அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் |
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கல்லூரி என்பது கதைகளில் ,திரைப்படங்களில் பார்த்து அறிந்ததுதான்.
அப்பொழுது விகடனில் சேவற்கொடியோன் எழுதிக்கொண்டிருந்தார். மணியன் எழுதிய இதய வீணையும் வந்து கொண்டிருந்தது.
பள்ளி மதிய உணவுக்கு அப்புறம் அந்தத் தொடர்களில் வரும் கதாநாயகிகள் போல எங்களுக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்களை,
(நுனி நாக்கு என்று பிறகு அறியப்பட்டது)
மாற்றிப்பேசப் பழகிக் கொள்ளுவோம்.:0)
எல்லாம் கல்லூரிக்குப் போக வேண்டிய அந்த நாளை நினைத்துத் தான்.!
திண்டுக்கல்லில் அப்போது கல்லூரிகள் இல்லை .
சென்னையோ,மதுரையோ ,திருச்சியோ போய்த்தான் படிக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை கல்லூரி என்பது கனவில் மட்டும் வரும் இடம் என்று தீர்மானமாகத் தெரியும். ஆனால் அதைச் சொல்லிக் கௌரவத்தை இழக்க முடியுமா. அநேகமாக ராணிமேரியில் படிக்கப் போவேன் என்று தோழிகளிடம் அலட்டிக் கொள்ளுவேன். ஏனெனில் கதைகளில் அந்தக் கல்லூரி அதிகமாக இடம் பெறும்.
தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களும் பெற்றாகிவிட்டது. எனக்குப் பிறகு தம்பிகள் இருவர். அவர்கள் கட்டாயம் கல்லூரிக்குப் போகவேண்டும். எனக்கும் பெரிய லட்சியம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
கயிறு இழுத்தால் நிற்கும் வண்டிமாடு....
அப்போது வந்தது அந்தக் கடிதம் .சென்னையில் இருக்கும் பாட்டி எழுதி இருந்தார். ''நம் வீட்டில் அவளாவது கல்லூரிக்குப் போய் பட்டம் வாங்கவேண்டும்.
இங்கே இருந்து படிக்கட்டும். பியூசி முடித்து நல்ல மதிப்பெண் வாங்கினால் பட்டப் படிப்பும் படிக்கட்டும்''
என்று தொடர்ந்தது அந்தக் கடிதம்.
கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாட்களே இருப்பதாகவும், உடனே புறப்பட்டு வரும்படியும் குறிப்பிட்டிருந்தார்.
பெற்றோர்களுக்குத் தர்மசங்கடம். பாட்டிவீடு என்பது விடுமுறைக்கு மட்டுமே போகும் இடம்.
அப்பாவுக்கு யாரையும் தொந்தரவு செய்வதோ, தன் சுய கௌரவத்தை விட்டுக் கொடுப்பதோ பிடிக்காது.
என்ன தோன்றியதோ கொஞ்ச நேரம் கடந்ததும் அப்பாவும் அம்மாவும் பேசி முடிவெடுத்துவிட்டனர் என்னை அனுப்புவது என்று.
அப்பாவுக்குக் கவலை.அம்மாவுக்குப் பெண் வீட்டைவிட்டுப் போவதை நினைத்து வருத்தம். சின்னத்தம்பி என் கூடவே இருந்தான். நிஜமாவே போகப் போறியா. கஷ்டமா இருக்காது உனக்கு என்றெல்லாம் கேள்வி.பெரிய தம்பிக்கு அவ்வளவாக மனம் திறந்து பேச முடியாது.
பதினாலு வயதில் என்ன தோன்றும்!
இப்போது போல பயணச்சீட்டு வாங்குவது அவ்வளவு சிரமமில்லை. அப்பாவின் அலுவலகமான(+வீடு)) தபால் ஆபீஸுக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கும் குதிரை வண்டி போகும் தூரம்தான்.:)
அம்மாவுக்கு ஒரு பை. எனக்கு ஒரு சின்ன தோல்பெட்டி. அந்த வருடம்தான் அந்தப் பெட்டிகூட வீட்டுக்கு வந்திருந்தது.
ஒரு ஆறு பாவாடைகள். அதற்கு மாட்சிங் ஜார்ஜெட் தாவணிகள், ஒரு கலப்படமான எல்லா வர்ணங்களும் பொருந்தும் படியான
ஆறு ஜாக்கெட்கள்.
