Blog Archive

Wednesday, June 18, 2014

சில சில் நினைவுகள் 15 ஏப்ரில் ....நவம்பர்1967

சிங்கத்தின்   கைத்திறன்  இரை  பொறுக்கும் பறவையும்    மரத் துண்டில் மனித முகமும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மஞ்சள் ரோஜா.  ஒரு நர்சரியில்
சேலம்  பயணம் வெஸ்ட்கோஸ்ட்  ரயிலின் ஆதரவில் சத்தம் தூசி,குழந்தையின் அழுகை  ,வெந்நிர் ஃப்ளாஸ்கிலிருந்து கொட்டி பாட்டி புடவை நனைந்து என்று அட்டகாசமாக  நடந்தது.                                          சேலம் ரயில் நிலையத்துக்கு சிங்கம் வந்திருந்தார்.  அங்கேயும் வெய்யில்.                                       அதுவரை காச்மூச் என்று கத்திக் கொண்டு இருந்தவன்  அப்பா கையில் சாதுவாகப்  படுத்துக் கொண்டான்.. ப்ரேக் வானிலிருந்து  தொட்டில் மெத்தை எல்லாவற்றையும்  இறக்கி வைக்கக்   கூடவந்த நண்பர்கள் உதவினார்கள்.  வீட்டிற்கு வந்தோம்.    வீடு பளபளவென்று இருந்தது. ஐயா நான் இல்லாவிட்டால்   நல்லாவே பார்த்துக் கொள்கிறார் போல் இருக்கே    என்று யோசித்த வண்ணம்  , இரவுக்கான   சாப்பாட்டுப் பொட்டணங்களைப் பிரித்தேன். மாமியார்    எல்லோருக்கும் தோசையும் புளிமிளகாயும்    நன்றாகப் பார்சல் செய்து  கொடுத்திருந்தார். . நானும் தைரியமாகச் சாப்பிடலாம். குழந்தை இந்த   ஆறு மாதங்களில் க்ளாக்ஸோவிற்கும்   ,அமுல்ஸ்ப்ரேவுக்கும்  பழகி இருந்தான். பால் பவுடரைக் கரைக்கத் தனி                                  பாத்திரம்,மில்க் மிக்சர் என்று வாங்கிக் கொடுத்திருந்தார் கமலம்மா.  அப்போது ப்ளாஸ்டிக் பாட்டில்கள் வரவில்லை. கையில் எப்பொழுதும் கண்ணாடி   ஃபீடிங் பாட்டில்  இருக்கும். பாட்டில்களை  ஸ்டெரிலைஸ் செய்ய ஒரு பெரிய அலுமினிய        பாத்திரம்.!!







அம்மாவிடமிருந்து     பார்சல் வந்தது. வெந்நீர்த்தவலையும்   ,எவெர்சில்வர் பக்கெட்டும்   குழந்தை குளிப்பதற்காக.  மதுரையிலிருந்த சதர்ன் ரோட்வேஸ் வண்டியில் அனுப்பி இருந்தார்கள்.. அப்பாவுக்குப் போடி என்ற ஊருக்கு மாற்றி இருப்பதாகவும் தானும் ரங்கனும் மட்டும் பசுமலையில் வசிப்பதாகவும். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில்  இராமேஸ்வரம் போக வேண்டும் என்றும் கடிதம் வந்தது. சீனிம்மாவுக்கு இருப்பிக் கொள்ளவில்லை. ஸ்டவ் ஹீட்டர் அடுப்பில்  சமைக்க  அவருடைய ஆசாரம் ஒத்துக் கொள்ளவில்லை.  ஸ்டவ்வில்  சப்பாத்தி மட்டும் செய்து கொண்டார்.  மூன்றாம் நாள் மதுரைக்குக் கிளம்பிவிட்டார்.      அவருக்கு எங்கள் தனிக்குடித்தனத்தில் அவ்வளவு நம்பிக்கை.. ""ஆண்டா , ஜாக்கிரதையா இருந்துக்கோ.. லேகியம் மறக்காமச் சாப்பிடு. ஃபெரக்ஸ்   குழந்தைக்குக் கட்டிதட்டாமல் மெதுவாக ஊட்டு..  குழந்தைகள் துணிகளை வெள்ளைத் துணியில் வேப்பிலைகளோடு  மேல வை..தொட்டில் கட்டவில்லையானால் தூளியாவது கட்டித் தரச் சொல்  }}  என்று  அறிவுரைகள் சொல்லி  பஸ்ஸில் ஏறிவிட்டார். அவருக்கு முதல் காரணம் எங்களைத் தனியே விடுவதுதானாகத்   தான்  இருக்கவேண்டும் இங்கிதம் தெரிந்த மனுஷி..........

