Blog Archive

Friday, May 09, 2014

சிங்கம் பார்ட் 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இது  நடந்தது    கோயம்பத்தூரில் நாங்கள்  இருந்த மூன்று வருடங்களில் ஒரு நாள்.   சித்திரைத் திருவிழாவை ஒட்டி  கண்காட்சிக்குப்  போகலாம் என்று   கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தேன்.       சின்னக் குழந்தைகளுக்கு  வேறு  பொழுது போக்கு இல்லை.  அங்கே போனால் ரங்கராட்டினம்,வளையல்  கடைகள்  இது போலப் பல  பொழுதுபோக்குக்கான நிகழ்ச்சிகள் இருக்கும்.                                                    
 தோழர்கள் குடும்பங்கள் இரண்டு என்று பத்துப் பேர்   போகலாம்   என்று என் திட்டம். மற்றவர்களிடம் சொல்லி வைத்தேன். ஒரு தோழிக்கு இரண்டு குழந்தைகள் . மற்றவளுக்கு மூன்று.    .  இரண்டு     மோட்டர்பைக்குகள்,  ஒரு ஸ்கூட்டர்  என்று எல்லோருக்கும் வசதியாக வண்டிகள் இருந்தன.      சிங்கத்திடம்   பழைய நார்ட்டன் பைக் இருந்தது. அப்பா  அது போடும் சத்தம்  குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள்  ஐவரும் அதில் மிக சௌகரியமாக உட்கார முடியும்.   என் மடியில் சின்னவன் .இரண்டு வயது.  நான்கு ,ஆறு வயது  பெண்ணும் பிள்ளையும்  இவருக்கும் முன்னால் உட்கார்ந்து கொள்வார்கள்.    

                                                        அப்பாவுக்குப் பதில் ஹார்ன் அடிப்பது  ,கியர் போடுவது   எல்லாம் பையனும் சேர்ந்து  செய்வான்.  எல்லோரும்             கண்காட்சியில் காணாததைக் கண்டது போல  எல்லாக் கடைகளுக்கும் போய்விட்டு  அப்பளம், மிளகாய் பஜ்ஜி,,         இன்னும் பல பொருட்கள் எல்லாம் வாங்கிக்   கொண்டு  வீட்டுக்குத்திரும்பலாம் என்று மெதுவாக வண்டிகள் நிறுத்தி இருந்த இடத்துக்கு வந்தோம்.        பாண்ட் பாக்கெட்டில்   கைவிட்டுச் சாவியை எடுக்கும்போதுதான்  பர்ஸ் அங்கே இல்லாதது தெரிந்தது. .. ரேவ்  உன்  கிட்ட   பர்ஸ் கொடுத்தேனா  என்று கேட்டதும் நான் மறுத்தேன். பணம் கொடுத்துவிட்டு  மீண்டும் உள்ளே வைத்துக் கொண்டீர்களே............................................... அதற்குள் கல்யாணராமன் பானு தம்பதியினர் வந்துவிட்டனர். என்னய்யா       பர்ஸை  அபேஸ்   பண்ணிட்டானா எவனாவது என்கவும்  எனக்குச் சொரேர் என்றது. .                                                                      

   மற்ற தம்பதியினரும் அக்கம் பக்கம் தேட ஆரம்பித்தனர்.  பலனில்லை.                                                        நான் ஆரம்பித்தேன் வீட்டுச் சாவி அதிலதான இருக்கு. வீட்டுக்குப் போய்க் கதவைத் திறக்கணும்,குழந்தைகள் சாப்பிடணும்.  இதுக்காகத்தான் உங்களை  ஷர்ட் பாக்கெட்டை உள்ளே வைத்துத் தைக்கச் சொன்னேன்.  இப்படி ஆரம்பித்து நீண்டது என்பிரசங்கம்.                                                                                ஆஹா  இப்ப என்னமா ஆச்சு  யு வாண்ட்  டு கெட் இன்சைட்  அவ்வளவுதானே, வா வீட்டுக்குப் போகலாம். வாங்கடா எல்லாம் போகலா,ம்.   ஏய்  என்ன பண்ணுவே, எங்க வீட்டுக்கு வந்துடறியா,  என்ற கேட்ட            தோழர்களிடம்  மறுப்பு  சொல்லிவிட்டு

