இதோ அந்த வீடியோ
|
போகும் வழியில் ஒரு கடையில் குதிரை. |
Add caption |
ரஷ்மோர் குன்றுகளுக்கு முன்னால் ஸ்தம்பங்கள் ஒவ்வொரு மாகாணம் பிறந்தநாளும் ஐக்கியமான நாளும் குறிப்பிடப் பட்டு,கல்வெட்டு. |
ரஷ்மோர் முகங்களுக்கு வடிவம் கொடுத்த சிற்பி போர்க்ளம் |
மலையடிவாரத்தில் அவரது கலைக்கூடம்.இன்று இந்த மாபெரும் நினைவாலயம் உருவான கதையைச் சொல்கிறது. |
சிற்பங்கள் உருவாவதற்கு முன் போர்க்ளம் இறைவனடி சேர ,மிச்ச வேலைகளைப் பூத்தி செய்தார் அவர் மகன் லின்கன். |
நிகழ்ச்சிகள் நடக்கும் ஆம்ஃபி தியேட்டர். கலை நிகழ்ச்சிகளும், மற்ற சித்திரங்களும் காட்சிக்கு வைக்கப் படுகின்றன. |
தினமும் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காகக் கூடும் கூட்டம். நிகழ்ச்சி முடிவில் அமெரிக்க் அதிபர்களின் முகங்கள் வண்ண ஓளியில் பிரம்மாண்டமாகத் தெரிகின்றன. மக்களின் உணர்ச்சி வெள்ளம் கணக்கில் அடங்காது. |
இதுபோலப் நான்கு இடங்களிலிருந்து ராட்சச விளக்குகள் ஒளி பாய்ச்சுகின்றன. ஒரு ராணுவ நடவடிக்கைபோல இந்த விழா தினமும் இரவு ஒன்பது மணிக்கு நடக்கிறது. |
அத்தனை மாகாணங்களின் கொடிகளும் பறக்கின்றன.வண்ணங்கள் கண்ணைப் பறிக்கும்படி. |
ஜார்ஜ் வாஷிங்டன்,தாமஸ் ஜெஃபர்சன், தியோடார் ரூஸ் வெல்ட்,ஆப்ரஹாம் லின்கன். அமெரிக்காவின் அடிப்படை ஆதாரச் சட்டங்களையும் பிரமாணங்களையும் அமைத்தவர்கள். இங்கே ஒரு இணைப்பு யூ டியூபிலிருந்து கொடுக்கிறேன். |
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்