Blog Archive

Wednesday, April 23, 2014

காஃபியில பல் தேய்க்கிறார்.... இன்னுமொரு நல் நினைவு 7

உலகமே  என்னுள் அடக்கம்:)
டி காஃப்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

உலகத்தில்  இன்றியமையாத  ஒரு பழக்கம்  . விட முடியாத பழக்கம்.
விலக்குவதால் நன்மை அதிகம்.'

தெரியும் ஐய்யா.
கொலெஸ்ட்ரால் குறையும்.
ஆமாம்.
உனக்கோ ஷுகர் இருக்கார்.

ஆமாம்.
ஸ்கிம்டு  பால் சாப்பிட்டால் போறுமே.
ஓ  அதுக்கென்ன.


இப்ப மட்டும்  ஒரே ஒரு கப் ப்ளீஸ்.:(
என்னடா காலங்கார்த்தால எனக்கு வந்த கஷ்டம்.
ஐஸ் பொட்டியைத் திறந்தால் பாக்கெட் பாலைக் காணோம்.
என்ன ஆச்சு?. ஃப்ரிட்ஜே சாப்பிட்டுடுத்தா.
நீங்க  இன்னோரு பால் எடுத்தீர்களா.

இல்லையேமா. அது உன் டிபார்ட்மெண்ட்...
என்னாச்சு.பாலா காணோம்????

 ஆமாம் வாங்கின ரெண்டில ஒண்ணு நேத்திக்குப் பாயசத்துக்கு எடுத்தது.
இன்னோண்ணு எங்க. ?
அடுத்த தட்டில எங்கயாவது ஒளிஞ்சிண்டு இருக்கும். யானை இருந்தால் கூடத் தெரியாது உனக்கு.
பழமும் காய்கறியும் தான் இருக்கு. தயிர் இருக்கு.
ஏலக்காய் இருக்கு. தண்ணீர் இருக்கு.

சரி பெருமாளுக்கு கைகாண்பிச்சுடு...

????
பின்ன கார்த்தால அஞ்சு மணிக்கு எழுந்து ஒரு மனுஷன் ஜிம்முக்குக் கிளம்பறான்.
ஒரு காப்பி  இல்லைன்னால் என்ன செய்ய முடியும்.

எனக்கே பசி, தலை கொண்டு போறது.
உங்களுக்குப் பதில் சொல்லக் கூட எனக்குத் தெம்பு இல்ல.
சரி  இந்தா ரெண்டு மாரீ  பிஸ்கட்  சாப்பிடு. நான் பால் பூத்ல
ஒரு பாக்கெட் கிடைக்கிறதான்னு பார்க்கறேன். அடுத்த செகண்ட்  மோட்டார் சைக்கிள் கிளம்பும்   சத்தாம்.

ஆஹா   நான் காண்பது கனவா. சிங்கம் கூட இந்தக் காலைக் குளிர்ல

லஸ் பக்கம் பாலுக்காகப் போகுமா??

போச்சே.
அந்தப் பாலைக் காய்ச்சியும் வைத்துவிட்டது:)
இதோ  காப்பியும் குடித்தாச்சு.

இப்போ விஜய் டிவியில் காலட்சேபம் காதில் விழுகிறது.
பதிவு எழுத யோசனையும் மேட்டரும் கிடைத்துவிட்டது இல்லையா.:)

காப்பியைப் பற்றித் தேடினபோது கிடைத்த தகவல்
அது ஒரு ஆந்டி ஆக்சிடந்டாம்.!!
க்ரீன் டீ மாதிரி. நம்ப முடியவில்லை இல்லையா. நானும் நம்பவில்லை. :)





38 comments:

Geetha Sambasivam said...

சமீபத்திய செய்திகள் காஃபியை உடலுக்கு, முக்கியமாய் இதயத்துக்கு நல்லதுனு சொல்றதாம். சரி, சரி, இன்னிக்கு சிங்கம் தயவாலே காஃபி கிடைச்சது. ஆனால் பால் பாக்கெட் போன வழி என்ன?? ஆனை வந்து குடிச்சுட்டுப் போச்சா?