போதுமா போதாதா கதையெல்லாம் செல்லாது. இவ்வளவுதான்:)
சரியாக மே (ஜூனா?) மாதம் 21 ஆம் தேதிச் சென்னை எழும்பூரில் இறங்கிப் புரசவாக்கம் வந்தாச்சு.
இனம் தெரியாத பயம்.சென்னை எதிராஜ் காலேஜ்!!!
. பாட்டி கரைத்துக் கொடுத்த ரசம்+ சாதம் சப்பிட்டு விட்டு நானும் அம்மாவும் கையில் , அப்ளிகேஷன் ஃபார்ம்,மார்க் ஷீட் சகிதம், மாமா கொண்டுவந்த பேபி டாக்ஸியில் ஏறி எதிராஜுக்கு வந்தோம்.
அங்கே பெரிய கியூ வரிசை எல்லாம் இல்லை.
பிரின்சிபல் மிஸ்.மாத்யூ.
ஒரு ஒன்பது கஜப்புடவை கட்டி ,பின்னின தலையை, ஒரு பின்னல் கொண்டையாகப் போட்டுக் கொண்டு,கையில் என் கையை இறுகப் பிடித்துக் கொண்ட என் அம்மாவும் ,அவ்வளவு பெரிய இடத்தை முதல் முறை பார்க்கும் நானும்,
ஒரு விசித்திரக் காட்சி கொடுத்து இருப்போம்.
அந்த நாள் வரை என் அம்மா எந்த ஒரு பள்ளிக்கூடத்துக்கும் வந்ததில்லை.
அவள் தன்னுள் பயந்தாளா தெரியாது. அறைக்குள் நாங்கள் வரிசைப் பிரகாரம் நுழைந்தபோது ஏற இறங்கப் பார்த்தார். ,ப்ரின்சிபால்.
இது என் பெண்.நல்ல பள்ளியில், மூன்றாவது ரான்க். வாங்கிப் பாஸ் செய்திருக்கிறாள்.
நாங்கள் திண்டுக்கல்லிருந்து வருகிறோம்.
இந்தக் கல்லூரியில் இவளைச் சேர்த்துக்கணும்.
இதைச் சொன்னது என் அம்மாவா என்று இப்பவும் யோசிக்கிறேன்.
எப்பவும் இரண்டு மூன்று வார்த்தைகளில் விஷயங்களைச் சொல்லிவிடும் அம்மா
மிஸ்.மாத்தியூ என் மதிப்பெண்களைப் பார்த்தார்.
அப்பா சொல்லியபடி நான் முதல் பாட்ச் எனப்படும் விஞ்ஞானத்தைக் கேட்டேன். கல்லூரியின் கடைசி அப்ப்ளிகேஷன் உன் கையில் இருக்கும்மா. உனக்கு
எஃப் குரூப் எனப்படும் ஆங்கிலம்,லாஜிக், இயற்கைவிஞ்ஞானம்தான் கொடுக்க முடியும்.
அதுவும் உன் ஆங்கில மதிப்பெண்களை வைத்துக் கொடுக்கிறேன், என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
அம்மாவுக்கு எனக்கு முதல் பிரிவு கிடைக்கவில்லை என்று புரிந்தாலும் ஏமாற்றத்தைக் காண்பித்துக் கொள்ளவில்லை. கல்லூரியில் இடம் கொடுத்ததற்கு நன்றி சொல்லி வெளியே வந்தோம்.
அங்கிருந்து இப்போதைய அண்ணா சாலையில் பதினாறாம் நம்பர் பஸ்ஸில் ஏறி புரசவாக்கம் லாடர்ஸ்கேட் நிறுத்தத்தில் இறங்கும் போது அம்மா சொன்னார். என்னாலும் காலேஜில் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று!!
அம்மாவுக்கு அப்போது வயது 35 தான்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அடுத்த வருடத்தில் தான் மாமியாராகப் போகிறோம் என்றும் நினைத்திருக்க மாட்டார். அதற்கடுத்த வருடம் பாட்டி ஆவோம் என்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். எல்லா நிலைமைகளையும் சமாளிக்கும் பக்குவம்,தைரியம் எல்லாம் நிறைந்த என் அம்மா. எத்தனையோ இன்னல்களைத் தாண்டி வந்து எங்களைக் காத்துப் பின் இறைவனடி ஏகினார்.
60 comments:
அப்பாடி, ஒரு வழியா நீங்க கிளம்பறதுக்குள்ளே பிடிச்சுட்டேன், கல்லூரிக்கு.
