Blog Archive

Wednesday, December 31, 2014

நட்பும் அதன் வரையறைகளும்


சந்தோஷப் பூக்கள்.இந்தப் பதிவைப் புதுப்பிக்க ஒரு காரணம் எங்கள் ப்ளாக்
அரட்டை.
அதில் இந்த நிகழ்வில் வரும் பாலாண்ணாவைப் பற்றி
லதா என்பவர் பேச,
அதை ஃபார்வர்ட் செய்த சுஜாதா யக்ஞராமன்
இடம் நான் கேள்விக்கணை தொடுக்க
இதோ கிடைத்தது,
என் இன்னோரு குடும்பம்.
சந்திராவும் அவள் சகோதரிகளும்
அண்ணா தம்பி பேரக்குழந்தைகள்,
நம் சுஜா எல்லோரும் என்றும் இனிமை 
பெற வேண்டும். இப்படிக்கு ஆண்டாள் என்கிற வல்லிம்மா
என்கிற ரேவதி நரசிம்ஹன்.

1964தோழி வீட்டுப் பிறந்தநாள்

 64 ஆம் வருடம் வாழ்க்கையில் மறக்க முடியாத வருடம்.
கல்லூரியை ஒரே ஒரு வருடம் சுவைத்த காலம்.

காண்டீனில் ஊத்தப்பம் சாப்பிட்ட காலம்.
குழுக்களாகப் பிரிந்து  தோழிகளுடன் ஓரிரு படங்கள் பார்த்த காலம்.

ஆங்கிலப் பேராசிரியை உடுத்தும் உடைகள் மேல் மோகம் கொண்டகாலம்.
ஷம்மி கபூர் ,சாதனா,ராஜ் கபூர்,வைஜயந்தி மாலா,பத்மினி,ஆஷா பரேக் என்று
பேசித்திரிந்தகாலம்.

பாட்டுப் போட்டிகளுக்கெல்லாம் போய்ப் பங்கெடுத்த காலம்.
தமிழ் நிறையக் கற்ற காலம்.நிறைவான நாட்கள்.
அதையெல்லாம் விட இனிப்பான விஷயம் நிறைய தோழிகள் கிடைத்தது.
என் திண்டுக்கல் தோழிகளைப் பிரிந்து, இந்த மெட்ராஸ் தோழிகளைப் பார்த்துப் பேச தயக்கம் நிறையவே இருந்தது.
அதையெல்லாம் மாற்றினவள்  என் அன்புத் தோழி சந்திரா.

அவள் குடும்பம் பெரியது
இரண்டு அண்ணாக்கள்,ஒரு தம்பி
மொத்தம் அவர்கள் ஆறு சகோதரிகள்.
அனைவரும் தங்கங்கள். மிருதுவான பேச்சு.
உயர்ந்த படிப்பு.
நிறைய உழைப்பு,
நல்ல சந்தோஷம்.இதுதான் சந்திராவின் குடும்பம்.

குறும்புக்கு என்றே பிறந்த தம்பி குமார்.
 சகோதரிகள்.
இவளையும் சேர்த்து ஒன்பது  பேர்.


கல்லூரி முதல்நாள் பாட்டி என்னை இவர்கள் வீட்டில் சேர்த்து,சந்திரா எங்கள் ஆண்டாளையும் உன்னுடன் எதிராஜுக்கு அழைச்சிண்டு போகறியா. அவளுக்கு  இங்க ஒன்றும் தெரியாது. என்று சொன்னது தான் தாமதம்.
முழுக் குடும்பமும் எனக்கு உறவாகிவிட்டது.

கலாட்டா,கிண்டல்,மாலை டிபன்,கங்காதீஸ்வரர் கோவில்,ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் என்று எங்கே போனாலும் சேர்ந்தே போவோம். கனகா,கமலா,சுந்தரா(களக்காட்டுக் காரி) என்று நல்ல நட்பு உருவாகியது.

சந்திராவின் வீட்டு மாடியில் அவளின் டாக்டர் அத்தையும்,ஒரு சித்தப்பாவும் இருந்தார்கள். சித்தப்பாவுக்குக் குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆகி இருந்தது,.

படித்த நேரம் போக பாட்டு,ரேடியோ,உஷாவோடு விளையாட்டு என்று நேரம் போவதே தெரியாது..
இருட்டுவதற்கு முன்  வீட்டுக்குப் போய்விடவேண்டும்:)
இல்லாவிட்டால் சின்ன மாமா குரல் கேட்கும்.
ஓடிவிடுவேன். அப்பொழுதுதான் ஊத்தாம்மாவுக்கு ஆண்டு நிறைவு வருகிறது என்று தெரிந்து கொண்டேன்.
ஏதோ எங்கள் வீட்டுக் கொண்டாட்டம் போல ஒரே மகிழ்ச்சி.