Geetha Sambasivam said...

எங்க அப்புவுக்கு என்னிடம் சொல்றச்சே காஃபினு சொல்லாது. காப்பி என்று சொல்லும். கேட்டால் பாட்டிக்குக் காஃபினா புரியாது. காப்பினு தான் சொல்லணும் அப்படிங்கும்.

அப்பாதுரை said...

என்ன இப்படி சொல்லிட்டீங்க.. காபி elixir of life இல்லையோ?

வல்லிசிம்ஹன் said...

அட ஆனை குடிச்சாலாவது பரவாயில்லையே. விநாயகனுக்குக் கொடுத்தோம்னு தெரியும்.

ஒரே ஒருத்தர்கிட்டக் கேக்கணும் ,காணும்பொங்கல் லீவில போயிட்டாங்க:)
என் இதயத்துக்கு காப்பி நல்லதூனு இதயமே சொல்லிவிட்டது. இணையத்துல வைத்தியர்கள் எல்லாம் இருக்காங்களே.கிழவி வந்து காப்பி துதி பாடறதேன்னு நினைச்சுட்டாங்கன்னால் நம்ம இமேஜ் என்ன ஆகிறது!!!!!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

எங்க மாமியாரையும் பேரப்பசங்க பரிகாசம் பண்ணும். பஸ்ஸூ, பாலு,காப்பினு ஏன் கமலம்மா இழுக்கறேன்னு.:)

வல்லிசிம்ஹன் said...

கண்டிப்பா எலிக்சிர் தான் .யாரு இல்லைன்னு சொன்னா.
ச்சும்மா ஆரோக்கியமா சிந்திக்கணும்னு அப்படி ஒரு லைன் எழுதினேன் துரை:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காப்பிக்காக எதுவும் செய்வாங்க..:))

நல்ல தலைப்பு.. காப்பியிலே பல் தேய்க்கிறார் மாப்பிள்ளை டோய் :))

துளசி கோபால் said...

ஆஹா..... காஃபி காஃபி

இப்பெல்லாம் தினம் ஒரே ஒரு காஃபி மட்டும்தான். அதனால் சரவணபவன் காப்பி அளவில் ரெண்டு சேர்த்துக் குடிச்சுடுவேன்:-)

கோபால் இப்போ 'ஓவலுக்கு' மாறிட்டார்!!!!!!

ஆனாலும் போது விடிஞ்சதும் இந்தக் காப்பிக்கு நாக்கு அலையும் அலைச்சல் இருக்கே...... ச்சீச்சீ வேண்டி இருக்கா என்ன:-)))))

திவாண்ணா said...

//ஆந்டி ஆக்சிடந்டாம்.!!//
aunty ஐ accident பண்ணாதவரை சரிதான்!

திவாண்ணா said...

ஆனை வந்து குடிச்சுட்டுப் போச்சா?//
நான் அங்கே போகலை.... :-)))

திவாண்ணா said...

//அடுத்த செகண்ட் மோட்டார் சைக்கிள் கிளம்பும் சத்தாம். // அடப்பாவமே! மோட்டார் சைக்கிள் இந்த வயசிலே? பொடி நடையே தேவலை!

திவாண்ணா said...

ஆஹா நான் காண்பது கனவா. சிங்கம் கூட இந்தக் காலைக் குளிர்ல
லஸ் பக்கம் பாலுக்காகப் போகுமா??

போச்சே. அந்தப் பாலைக் காய்ச்சியும் வைத்துவிட்டது:) //

சமர்த்து சிங்கம்!

Kasu Sobhana said...

சுவையான, சூடான, மணமான காஃபி சாப்பிடுதல் மிக மிக சுக அனுபவம்தான். அந்த நேரத்தில் வீட்டிற்கு வெளியே ஒரு மழைச் சாரலும், ஒலிப் பெட்டியிலிருந்து சுகமான இதமான கர்நாடக சங்கீதமும் கேட்டுக் கொண்டு .... ஆ ஹா ...