அது சரி, என்ன போட்டி, எங்கே போட்டி, எப்படி போட்டி? எதுக்கு போட்டி? யார் போட்டி? நமக்கு எந்தக் காட்டிலே எண்ணெய் மழைனு ஒண்ணும் புரியறதில்லை! :))))))))))))))))))))))))
எனக்கும் தெரியாது கீத்ஹா. இன்னிக்கு யதேச்சையா உஷாவின் நுனிப்புல்லுக்கூப் போஒனேன். பார்த்தா அங்க இருந்து எல்லாரும் இந்தப் போட்டிக்கு எழுதி இருக்கிறார்கள் என்று தெரிய வாந்தது. சரி நாமும் எழுதுவோம்னு ஒரு நிகழ்ச்சியைப்.
பதிவிட்டேன்..
இப்பத்தான் ராமலக்ஷ்மி மூலமாத் தெரிய வந்தது.
கடைசித் தேதி 20ஆம்.
ஸோ நோ போட்டிஃபார் மி:)
போட்டி அறிவிப்பு வந்து ரெம்ப நாள் ஆச்சு.. ம்ம்.. கதை நல்லா இருக்கு
எத்தனை இயல்பாக அந்தக் காலக் கட்டத்தை மனக்கண் முன் கொண்டு வந்திருக்கிறீர்கள். அருமை. முடிவாய் இந்த வரிகள்:
//என்னாலும் காலேஜில் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று!! அம்மாவுக்கு அப்போது வயது 35 தான்.//
அற்புதம் வல்லிம்மா.
//லாடர்ஸ்கேட் நிறுத்தத்தில் இறங்கும் போது அம்மா சொன்னார். என்னாலும் காலேஜில் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று!! அம்மாவுக்கு அப்போது வயது 35தான்.//
வல்லியம்மா.. இந்த வரிகளைப் படிக்கிறவரைக்கும் எனக்கு சாதாரணமாத்தான் இருந்தது..
இதைப் படிச்சவுடனே நம்ம அம்மாமார்கள்தான் எத்தனை தியாகிகள்.. தெய்வங்களன்னு தெரியுது.
ஒரு தலைமுறையே தன்னைக் கொடுத்து உங்களை வளர்த்து, பின்னே கடைசியா எங்களையும் ஆளாக்கியிருக்காங்க..!
வாழ்க பாட்டிமார்கள்..!
\\சின்னத்தம்பி என் கூடவே இருந்தான். நிஜமாவே போகப் போறியா. கஷ்டமா இருக்காது உனக்கு என்றெல்லாம் கேள்வி.பெரிய தம்பிக்கு அவ்வளவாக மனம் திறந்து பேச முடியாது.
பதினாலு வயதில் என்ன தோன்றும்!
\\
எனக்கு திடீர்ன்னு உடம்பு சரியில்லாம போனப்ப நான் கேட்டேன் அபி கிட்ட "உனக்கு என் கிட்ட என்ன வேண்டும்"ன்னு. அதுக்கு அவ சொன்னா "அப்பா என் தம்பி வேணும்"
//சரி நாமும் எழுதுவோம்னு ஒரு நிகழ்ச்சியைப் பதிவிட்டேன்..//
எப்படியோ ஏதோ ஒரு பொறி எப்போதும் நம்மை எழுதத் தூண்டுகிறதே, அதுதான் நமக்கு பெரிய பரிசு, இல்லையா வல்லிம்மா?
வல்லிம்மா என்ன நியாயம் இது ?ஆளாளுக்கு அழகழகா ...அருமை அருமையா கதை எழுதிட்டு இருக்கீங்க,எங்க மழை பெய்யுதுன்னு எங்களுக்கும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல?மத்தபடி உங்க கதை சும்மா கோடைல பெய்த சாரலாட்டம் குளு குளுன்னு இருக்கு .
அந்த காலத்தை கண் முன்னால் கொண்டு வந்திட்டீங்கம்மா.. :)
//என்னாலும் காலேஜில் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ///
மனதில் ஆழ ஊறிக்கிடந்த விருப்பம்தான் அத்தனை தைரியம் கொடுத்து கல்லூரி சென்று பிரின்சிபாலிடம் பேசி உங்களை கல்லூரியில் உக்கார வைக்க உற்சாகம் கொடுத்திருக்கவேண்டும்!
தொடருங்கள் அம்மா...!
ரொம்ப நல்லா இருக்குங்க....
உங்க அம்மா சொன்னதை கேட்ட போது உண்மையிலே கஷ்டமா இருந்துச்சு...
ம்ம்ம்ம்ம்
ஆகா..வல்லிம்மா..உண்மையில் சூப்பரு ;)
எனக்கு இன்னும் கதையான்னு சந்தேகமாவே இருக்கு!!