 வண்டியை ஒரு உதை விட்டார்.  பாதித் தூக்கத்தில் இருந்தக்       குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். எனக்குக் கண்காட்சி போய் வந்த களிப்பெல்லாம்  போய்விட்டது.வீட்டு  க்ரில்    கேட்டைப் பார்த்தபடி  நின்றேன். படியில் உட்காரு நீயே விழுந்துடற மாதிரி இருக்கே  என்றவர்   வீட்டின் பின்பக்கம்                        விரைந்தார். அந்தக் கதவுக்குச் சாவி கிடையாதே   என்று குழம்பினேன்.                                                            
  அடுத்த நொடி ஒரு தடால் சத்தம். பின் வீட்டு குஜராத்தி  மாமா மாமிகள் வெளியே வந்துவிட்டார்கள். ரேவ்தி  டிர்டன் திர்டன் சோர் என்று அலற  இவர் அவர்கள் பக்கம் போய்த் தன் முகத்தைக் காண்பித்தார்.  வீடு பூட்டிக்கிச்சா. என்னா ரேவ்தி, என்று அங்கு வந்த என்னையும் விசாரித்தனர். நானும்           ஆமாம் வீடு பூட்டிக்கிச்சு. நாங்கள் உள்ளே போகணும் .அதான் தட்டிப் பார்க்கிறார் என்று சொல்லி முடிப்பதற்குள் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

குழந்தைகள் சத்ததில் விழித்துக் கொண்டு டாடியின் வீரப் பிரதாபத்தைப் பார்க்க ஆசையாக வந்து விட்டார்கள்.                                                                                                           பசங்களா நீங்க  ஒன் டூ த்ரீ சொன்னாதான் கதவு திறக்குமாம் ,,,ரெடி????  என்றதும் மூணும்    கோரசாக   சொல்லவும்    பின்ஷெட்டின் உத்தரத்தைக்  கைகளில்   பிடித்துக் கொண்டு டார்சான் போல்க் கதவை நோக்கிப் போனார். அடுத்த உதையில்  கதவு தாழ்ப்பாள்   விழுந்து திறந்து கொண்டது..   அவர் முதலில்  நுழைந்து  லைட் எல்லாம் போட்ட பிறகு எங்களை வர்ச்சொன்னார்.

                                                                               அப்பாடி என்றூ  நுழைந்தாச்சு. குழந்தைகள் சாப்பிட்டு  தூங்க வைத்தாச்சு. அடுத்த கவலை   பின் கதவைப் பூட்டாமல் எப்படித் தூங்குவது,.  எனக்குத் தான் கவலை அவர் திறந்து இருந்தாலும்    பயமில்லாமல் தூங்குவார்.                                                                                      நீ வேணா ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்துக்கோ. கூர்க்கா வேலை பார்க்கிறியா   இன்னிக்கு என்று   சிரித்தர்.   எனக்கென்ன பயம் நீங்க இருக்கும் போது.  நான் விழித்திருக்கிறேன் என்றேன். எல்லாம் ஒண்ணும் வேண்டாம்                                                          இதோ    பார்   என்று ஒரு நீளமான முறுக்குக் கம்பியைக் காட்டினார்.  கதவின் பின்னால் தாழ்ப்பாள் மட்டுமே உடைந்திருந்தது. அதன் ட னா        வடிவ வளைவு அப்படியே இருந்தது. அதையும் பக்கத்திலிருந்த பாத்ரூம்  கதவுத் தாழ்ப்பாளையும் இணைத்து  முறுக்கி விட்டார். நாளை நீ குளிக்கப் போவதற்கு முன் சரி செய்துவிடுகிறேன் என்று  உறுதியும் கொடுத்துவிட்டார்.  
 பிறகென்ன. நிம்மதியாகத் தூங்கப் போனேன்.                             அடுத்த நாள் காத்ரேஜ்   கம்பெனிக்காரர்கள் வந்து  ஆட்டோமாடிக்  லாக்கை மாற்றி வேறு சாவியும் கொடுத்தார்கள்.     பணம் போனது போனதுதான். பரவாயில்லை                                                                               வேறு       ஒன்றும் நடக்கவில்லை..  சம்யோசித சிங்கம் இருக்கும் போது எனக்கென்ன கவலை.

