Wikipedia

Search results

Thursday, March 12, 2015

லண்டனைச் சுற்றிப் பார்க்கப் போனேன்..

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


எங்க போனாலும் உன்னை விட மாட்டேன்னு சொல்வது இந்திய குணம் போல. நேற்று நாங்கள்
லண்டன் தெருக்களில் மிதமான குளிரில் அலைவது மற்ற நாட்களாக இருந்தால்  இனிமையாக இருந்திருக்கும்.  இதுவரை பார்த்திராத லண்டன் ஐ,பிக் பென்,வெஸ்ட் மினிஸ்டெர் ஆபி,செயிண்ட் பால்ஸ் கதீட்ரல்   எல்லாவற்றையும் பஸ் ,டாக்சி என்று அலைந்து இந்திய ஹை கமிஷன் போக வேண்டி வந்தது.


காரணம் திடும் என்று வந்த மெயில் உங்களை  பாஸ்போர்ட் வெரிவஃபிகேஷனுக்காகப் பார்க்க வந்த போது நீங்கள் இல்லை. அருகாமையில் இருக்கும் இந்தியன் ஹை கமிஷனிடம் நேரில் சென்று நீங்கள்தான் ரேவதி என்று நிரூபிக்கவும் என்று மகனுக்கு மெயில்.
அண்மையில் இந்தியா சென்றபோது பார்த்திருக்கிறான். உடனே அண்ணனுக்கு  மெயில் தட்டி,தொலைபேசி விஷயம் சொன்னால் உடனே கிளம்ப முடிகிறதா. அலுவலகத்துக்கு ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு ரயில் பிடித்து லண்டன் விக்டோரியா வந்தோம். கையில் கூகீள் ஃபோன் அதில் விவரம் கண்டு பிடித்துப் போன இடம் நேரு செண்டர். அவர்கள் கதவைக் கூடத் திறக்கவில்லை.
நாங்கள் அவர்கள் இல்லை இன்னும் 20 நிமிட தூரத்தில் ஏதோ ஒரு சாலை பெயர் சொல்லி அங்கே போகவும் என்று ஸ்பீக்கர் வழியாகச் சொல்லி விட்டார்கள். எனக்கோ கால்  கெஞ்ச ஆரம்பித்தது.
பையனுக்குக் கஷ்டமாகிவிட்டது. அம்மா நம்ம டாக்சியில் போயிடலாம் .அவரு க்குச் சரியாகத்தெரிந்திருக்கும் என்று   ஹீர்க்யுள் பைரோ   வருகிற  புகழ்பெற்ற லண்டன்  டாக்சியில் முதல் தடவையாக ஏஏஏறினேன். இதுவரை பயணித்தது சாதாரண ரேஞ்ச்ரோவர்,இல்லாவிட்டால்  பியூஜோ என்ற  வகை வண்டிகள்.
இது  கால்களை வலி தீர நீட்ட முடிந்தது. சுகமான 15 நிமிடப் பயணத்தில் எக்சக்த்லி ஹைகமிஷன் முன்பு நிறுத்திவிட்டார்  17 பவுண்டைத்தூகி அவர்  தட்டில் வைத்துவிட்டு நன்றி சொல்லி உ ள்ளே   நுழையப் போனோம்.

வந்தார் செக்யுரிட்டி. என்ன விஷயம்.
இது போல எங்களுக்கு மெயில் வந்தது. என்றதும்  இது போலக் கேள்விப் பட்டதே இல்லை. அந்த மெயிலைக் கண்பிக்கமுடியுமா   என்றார். அந்த சமயத்தில் கரெக்டாகத் தம்பி கைபேசியில் சார்ஜ் தீர ,,,,,,,,, அவர் என்னை
உட்காரச்    சொல்லி அன்புடன் அமரச் செய்தார்.
எதற்கு இத்தனை கஷ்டம்.
 2011இல் நானும் இவரும்    பாஸ்போர்ட்  புதுப்பித்தோம்.
அப்பச் செய்யாத வெரிபிகேஷன்   இப்பச் செய்ய வேணும்னால் கேவலமாக
இருந்தது.
அதற்குப் பிறகு நான்கு தடவை இந்தியாவை விட்டு  வெளியே   போய் வந்தாச்சு.

பையனும் வேறு ஏதோ  இடத்தில்  சார்ஜ் செய்து,மெயிலை எடுக்கப் பார்த்தால் ,யாஹு   ஒத்துழைக்கவில்லை.
அவர்கள் இடமிருந்து ஒரு   பாரம்  வாங்கிக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று அலுவலகம் சென்ற  பிறகு    அந்த  பிரிண்ட்  எடுத்து  அங்கே கொண்டுபோய்க் கொடுக்கவேண்டும்.

இந்த ஊரிலோ    சீ ராக  இருந்தாலே விமான நிலையத்தில் நூறு  கேள்வி
கேட்பார்கள். அடுத்த ஞாயிறு  சுவிட்சர்லாந்த் கிளம்பணும் .லஸ் பிள்ளையாரைத்தான் நம்பி இருக்கேன் .

இங்கே கணினி எல்லாம் இன்னும் செட் அப் செய்யவில்லை.
நாம  துபாய்க்கே போயிடலாம்னு பேத்தி சொல்வது போல எனக்கும் இந்தியாவுக்கே  போயிடறேன் என்று சொல்லத்தோன்றுகிறது. >)*(
Add caption
Add caption

17 comments:

RAMA RAVI (RAMVI) said...