@தலைவி
கேள்வி எல்லாம் கேட்டது போதும் சீக்கிரம் நீங்களும் எழுதுங்கள் ;)
வாங்க நசரேயன்,
தமிழ்மணம் தவிர வேறு வலைத்தளத்துக்குப் போவது வழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும். அப்போது இந்த மாதிரி தளங்களும் இருப்பது தெரிய வரும்:)
இது வெறும் சுய சரித்திரம். அதனால் உயர்தரப் ப்பட்டியலுக்குப் போகுமா என்று கூடத் தெரியாது.நன்றிப்பா.
ஆமாம் ராமலக்ஷ்மி, அப்பா திண்டுக்கல்லில் இருந்து அந்த இரண்டு நாட்களும் என் தம்பிகளுக்குச் சமைத்துப் போட்டுப் பார்த்துக் கொள்ள , அம்மா என்னுடன் வந்தார்.
அத்தனை அறிவாளி.
தினசரி ஆங்கிலப் பத்திரிகையில் அத்தனை பக்கங்களையும் படித்துவிட்டு எங்களுடனும் அவ்வப்போது பகிர்ந்து கொள்வார். அடக்கம்.அதுதான் அம்மா.:)
வாங்கப்பா உண்மைத்தமிழன். நீங்களும் திண்டுக்கல்லில் படித்தீர்கள் இல்லையா. அப்போது கல்லூரிகள் வந்து இருக்கும்.
பெரியவர்கள் எங்கள் அம்மா வரிசையில் அத்தனை பேரையும் சேர்த்து சொல்கிறேன், வேறு எது ஒன்றுக்கும் மனதை ஈடுபடுத்தாமல் குடும்பம் ஒன்றையே பார்த்தார்கள். அது அந்தக் காலம். நான் அம்மாவாகும் போது கொஞ்சம் மாறியது. இப்போது இன்னும் மாறி இருக்கிறது.
இதில் சோகம் என்ன என்றால் உண்மையில் அம்மாவைச் சேர்த்திருந்தால் அவள் முதல் வகுப்பில் தேறியிருப்பாள்.உழைப்புக்கு அஞ்சாத பெண்மணி.
அபி அப்பா,
அபி மாதிரியான குழந்தைகளைப் பார்ப்பது அபூர்வம். அவள் பேருக்கேத்த அறிவும் அன்பும் நிறைந்த குழந்தை. நீங்களும் ,மனைவியும் குழந்தைகளும் சௌக்கியமாக இருக்க வேண்டும். நன்றிப்பா.
காட்டயம் ராமலக்ஷ்மி.
முதல் நன்றி எனக்கு முன் எழுதியவர்களுக்கு. அதில் நீங்கள் தான் இன்ஸ்பிரேஷன். என்னமா கவிதை எழுதி இருக்கிறீர்கள்.
ரொம்ப ரொம்ப நன்றிம்மா.
வரணும்பா மிஸஸ்.டவுட். எனக்கே நேத்திக்குதான் தெரியும்பா. இப்படி ஒரு வலைத்தளம் இரூப்பதும் தெரியாது. யாரோ அதைச் சொன்னபோது கூட எழுதணும்னு நினைக்கவில்லை. பிறகு உஷாவின் தளத்திலிருந்து நூல் பிடித்துப் போன போதூ இவ்வளவு நட்புகளும் எழுதி இருந்தது தெரிந்தது. படித்துப் பார்த்ததும் நாமும் ஒரு பிட் போட்டு வைக்கலாமே என்று நினைத்து எழுதிவிட்டேன். அப்புறம்தன் தெரிந்தது முடிவு தேதி20 என்று. இனிமேல் சங்கமம் மாதிரி எல்லா வலைப்பூக்களுக்கும் விசிட் பண்ணுங்கோ. உங்களாஇ மாதிரிச் சின்னவர்கள் இன்னும் உற்சாகத்தோடு எழுதலாம் இல்லையா.
நன்றிம்மா.
//உண்மையில் அம்மாவைச் சேர்த்திருந்தால் அவள் முதல் வகுப்பில் தேறியிருப்பாள்.உழைப்புக்கு அஞ்சாத பெண்மணி.//
உண்மை அம்மா. எத்தனை பேர் ஏட்டுப் படிப்பே இன்றி வெகு சாமர்த்தியமாக பெரிய குடும்பங்களை கட்டுக் கோப்பாக நடத்தி சென்றிருக்கிறார்கள்...
