Blog Archive

Thursday, April 17, 2014

சில சில் நினைவுகள் 5 ..ஜுலை 1966

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மலர்கள்               தரும் நினைவுகள்.                                                                                                                                ஒரு விதமாகப் புதுக்கோட்டை வந்து சேர்ந்து  சேலம் புறப்பட ஏற்பாடுகள் தொடங்கினோம்.   ஆடி   மாதம் வருவதற்குள் அங்கே போக உத்தரவு.   பீரோ கட்டில்கள் ,பாத்திரங்கள் பெட்டிகள் எல்லாம் சதர்ன்ரோட்வேஸ்     லாரியில்   ஏறின.           போய்  இறங்க ஒரு இடம் வேண்டுமே.    அங்கு சிறிய மாமியார் இருந்தாலும்  சிங்கத்துக்கு இன்னோருவரைத் தொந்தரவு செய்யப் பிடிக்காது. முதலில் ஹோட்டல் த்வாரகா   என்கிற விடுதியில் இறங்கினோம்.             அடுத்த அரை மணி நேரத்தில் மாமியாரிடமிருந்து தொலைபேசி வந்துவிட்டது.                                                     ஆஜிப் பாட்டி    என்னைத் தனியாக எங்கயும் விடக்கூடாது என்ற உத்தரவோடு  சின்ன மாமியார் வீட்டுக் குப் போகச் சொல்லி     செய்தி அனுப்பிவிட்டார்.     மாலையில் அங்கே போகலாம்,நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கிளம்பி விட்டார்.                    புது இடம். நல்ல விடுதிதான் என்றாலும்                        தனியாக இருக்கப் பயம்.  அப்பொழுது              இவரது கம்பெனி கிச்சிப் பாளையம்    என்ற இடத்தில் தள்ளி இருந்தது..  அதை  வேற இடத்துக்கு மாற்றவே இவரை அங்கே  வரவழைத்திருக்கிறார்கள்.    சேலம் நல்ல   தொழில் நகரம். லாரிகளும் பஸ்களும் நிறைய.  அவை எல்லாம்    டிவிஎஸ் ஐயும் சிங்கத்தையும் நாடியே வந்ததால்  இடம் போதாமல்  கம்பெனிக்கு வெளியில் எல்லாம் நிறுத்த நேர்ந்தது.   அவருடைய  முழுக் கவனமும் அங்கே போக ஆரம்பித்தது.                              அதனால் சின்ன மாமியார் வீட்டுக்குப் போவதென்று தீர்மானித்தோம். நடுவில் பார்த்த வீடுகள் அவருக்குப் பிடிக்கவில்லை.                           சின்ன மாமனார்     வெகு அன்பானவர். மாமியார் சமூக சேவகி. அவர்கள் பிள்ளைகள் எல்லாம் படித்து வேலையில் அமர்ந்துவிட்டார்கள். மாமியாருக்கு நல்ல பெயர் அந்த ஊரில்.  எல்லா வேலைகளையும் பார்க்க வீட்டில் ஆட்கள் இருந்தனர். எனக்குப் படிக்கப் புத்தகங்கள் இருந்தன.   சமையல் செய்யும் அம்மா ரொம்பக் கவனமாக என்னைக் கவனித்து நிறைய சமையல் முறைகளும் சிக்கனமும் சொல்லிக் கொடுத்தார்.                                       அவர் பெயரும் கண்ணம்மா.  அடக்கமான     பெண்மணி. எல்லாப்  பதார்த்தங்களையும் செய்துவிட்டு  அங்கேயே உட்கார்ந்திருப்பார்.  அவரிடம் உட்கார்ந்து பழைய கதைகளைப் பேசியபடி  பந்தலில் பூத்திருக்கும் பூக்களைப் பறித்து மாலைகள் கட்டுவேன். ஒரு இனிமையான பத்துநாட்கள் கழிந்தன.                          ஒரு நாள்    மாலை சீக்கிரமே   வந்த ஜீப் சத்தம் கேட்டு வெளியே   வந்தேன்.                                              வாவா  ,ஐ ஹேவ் சீன் அ  பெஸ்ட்    ஹவுஸ் ஃபார் யூ. கிளம்பு  கிளம்பு.   என்று அவசரப் படுத்தினார்.   எனக்கோ அசதி.     மாமனார்  ஜீப்பில  எல்லாம் அழைச்சுண்டு போகக் கூடாது.  தூக்கிப் போடும் என்கிறார்,.  ஏம்மா    உனக்குக் கஷ்டமா  இருக்குமா  என்றதும்  நான்  உடனே கிளம்பிவிட்டேன்.                                                               