருவேன். யாரோடயும் நீ கிளம்பவேண்டாம் என்று புறப்பட்டார். டாக்சி வந்து ஏறிச் செல்பவரைப் பார்த்து எனக்கே கஷ்டமாக இருந்தது,. அதற்குள் தாத்தா வாசலுக்கு வந்து புருஷா ஊருக்குப் போகும்போது கண்கலங்கக் கூடாது உள்ள போ என்று அதட்டும் குரல் கேட்டது. அவசரமாக நகர்ந்து ஊஞ்சல் கூடத்துக்கு வந்துவிட்டேன்.
ஒரு வாரத்தில் மாமாவும் வீட்டுக்கு வந்துவிட்டார். பாரிஜாதத்துக்கு என்று தனியாகத் தறி போடுபவர் முத்துச் செட்டியார். அவரிடம் சொல்லி கறுப்புக் கலந்த நீலப் புடவை அழகான நட்சத்திரங்கள் பதித்த புடவை சொல்லி அவரும் கொண்டு வந்து கொடுத்தார். ஒரு நல்ல நாள் பார்த்து புரசவாக்கத்துக்குத் தொலைபேசிப் பாட்டியிடம் செய்தி சொன்னார் மாமியார்.
பாட்டியும் நல்ல திரட்டுப் பால் கிளறி மாமாவிடம் அனுப்பினார். சுலபமாக அந்த வீட்டுப் பெண்கள் பத்துப் பேரை அழைத்து ஒரு நாள் சாயந்திரம் அந்தப் புடவையைக் கட்டிக் கொண்டு கோவிலும் போய் வந்தாச்சு,. அதற்குள் புதுக்கோட்டையிலிருந்து நான்கு தடவை ஃபோன் வந்தாச்சு. இன்னும் கிளம்பவில்லையா. சிநேகிதனோட திருமணம் இந்த மாதக் கடைசியில் வருகிறது. நான் வரப் போகிறேன். என்னோட திரும்பி வந்துவிடு என்றார்.
நாங்கள் தனியாக இருக்கிறோம் என்ற நினைப்பில் நான் ஏதோ கேட்க அவர் ஏதோ சொல்ல , பின்னால் ம்க்கூம் என்ற மாமாவின் கனைப்புக் குரலில் நான் விழித்துக் கொண்டேன். தேவ் சாப் பேசி முடிச்சுட்டாரா. இல்ல நீ ஃபோன் வழியாகவே ஊருக்குப் போகிறாயா என்றார். ஒரே கூச்சமாகி விட்டது.
ஒரு வழியாகத் தோழனின் திருமண நாளுக்கு முதல் நாள் வந்தார். நாளை சாயந்திரம் ரயில் டிக்கட் வாங்கி வந்தாச்சு. உனக்குப் பட்டுப் புடவை கூடக் கொண்டுவந்திருக்கிறேன். என்று எங்கள் திருமணப் புடவையை எடுத்துக் காட்டினார்.
எத்தனை முன்னேற்பாடு என்று சிரிப்பே வந்தது. அப்புறம் அடுத்த நாள் கிளம்பி புதுக்கோட்டை வந்து இரண்டு வாரங்களில் சேலத்துக்குக் கிளம்பினோம்.

Subscribe to:
Posts (Atom)