Monday, April 21, 2014

சில சில் அனுபவங்கள் 6 1966...67

சென்ற                                        வருடம்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
1974 இல்  நாங்கள்
Add caption
அட ஏம்பா  போரடிக்கற   .மனுஷன் வேலை பார்க்க வேணாம்....                                                                                                                                        கார் பயணமே சிங்கத்துக்கு மிகவம் பிடித்தது. பிடித்த இந்திப் பாடல்களைப் பாடியபடி  வண்டி ஓட்டி வருவார்.   என்னையும்ம் தமிழ்ப் பாட்டுகளைப் பாடச் சொல்லி ரசிப்பார்.. சேலத்திலிருது  புறப்பட்டு  அழகுக் காட்சிகள் கண்ட இடங்களிலெல்லாம் நிறுத்தி  ,கீழே இறங்கி ரசித்து மீண்டும்  வண்டியில் ஏறுவோம்.   அப்போதெல்லாம் விரட்டும் மிரட்டும் லாரிகள்   கிடையாது..                                 ஒரு  பிச்சோடா கொண்டை. அதையும் மீறி வெளியே வரும்   தலைஅலங்காரம்>}}}                                                                                                      நல்ல ஜோடி நாங்கள்.... ஒருவழியாக ஐந்து மணி நேரத்தில் பசுமலை வந்து சேர்ந்தோம். அம்மா அப்பா இருவரும் சாப்பிடாமல்       காத்திருந்தார்கள்.     ரொம்ப சாரி மாமா. இவள் குளத்தைப் பார்த்தால் காரை நிறுத்து என்கிறாள்.   ஆறு ஓடினால் கீழே   காலகளை நனைக்கணும்கறா.  எம்று  பொய்யாக அலுத்துக் கொண்டார்.  அப்பா அம்மாவுக்கு என் இளைத்த தேகத்தைப் பார்த்து  கவலை.                                                                                                                      அடுத்த நாள் டிவிஎஸ்  மருந்தகத்தில் காண்பித்து  சோதனை செய்து கொள்ளவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போல் சின்னவனோடு கொஞ்ச நேரம் காரம்போர்ட்,  பிறகு இரவு நேரச் சாப்பாடு. அம்மா கொண்டையை அவிழ்த்து வழக்கமான  நீளப் பின்னலைப் போட்டுவிட்டார்.      எல்லோரும் சீக்கிரமே சாப்பிட்டுப் படுத்துவிட்டோம்.   அப்பாது வீட்டில் கட்டில்கள் கிடையாது.      சிங்கத்துக்கு மனசாகவில்லை.      மாமா நான் வேணுமானால் ஒரு சோஃபா கம் பெட் வாங்கி வரட்டுமா என்று கேட்டார்.        இல்லை சிம்மு   இதுலயே     சமாளிக்கலாம். குழந்தை பிறக்கும் போது நான் ஏற்பாடு செய்துவிடுவேன். டிசம்பர்தானே   டைம் சொல்லி இருக்கிறார்கள்.   செய்துடலாம் என்று அப்பா சொல்லிவிட்டார். நல்ல மெத்தைகள் எங்களுக்கு விரிக்கப்பட்டன. படுத்ததுதான் தெரியும் . தூங்கியாச்சு. அடுத்த  நாளும் வந்தது.  நெடுந்தொலைவுப் பயணம் .                                                                                                                                                                                             சிங்கம் எழுந்துக்கவே      எட்டு ஆகிவிட்டது.   .அதற்கப்புறம் அம்மா கொடுத்த இட்லி மிளகாய்ப் பொடி  சாப்பிட்டுவிட்டு நாங்கள் கிளம்ப   ஒன்பதரை மணி. மருத்துவமனை இருந்த இடம் சந்தைப்பேட்டை.     .பக்கத்துவீட்டு டானியல் சாரின் பிளிமத் உதவிக்கு வந்தது.  நாங்கள் நால்வரும் அதே வண்டியில் புறப்பட்டோம்.             பரிசோதித்த மருத்துவர்  48  கிலோ வெயிட்டெல்லாம் போறாது. நீங்க நிறைய பால் சாப்பிடணும். என்று சொல்லி இரும்புச் சத்து மாத்திரை,பி காம்ப்லெக்ஸ்                                                   எல்லாம் எழுதிக் கொடுத்தார்.    ஹீமோக்ளொபின் எண்ணிக்கை ஐந்தில் இருந்தது.    .                                                                                                                                             ..எல்லாவற்றையும் அப்பா கையிலிருந்து பத்திரமாக வாங்கிக் கொண்டார் சிங்கம். நான் பாத்துக்கறேன் மாமா.  என்று அங்கேயே மருந்தகத்தில் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு,  நாங்கள்     அப்புறமா வீட்டுக்கு வரோம் என்றார். அப்பா அனுமதிக்கவில்லை. மெதுவாக  ரேவதி  வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கட்டும். சாயந்திரம் இரண்டு பேரும்  சினிமா     போய்வாருங்கள் என்றார்.  அதுவும் சரிதான் என்று எல்லோரும் திரும்பி விட்டோம்.   வீடுவந்ததும் அம்மா    என்னைப் பார்த்து  இங்க கொஞ்ச நாள் இருக்கலாமே. இங்கிருந்து நேரா   மெட்ராஸுக்குச் சீமந்ததுக்குப் போய் விடலாம்.  நீ கொஞ்சம் உங்க ஆத்துக்காரரிடம் சொல்லி வையேன்  என்றார்.                                                                                அவரிடம் சொல்ல வேண்டாம் நானே    இங்க இருக்க முடியாதும்மா. பாவம் அவர். வீட்டுச் சாப்பாடு இல்லாவிட்டால் கஷ்டப்படுவார்.   நாங்கள் இருவரும் சென்னை வந்துவிடுகிறோம்  ப்ளீஸ்ஸ்  மா      என்றதும்      சரி என்று மறுப்பேதும் சொல்லவில்லை. அம்மா. அப்பா பின்னால்                                                              நின்று கேட்டுக் கொண்டிருந்தார். பாவம்ம்மா. போய் வரட்டும்  நீ தொந்தரவு செய்யாதே. இங்க வந்தபிறகு நாம் பார்த்துக் கொள்ளலாம்   என்று விட்டார்.                                                சாயந்திரம் இருவரும் வண்டியில் மதுரை டவுனுக்குச் சென்று      முகராசியோ மகராசியோ ஏதோ ஒரு படம் பார்த்தோம். எம்ஜிஆர் ஜெயலலிதா படம்.. ...  எனக்காக விட்டுக் கொடுத்துப் பார்த்த படங்களில்   இதுவும் ஒன்று.                                                                     அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. சேலம் கிளம்பவேண்டும். அம்மா                இரண்டு மூன்று டப்பாக்களில்   வற்றல் வடாம்,  சிம்முக்குப் பிடித்த மைசூர் பாகு,  மனங்கொம்பு என்று செய்து வைத்திருந்ததை வண்டியில் வைக்கச் சொல்லித் தம்பியிடம் கொடுத்தார்.       அவனுக்கோ எங்களோடு வர ஆசை. ஒன்பதாம் வகுப்பு. படிப்பை  அலட்சியம் செய்யக் கூடாது என்று      அவனை  ஒரு வாறு சமாதானப்படுத்தி மதியம் வாக்கில் கிளம்பினோம். இரவு சாப்பாட்டையும் அம்மா செய்து வைத்திருந்தார்.                                         உண்ட மயக்கம் களைப்பு எல்லாம் சேர்ந்து    நான் பாதி வழி தூங்கிவிட்டேன்..  அவரும் ஏதோ யோசனையில் என்னை எழுப்பவில்லை.                                சேலம் குகைப் பக்கம் சத்தம் கேட்டு எழுந்தேன்.      ஏன் இவ்வளவு களைப்பா இருக்கேம்மா.    ஆர் யூ ஆல்ரைட்  என்ற வண்ணம் வண்டியை மெதுவாகவே ஓட்டி வந்தார்.        வீட்டுக்குப் போனால்         சரியாகிவிடும்.  நாளைக்கும் ரெஸ்ட் எடுத்துக்கோ.நான் வெளியில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றவரை  இடை மறித்தேன். நீங்களும் மதியம் வரவில்லைன்னால்   எனக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் போகும்...  எதாவது  சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற வண்ணம் வீட்டுக்குள் நுழைந்து     கட்டிலில்  படுத்து    மீண்டும்   உறங்கியாச்சு. .  பிறகு அவர் சாப்பிட்டுவிட்டு என்னை வலுக்காட்டயமாக   எழ்சுப்பி  கொஞ்சம் சாப்பிடவைத்தார்.                                               இதுக்காக்வே இன்னும் ரெண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் போல இருக்கே என்று இருவரும் சிரித்துக் கொண்டோம்...