இயல்பான நடையில் நெகிழ்வாக எழுதியிருக்கிறீர்கள்.
வாங்கம்மா தமிழ் பிரியன். 1964 .அந்த வருஷம், எங்க மாமா, தங்கள் வீட்டுப் பெண் முன்னேற வேண்டும் என்று முயற்சி எடுத்து,எங்கள் பாட்டியையும் சம்மதிக்க வைத்தார்.
அப்பாவும் ஒத்துக் கொண்டதுதான் அதிசயம்.
நன்றிம்மா.
ஆயில்யன் வாங்கம்மா.
சரியாகச் சொன்னீர்கள்.
உள்ளே இருந்த கல்வி ஆர்வம். வெளி மனிதர்களிடம் அவ்வளவாகப் பேசி அறியாத என் அம்மாவைப் பேச வைத்தது.
பாசத்துக்கு அவ்வளவு சக்தி.
வரணும் சிவா.
அம்மா ஒரு வற்றாத நதி. அவளை நினைத்துக் கொண்டால் இன்னும் எத்தனையோ எழுதலாம்.
நான் ஏதோ கொஞ்சமாவது பொறுமையாக இருக்கிறேன் என்றால் அதற்கு அவள் தான் காரணம்.
நன்றிம்மா.
வாங்கப்பா கோபிநாத்.. கதையில்லையே!!
நடந்ததுதான் மா.
கீதா !! எழுதுங்க . பையன் சொல்லியாச்சு.
எல்லோரும் எழுதினால் தானே அனுபவங்கள் வரும் சந்த்திக்கு உரம். எழுதுங்கப்பா.
மிஸஸ். டவுட், கீதா, காலையில் பின்னாத்தல் சுரேஷ் எழுதிப் போட்டிருந்ததைப் பார்த்துதான்
எனக்கும் தெரிந்தது, பிறகுதான் வேகமாய் எழுதி போட்டேன். நாட் மனசுல முன்னாடியே
இருந்தது.
வல்லி, இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். எல்லா அம்மாக்களுக்கும் இந்த குறை இருக்கு :-)
//கயிறு இழுத்தால் நிற்கும் வண்டிமாடு//
எவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் வல்லி!!!!
நாமெல்லாம் அப்போது அப்படித்தான் இருந்திருக்கிறோம்.
நீங்கள் சொல்லிய வலைத்தளம் நானும் பார்க்கவில்லை. சொன்னாமாதிரி நிறைய தளங்கள் சென்று மேய வேண்டும். இருக்கும் கொஞ்சநேரத்தில் நம்மால் முடிவதில்லை. காலம் தாழ்ந்தாலும் நானும் வருகிறேன்.
உங்க அம்மாவுக்கும் உங்களோடு சேர்த்து அட்மிஷன் வாங்கியிருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும். எத்தனை அம்மாக்கள் தங்கள் தனித்திறமைகளையெல்லாம் மறைத்துக் கொண்டு குடும்பம்,குழந்தைகள் என்று வாழ்ந்திருக்கிறார்கள்!!!!
வாங்க கவிநயா.
அம்ம்மாவுக்கு ஏட்டுப்படிப்பும் இருந்தது. இப்போய்த்ஹூ ஏக்க்மோர்ரில் ஈருக்கும் ப்ரசண்ட்டேஷன் கான்வ்வெண்டில ஃபோர்த் ஃஃபார்ர்ம், அதாவது ஒன்பதாவது வகுப்பூ வ்வரை படித்திருக்கிறார்கள். திருமணம்ம் கூடி வரவே படிப்பை நிறுத்தி விட்டார்கள்.
அந்தப் பள்ளி நிர்ர்வாகி வீட்டுக்கூ வந்து தாத்தாவிடம் கேட்டுக் கொண்டாராம். புஷ்பாவைப் பள்ளிக்கூட்டத்துக்கு அனுப்ப்புங்கன்னூ.
அம்மா இதைச் ச்ச்ல்லவில்லை என்னிட்டம். என்ன் மாமாக்கள் சொல்லித்தான் தெரியும்:)
நன்றிம்மா.
உஷா.....நீங்க சரியாச் சொல்லிட்ட்டீங்க.
எப்பவும் அம்மான்னு ஆரம்பிச்சுட்டேனென்ற்றால் நிறுத்துவது எனக்குக்கஷ்டம். :)அதனால் நானே என்னை ஸ்டாப்!!னு சொல்லீடுவேன்.:)
ஆஹா நானானி வாங்கப்பா.