முதல்நாள் சாயந்திரம் பூராவும் பூ தொடுப்பது, யார் யார் என்ன பாவாடை,தாவணி என்ன பூ.
எத்தனை பேர் வருவார்கள் என்று கேட்டால் தஞ்சாவூரிலிருந்து சித்தியின் உறவினர்கள்.
சந்திராவின் அக்காவோட மாமியார் வகையறா.
சந்திரா அப்பாவின்  ஆஃஃபீஸ் நண்பர்கள்  என்று ஒரு நூறு பேருக்குக் குறையாது என்றதும். நாங்கள் எங்களுக்குள்ளேயே வேலைகளைப் பிரித்துக் கொண்டோம் வரவேற்பு,உபசரிப்பு, பந்தி விசாரிப்பு,
குழந்தையை அழவிடாமல் பார்த்துக் கொள்வது.  இப்படிப் போய்க் கொண்டு இருந்தது லிஸ்ட்.
சந்திராவின் அம்மா, அப்படியே  கோவிலில் இருக்கும் அம்பாள் மாதிரி கனிவு கொண்டவர்.
ரேவதி ,பாட்டி கிட்டச் சரியா  சொல்லிட்டு வரணும். தேடவைக்காதே என்று என்னிடம் சொல்லிவைத்தார். சரி மாமி என்று தலையாட்டிவிட்டேன்.
அப்பொழுதெல்லாம்  காதில் ரிங் போட்டுக் கொள்வது ஃபேஷன்.

கண்ணுக்கு மை,பின்னலுக்கு ரிப்பன் கூடாது.
அதுதானாக வந்து   முன்னால் விழுந்துவிடும்.:)

மாட்சிங்காகக் கங்காதீஸ்வர குளக்கரை கடையில் பச்சை மாலை, பச்சை மணி வைத்த ரிங் என்று எனக்கு வாங்கியாச்சு.  பச்சை கண்ணாடி வளையல்கள்
பச்சைப் பட்டுப்பாவாடை, அப்பொழுது வந்திருந்த ஃபுல்வாயில் தாவணி.

சந்திராவுக்கு எலிட்ரோப்(நாங்கள் தமிழ் பேச மாட்டோம். முடிந்த வரை ஆங்கிலம் தான்:)  )வண்ணத்தில் பாவாடை,பின்க் தாவணி.இரண்டும் கலந்த மேல்சட்டை.,தங்கை நிம்மிக்கு  லட்சுமி   சிவப்பு எல்லாமே. அவள் தங்கை கௌரி
  பாவாடை சட்டை தான்.இரட்டைப் பின்னலோடு மான்குட்டி போல
ஓடுவாள்.
எங்கள் அணிவகுப்பைப் பார்த்துப் பெரியவர்கள் நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டார்கள்.

ஹூம் அவர்கள் கண்டார்களா எங்கள் திறமையை.
உஷாப் பாப்பாக்குக் காது குத்தினபோது  நடந்த அமர்க்களம்.!!!
அம்மாடி அலறிவிட்டோம் நாங்கள். கௌரிக் குட்டி
பாப்பாவுக்கு பிஸ்கட் கொடுத்துப் பார்த்துக் கொண்டது.
சந்திரா வாசலில் பன்னீர்சொம்பு,கல்கண்டு சந்தனம் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு  போற வருகிறவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டாள். அப்பப்போ  எங்களையும் பன்னீரில் நனைத்துவிட்டுப் போனாள

நானும் நிம்மியும் சாப்பிட வந்தவர்களைக் கவனிக்க ஆரம்பித்தோம்.

உண்மையாகவே   உபசரித்ததால் இருவருக்கும் நல்ல பேர்.

தஞ்சாவூர்த் தாத்தா ஏ பொண்ணே   நீ சுந்தரேசனோட மூன்றாவது பெண்ணா. ஜாடையே இல்லையே என்றார்.
எனக்கு ஆமாம் என்று சொல்ல ஆசை. அதற்குள் நிம்மி
அவ எங்க ஃப்ரண்டு. இங்கதான் இருப்பா. என்றதும் அவர்
கொஞ்சம் நேரம் கழித்துக் கூப்பிட்டார். எல்லாரையும் கவனிக்கணும்.

