Tuesday, March 17, 2015

துபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January
காலையில் கொஞ்சம் வெயில் வந்ததும்  நடக்கப் போவது எஜமானருக்கு
வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,.
இன்று 12 மணி ஆகிவிட்டது. இன்னும் காணவில்லையே
என்று பாலகனிக்கும் உள்ளுக்கும் நடந்து கொண்டிருந்தேன்.
சாப்பிடும் நேரமும் வந்ததால் சங்கடமாக இருந்தது.
வாசல் மணி சத்தம் கேட்டு விரைந்து திறந்தேன்.
என்னப்பா இவ்வளவு நேரம் னு கேட்க
 இரு இரு என்று தண்ணீர் குடித்துவிட்டு
நடந்ததைச் சொன்னார்.
கராமா வரை நடந்து விட்டு திரும்பி வருவது பஸ்ஸில் வந்து விடுவார். அதற்கான பாஸும் உண்டு.
இன்றைய பஸ்ஸீல் அந்த ஸ்வைப்பிங் மெஷின் வேலை செய்யவில்லையாம்.
வண்டி ஓட்டுபவரும்,இறங்கும் வழியில் இருக்கும் மெஷினில் அட்டையைத் தேய்க்கலாம் என்றதும் இவரும் தேய்த்திருக்கிறார்.
அந்தநேரம் பார்த்து செக்கிங் அதிகாரிகள் பஸ்ஸில் ஏறி எல்லோருடைய பாஸ்களையும் பார்த்துவிட்டு இவரிடம் வந்திருக்கிறார்கள்.
உடனே கீழே இறங்கச் சொல்லி இருக்கிறார்கள். 250 திரம் கட்டவேண்டும். நீங்கள் இறங்கும் ஸ்டேஷன் தாண்டியாகிவிட்டது.
இதற்கு அபராதம் கட்டவேண்டும் என்றதும் இவருக்கு புரியவில்லை.
நான் போகவேண்டிய இடம் இரண்டு ஸ்டாப்புக்கு அப்புறந்தான் என்றதும்
உங்கள் ஐடி ஏதாவது இருந்தால் காட்டலாம் என்று, சொன்னதும் இவர் தன் ட்ரைவிங் லைசென்சைக் காட்டி இருக்கிறார்.
1940 பார்ன்? ஓகே சார். இனிமேல் கார்ட் ஸ்வைப் செய்யும்போது பச்சை விளக்கு வருகிறதா என்று பாருங்கள்.
மெஷின் செய்த தவறுக்கு நாங்கள் வருத்தப் படுகிறோம் என்று சொல்லி விட்டார்களாம்.
அடுத்தாற்போல் வந்த 44 ஆம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து  வீட்டுக்கு வந்திருக்கிறார்.
  மகன் அதற்குள் ஃபோன். அப்பா வரலியா இன்னும் என்று.
நீ இனிமேல் மொபைல் எடுக்காமல் வெளியில் போனால் அப்புறம் எனக்கு ரொம்பக் கோபம் வருப்பா 
என்று வீட்டுக்கே வந்து விட்டான்.
எப்பவும் க்ரெடிட் கார்ட் தான் வைத்திருப்பார்.30 திரம் ,அதற்கு மேல் எல்லாம் எடுத்துப் போவதில்லை.
கேட்டதிலிருந்து மனம் சங்கடப் பட்டது.
சரி இதுவும் ஒரு பாடம். இத்தோடு விட்டார்களே  என்று நன்றியோடு நினைத்துக் கொண்டேன்,..


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

30 comments:

Geetha Sambasivam said...

நல்ல வேளைதான் போங்க. இனிமேல் கையில் கூடப்பணம் வைச்சுக்கணும். இல்லைனா க்ரெடிட் கார்ட் கையிலே இருக்கணும். வெளிநாடுகளில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் இம்மாதிரி நிலை தர்மசங்கடமே! :(

ராமலக்ஷ்மி said...

நல்லபடியாக சமாளித்துத் திரும்பியதில் நிம்மதி. தங்கள் பகிர்வு எல்லோருக்கும் பாடமே.

அப்பாதுரை said...

நல்லதா போச்சு.

(பக்கத்து ஊர்ல தான் இருக்கீங்களா?)

sury siva said...

சிங்கம் சிங்கிள் ஆகத்தான் வரும் அப்படின்னு ரஜினி சொன்னாரு.
இங்கன, சிங்கம் சிங்கிளாவே நின்னு எல்லாத்தையும் சமாளிச்சு ஸ்மார்ட்டா திரும்பி வந்திருக்காரே !!