நாங்கள்    இருந்த   இடத்திலிருந்து இரண்டு மைல்கள் தூரத்தில்  சேலம் ஜங்ஷன்  அருகில்    வயல்கள்   நிறைந்த இடம் . சாலையோரம் ஒரு  மளிகைக்கடை சிறியது. புதிதாகக் கட்டப்பட்ட  அலி  பில்டிங்ச் என்று வரிசையாகப் பத்துவீடுகள். அதில்      முதல் மூன்றில் குடித்தனம் வந்துவிட்டார்கள்.   ஐந்தாவது வீடு  எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  சாலையைப் பார்த்த பெரிய ஜன்னல். அங்கெ எங்கள் கூடை நாற்காலிகளைப் போட்டுக் கொள்ளலாம். அதை     ஒட்டி  ஒரு  ரேழி. அதில்  ஒரு கதவைத் திறந்தால்   படுக்கும் அறை..அதற்கு அடுத்தாற்போல் சாப்பிடும்    அறை. பிறகு சமையலறை. பின் புறம் வெந்நீர் உள் ,கழிப்பிடம் என்று பிரமாதமாக இருந்தது.    நல்ல தண்ணிர்.   எல்லாம் சரி பூயோன்னு   இருக்கே சத்தமே இல்லையே என்று நான் கேட்டதுக்கு, ஆமாம்மா வொர்க்ஷாப் சத்ததிலிருந்து வெளியே வர எனக்கு  இந்த அமைதி வேண்டும். உனக்குச் சீக்கிரமே ரேடியோ வாங்கி விடுகிறேன் . போனஸ் வருமே    என்றார்.   அவரளவு எனக்குப் பேச்சு சாமர்த்தியம் போதாது.    சரி சரி  என்று தலையாட்டியாச்சு. ஆடிக்கு முன்னால் வீடும் மாறி வந்தாச்சு.            அப்போது ஆரம்பித்தது தனிமை.       காலை உணவு சாப்பிடும் வழக்கம் கிடையாது. அதனால் நானும் ஒன்றும் சாப்பிடாமல் இருப்பேன். மதியம் அவர் வரும் வேளைக்கு    ஒரு ரசம்,தேங்காய்த் தொகையல்,தக்காளிப்பச்சடி. உ.கிழங்கு கறி,.  மாறவே  மாறாது. அம்மாவுக்கு எழுதியதில் அம்மா    கஞ்சி எப்படிப் போடவேண்டும் என்று முறை சொல்லிக் கடிதம் போட்டார்.                                                        அது பிரகாரம்க் காலைக் கஞ்சி வழக்கத்துக்கு வந்தது.      நல்ல தோழர்கள் கிடைத்தார்கள் சிங்கத்துக்கு.                                  ஞாயிறு விடுமுறைகளில் சில ஆங்கிலப் படங்கள்,  ஒரு பாமா விஜயம்  எல்லாம் பார்த்தோம்.   துவாரகா ஹோட்டலில் சனிக்கிழமை     இரவு சாப்பாடு  என்று   வழக்கமாகியது. குழந்தை நான் இருக்கிறேன்   என்று சொல்ல ஆரம்பித்தது..                                  நடுவில்     மதுரையிலிருந்து பெற்றோர் அழைப்பு.       இரண்டு தினங்கள் வந்துவிட்டுப் போகும்படி.     இவரிடம் சொன்னதும்         உன்னை   நானே  காரில் அழைத்துப் போகிறேன் மா.      அப்ப      என்னோடயே திரும்பி வந்துடலாம்     என்றவர் முகத்தைப் பார்த்தால் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஏன்     என்ன சிரிப்பு.  என்றவர் முகத்திலும் புன்னகை. சரியான      முன் ஜாக்கிரதை     எங்க நான் அங்க  தங்கிடப் போறேனோன்னு தான   உங்களுக்குப் பயம். என்றதும் முகம் கொள்ளாத   ஏதோ ஒன்று வழிந்தது.                                                                உனக்குத்தெரியுமா நீ  இங்கயே  குழந்தை  டெலிவர்  செய்யலாம்.  நீ மதுரைக்குப் போகணும்கற      வேலையே வேண்டாம்  என்று ஆரம்பித்ததும் ....ஆஹா  கொஞ்சம் கிடைக்கிற லீவும் போய்விடும் போல இருக்கே. குழந்தை வளர்ப்புல       அ ஆவன்னா கூடத் தெரியாது அதனாலென்ன    இவர் உதவி இருந்தால் வேற  யாரும் வேண்டாம்                           என்றேல்லாம் நினைவுகள்      ஓட ஆரம்பித்தன. ஒரு செப்டம்பர்     முதல் வாரம் சிங்கத்தின் சிநேகிதரின்  ஃபியட் வண்டியில்  மதுரைக்குக் கிளம்பினோம்.           