 உங்கபக்கத்தையே   பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது! என்று   கொஞ்சம் மிரட்டிப் பார்த்தார். நாங்கள் அதுக்கெல்லாம் அஞ்சுவோமா.

தாத்தா இந்தாங்கோ இன்னோரு கப் பால் பாயாசம் எடுத்துக்கோங்கொ' என்று கொண்டு கொடுத்துவிட்டு ஓடினோம்.
.


அடுத்தாப்பில கிளம்புகிறவர்களுக்குத் தாம்பூலம்+பட்சணப்பை.
முதல் இரவே  தயார் செய்துவிட்டதால்
வீட்டு முன்னிருந்த பந்தலில் இருவரும் நின்று  கொண்டு மிகமிக மரியாதையோடு பெரியவர்களுக்குப் பைகளைக் கொடுத்தோம்.

இது யாரு இந்தப் பொண்ணு ? மீண்டும் கேள்வி. நம்ம பாலாண்ணா  ஃப்ரண்டு  கோபு இல்ல  அவனோட அக்கா பொண்ணு. எங்களுக்கும் ஃப்ரண்டு.

எல்லாம் முடிந்து நாங்களும் சாப்பிடப் போனோம்.  அலுப்பில் சாப்பாடு வேண்டி இருக்கவில்லை.

ஒரே பெருமைதான்.

இது நடந்த  பத்து மாதங்களில்
உண்மையிலியே  அந்தப் பாட்டியின் வாக்கு பலித்தது.
ஆமாம்  என் திருமணம்  நிச்சயமானது!!
இதெல்லாம் இவண்ட்மேனேஜ்மெண்டா என்னா என்று கேட்டால்
இல்லைன்னுதான் சொல்வேன். இந்த நிகழ்ச்சியில் ஈவண்ட் என்னை மேனேஜ் செய்தது:)





 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

நாயகனுக்கு இந்த நாள் அக்காரவடிசலோடு சமர்ப்பிக்கிறேன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இந்த வருடத்தின் கடைசி நாள்  நாயகனுக்கு அர்ப்பணம். அவன்  கோவில் காப்பானை
 விளிக்கிறாள் ஆண்டாள்.  வாயில் காப்பா னைத்   தயவாய்க் கேட்டுக் கொள்கிறாள். நேற்றே  எம்மைப் பார்த்து பேட்டி அருளுவதாய்ச்  சொல்லி இருக்கிறான். ஐயா எங்களை உள்ளே விடு. தூயோமாய் வந்தோம். அவனைத் துயி லெழுப்பி வணங்கித் தாள் சரணடைந்து அவனருள் பெற நீங்கள் தான் வழி அருளவேண்டும். 
அன்பான  உங்கள் காக்கும் கரங்களால் வாயில் கதவுகளைத் திறவுங்கள் என்று பிரார்த்திக்கிறாள்.  அடைய வேண்டியது பெரிய பரிசல்லவா. அதற்கு அடியார்களின் அருளிருந்தால் தானே அவனை அடைய முடியும்.  வில்லிபுத்தூர் திருவே  எம்  ஆண்டாளே  உன் அடக்கமும்   மாபக்தியும் எங்களையும் வந்தடைய வேண்டும் தாயே..

-- 

Tuesday, December 30, 2014

அன்புள்ளங்களுக்கு நன்றியுடன் வணக்கம்

FLY HIGH FIND GOOD THINGS
Add caption
ONLY GOOD WILL SURVIVE
Add caption
SINGAM
 2015 என்ன கொண்டுவரப் போகிறது. மகிழ்ச்சி மட்டுமே. அப்படியே பார்க்கப் பழகும்  குணத்தையும் கொடுக்கட்டும்.சுற்றி இருப்பவர்கள் உலகத்து அனைத்து மக்களும் ஆரோக்கியமாக இருக்க வேணும் இறைவா 
Thames  River
 எல்
http://youtu.be/qSZDsVwOBkQ
லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, December 29, 2014

அனைவருக்கும் சொல்வது என்ன என்றால

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.                            என கணினிக்கு. உடல். நலம் சரி இல்லை என்ற நல்ல விசயம். கேட்டுக்கொண்டார் கொண்டிருந்தது பாகவதம. பாதியில். நிறகிறது.  மீண்டும சந்திக்கலாம்