இதென்ன புதுசா கஷ்டம். 2011 ல் புதுப்பிச்சதுக்கா இப்ப வருவாங்க??இந்தியா இன்னும் முன்னேற வேண்டும். நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் ரேவதி மேடம். எல்லாம் நல்ல படியாக முடியும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிய சுற்றுலாவுக்கு வாழ்த்துகள்.

படங்களும் பதிவும் அருமை.

பாராட்டுக்கள்.

Geetha Sambasivam said...

எல்லாம் தானே சரியாயிடும், கவலைப்படாதீங்க.

Geetha Sambasivam said...

எல்லாம் தானே சரியாயிடும், கவலைப்படாதீங்க. என்னவோ போறாத நேரம். :(

Geetha Sambasivam said...

கல்கி தீபாவளி மலர் அட்டையைப் பார்த்தால் நா.பா. எழுதின "மணிபல்லவம்" நாவலின் இளங்குமரனும், அவர் சிநேகிதனின் தங்கை, பெயர் மறந்துவிட்டது. நாவல் முடிவில் இவளிடம் தான் தான் தோற்றதாக இளங்குமரன் சொல்வான். ம்ம்ம்ம்ம்? அந்தப் பெண் மாதிரியும் இருக்கு.

ஸ்ரீராம். said...

இதென்ன கொடுமை? மெயில் ஸ்பாம் ஆக இருக்குமோ? சீக்கிரம் நல்லபடி பிரச்னை முடியட்டும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ரமா. சரியாகப் போகணும். இத்தனைக்கும்
டிஜிடலைஸ்ட் பாஸ்போர்ட். கையில் வாங்கும்போது அவ்வளவு
தீர்மானமாகச் சொன்னார்கள். யாரும் திருடினால் கூட
உபயோகப் படுத்த முடியாதுன்னு..நாலு வருஷம் என்ன பண்ணாங்க.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வை கோ சார்.

வல்லிசிம்ஹன் said...

தாங்க்ஸ் கீதாமா. ஒரு நாள் விடாமல் ஏதாவது தொந்தரவு. இது புதுசு.
இங்க இருக்கிற ஹைகமிஷன்ல இந்த மாதிரிப் பிரச்சினையை
நாங்க சந்தித்ததே இல்லை என்கிறார்கள் நாளைக்கு
வோட்டர் ஐடி,பான் நம்பர் எல்லாம் கொடுக்கப் போறோம்.

எனக்குக் கூட அப்படித்தான் தோன்றியது. அட்டைப் படத்தைப் பார்த்தால்.
உள்ளே மணி பல்லவமும் வந்து கொண்டிருக்கிறது.
பி வி ஆர் தொடர்கதை. தி.ஜானகி ராமன் கதை கூட வந்திருக்கிறது

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.சின்னவன் இந்தியாவுக்கு நான் கு வனாட்கள் போய் வந்த போது இயது போஸ்டில் வந்திருக்கிறது. அதுவும் டிசம்பர் மாதம். இவன் பத்து நாட்களுக்கு முன் போனபோது மெயில்களை எல்லாம் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து விட்டான். நான் இங்கே இருப்பதால் லண்டன்லயே இந்தப் பிரச்சினையைச் சரிசெய்யலாம் என்று அண்ணாவுக்கு ஃபார்வர்ட் செய்து விட்டான்.
ஸ்விஸ் போனால் 4 மணி நேரப் பயணம் செய்தால் தான் ஜெனிவாவுக்குப் போகமுடியும். நேற்றிலிருந்து தலைவலி என்னை விடவில்லை.

இன்னம்பூரான் said...

அந்த அந்த இடத்தில் செய்யவேண்டியதை செய்யணும். உலகபுகழ் கறுப்புமூடி டாக்ஸியில் சவாரி எப்போதே செய்து இருக்கவேண்டும். அது செய்யாததினால் தான் இஹைக.வுக்கு கோபம் வந்துடுச்சு.

Joking apart, it is an unnecessary intrusion and that rudely and unbecoming. Do complain to the Foreign Secretary, a gentleman, known for his sense of perspective.

இன்னம்பூரான் said...

அந்த அந்த இடத்தில் செய்யவேண்டியதை செய்யணும். உலகபுகழ் கறுப்புமூடி டாக்ஸியில் சவாரி எப்போதே செய்து இருக்கவேண்டும். அது செய்யாததினால் தான் இஹைக.வுக்கு கோபம் வந்துடுச்சு.

Joking apart, it is an unnecessary intrusion and that rudely and unbecoming. Do complain to the Foreign Secretary, a gentleman, known for his sense of perspective.

திண்டுக்கல் தனபாலன் said...

அம்மா... எப்போ வாறீங்க...?

வல்லிசிம்ஹன் said...

Foreign secretary,!a poor INdian slave? Let me see. I sir thank you for so much concern. It's giving a headache to our son.they are nice people. Here. Hope to clear. By Monday.thank you SIr

துளசி கோபால் said...

அட ராமா! விடாது கருப்பாக இருக்கே:(

எல்லாம் சரி ஆகும்.கவலை வேணாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
என்னைவிட்டால் இன்றே வந்துவிடுவேன்.
இன்னும் ஆறு மாதங்கள் இருக்கு. அமெரிக்கன்,ஸ்விஸ் விசா எல்லாம் புதுப்பிக்கணும்
கடவுள் எண்ணப்படி நடக்கட்டும். இதுபோல் ஊழல்களைப் பார்க்கும்போது கோபம்தான் வருகிறது.

அடுத்த பதிவர் மா நாடு எப்போ எங்கே ண்ணூ கேக்கலாமா தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி மா. மன உளைச்சலுக்கான நேரம்.சரியானா சரிதான்.