சபாஷ் !

எதுக்கும் வெளிலே செல்லும்பொழுது ஒரு 200 அது என்ன தினார் ஆ ரியால் ஆ எடுத்துகினு போங்க...
செல்லும் செல்லும்பொழுதெல்லாம் எடுத்துண்டு போங்க.

பக்கத்துலே தான் என் மவனும் இருக்காரு.... ஒரு ஃபோன் போட்டீகன்னா ஓடி வந்துடுவாரு.

சுப்பு தாத்தா

RAMA RAVI (RAMVI) said...

நல்ல வேளை. சற்று கவலையான அனுபவம்தான். செல் போன் கொண்டு போவது நல்லது.

மாதேவி said...

நல்லது நடந்ததில் நிம்மதி ஆகிவிட்டது.

ஹுஸைனம்மா said...

வெளியே போகும்போது மொபைல் ஃபோன் அவசியம். கூடவே, மகனின் விஸிட்டிங் கார்ட் ஒண்ணும்! :-)))

வை.கோபாலகிருஷ்ணன் said...

கேட்கவே பாவமாக வருத்தமாகத்தான் உள்ளது. வெளிநாட்டில் போய் இப்ப்டி என்றால் இன்னும் கஷ்டம் தான். வீட்டில் உள்ள நமக்கும் பிள்ளைக்கும் விசாரம் தான். டென்ஷன் தான்.

அங்குள்ளவர்கள் ஓரளவு எல்லோருமே நல்லவர்களாகவும், பெருந்தன்மை கொண்டவர்களாகவுமே இருக்கிறார்கள்.

//கராமா வரை நடந்து விட்டு திரும்பி வருவது பஸ்ஸில் வந்து விடுவார்.//

நான் இதே கராமா செண்டரில் தான் 45 நாட்கள் தங்கியிருந்தேன். எவ்வளவு அழகான நிம்மதியான பகுதி. சூப்பரோ சூப்பர்.

அந்தக்கட்டடம் முழுவதுமே ஏ.ஸி.யுடன் ஜில்லென்று தான் இருக்கும். சுற்றிலும் நிறைய கடைகள் இருக்கும்.

அதற்குள்ளேயே அழகாக வாக்கிங் போக விஸ்தாரமான இடமும், ஏராளமான கடைகளுமாக ம்னதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

ஸ்ரீராம். said...

கையில் போதுமான அளவு பணம் எடுத்துப் போவதும் அதை விட அலைபேசி எடுத்துப் போவதும் மிக அவசியம் என்று எஜமானரிடம் அன்புடன் சொல்லுங்கள். :))) டென்ஷனான கணங்கள் புரிகிறது. நல்லபடியாக சமாளித்து வந்தது சந்தோஷம்.

வடுவூர் குமார் said...

கராமா என்று படித்த போது வியாழன்/வெள்ளி ஒரு சில மணி நேரம் அந்த பூங்காவில் உட்கார்ந்து குழந்தைகள் விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.

சாந்தி மாரியப்பன் said...

பத்திரமாத் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி. மொபைலைக் கையில் கொண்டு போயிருக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா.
க்ரெடிட் கார்ட் எப்பவும் வைத்திருப்பார்.பாஸ் வைத்திருப்ப்பதாலும்,பொழுது போகாததாலும்
வெளியில் ஒலவப் போவது வழக்கம்.அப்படியே காப்பிப்பொடியோ ஸ்வாமிக்குப் பூவோ வாங்கி வருவார்.

இந்த அதிகாரிகள் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்
அதை நினைத்துதான் எனக்கு வருத்தமாகி விட்டது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். ராமலக்ஷ்மி.
மெஷினில் கோளாறு என்றால் இவர் என்ன செய்யமுடியும். நானாக இருந்தால்
என்ன செய்திருப்பேன் என்று யோசிக்கிறேன். டாக்சி பிடித்துவீடு வந்திருப்பேன்.
போலீஸ் ட்ரஸ் பார்த்த அதிர்ச்சியில் ப்ரஷர் ஏறி
இருக்கும்.:) இவர் கூலாகச் சமாளித்துவிட்டார்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துரை நல்லதாப் போச்சு.
பக்கத்து ஊர்தான். துபாய்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுப்பு சார்.முன்பெல்லாம் விர்ரென்று கோபம் வரும்.
இப்ப எல்லாம் எனக்கு அமைதி சொல்லித்தருகிறார். அய்யாவுக்குச் சமாளிக்கச் சொல்லியே
தரவேண்டாம். என் பக்கம் நியாயம் இருக்கு நான் ஏன் பயப்படணும் என்பார்.
வந்தவர்கள் நல்லவர்களாகப் போனதால் இத்தோடு போச்சு.
உங்க மகனார் தொலைபேசி எண் இருந்தால் நானே கூப்பிடுவேனே.:)
இனிமே பணமில்லாமல் வெளியே போக மாட்டார்!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமா,கவலைதான்.
என்ன செய்யலாம். நம்ம ஊராயிருந்தால் பயப்பட மாட்டேன்.
பகவான் எப்பவும் பக்கத்தில் இருக்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி எல்லாம் நல்லதுக்கே.

