Blog Archive

Friday, June 13, 2014

வைகாசி பூரண நிலா.

பியோனீஸ்
இந்த மாலையிலும்   கிழக்கு வெளுத்தது நிலா அன்னையின் கருணையால்

பல் ஆயிரம் வெண்முத்து மணிகள் திரண்டு குவிந்தது போல ஒரு தோற்றம். என்ன ஒளி.
இப்போதுதான் வெளியே வர ஆரம்பித்திருக்கிறாள் நிலா மங்கை. மழை வந்து   நிலவைப் பார்க்க முடியாமல் போனது  மே மாதம்.   .இந்த மாதம் பெருங்கருணை புரிந்தாள் நிலாம்மா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption

17 comments:

Geetha Sambasivam said...

எல்லாப்படங்களும் அருமை வல்லி. காலம்பர நாலு மணிக்கே சூரியோதயமா? ஆச்சரியமா இருக்கே! :)

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அருமை அம்மா...

8 மணி நேரம் தான் இரவா...?

ஸ்ரீராம். said...

அருமையான படங்கள். எட்டரை மணிக்கும் இருட்டவில்லை. காலை நாலு மணிக்கே சூரியன்..... ஐயோ!

கரந்தை ஜெயக்குமார் said...

படம் ஒவ்வொன்றும் அழகோ அழகு

இராஜராஜேஸ்வரி said...

பல் ஆயிரம் வெண்முத்து மணிகள் திரண்டு குவிந்தது போல ஒரு தோற்றம். என்ன ஒளி.
இனிய பதிவுகள்..வாழ்த்துகள்.!

மாதேவி said...

வைகாசியின் பூரணநிலாப் பெண் அழைத்துவந்திருக்கிறாள் என்னை. பலவிதகடமைகள் வரமுடியாமல் செய்கின்றன. முடிந்தபோதுவருவேன்.

அழகியபடங்கள். வாழ்த்துகள்

துளசி கோபால் said...

Super !!! Good on you!

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா. குளிர்காலத்தில் 4 30க்கு இருட்டிவிடும்.8 மணியாகும் சூரிய வெளிச்சம் கண்ணில் பட. தெருவில் போகும் வண்டிகள் ஐந்தரை மணிக்கே பள்ளி,பணியிடம் என்று ஆரம்பிக்கும். இவர்களின் அசராத மனப்பான்மை அதிசயப் படவைக்கிறது.பக்கத்துவீட்டுக் குழந்தைகள் ஆறு மணிக்கே சாப்பிட்டுவிடுகிறார்கள் எட்டு மணிக்குப் படுக்கப் போயாகவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன். இதுவரை 8.30. ஜூலையில் 9 ஆகலாம். எங்கள் சின்னமகன் இருக்கும் ஊரில் பத்துமணி வரை சூரியன் இருக்கும். நாமே கட்டுப்பாடோடு உறங்கப் போய் எழுந்தால் உண்டு.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.கோடைகாலத்தை மிக உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள். 80 டிகிரீ ஆகிவிட்டால் மஹா வெய்யில்.இவர்களுக்கு.:))) ஜன்னல்கள் திறக்கப்படும். பூச்சி ஷட்டர் போடப்படும்.பின்னாடி தோட்டத்தில் ப்ளாஸ்டிக் நீச்சல் குளத்தில் குழந்தைகள் ஆட ஆரம்பிப்பார்கள். தண்ணீர் பில் ஏறும். கூடைப்பந்து, கால்பந்து,மரமேறுதல் எல்லா வைபவங்களும் கிரமமாக நடந்தேறும்.

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு ஜெயக்குமார். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி. உங்கள் பதிவிலும் புதிதாக எதையும் காணோம். கோடை விடுமுறைக் காலத்தில் முடிந்தால் பதிவிடுங்கள். வேலையைப் பொறுத்து நீங்கள் வந்தால் போதும்.நான் புரிந்து கொள்வேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜராஜேஸ்வரி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க துளசிமா. உங்கள் குளிர்காலம் ஆரம்பமாகிச் சில்லென்று இருக்கும். தான்க்ஸ் பா.அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.

அப்பாதுரை said...

படங்கள் ஜோர். நேற்று மாலை நிலா மிகப் பெரிதாக இருந்தது.. சட்டென்று படம் பிடிக்க முடியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

நேற்று மாலை பார்த்தீர்களா துரை. நான் இரவு பாத்ரூம் ஸ்கைலைட்டில் ஒரே வெளிச்சத்துக்கு நடுவில் நிலா பார்த்தேன். மூன்று மணி இருக்கும்.ரசித்துவிட்டுப் படுத்துக் கொண்டேன். இனி பின்மாலை நிலாவைப் பார்க்கலாம்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...