Saturday, December 27, 2014

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2015

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
அனைவருக்கும்  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்  இந்தப் பதிவுடன்  எங்கள் பெண்  இருக்கும்   சிகாகோ நகரின் சில  ஒளிக்  காட்சிகளை அனுப்புகிறேன். விதமான விளக்கு அலங்காரங்கள் கண்ணைப் பறிக்கின்றன.
வெண்ணெய்   தோய்ந்த  பன்கள் 

Monday, December 22, 2014

CHRISTMAS IS AROUND THE CORNER

Carol singers making merry
Add caption
rosebery park
Add caption
Add caption

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
Add captionஅம்மா.தமிழைக் கொடுத்த பிறகு இப்போது அழகி கரம் கொடுக்கிறாள். தமிழில் எழுத முடியாமல் பட்ட சிரமம் சொல்லி முடியாது. ஒரு சிறிய பதிவோடு ஆரம்பிக்கிறேன். இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வீட்டைக் சுற்றி நடப்பதைப் படம் எடுத்துப் பதிகிறேன்

Saturday, December 13, 2014

நெல்லைக்குசும்புக்கு வந்த தொல்லை

இந்தக் கதைக்கும்  இந்தப் படத்துக்கும் சம்பந்தம் இல்லை
தாமிரபரணி என்னும் பொருனை
குசும்பு எல்லோருக்கும் பொது என்றுதான்  நினைக்கிறேன்.
அதென்ன நெல்லைக் குசும்பு என்று ஏன் சொல்கிறார்கள் என்பதே என் கேள்வி.

நெல்லை என்பதில் எத்தனையோ ஊர்கள் அடக்கம்.
நத்தங்கள் ,பட்டிகள்,கோட்டைகள்,பேட்டைகள்,புரங்கள்,நாடுகள் என்று வேறு வேறு
இடங்கள் நதிதீரங்கள்  என்று பல்வேறு  வசிக்கும் இடங்கள்.அந்தந்த
ஊருக்கான  வாசங்கள்,வசனங்கள்  ,கேலிகள், சொலவடைகள்,பழமொழிகள்

என்று திருநெல்வேலிக்குள்ளேயே  எத்தனையோ பிரிவுகள்.
அந்த மாவட்டத்திலியே  இவ்வளவு  பேச்சு இருக்குமானல், பொத்தாம் பொதுவாக
திருநெல்வேலிக்காரர்களுக்கே  குசும்பு ஜாஸ்தி என்று  ,ஒரு அரட்டை  ஆரம்பித்தது.


சொன்னவர் எந்த ஊர் என்று சொல்ல நான் ஆசைப்படவில்லை:)
சமீபத்தில் ஒரு திருமணம்..
எங்க ஊர்க்காரர்    வீட்டுப் பெண்ணுக்கும் இன்னும் வேறு  ஜில்லாக்காரரின்  பையனுக்கும்   மணம் பேசி முடித்து அழகாகத்   திருமணம்
நடந்து முடிந்தது.
சாயந்திரம்    திருமண வரவேற்பு. அதற்குள் சுகமாகத் தாம்பூலம் போட்டுக் கொண்டு  சுற்றத்தாருடன் பழங்கதைகள் ஆரம்பித்தது.

என் வயதொத்தவர்கள், என்னை விட வயதான  மாமாக்கள்,மாமிகள்
என்று   அன்பான உறவினர்கள்.

சீர்வரிசைகள்  நன்றக வைத்திருந்தார்கள் இல்லையா.
ஆமாம் சாமர்த்தியம்   ,சமத்து இரண்டும் கலந்த  தம்பதிகள் .
வெகு  அழகாக வரிசைப் படுத்திப் பெண்ணைக் கவரும் வகையில் இருந்தது.
காவேரி தீரம் சாமர்த்தியத்திற்கு கேட்பானேன்.கலை நுணுக்கத்தோடு பிறந்தவர்கள்.!!!

என்னது காவேரி தீரமா.அவர்கள் அமெரிக்கா போய் செட்டில் ஆகி 35  வருடங்கள் ஆகிவிட்டதாமே.
அதனால என்ன  மண்வாசனை    போகுமா. காவேரி காவேரிதான்.

அதனால்  என்ன எங்க தாமிரபரணியில் இல்லாத கோவில்களா.
அங்கே  பிறக்காத இசையா, தமிழ் வளமா,அதுக்கும் தனி  வாசனை இல்லையா.