கோமதி அரசு said...

காஃபியில பல் தேய்க்கிறார் மாப்பிள்ளைடோய் என்ற பழைய பாடலை பகிர்ந்து கொள்ளப் போகிறீர்கள் என நினைத்தேன்.

காஃபி விட்டு 20 வருஷம் ஆச்சு.
அதற்கு முன்னேல்லாம் சரியான நேரத்தில் காஃபி குடிக்கவில்லை என்றால் தலைவலிக்கிற மாதிரி இருக்கும்.

காஃபி கெடுதல் இல்லை, நல்லது என்பது என் கணவருக்கு நல்ல செய்தி ஒரு நாளில் நாலு காஃபி குடிக்கிறவர்

சாந்தி மாரியப்பன் said...

காருக்கு பெட்ரோல் மாதிரி நமக்கு காலங்காத்தால காப்பி ஆகிப்போச்சு :-)))

பால் பாக்கெட் போன இடம் தெரிஞ்சுதா?..ஃப்ரிஜ்ஜுக்கும் காப்பி குடிக்கணும்போல தோணி அதுவே குடிச்சுருக்குமோ :-))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா கயல்,நானும் இன்னோரு பால்காரருக்காக வாசல் கதவு பக்கத்துல காத்துக் கொண்டிருந்தேன்:)
அதுக்குள்ள இவரே ,பாவம் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.

ஸ்ரீராம். said...

கெடுதல்னு போட்டா மட்டும் காஃபியை விட்டுடுவோமா என்ன? அது இல்லைன்னா காலை விடியவே விடியாதே...மாலை வேளைகளிலாவது சமாளித்து விடலாம். காலை எழுந்தவுடன் காஃபி இல்லையென்றால் பைத்தியம்தான் பிடிக்கும்!!

வல்லிசிம்ஹன் said...

காப்பியின் காப்பியம் நல்லாவே இருக்கு துளசி.காப்பி பித்தம் கொடுக்கும்னு தான் சொல்வாங்க.
ஆனா இன்னிக்கு நிஜமாவே பைத்தியமா இருந்தேன் ஒருமணி நேரத்துக்கு;0)
கோபால் ஓவலுக்கு மாறிட்டாரா.!!என்ன இத்தனை நல்லவராயிட்டாரேப்பா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி வாசுதேவன். உண்மையாவே போட்டு இருந்தது. விஞ்ஞான வளர்ச்சி:)
எத்தனையோ சொல்லியாச்சு. பைக்கை விடுவதாயில்லை. பையன் கிட்டச் சொல்லி விற்றுவிடச் சொல்லப் போறேன்.!!
ஆனை வரலை ஆளுதான் கொடுத்திருக்காங்க. சமையலுக்கு உதவி செய்யும் அம்மா பக்கத்துவீட்டுக்குக் கொடுத்து உதவி செய்திருக்காங்க.என்னிடம் சொல்ல விட்டுப் போச்சாம்.!!
சிங்கம் சம்த்து தான் யாரில்லைன்னு சொன்னா:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் சோபனா.முதல் வரவுக்கு நன்றி.நீங்க சொல்லும்போது
இதற்காகவே மழையும் சங்கீதமும் சேர்ந்து காப்பியும் ரசிக்க ஆசை வருகிறது:))

வல்லிசிம்ஹன் said...

பாட்டுனா அது பாட்டு கோமதி.
அப்பவே தமிங்கலீஷ் வந்துட்டது பார்த்தீங்களா.
எல்லாக் கல்யாணத்திலயும்
நலங்கும்போது பாடுவாங்க. நானும் பாடி இருக்கிறேன்!!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல். காப்பி'யம் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது:)
ஒரு காப்பி குடித்தாலும் நல்ல காப்பியாக் குடிக்கணும். கும்பகோணம் டிகிரி பவுடரும் 2% ஆவின் பால் காய்ச்சி சூடாத் தொண்டையில் இறங்கும் பக்குவம்ம்ம்ம். நல்லாத்தான் இருக்கும்.:)பால் பக்கத்துவீட்டுக்குப் போயிருக்கு. அவங்களே சொல்லி இன்னோரு பால் கோடுத்தனுப்பினாங்க.