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிலிர்க்க வைக்கும் பரிவான பாசம் அம்மா...

துளசி கோபால் said...

சொன்னபடி செஞ்சுட்டீங்களே:-))))))

ஸ்ரீராம். said...

என்ன ஒரு அன்பு... என்ன ஒரு புரிதல்..

Geetha Sambasivam said...

அருமையான பதிவு. நல்ல புரிதல்! துளசி சொல்றது போல் தான் நானும் சொல்ல நினைத்தேன். :))))

ராமலக்ஷ்மி said...

இனிய நினைவலைகள்.

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு தனபாலன் .மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் இல்ல துளசி. அவர் சொன்னது பத்து குழந்தைகள்.>(}}}.நல்ல வேளை அப்படி ஒண்ணூம் செய்யாம விட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். என் மனதை முழுதும் புரிந்து கொண்டவர்.அப்போ அப்போ இடக்குகள் வரும்>}}}}}

வல்லிசிம்ஹன் said...

ண்மைதான் கீதா. இந்தப் புரிதலினாலேயே சச்சரவு வரும் ப்ரீ கெஸ்ஸிங் அதர் பர்சன்.ஸ் தாட்ஸ்<}}}

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி.பின்னோக்குப் பார்வைன்னு சொல்லிக்கலாமா>}}}

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான நினைவுகள் அம்மா....

கோமதி அரசு said...

அருமையான மலரும் நினைவுகள்.
நீங்கள் பாடி கேட்டு இருக்கிறேன் உங்கள் குரல் அருமையாக இருக்கிறது. சார் பாடிய இந்தி பாடல் ஏதாவது பதிவு செய்து வைத்து இருந்தால் பதிவில் பகிர்ந்து கொள்ளுங்களேன் .

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதி. சார் மௌத் ஆர்கனும் நன்றாக வாசிப்பார். இதையெல்லாம் ரெகார்ட் செய்யத் தோன்றவில்லையே>* அவருடைய வீடியோக்கள் தான் இருக்கின்றன. அதைப் பார்க்கும்போதும் சில நேரம் மகிழ்ச்சி, சிலசமயம் துக்கம். நன்றி அம்மா.

மாதேவி said...

இனிமையான தருணங்கள்.