அல்வாவை விட்டுட்டியே:)என் சின்ன அறிவுக்கு எட்டினதை எல்லாம் சொன்னேன்.
 குசும்பை விட்டுட்டியே  என்று ஒரு குரல்.                                                                                                                                
அது என்   பெரியப்பா  பெண்ணின் குரல்தான். அவளுக்கு  பெண் வீட்டிலும்
உறவு உண்டு போலிருக்கு.
என்ன நீ, நம்ம  ஊரையே  விட்டுக் கொடுக்கிறியே?
எப்போ நாஆன் ன்ன்ன்ன்னு  ப்ரு காஃபி  காஜல் அகர்வால் மாதிரி இழுத்தாள்.
கும்பகோணத்துக்காரரைக் கல்யாணம் செய்தேனோ அப்பவே
மாறிட்டேன்.

அடப்பாவி என்ன குசும்பைக் கண்ட   நீ.
வாயில்லா ஜீவன்கள் திருநெல்வேலிக்காரர்கள்.வெகுளிகள்.

ஆங்க்  !அசடுன்னு  கூடச் சொல்லலாம்.
ஏன் இந்தக் கொலவெறி உனக்குனு நான் அவளைத் திருப்பிக் கேட்க

அப்டிக்கேளு சொல்றேன்னு ஆரம்பித்தாள்.உனக்குப்  பெண்ணின் அம்மா  என்ன  உறவு.
 அத்தையின் பெண். அவள் வீட்டுக்காரர்? அவரும் பக்கத்து ஊர்தான் மேலசேவல்.
உங்களுக்கும் தாமிரபரணி  வாய்க்கால் சம்பந்தம் உண்டு இல்லையா.
ஆஹா அமோகமா உண்டு.
அதுதான் உங்களுக்குக் குசும்பும் உண்டு என்றேன்.

என்ன நடந்தது. சுத்திவளைக்காத........ உங்க காவிரி மாதிரி.!!!!!!!!!
அவ வளைச்சாலும் ஸ்ரீரங்கனைத்தான் வளைச்சுப் போட்டு இருக்கா.
ஓ,அவனை வளைக்க எங்க பக்கத்து ஊர்   ஆண்டாள் இருக்காள்.

சரி பெரிய  தலைகளை விடு.
இன்னிக்குக் காலை என்ன நடந்தது தெரியுமா
என்ன? நான் ஊஞ்சல் போதுதான் வந்தேன்.

அதுக்கு முன்னாடி அப்பக் கூடை கொண்டுபோய் வைத்து மாப்பிள்ளையை ஊஞ்சலுக்கு அழைக்கணுமா  இல்லையா.

ஆமாம்.எங்களுக்கும் அதெல்லாம் தெரியும்.
எத்தனை பேர் வந்தார்கள் தெரியுமா
எத்தனை?
12 பேரு.!!
அத்தனை பேருக்கும் ரவிக்கைத் துணி,தாம்பூலம் எல்லாம் கொடுத்து முடிக்கவே நேரமாச்சு,. இதற்குள்ள  உங்க அத்தை பெண் நாணிக் கோணி
மாப்பிள்ளையின்   கண்ணில் மை இடறேன் பேர்வழின்னு     ஒரு முகமூடித் திருடன்  மாதிரி அவர் கண்ணில கரியாத் தீட்டிவிட்டாள்.
அவருக்கோ  சொல்லமுடியாத கோபம்.

வாட் இஸ் திஸ் மா. இந்த முகத்தோட  எப்படி நான்  ஃபன்க்ஷனை அட்டெண்ட்
பண்றது?
என்று படபடத்தான்..உங்கள் கல்யாணப் பெண்ணாவது சும்மா
இருந்திருக்கலாம்.
தன் கூட நிற்கிற தோழியிடம்
 ஏதோ  சொல்லிச் சிரிக்கிறாள்.
அவன் முகம் இன்னும் சிவந்துவிட்டது.
என்ன இருந்தாலும்  இரண்டு நாட்களுக்கு முன்னால்தான்
வந்து இறங்கி இருக்கான். இந்த சென்னை வெய்யிலே ஒத்துக்கவில்லை.
சிம்பிளா ஒரே நேரத்தில் ரிசப்ஷன் கல்யாணம் எல்லாம் வைத்துக் கொள்ளலாம் என்று   கேட்டுக் கொண்டானாம்.

உங்க அத்தைபொண்ணு  அதெல்லம் வேண்டாம் ,இதென்ன
டெல்லிக்கல்யாணமா  எல்லாம்  வேற வேறயாத்தான் நடக்கணும். விவாஹாவோட ஏழு புடவையும் அவ கட்டிக்க வேண்டாமான்னு
சொல்லிட்டாளாம்.