21 comments:

துளசி கோபால் said...

// எல்லாம் சரி பூயோன்னு இருக்கே சத்தமே இல்லையே...//

ஆஹா..... அது என்ன பூயோ:-))))))

ஸ்ரீராம். said...

ரேழி!

//பூயோன்னு இருக்கே//

:)))

//முகம் கொள்ளாத ஏதோ ஒன்று வழிந்தது.//

எல்லோருமே அப்படித்தானா! ஹிஹிஹி..

Geetha Sambasivam said...

நல்லா இருக்கு அ.வ.சி. பத்திச் சொன்னதை ரொம்பவும் ரசித்தேன். :)

Geetha Sambasivam said...

ஶ்ரீராமோட வாக்குமூலம் இன்னு பிரமாதம். :)))

வல்லிசிம்ஹன் said...

துளசி அது என்ன அர்த்தம்னு இதுவரை தெரியாது. சென்னைக்கு வந்துதான் இந்த வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன்.சிலோ@ ன்னு இருக்குன்னும் சொல்வார்கள்.>} என்னவோ அவருக்கும் நான் என்ன சொல்லவரேன் னு புரிஞ்சுதா இல்லையா}}}

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். சிரிப்பாக இருக்காக்கும்.>}}} ரேழி தெரியாதா.வராந்தான்னு சொல்லலாம்னால் வீட்டுக்குள்ளயே இருக்கிறது. ரேழி பழக்கமான வார்த்தைதானே.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா.மனசு வரவில்லை அ.வ. பத்தி.சொல்ல. என்ன முதல் வருஷம் இதெல்லாம் சகஜம்தானேன்னு விட்டுட வேண்டியதுதான்.

வல்லிசிம்ஹன் said...

@ ஸ்ரீராம் ,கீதா உங்களைப் பற்றி கமெண்ட் சொல்லி இருக்கிறார்கள்.>}}

Geetha Sambasivam said...

வராந்தாவுக்கும் , ரேழிக்கும் வித்தியாசம் இருக்குனு நினைக்கிறேன். ரேழின்னா ஒரு பக்கம் ரேழி உள்ளும் அதுக்கு எதிர்ப்பக்கம் அநேகமா நெல் குதிர் அல்லது மாடிப்படிகளும் இருக்கும். நடுவில் இருக்கும் பாதை தான் ரேழி. ரேழிக்கு அப்புறமா நிலைக்கதவைத் தாண்டினா கூடம், முத்தம், கொல்லைத் தாழ்வாரம், கொல்லை முற்றம்னு வரும். :)))))) காற்றோட்டமாக் கட்டி இருப்பாங்க. சில வீடுகளில் கூடத்திலேயே நடுவே முற்றம் மேலே திறப்போட இருக்கும். திறப்பிலே கம்பி கட்டி இருக்கும்.

Geetha Sambasivam said...

கொசுவத்தி சுத்திண்டே போயிடுவேன். :))))

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா. இந்த ரேழியும் அப்படித்தான். வாசலையும் உள்ளே இருக்கும் அறைகளையும் சேர்க்க ஒரு வழி. சேலத்தில் இரண்டு வீடுகளில் இருந்தோம். இரண்டு வீடுகளிலும் ரேழி உள் இருந்தது. ஒரே இருட்டாக இருக்கும்.நன்றி மா.