எனக்குப் புதுதோழி ஒருத்தி கிடைத்தாள்.   என் வயது. ஆனால் கல்லூரியில் அப்போதுதான்  இரண்டாம் வருடம் ஹோம்சயின்ஸ் படித்துக் கொண்டிருந்தாள். அண்ணா  சேலத்துக்கு மாற்றி வந்ததால்  அவளும் வந்துவிட்டாள்.  இன்னும் கொஞ்ச நாட்களில் சென்னைக்குப் படிக்கச் சென்றுவிடுவாள். அவளும் ரேவதிதான்.ரேவதி பஞ்சரத்தினம்.    தினம் சிங்கம் வேலைக்குப் போனவுடன் வந்துவிடுவாள் வரும்போதே  ஏதாவது ஒரு புது ரெசிபி கொண்டு வருவாள்.    சாயந்திர வேளைவரும் சைக்கிள் வண்டிக் காய்கறிக் கடையில் குடமிளகாய், காலிஃப்ளவர்,  பெரிய உருளைக் கிழங்கு  எல்லாம் ஒருகிலோ ஒரு ரூபாய்க்கு வாங்கிவிடுவாள்.    இரண்டு மூன்று நாட்கள் பஜ்ஜி,கட்லட்,போண்டா எல்லாம் வெளுத்து வாங்குவோம். நான் குழந்தைக்கு  வேண்டும் என்கிற வேலைகளைக் கவனிக்க  அவள் இதையெல்லாம் செய்து முடித்துக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுப் பறந்துவிடுவாள். அந்த மூன்றுமாதங்கள் பாட்டிலும் சமையலிலும்  கடந்தன.  பாபு தவழ ஆரம்பித்தான்.          இவரும் பெரமனூர்   KHMS  colony   என்கிற இடத்தில்  வீடு பார்த்தார்.  அது இன்னும் கொஞ்சம் பெரிய வீடு. ஒரு வரவேற்பு அறை.  வராண்டா,ஒரு படுக்கும் அறை. இன்னோரு வராண்டா  .இன்னோரு அறை. பிறகு   சமையலறை. அதன் பின் பெரிய முற்றம்.  கழிப்பறை, குளிக்கும் அறை. வீடு மாற்றியதும்   காஸ் அடுப்பும் வந்தது.  பாபுவுக்கு ஆயுஷ்ஹோமம் செய்யச் சென்னைக்கு வருமாறு மாமியாரிடமிருந்து அழைப்பு   வந்தது. இனி மேற்கொண்டு பார்க்கலாம்.

11 comments:

ஸ்ரீராம். said...

ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு உ.கி எல்லாம் இப்போது கிடைக்குமா? :)))

வல்லிசிம்ஹன் said...

எல்லாக் காய்கறியும் சேர்த்து 4 ரூபாய்கள் ஆனது ஸ்ரீராம். எங்கள் சம்பளமும் அப்போது 500 ரூபாய்க்குள் தான்.:)

Geetha Sambasivam said...

கிலோ உ.கி. ஒரு ரூபாய்க்கு நானும் வாங்கி இருக்கேன். கடலை எண்ணெய் கிலோ 3 ரூபாய், நல்லெண்ணெய் 4-00 அக்மார்க், தே.எண்ணெய் 5-50 என வாங்கி இருக்கேன். பால் படி ஒன்றரை ரூபாய். எழுபதுகளில் கூடப் படியில் அரிசி, பால் கிடைச்சுட்டு இருந்தது. அதன் பின்னரே மெல்ல மெல்ல லிட்டருக்கு மாற்றம். :)

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.ரசித்துக் கருத்துச் சொன்னது மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

பசுமலையில் இருந்தபோது இன்னும் விலை குறைவு கீதா.அரையணாவுக்குக் கீரை.அதாவது ஐந்து பைசாவுக்கு. அரிசி கொடுத்தால் கீரைக்காரி மிக சந்தோஷப்படுவாள். எட்டணாவுக்கு உ கிழங்கு கிடைக்கும். எங்கள் அழருக்கும் ஒரு வேளை கறியமுது செய்வதற்கும் மறுநாள் குழம்பில வெங்காயத்துடன் போடுவதற்கும் சரியாக இருக்கும். 70களில் கோவையில் லிட்டர் ஒண்ணரை ரூபா என்று ஒன்றரை லிட்டர் வாங்கிய ஞாபகம்.:))

ADHI VENKAT said...

வல்லிம்மா முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் எங்களின் மணநாளுக்காக அனுப்பிய வாழ்த்தை இப்போ தான் பார்த்தேன்.மிக்க நன்றிம்மா. மகளின் விடுமுறை, என்னவரின் வருகை, உடல்நிலை சரியில்லாமல் போனது போன்ற காரணங்களால் பதிவுலகம் பக்கமே மூன்று மாதங்களாக வரவில்லை...

இப்போ தான் உங்களின் விடுபட்ட பதிவுகள் அனைத்தையும் படித்தேன். இனி தொடர்ந்து வருவேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி, உடல் நலம் எப்படி இருக்குமா.பதில் வரவில்லை என்றதும் இப்படி ஏதாவது இருக்கும் என்று தோன்றியது. பாவம் நலமானதும் பதிவெழுத ஆரம்பியுங்கள். குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருப்பாள். கோடை வெயில் குறைந்ததா.பதிவுகளைப் படித்ததற்கும் மிக நன்றி கண்ணா. டேக் கேர்.

வெங்கட் நாகராஜ் said...

ஒரு சில வருடங்களுக்கு முன்பு கூட தில்லியில் உ.கி. கிலோ இரண்டு ரூபாய்க்கு கிடைத்தது. இங்கே உ.கி.யும் வெங்காயமும் தானே முக்கிய உணவு ! :)

இனிமையான நினைவுகள் தொடரட்டும் வல்லிம்மா...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வெங்கட். தில்லியில் ஆலூ ,ப்யாஸ் இல்லாமல் சமைக்கவே முடியாதென்று கேள்விப்பட்டிருக்கிறேன்.இந்த ஊரிலும் வெங்காயம் இருக்கிறது.நம் ஊர் சுவை இல்லை.நன்றி மா.

கோமதி அரசு said...

70லில் கோவையில் இருந்தோம் அம்மா கீரை கொண்டு வருபவருக்கு அரிசி கொடுத்து ஒரு முறம் கீரை வாங்குவார்கள்.
அந்தக்கால நினைவுகள் மிக அருமையாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

நாங்களும் கோவையில் இருந்தோம். ராமலிங்க நகர் என்று நினைக்கிறேன். இப்படிப் பார்க்காம விட்டுவிட்டோமே கோமதி. பாலும் வெண்ணெயும் காய்கறிகளும் சிறப்பான ஊர் அது.