Blog Archive

Sunday, June 22, 2014

ஒரு ஞாயிற்றுக்கிழமையின் அலையும் மனது

சென்ற வருடம் நடந்த பாதை.
மறப்பதும் நல்லதுதான்.
இப்பொழுது  படித்துக் கொண்டிருக்கும் கதைகள்
ஈச்ச மரத்தின் நிழல் நம் ஊரில்.
இது  கலேடியமா....
கற்றாழையின் இனிய  மலர்
நண்பரின் வருகைக்குக் காத்திருக்கும் ஆர்க்கிட் மலர்கள்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption

19 comments:

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் மிக அழகு.

கோமதி அரசு said...

சுற்றிலும் உலகம்சிறியதும், பெரியதுமாக சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது என்று திரு. ஜான்கிராமன் அவர்கள் சொல்வது உண்மை என்று உங்கள் படங்கள் எல்லாம் சொல்கிறது.

ஸ்ரீராம். said...

படங்கள் மனதின் எண்ணங்களையும் பகிர்கின்றன. தி.ஜா கதைகள் அருமையான புத்தகம். என்னிடமும் உள்ளது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, நேரம் கிடைத்திருக்கும் பிள்ளைகள் கிளம்பி விட்டார்களா. தி.ஜானகிராமன் உள்ள உணர்வுகளை விரிவாகவே எழுதுவார்.சாதாரண வார்த்தைகள் அலங்காரமாக வந்து விழும் இப்போது அன்பே ஆரமுதே வந்திருக்கிறேன். ஏதோ நிம்மதி கிடைக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் இரட்டிப்பு சந்தோஷம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் ,எழுத்துகள் தான் நம்மை வந்தடைகின்றன. மனிதரைப் பற்றியோ, அவரது வெளி உலக வார்த்தைகள் பற்றியோ கவலை வேண்டாம் என்ற எண்ணத்தை இந்த எழுத்துகள் மனத்தில் உருவாக்குகின்றன.

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் அருமை. முதல் படம் grt temple bay என நினைக்கிறேன். வாசிப்பு மனதுக்கு அமைதி தரும். மலர்கள் அழகு.

RajalakshmiParamasivam said...

படங்கள் அருமை மேடம். மிகவும் ரசித்தேன் உங்கள் படங்களை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி வாசிப்பது உண்மையிலேயே சூழ்நிலையை மறக்க வைக்கிறது. வருகைக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜலக்ஷ்மி,எதுக்குப்பா மேடம் எல்லாம். சும்மா அம்மான்னால் கூட போதும். வருகைக்கு நன்றிமா.

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் அழகோ அழகு

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அருமை அம்மா... ரசித்தேன்...

துளசி கோபால் said...

அனைத்தும் அழகே!

கிருஷ்ணாவின் ப்ரேஸ்லெட் போல ஒன்றை இங்கே ரெண்டு சிறுமிகள் சன்டே மார்கெட்டில்செஞ்சு வித்துக்கிட்டு இருப்பதை பார்த்தேன்!

என்னிடமும் தி.ஜ.வின் அதே தொகுப்பு இருக்குப்பா. முந்தி வாசிச்சதுதான். இப்போ மீண்டும் ஒருக்கா வாசிக்கலாமான்னு இருக்கு.

ஒரே புத்தகத்தை ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் வெவ்வேற உணர்வுகளை மனம் தோற்றுவிக்கறதே! ஒருவேளை இது நம் மனசு காட்டும் மாயாஜாலமோ!

வல்லிசிம்ஹன் said...

நீங்க சொல்றது அத்தனையும் நிஜம் துளசி. நானும் இரண்டாம் தடவை படிக்கும் போது வேற மாதிரி புரிந்து கொண்டேன். நிறைய புத்தகங்களை மாப்பிள்ளையால் எடுத்துவரமுடியவில்லை.நான் தான் அங்க போகணும்பா.மனசு ஜாலம் இல்லைப்பா. முதல் தடவை என்னா ஆகப் போகிறது என்ற ஆவல்.இந்தத் தடவை தெரியும் அதனால் நின்று நிதானமாப் போகலாம்.:)))

இன்னம்பூரான் said...

கவின்கலை சிந்திக்க வைக்கும். சிந்தனை அழகுக்கு ஊற்று. என்று மாறாத இளமை மனதுக்கு உண்டு என்பதற்கு உதாரணம், இந்த் பதிவு. நான் இப்போது ல.ச.ரா. வின் 'அவள்' படித்துக்கொண்டு இருக்கிறேன். அவர் தெய்வம் இல்லை என்றாலும் தெய்வீகம் இருக்கிறதே என்கிறார். அது இப்போது புரிகிறது.

Geetha Sambasivam said...

படங்களின் மூலமே கதை சொல்லும் அழகு சிறப்பு. மௌனமே வார்த்தையாகக் கவிதை வடிக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி இ சார். லா.ச.ராவின் பெண் படித்ததில்லை. அவர் தன் அம்மாவுக்காகக் கட்ட ஆரம்பித்த வீட்டின் ,அதன் சிதிலத்தையும் பார்த்திருக்கிறேன். வாழ்வின் வித விதமான சிந்தனையாளர்களில் அவர் எழுத்து எனக்குப் புரிபட நேரமாகிறது. நீஙகள் குறிப்பிட்டிருக்கும் தெய்வீகம் மிகப் பிடித்திருக்கிறது ஜி.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா. நம் கண்களுக்கு வேண்டுமென்பதைக் காமிரா பிடிக்கிறது. பிடித்ததைப் பதிவதால் நம் மனமும் அதில் பங்கு கொள்கிறது அந்த நாளைய நிகழ்ச்சிகளை அசை போடுகிறது.

கோமதி அரசு said...

கயலும், குழந்தைகளும் ரயிலில் போய் கொண்டு இருக்கிறார்கள் .இன்று இரவு ஊருக்கு போய் விடுவாள்.
குழந்தைகளுடன் கோவை , மதுரை என்று பயணம், 22ம் தேதி தான் மாயவரம் வந்தேன்.
மாதா மாதம் கோவை பயணம் என்பதால் பதிவுகள் எல்லாம் தாமதமாய் தான் படிக்க முடிகிறது அக்கா.
இப்போது புது பதிவு ஒன்று அம்பாளடியாள் அழைப்புக்கு இணங்க எழுதி இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
தொடர் பதிவு இது.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்....