துளசி கோபால் said...

எங்க சின்ன அத்தை வீட்டில் முன் வாசலுக்கு ரெண்டு பக்கமும் பெரிய திண்ணை. திண்ணையின் சுவரில் ரெண்டு ஜன்னல்கள் வேறு.

வாசலைக் கடந்தால் ரேழி. அங்கே ஒரு ஓரத்தில் நெல் குத்த தரையிலேயே குழிச்ச உரல் இருக்கும். விளையாட்டு மும்முரத்தில் ஓடி வந்து அதுக்குள்ளே காலை வீட்டுட்டு தொபுக்கடீர்னு விழுந்து வச்சுருக்கேன் பலமுறை:(
இதுலே ரெண்டு பக்கமும் வெறும் சுவர்கள்தான். வாசலுக்கு நேரெதிரா ஒரு கதவில்லாத திறப்பு.அதுலே போனால் முற்றத்தைச்சுத்தி நாலுபுறமும் இருக்கும் தாழ்வாரத்தில் இருப்போம்.

நாலு மூலையும் சேரும் இடங்களில் அறைகள். இதுலே ஒரு பக்கத்தாழ்வாரம் கொஞ்சம் அகலம் கூடுதல். அதையே கூடம் என்போம். அங்கேதான் ஊஞ்சல்.

என்னென்னவோ பழையஞாபகம் வருதுப்பா!

ஸ்ரீராம். said...

ரேழி கேள்விப்பட்டிருக்கேன். நாகப்பட்டினத்துல எங்கள் வீட்டுல பார்த்தும் இருக்கேன். மறுபடி அந்த வார்த்தை கேட்டதும் மறுபடி உச்சரித்துப் பார்த்தேன்! அவ்வளவுதான்! ஒப்புதல் வாக்குமூலமா? நான் அடிச்ச கூத்து தனி!

வல்லிசிம்ஹன் said...

திண்ணையும் ரேழியும் பல கதைகளைச் சொல்ல் வைக்கும். சில்சமயம் ட்ராஃபிக் ஜாம் கூட நடக்கும். பழைய பாரிஜாதத்தில் இது போலத் திண்ணைகளும் உண்டு ரேழியுள் நெல்மூட்டைகளும் உண்டு. ஒளிந்து விளையாட நல்ல இடம். துளசி.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா.அதான் பார்த்தேன். அடிச்ச கூத்தை எழுதலாமே. மறுபாதி ஒண்ணும் சொல்லமாட்டார். தயவு செய்து எழுதவும்> ஸ்ரீராம்>}}}}

Ranjani Narayanan said...

உங்களது நினைவலைகள் படிக்கப் படிக்க உங்கள் இழப்பு புரிகிறது, வல்லி.
மென்மையான மலரும் நினைவுகள் தொடரட்டும்.

உங்கள் மலரும் நினைவுகள் பலரது (ஸ்ரீராம்!) நினைவுகளை எழுப்பி விடுவது சுவாரஸ்யம்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான நினைவலைகள்...

ரேழி... முற்றம், சமீபத்தில் எனது அம்மாவின் சொந்த ஊர் சென்றபோது பார்த்தேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரஞ்சனி, எனக்குப் படித்த நேரமாகிவிட்டது இந்தப் பதிவுகள் எழுதும் பொழுது.இதன் மூலம் பழைய வாழ்க்கை தொடர்வது போல ஒரு பிரமை. நன்றி மா. ஸ்ரீராமுக்கும் மலரும் நினைவுகளைத் தந்தது போலிருக்கு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். நான்சொல்லும் ரேழி வீட்டுக்குள் வாசலை ஒட்டி அதை வீட்டின் மற்ற பாகங்களோடு இணைக்கும் ஒரு வழி.முற்றம் எனக்கு மிகவும் பிடித்த இடம்.வீட்டுக்குள் வெளிச்சம் கொண்டு வரும்.

ராமலக்ஷ்மி said...

கடிதம் மூலமாக அம்மாவிடம் சமையலில் சந்தேகங்கள் கேட்ட காலம் நினைவுக்கு வருகிறது:). சுவாரஸ்யமான நினைவலைகள்.

மாதேவி said...

விரிக்கும் சிறகுகள். மனதுக்கு சுகமே.