வல்லிசிம்ஹன் said...

காலை எழுந்தவுடன் காப்பி.அதனுடன் சுகமாக ஒரு பேப்பர்.படிக்கும்போதே காலை உணவு. இப்படித்தான் இருக்கணும். இல்லையா ஸ்ரீராம்:)ஒரு நாளைக்கு ஒரு காப்பி போதும்.
உடம்புக்கு நல்லது.

பால கணேஷ் said...

அட, நான்லாம் ஒரு நாளைக்கு நாலு காஃபி குடிக்கிறவன் ஆசு்சுதே... இனிமே ரெண்டோட நிறுத்திக்கறேன். சரியாம்மா... ஸ்ரீராம் ஸார் சொன்ன மாதிரிதான் நானும். காலையில காஃபி குடிக்காட்டி வெறியாய்டும்... ஹி... ஹி...

மாதேவி said...

காப்பி என்றால் சிங்கமும் குடிக்கும் :)))))))

எங்கள் வீட்டில் காலையில் மட்டும் முன்னர் காப்பி இப்பொழுது ரீ குடிப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி டீயோ காப்பியோ ஏதாவது ஒண்ணு சூடா தொண்டையில் இறங்கணும்:)

Anonymous said...

வணக்கம்
அம்மா
நன்றாக எழுதியுள்ளீர்கள்...பழக்க தோசம் அம்மா..


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரூபன். பார்த்து நாளாச்சுமா. பழக்க தோஷம் தான். தோஷம்னும் தெரியும். விட முடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் எழுதிய பதிவு. மிக நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... காஃபி...! ரசித்தேன் அம்மா...

துளசி கோபால் said...

அதெல்லாம் ரெண்டேநாளில் அந்த ஓவல் கோபாலுக்கு அலுத்துப்போச்சு. இப்போ...மறுபடியும் காஃபி காஃபி காப்பி:-))))

Geetha Sambasivam said...

அது என்ன பாட்டு, காஃபியிலே பல் தேய்க்கிறார் மாப்பிள்ளை டோய்?? நான் கேட்டதில்லையே வல்லி, எந்தப் படம்? யார் பாடினது?

துளசி கோபால் said...

https://www.youtube.com/watch?v=cStMKkoGOcc

கீதா,

படம்: மனம் போல் மாங்கல்யம்

லீலா அண்ட் ஏ.எம்.ராஜா

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.காஃபி ருசித்ததா.

வல்லிசிம்ஹன் said...

அது தானெ ஸ்ட்ராங் பாயிண்ட் துளசிமா. வேண்டாம் வேண்டாம்னு நினைத்தாலும் வந்து ஒட்டிக்கொள்ளும்.

வல்லிசிம்ஹன் said...

கீதா அந்தப் படம் மனம் போல மாங்கல்யம். சாவித்திரி ,ஜெ.கணேஷ் நடித்தது. உங்களுக்காகப் ப்ளஸ்ஸில் போட்டு இருக்கேன்>}}}}}

வல்லிசிம்ஹன் said...

நன்றி நிகண்டு.காம். மிக நன்றி.

Geetha Sambasivam said...

நன்றி துளசி, வல்லி அனுப்பிப் பார்த்துட்டேன். :)))

Ranjani Narayanan said...

காஃபி என்றதும் ஓடோடி வந்தாச்சு! காலையில் நிச்சயம் வேண்டும். மாலையில் இல்லையென்றாலும் பரவாயில்லை.

நல்ல பாடல் காப்பியிலே பல் தேய்க்கிறார், மாப்பிளை டோய்!
இந்த மாதிரி கேலிப் பாடல்கள் சிலசமயம் எல்லை மீறிப் போய் சில கல்யாணங்கள் நின்றே போனதாக எங்கள் அம்மா சொல்லுவாள்.