இப்போது இருக்கும் குழந்தைகளுக்கு அது புரிவதில்லை.எப்படிம்மா அப்படிப் பேசுவே. உனக்குனு அபிப்பிராயம் வேண்டாமா''என்று ஆரம்பிப்பார்க்கள். நம்மைவிடநம் முன்னோர்கள் பாடு இன்னும் சிரமம்.
கட்டாயம் எல்லா தளங்களையும் விசிட் செய்யுங்கள்.இந்த வயசில நாம் சாதிக்க வேண்டாமா!!
பதிவு நல்லா இருக்கு.
//என்னாலும் காலேஜில் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று//
படிக்கவில்லை.வேலைக்கு போகவில்லை.அதனால் நிறைய குழந்தைகளை பெற்று நன்றாக வளர்க்க முடிந்தது.
ஒரு வித மிடில் கிளாஸ்த்தனத்தை நாம் அனுபவத்தோம்.இப்போது
நம் குழந்தைகள் higher middle class.
வேலைக்குப் போய் இருந்தால் நம்மில் பலர் பிறந்தே இருக்க மாட்டோம்.
ஓன்றை இழந்துதான் ஒன்றைப் பெற
வேண்டும்.
இப்போது ரிவர்ஸ்.
அடுத்து அந்த போட்டோ:-
தாவணி அணிந்த பெண்கள் இடது கையில் புத்தங்களை டிபன் பாக்ஸோடு வைத்து மார்போடு அணைத்துச் செல்லும் காட்சி நினைவு வருகிறது.
முன் பக்கம் பின்னலை விட்டு (அது ஸ்டைல்).வட் இந்திய பெண்கள் சிலர்
சூடிதார் அணிந்து வருவார்கள்.புடவை
அணிந்தால் மாமி.
தாவணி அணிந்த பெண்கள் இடது கையில் புத்தங்களை டிபன் பாக்ஸோடு வைத்து மார்போடு அணைத்துச் செல்லும் காட்சி நினைவு வருகிறது. //
இது சூப்பர் கொசுவர்த்தி!!
பாட்டி கொடுக்கும் 30 பைசாவில் கல்லூரிக்குப் போய் வந்த காலம்.
பாடனி,சுவாலஜி ரெகார்ட் புத்தகங்களின் சுமை கைகளை இழுக்கும்.
எல்லாவற்றிலும் சந்தோஷத்தை அன்பவித்த நேரம்.
உண்மைதான் நாம் மிட்டில் க்ளாஸ் என்றால் நம் குழந்தைகள் மேலே ஒரு படி ஏற ,நாம் வீட்டில் இருக்க வேண்டி வந்தது.
எனக்கு அந்த விஷயத்தில் வருத்தம் கிடையாது.
என் அம்மாவுக்கும் இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். ஏதோ ஒரு பழைய நாள் அவளுக்கு நினைவுக்கு வந்து பேசி இருக்கிறார்.
நன்றி ரவிஷங்கர். அற்புதமான கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்.
நன்றி.என்னுடைய மொட்டை மாடி அனுபவம் - சிறு கதையில் இந்த டிபிகல் மிடில் கிளாஸ் அனுபவம் தெரியும்.
அடுத்து, நான் மிகவும் ரசித்த உணர்வுபூர்வமான எழுத்து.மிகையே இல்லை.
அம்மாவைப் பற்றி ஒரு பதிவு.
நான் ரசித்தேன்.கண்மணி எழுதியது
ப்டிக்க:-
http://kouthami.blogspot.com/2009/01/blog-post.html#comments
உங்க இயல்பும் எளிமையும் ஒவ்வொருவரிகளிலும் வல்லிமா ரசிச்சேன் !
நன்றி ஷைல்ஸ்.
சில விஷயங்கள் எளிமையாக இருப்பதாலியே, எளிமையான வார்த்தைகள் தான் பொருத்தம். அலங்காரம் தேவையில்லாத வாழ்க்கை.;)
//என்னாலும் காலேஜில் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று!! அம்மாவுக்கு அப்போது வயது 35 தான்.//
அம்மாவின் ஆசை என்று தலைப்பிட்டு ஒரு கதை எழுதலாம்.
அருமையான நினைவலைகள்.
அங்கிருந்து இப்போதைய அண்ணா சாலையில் பதினாறாம் நம்பர் பஸ்ஸில் ஏறி புரசவாக்கம் லாடர்ஸ்கேட் நிறுத்தத்தில் இறங்கும் போது அம்மா சொன்னார். என்னாலும் காலேஜில் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று!!