பார்த்தியா, இங்க யாரு ஆட்சி நடந்திருக்குன்னு. இவர்கள் அவள் சொன்னதுக்கெல்லாம் சரின்னுட்டாளாம். எல்லாம் பெரிய மனுஷத்தனம் தான்.
இதில் குசும்பு எங்க இருக்குனு நான் யோசிக்க,
இன்னோரு பக்கம் ஒரேசிரிப்புச் சத்தம் காதில் விழுந்தது.                                                                                                                                                                                                                                                      

மாப்பிள்ளை பெண் இன்னும் அவர்கள் தோழர்கள் தோழிகள் என்று ஒரே அட்டகாசம்.
மாப்பிள்ளை முகத்தைப் பார்த்தேன்.
பாதி கறுப்பு பாதி வெள்ளையாகத்தான் இருந்தான். நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே  கல்யாணப் பெண், தன் கையிலிருந்த ஈர டிஷ்யுக்களை வைத்து அவன் முகத்தைச் சீர் செய்து விட்டாள்.

ஓ,எனக்கு அந்த வேஷமும் பிடித்திருந்தது. ஆஃப்டர் ஆல்
ஒரு நாள் கொண்டாட்டம். இதில்  கோபிக்க என்ன இருக்கு
இல்லை டார்லிங் என்று  அந்தப் பெண்ணிடம் சொல்ல அவளும்
அப்சல்யூட்லி''   என்று சொல்லிவிட்டுத்   தன்  குஞ்சலம் முடிந்த
   கூந்தலைக் கழற்றிவிட்டு அந்தச்  சின்ன முடியில் ஒரு ரோஜாப்பூவை மட்டும் வைத்துக் கொண்டாள்!!!!!

முதல்படம்  ஒரு சாது மாப்பிள்ளையின் போஸ்:) மை தெரிகிறதா. இது என் குசும்பு:)



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, December 06, 2014

ஊறுகாய் போட்டதால் வந்த ....

நாட்கள் பக்கத்தில் வர வர வேலையெல்லாம் முடித்துக் கொண்டு தயாராக இருக்கலாம்,
என்று போர்க்கால நடவடிக்கைகள் ஆரம்பித்தேன்.

திடீரென்று ஹாஸ்பிட்டல் போக வேண்டும் என்றால்
ரெடி மிக்ஸாக இருக்கட்டும், என்று புளிக்காய்ச்சல், கருவேப்பிலைப் பொடி எல்லாம் தயார்.
யாருக்கு இவ்வளவும்னு கேட்கக் கூடாது. நமக்குத்தான் எப்போ பசி வேளைனூ தெரியாமல் ஒரு கண்மூடித்தனமான ஜீரண உலகம் இருக்கே. அதற்கான
தயாரிப்புகள் இவை.

மருத்துவர் ஒரு நாள் முன்னாலேயெ வருமாறு சொன்னதால் மாப்பிள்ளை,பெண் இருவரும் மருத்துவமனைக்குக் கிளம்ப நானும் பேரனும் வீட்டில்.

'' paatti, dont worry. we will enjoy this freedom!!''
இது எதிர்பாராத (?) ஆறுதலா இருக்கே என்று பேரனைப் பார்த்தேன்.
தான் மாலை வீடு திரும்பும் போது தன் தோழனையும் அழைத்து வருவதாகச் சொன்னான்.
அவன் அம்மாவும் போனில் சம்மதம் கொடுத்தாள்.

கையில் மதிய உணவு கொடுத்து அவ்னை
அனுப்பிவிட்டுத்
தனியாக உட்கார்ந்தபோது ஒரு ஊறுகாய்
செய்யலாமே என்று யோசனை .

எடுடா வாளைக் கொடுடா மணிமுடி''னு
நமக்குப் பட்டம் கொடுத்திருக்காங்களேனு
காரியத்தில் இறங்கி எலுமிச்சை எல்லாத்தையும் துண்டம் செய்து உப்பும் சேர்த்து வைத்தேன்.