27 comments:

ஸ்ரீராம். said...

//பின்ஷெட்டின் உத்தரத்தைக் கைகளில் பிடித்துக் கொண்டு டார்சான் போல்க் கதவை நோக்கிப் போனார்//

:))))))

எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் டென்ஷனே இல்லாமல் சமாளிப்பார் போல... சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

Geetha Sambasivam said...

நிதானமாக எல்லாத்தையும் செய்திருக்கார். அதோடு கோபமும் வராது போலிருக்கு. நல்ல அனுபவப் பகிர்வு. கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. இன்னும் சொல்லுங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

நிதானம் + சரியான செயல் அம்மா...

அப்பாதுரை said...

ஜேம்ஸ் பான்டு. தான்.

ஆமா வளைக்கடை பொழுதுபோக்கா?

வெங்கட் நாகராஜ் said...

எதையும் சமாளிக்கும் திறன் அவரிடம் இருக்கும்போது என்ன கவலை.....

:)))

இராஜராஜேஸ்வரி said...

நாங்கள் ஐவரும் அதில் மிக சௌகரியமாக உட்கார முடியும். என் மடியில் சின்னவன் .இரண்டு வயது. நான்கு ,ஆறு வயது பெண்ணும் பிள்ளையும் இவருக்கும் முன்னால் உட்கார்ந்து கொள்வார்கள்.

நாங்களும் கோவையை இப்படித்தான் வலம் வருவோம்..
ஒரு எக்ஸிபிஷன் விட்டதில்லை..

பிள்ளைகளுக்கு ரொம்பவும் கொண்டாட்டம்தான்.

ஒருமுறை காலை வாக்கிங் என்று பைக்கை எடுத்துக்கொண்டு ஊட்டி சென்றுவிட்டார்கள்..

இன்னம்பூரான் said...

நாம் நினைவுகளில் தான் வாழ்கிறோம். பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்த காலம் போய், இப்போது சாவி கோத்த கயிற்றை கழுத்தில் அணிந்து கொள்கிறேன்.

அப்பா! இந்த ஜி+ கிடைக்கவேயொல்லை.

ராமலக்ஷ்மி said...

ஆம். சமயோசிதமாக செயல்படுவது இயல்பிலேயே இருந்திருக்கிறது. அருமையான நடையில் சொல்லி வருகிறீர்கள். தொடருங்கள்.

காரஞ்சன் சிந்தனைகள் said...

அந்தச் சமயத்தை சமயோசிதமாகச் சமாளித்த விதம் அருமை!

வல்லிசிம்ஹன் said...

நிஜம் தான் ஸ்ரீராம். எங்கள் வீடு பூராவும் அவருடைய ஆளுமை இருக்கும். ஒன்றுமே கஷ்டம் இல்லை அவருக்கு.

வல்லிசிம்ஹன் said...

கோபம் எப்பவாவது வரும் வீட்டில் வச்ச பொருள் அந்த இடத்தில இல்லைன்னால் டென்ஷனாகிவிடுவார். அதுவும் இந்த இரண்டு வருடங்களாக என்னை எதற்கும் எதிர்பார்ப்பதே இல்லை. கீதா. அவர் அம்மா போலவே பொறுமை.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தனபாலன். மிக நிதானம்.அலுக்காமல் சலிக்காமல் உழைப்பு. தீர்க்கமான அறிவு. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஓ உங்களுக்க்குச் சொல்லலியே. முதல் கடிதம் இன்லாண்ட் லெட்டரில் பின்பக்கம் 007 ஃப்ரம் அட்ரஸ். அப்பாதானே போஸ்ட் மாஸ்டர். என்னம்மா என்று சிரிக்கிறார். அதில் புதுக்கோட்டை ஸ்டாம்ப் இருந்ததால் என் கைக்குப் பத்திரமாக வந்தது. மத்ததுக்கு பாண்டைக் கொள்ளவில்லை>}}} துரை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். கவலைக்கு இடமே கொடுக்கவில்லை. ஈஸி கம் ஈசி கோ லைஃப் என்பார். அதே போல் ஆச்சு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி கோவை நட்களை என்னால் மறக்க முடியாது. என்ன சுகமான நாட்கள். நாங்களும் ஊட்டிக்கு அடிக்கடி செல்வோம். இப்பொழுதும் அவருடன் செல்கிறீர்களா. மிக நன்றி மா.