அம்மாவுக்கு அப்போது வயது 35 தான்.
அற்புதமான விவரிப்பு. காலம் ஓடினாலும் மனதுக்குள் சில விஷயங்கள் தங்கிவிடும்.
என் அம்மாவும் இதே மாதிரிதான் சொன்னார்.நான்படிக்கலைன்னாலும்
காலேஜையாவது பார்க்கரேனேன்னு அடம் பிடிச்சி வந்தா.வாழ்க்கையில் கஷ்டபடுவதற்கும் தியாகம் செய்வதர்க்கு என்றே வந்த மஹாத்மாக்கள்.தமிழ்மணத்தில் மணமணக்க வந்த வல்லியம்மா
ஒவ்வொன்றும் மீள்பதிவானாலும் பொறுக்கி எடுத்த நல்முத்துக்கள். ஒரு நிமிஷம் என் பின்னூட்டத்தைப் பார்த்துத் திகைச்சேன்; அப்புறமாப் புரிஞ்சது மீள் பதிவுனு. நன்றி, பின்னூட்டங்களையும் சேர்த்துப் போடுவதற்கு. எனக்கு அந்த டெக்னிக் வரலை; :)
காட்சிகள் கண்முன்னே விரிகின்றன.
அருமையான பதிவு.
நன்றி.
நினைவில் நின்றவைகள் அருமை.
இனிய நினைவுகள் அம்மா சிறிது உண்மையான ஆதங்கத்துடன்...
கயிறு இழுத்தால் நிற்கும் வண்டிமாடு.... – இந்த ஒற்றை வரியில் அந்த காலத்து பெண்கள் இருந்த நிலைமையை கோடிட்டு காட்டி விட்டீர்கள் அம்மா. இன்றும் முற்றிலும் மாறி விட்டதாகச் சொல்ல இயலாது.
////என்னாலும் காலேஜில் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று!! அம்மாவுக்கு அப்போது வயது 35 தான்.//
அழுதேவிட்டேன், வல்லி மேடம். மிகவும் நெகிழ்சியான பதிவு.
ஏற்கெனவே படிச்சுப் பின்னூட்டமும் போட்டிருக்கேனா? அதுவும் இரு முறை! :))) உங்க கல்லூரி நினைவுகள் அருமை. ஆனால் அந்தப் போட்டி என்னனு தான் நினைவுக்கு வரலை. மண்டையைக் குடையுது! :))))
காட்சிகளை கண் முன் ஓட விடும் அருமையான பதிவு சகோதரியாரே
எனக்குப் பிறகு ஒரு தம்பி. ஏற்கனவே அண்ணா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அதனால் நான் பள்ளிக்கூடப் படிப்புடன் நிறுத்தப்பட்டேன். அந்தக் காலத்தில் இப்படித்தான்.
உங்கள் அம்மா எங்கள் நினைவுகளையும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டார். ரொம்பவும் லட்சணமாக இருக்கிறார் அம்மா.
வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.
http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_15.html?showComment=1423961203036#c2363193222159569920
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய வலைச்சரத்தை நீங்கள் அலங்கரிக்கிறீர்கள். நேரம் கிடைக்குபோது வருகை தாருங்கள்.
http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_15.html
வலைச்சரத்தில் திருமதி ரஞ்சனி நீங்கள் எத்திராஜ் கல்லுரரியில் சேர்ந்ததைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்ததும் ஓடி வந்து விட்டேன்.
நானும் எத்திராஜ் கல்லூரி மாணவி. அதோடு Miss. Mathews இன் நேரடி மாணவி நான். என்னை சட்டென்று பதினெட்டு வயது பெண்ணாக்கி விட்டீர்கள் வல்லி மேடம்.கல்லூரி நினைவுகள் என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகின்றன. கெமிஸ்ட்ரி லேபும், கேண்டீன் கடலையுருண்டையும் கண்ணெதிரே தோன்ற வைத்து விட்டீர்கள்.
இன்று உங்கள் எத்திராஜ் கல்லூரிப் பதிவும், ரஞ்சனியின் வலைச்சர அறிமுகமும் என்னை உற்சாகமாக்கி விட்டன என்றே சொல்லலாம்.
ஆமாம். அதென்ன போட்டி என்று நடுவில் நீங்களும் கீதா மேடமும் பேசிக் கொள்கிறீர்களே. முடிந்தால் போட்டி அறிவிப்பிற்கான இணைப்பை(Link) தாருங்களேன்.