வல்லிசிம்ஹன் said...

ஓ அதெல்லாம் வைத்திருக்கிறார். தானே சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையே.:)
என்னைவிட அவர் இன்னும் அலெர்டாக இருப்பார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோபு சார், 2004க்குப் பிறகு வரவில்லையா.
நிறையச் மாறிவிட்டது துபாய். ஜனசமுத்திரம் அலை மோதுகிறது.
இப்பொழுது குளிர்காலத்தை அத்தனை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.
ஏகப்பட்ட மால்கள். அது நிறைய.எல்லா நாட்டு மக்கள்.
கீச் கீச் ஃபிலிப்பினோஸ். இண்டோனெஷியன் உழைப்பாளிகள்.
ஆங்கில துரைகள். அவர்களுடைய ரோல்ஸ் ராய்ஸ்கள்,லாண்ட்ரோவர்கள்.

பெரிய பூதாகாரமான கார்கள். சிறிய ரோடுகள். ட்ராஃபிக் ஜாம்.
பெரிய ரோடுகளில் வேகமாக விரையும் பயமுறுத்தும் வாகனங்கள்.
விண்ணைமுட்டும் கோபுரங்கள்.
செலவழிக்க ரெடியாகப் பணம் படைத்த மக்கள். இது நான் கண்ட ஒரு முகம். இதில்ல்லாமல்
நடுத்தர மார்க்கெட்டில் சிறிய வகைப் பொருட்களை வாங்கி மகிழ்ந்து கோவிலுக்குச் செல்பவர்கள்.
இப்போது சிங்கம் சார் அனுபவித்த தொந்தரவு,இயந்திரக் கோளாறால் வந்தது.

இந்த நேரத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் வந்ததால் தொந்தரவு.
எனக்குக் கவலைப் பட வேண்டிய நேரம் . பட்டாச்சு. தீர்ந்தது.
நன்றி கோபு சார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,அவருக்கு கைபேசி எடுத்துச் செல்வது பிடிக்காது.:)
எனக்குப் பழகிவிட்டாலும் கவலைப்பட ரெடியாக இருப்பேன்!!

பெரியவன் கேப்பான் ரொம்ப டல்லா இருக்கியே.
கவலைப் பட ஒண்ணும் கிடைக்கலியா என்று கேலி செய்வான்.

நேற்றிலிருந்து பணம் எடுத்துப் பர்சில் வைத்தாச்சு.:)


வல்லிசிம்ஹன் said...

வரணும் குமார்.
பல கட்டிடங்களையும் பார்க்கும் போது உங்களையும் அபி அப்பாவையும் நினைத்துக் கொள்வேன். கராமா பார்க் வெகு பசுமையாக இருக்கிறது.
நிறைய குருவிகள். ரம்யமாக இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

அதே அதே சபாபதே சாரல். நேரத்துக்கு வீட்டுக்கு வரணும் எங்கே போனாலும்.
.:)

ADHI VENKAT said...

சிங்கம் சார் சமாளித்து வீடு வந்து சேர்ந்தது குறித்து நிம்மதி. பணம் எப்போதும் கையில் இருக்கட்டும்...

வல்லிசிம்ஹன் said...

thanks Adhi. Sorry for commenting in english.

வெங்கட் நாகராஜ் said...

அடடா...

இராஜராஜேஸ்வரி said...

சரி இதுவும் ஒரு பாடம்.

இத்தோடு விட்டார்களே ....

ஸ்ரீராம். said...

மறுபடியும் படித்தேன்! :)))

திண்டுக்கல் தனபாலன் said...

"அப்பாடா..." என்றாகி விட்டது...

Geetha Sambasivam said...

மீள் பதிவா? மீண்டும் படிக்கச் சுவையாகத் தான் இருக்கிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

இதுவும் ஒரு பாடம்தான் சகோதரியாரே