http://youtu.be/FB_mHPsm6Bk?list=RDZf-CmIKvRIE
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும் அறுபதுகளில் என் படிப்போடு கூட வந்த பாடல்கள் அத்தனையும் மனப்பாடம் ...................
உள்ளம் உருகுதைய்யா என்று ஆரம்பித்து,திண்டுக்கல்லில் எந்தக் கல்யாணம்
கோவில் விழாவாக இருந்தாலும் எம்ஜியார் பாடல்கள் வந்துவிடும். அப்போது
சரோஜாதேவிதான் முக்கால்வாசி கூட நடித்திருப்பார்கள். அப்பொழுது வந்த
படங்களை அப்பா பார்க்க அனுமதிக்க மாட்டார். வானொலியில் கேட்பதோடு சரி. வீ
ஆர் செவன் என்று எங்கள் க்ரூப் பள்ளியில் .எல்லோரும் சாப்பாடு டப்பா,
ஷாந்தி கொண்டுவரும் பேசும்படம் புத்தகம் வைத்துக் கொண்டு அலசுவோம். ரொம்ப
அழகுப்பா கமெண்டுக்கு உஷா சந்தானம் எய் எல்லாம் மேக் அப் என்று உதறுவாள்.
மேக் அப் ஆ இருந்தாலும் அழகுதான் என்று நான் சப்பைக் கட்டுவேன். கனகா
சிதம்பரம் சரோஜாதேவி போலவே பின்னல்களை மடித்துக் கட்டி ஸ்டைல் செய்வாள்.
பர்தாவோடு வரும் ஜமீலா கண்கள் மைவழிய அக்கம்பக்கம் பார்க்காதே பாட்டுக்கு அபிநயம் பிடிப்பாள் .அவள் சகோதரி ஹம்ரூனிசா வந்து அதட்டிவிட்டுப் போவாள். திண்டுக்கல் நாட்களுக்கும் சினிமாப் பாடல்களுக்கும் இனிமை கூடுதல். வாத்தியார் பிறந்த நாளுக்கு முதன் முதலாகப் பதிவிடுகிறேன்
5 comments:
எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பதிவு அருமை சகோதரியாரே
நன்றி
இனிய நினைவுகள் பல ஞாபகம் வந்தது அம்மா...
http://dindiguldhanabalan.blogspot.com/2015/01/Intellect-Part-2.html
NanRi Karanthai Jeyakkumaar.
NanRi Dhanabaalan.
Post a Comment