மதியத்தில் மகள் காலையில் வந்துவிடுவதாகவும்
புதுப் பாப்பா வர இன்னும் இரண்டு நாள
ஆகும்னு சொல்லவே ,அவர்கள் வருவதற்குள்
மிளகாயை வறுத்துப் பெருங்காயம் வெந்தயத்துடன் பொடி செய்து கலந்துவிடலாம்
என்று மும்முரமாக மிளகாயை வாணலியில் போடவும் பேரன் வாசல் மணியை அடிக்கவும் சரியாக இருந்தது. எட்டிப் பார்த்தால் இந்த ஊரு அம்மா ஒருத்தவங்க.
தன் பையனை இங்கே விடவந்து இருக்கிறார்கள்
என்று புரியக் கொஞ்ச நேரம் ஆச்சு.
கதவைத் திறந்ததும் அந்த அம்மா முகம் போன போக்கை நீங்கள் பார்த்து இருக்க வேண்டும்.
ஹை! என்று கைநீட்ட வந்தவள் ஹா ஹச்ச்
என்று பெரிய தும்மல் போட்டார்.
வாயில வார்ர்த்தையே வரவில்லை.
அவரோட பையனோ அதுக்குமேல.
சிலிபீட்சா'....................... என்று அவனும் கண் காது மூக்கு சிவக்கப்
பார்க்கிறான்.
வீடு முழுவதும் நல்ல மிளகாய் மணம்.
அடுப்பை அனைத்தாலும், எக்ஸாஸ்ட் புகை போக்கி
எல்லாம் போட்டாலும் சுத்தி நில்லாமல்
வந்த அரோமா!!
பின்னாலேயெ வந்த பேரன் முதலில்
திகைத்தாலும்,
நிலைமையைக் கணித்து 'பாட்டி நீ உள்ள போ,
நான் மைக்கேலை அழைத்துவரென்னு'
சமாளித்தான்.
அந்த அம்மா தன் பையனைப் பார்த்து
' you two can play outside.
do not bother Nanny'
என்று சொல்லி விட்டுப் போனாள்.
இல்லை ஓடினாள்.
நானியா? என்னைப் பார்த்தால் இந்த ஜேன் ஐர்.
நாவலில் எல்லாம் வர ஆங்கில நானி மாதிரியா இருக்கு
என்று எனக்குப் படபடா என்று கோபம்.
ஹலோ, நான் இவனோட பாட்டினு மூடிய கண்ணாடிக் கதவைப் பார்த்துச் சொன்னேன்.

அவளோ, தன் பையனை போர்க்களத்தில் விட்டுப்
போகும் வீரத்தாய் மாதிரி சைகையில்
ஏதோ சொன்னாள்.

அவனும் என் பேரனும் தனி அறையில்
விளையாடப் போகையில்

அவர்களுக்கு நொறுக்குத் தின்பண்டம் எல்லாம்
வைத்துக் கொடுத்தேன்.
தட்டுகளை ஆராய்ந்து மைக்கேலும், என் பேரனும்
செக்க்யூரிடி செக்;-)
செய்துவிட்டு உள்ளே போய்க் கதவை ப்
பத்திரமாக மூடிக் கொண்டார்கள்.

வேலையைமுடிக்கணூமே.
அவசரமாக மிக்சியில் வறுத்தமிளகாயைப் போட்டு ஒரு சுத்துப் போடவும்,
மருத்துவமனையிலிருந்து இவர்கள் திரும்பவும்
சரியாக இருந்தது.
ஒரே களைப்பு இருவர் முகத்திலும்.

ஆனால் கதவைத் திறந்ததும் வந்த நெடி
அவர்களை உடனே உயிர் பெற வைத்துவிட்டது.
நான் சங்கடமாக அவர்களைப் பார்க்க
இப்போ என்ன ஆச்சுனு சமையலறையை நோட்டம்
விட்டார்கள்.
கைக்குட்டையால் மூக்கைப் பொத்திய வண்ணம்,
யாருக்கு ஊறுகாய்? என சைகையால் வினவ,
நான் யோசித்து ..... அப்பா வந்தால் பிரயோசனப் படும்னு சொல்ல,

எங்களுக்கு வெறும் மோர் போதும்மா என்றபடி
இருவரும் மெதுவாகப் படி ஏறியதைப் பார்த்தால்

படு பாவமாக இருந்தது.

என்ன, ஊறுகாய் கூட பண்ண விடமாட்டாங்க
போலிருக்கே என்று நினைத்தபடி கடையை
ஏறக் கட்டினேன்.
இந்தப் பதிவுக்கும் எட்டு வயது. எங்க பேரனுக்கும் எட்டு வயது

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்                    லண்டனுக்கும்  வந்து  நிலாவைப்   படம் பிடிக்க  வழி கொடுத்த இறைவனுக்கு நன்றி. இந்நேரம்  இந்தியாவில் இரவு பன்னிரண்டரை மணி. தீபங்கள் ஏற்றப்பட்டு,தொலைக்காட்சியில்  அண்ணாமலையார் தீபத்தையும் பார்த்து மகிழ்ந்திருப்பார்கள்  அனைவரும்.    அனைவருக்கும்  தீபத் திருநாள்  வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.
Add captionhttp://youtu.be/S9f14EG2bjU

Tuesday, December 02, 2014

பொன்னெழில் பூத்தது புதுவானில்...