அன்பு ரூபன்,தங்கள் கவனத்தினால் இந்த செய்தி கிடைத்தது.படித்து விட்டு வந்தேன். இந்த அன்புக்கு மிக நன்றி மா
அன்பு கீதா, ரஞ்சனி , கரந்தை ஜெயக்குமார், ரமா ரவி அனைவருக்கும் மிக நன்றி.
நான் எழுதிய கமெண்ட் உங்களை வந்து சேரவில்லையோ?
ஆமாம் நான் எழுதிய கமெண்ட் சேரத் தான் இல்லை. இதோ மீண்டும் எழுதுகிறேன்.
வலைச்சரத்தில் ரஞ்சனி நீங்கள் எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்தக் கதை எழுதியிருப்பதாக சொன்னதும் விழுந்தடித்துக் கொண்டு உங்கள் பதிவுப் பக்கம் வந்தேன். இன்ப அதிர்ச்சி. நானும் எத்திராஜ் கல்லூரி
மாணவி. அதுவும் Miss. Mathews இன் நேரடி மாணவி. உங்கள் பதிவைப் படித்ததும் நான் கல்லூரி வளாகத்திற்குள் போய் விட்டேன் என்றே சொல்லாம். கெமிஸ்ட்ரி லேப் வாசனையும், கேண்டீனின் கடலையுருன்டையின் சுவையும் மனதில் தோன்றி சட்டென என்னை
பதிண்ம வயதிற்கு அழைத்து சென்று விட்டன. அதற்காக உங்களுக்கு என் நன்றிகள்.
சற்றே சோம்பலாயிருந்த எனக்கு, உங்கள் கல்லூரிப் பதிவும், ரஞ்சனியின் வலைச்சர அறிமுகமும் டானிக் கொடுத்தது போல் இருக்கிறது.
நன்றி என் இளமைக் காலத்திற்கு என்னை அழைத்து சென்றதற்கு.
இப்ப மாதிரி தொலைதூரக் கல்வி முறை இருந்தா உங்க அம்மாவையும் படிக்க வைத்திருக்கலாம்... நானும் என் 40 வயதில்தான் என்னுடைய முதுகலை படிக்க ஆரம்பித்தேன். அந்தக் காலத்தை கண்முன் கொண்டு வந்தீங்க நன்றி..
எனக்கும் இதே போல் தான் காலேஜ் சேர அம்மாவோடு தான் சென்றேன் (வைஷ்ணவ் காலேஜ் )எனக்கும் அந்த நினைவுகள் ......
அம்மா அழகு !! உங்களை ப் போலவே :)
//ஆமாம். அதென்ன போட்டி என்று நடுவில் நீங்களும் கீதா மேடமும் பேசிக் கொள்கிறீர்களே. முடிந்தால் போட்டி அறிவிப்பிற்கான இணைப்பை(Link) தாருங்களேன்.//
இது மீள் பதிவு ராஜலக்ஷ்மி, இந்தப் பதிவை முதலில் ஒரு போட்டிக்காக வல்லி எழுதி இருக்காங்க. அதைப் பத்தித் தான் பேச்சு முன்னால் நடந்தது! இப்போ இல்லை! :)))) 3,4 வருடங்கள் முன்னர்! :)))))
அன்பு ராஜி. சிறிது உடல் நலம் இல்லை. வரமுடியாமல் போய் விட்டது. சரிமா. நீங்களும் எத்திராஜா. அடுத்த காலேஜ் டே க்கு நாம் போகலாமா. அசதியை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள். எழுத ஆரம்பியுங்கள் மா. கலப்படம் இல்லாத அழகான எழுத்து உங்களது.மிக மிக நன்றி மா.
அன்பு எ\ழில் அந்த க்ஷண நேரம் தான் அம்மா நினைத்தார். பிறகு பழிய நிலைமைக்கு வந்துவிட்டார்,. அவருடைய பொது அறிவுபோல நான் பார்த்ததில்லை. எல்லா ஆங்கில பத்திரிகையில் வரும் சுவையான சம்பவங்களை எனக்கு எழுதுவார். இல்லாவிட்டால் தொலைபேசியில் சொல்வார். அற்புத மனுஷி.
ஆஹா. அம்மா மஹாலக்ஷ்மி. நான் அவ்வளவு சாது இல்லை.
அன்பு சசிகலா. மிக மிக நன்றி. உங்கள் நல் அபிப்பிராயத்துக்கு.
Don't know how I missed reading this post in the past...excellent vallima....
Dear Mouli,
thanks for appreciating and giving your thoughts here ma.
Post a Comment