RajalakshmiParamasivam said...

நல்ல அனுபவப் பகிர்வு மேடம். சமயோசிதமாக பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கிறார். அனுபவங்கள் கற்றுத் தரும் பாடங்கள் ஏராளம் . தொடர்ந்து பகிருங்கள்.....

வல்லிசிம்ஹன் said...

வரணும் இ சார். எனக்கு உங்கள் பதிவுகள் அப்டேட் ஆகவே இல்லை. இல்லை நேரம் மாற்றத்தால் தெரியவில்லையான்னு நினைக்கிறேன். ஜி ப்ளஸ் ஒத்துழைப்பு குறைச்சலாத்தான் இருக்கு. நலமாக இருக்கிறீர்களா. பவர் இல்லாவிட்டாலும் சாவி கையில் இருக்கே .அது நிம்மதிதான். சும்மா சொன்னேன் இ ஜி.

வல்லிசிம்ஹன் said...

பத்தி மட்டும் பிரிக்க முடிந்தால் நன்றாக இருக்கும் ராமலக்ஷ்மி. இன்னும் உற்சாகத்தோடு எழுதத் தோன்றும். இயல்பிலியே அசராத மனுஷர். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராஜலக்ஷ்மி. இப்ப இதையெல்லாம் அவரிடம் சொல்லணும்னு நினைக்கிறேன். அவருக்கே தெரிந்திருக்கும். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீ சேஷாத்ரி. எனக்காவது தயக்கம் உண்டு. அவருக்கு எதுவும் வெட்டு ஒண்ணு துண்டு இரண்டுதான். நன்றி மா.

அப்பாதுரை said...

//. முதல் கடிதம் இன்லாண்ட் லெட்டரில் பின்பக்கம் 007 ஃப்ரம் அட்ரஸ். 

he had style.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்.26 வயசில் அது நல்ல விளையாட்டுதான். இயன் ஃப்ளெமிங்கின் அத்தனை நாவல்களும் வீட்டில் இருந்தன. அப்புறம் வளையல் கடையும் புடவைக் கடையும் பொழுது போக்கு இல்லை பணப் போக்கு துரை.

Ranjani Narayanan said...

உண்மையில் தான் சிங்கம் என்று நிரூபித்துவிட்டார் போலிருக்கிறதே!
நீங்கள் உங்கள் நினைவுகளைச் சொல்ல சொல்ல எங்கள் மனதில் சிங்கம் பற்றிய சித்திரம் மெல்ல மெல்ல உருவாகி வருகிறது. உயிரோட்டமுள்ள மலரும் நினைவுகள், வல்லி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ரஞ்சனி.அவரை இன்னும் என்னுள் தக்கவைத்துக் கொள்ளத்தான் இந்த நினைவுப் பதிவுகள். ரசித்துப் படித்ததற்கு மிகவும் நன்றி.

துளசி கோபால் said...

சிங்கம் எதுக்காவது அசருமா?

பெயருக்கேத்த மனிதரா இருந்துருக்கார்.

நமக்குத்தான் கொடுப்பனை இல்லை, இன்னும் கொஞ்சநாள் நட்பு கொண்டாட:(

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். துளசி. இப்படிச் சட்டுனு கிளம்புவார்னு தெரியாது. நானும் கொஞ்சம் பயபக்தியோடு இருந்திருப்பேன்.

மாதேவி said...

க்ரேட். கொடுத்துவைத்தவர்நீங்கள்.