கண்ணிலே  என்ன கண்ணே சிவகாமி
Add caption
Add caption
Add caption
மாமல்லபுரம்
Add caption
Add caption
 வாதாபி நகரம்

திரு கல்கியின்
சிவகாமி என்னில் புகுந்தது என் பதினான்கு வயதில்.பாட்டி வீட்டுப் பரணில் இருந்த புத்தகம் மணியம் அவர்களின் கைவண்ண ஓவியங்களோடு அருமையாக இருக்கும்.

அட்டையில் மாமல்லரும்,சிவகாமியும் எதிர்மறை உணர்ச்சிகளோடு ஒருவரை ஒருவரைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நடுவில் நாகநந்தி
கொடூரமான தோற்றத்தோடு கையில் குறு வாளோடு இருப்பார். ஒரு பட்டத்து
யானையும் அதன் அம்பாரியில் மாமல்லரின் குழந்தைகளும் சித்தரிக்கப் பட்டு இருக்கும்.

பின் அட்டையில் சிவகாமி வாதாபி வீதிகளில் ஆடும் நடனமும் பின்புலத்தில் வாதாபி பற்றி எறிவது போலவும் மணியம் வரைந்திருப்பார்.

மிகச் சின்ன எழுத்தில் இருக்கும் புத்தகம். எத்தனை பக்கங்கள் என்று கூட மறந்துவிட்டது.

பிற்காலத்தில் பல்லவ சாம்ராஜ்ய சேனாதிபதி ஆகப் போகும் பரஞ்சோதியும் ஒரு புத்த துறவியும் மகேந்திர தடாகத்தின் கரையில் நடந்து,காஞ்சியை நோக்கி வந்து கொண்டிருப்பார்கள்.
பரஞ்சோதிக்கு நாகநந்தியைப் பார்க்கும் போது ஏதோ ஒரு விஷ நாகத்தைப் பார்க்கும் உணர்வே வரும்.
இந்த மாதிரி எழுத்துக்கள் அந்த வயதில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிப்பது கடினம்.
இந்தப் புத்தகத்துக்கு முன்னால் திரு கல்கி, பார்த்திபன் கனவு தொடரை கல்கியில் எழுதி முடித்திருந்தார்.
அவரே மாமல்லபுரக் கடற்கரையில் தனக்கு நேர்ந்த அபூர்வ அனுபவத்தை
ஒரு உத்தம எழுத்தாளனின் உணர்வுகளோடு வர்ணித்திருப்பார்.

அப்போது பிடித்தது பைத்தியம்.எதிலெல்லாம் என்று கேட்டால்
1, மஹாபலிபுரம் போக ஆசை,
2,உண்மையாகவே திரு கல்கி உட்கார்ந்திருந்த இடம்,
3,மானும் மயிலும் செதுக்கப் பட்ட பாறை,
ஆயனச் சிற்பி இருந்ததாகச் சொல்லப்படும் காட்டு வீடு
இப்படி போனது கற்பனை.

பார்த்திபன் கனவு கதையில் தந்தையாக இருந்த நரசிம்ம பல்லவர், சின்னவயதில் எப்படி இருந்திருப்பார்.
ஏன் இந்தக் கதையைக் கல்கி அவர்கள் சோகமாக , முடித்தார்.
சிவகாமி ஏன் இப்படி ஒரு வெறி கொண்ட சபதத்தைச் செய்தாள்,
ஏன் இவர்கள் ஒரு அற்புதக் காதல் காவியத்தைப் படைக்க முடியாமல் போயிற்று.

அந்த வயதில் புரிந்து கொள்ள முடிந்தது அவ்வளவுதான்.
சோகமாக முடிந்ததால் தான் இது காவியமாகிற்று என்பது புரிய வெகு நாட்கள் ஆகிற்று:)இந்தச் சிவகாமியும் நரசிம்ம பல்லவனும் என் வாழ்வில்
ஏற்படுத்திய மாற்றம் தான் எங்கள் திருமணத்தில் வந்து முடிந்தது.

















எல்லோரும் வாழ வேண்டும்.