Blog Archive

Saturday, April 26, 2014

முதல் கண்ணன் வந்தான் சில சில் நினைவுகள் 8





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சென்ற    வருடம் வந்த கண்ணன்                                    செப்டம்பர்   ஒருநாள் இரண்டுநாள் என்று ஓடியே விட்டது 23 ஆம்தேதி  ஸீமந்தம்  வைத்திருப்பதாகவும் .அந்த   விழா முடிந்த அடுத்த நாளே  மதுரைக்கு அழைத்துப் போகச் சொல்லி என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கடிதம் எழுதி இருப்பதாகவும்         கமலம்மாவிடமிருந்து கடிதம் வந்தது.    இவருடைய  மனுக்கள் எல்லாம் பலிக்கவில்லை. முதல்        பிரசவம் அம்மா வீட்டில்   தான் பார்க்க வேண்டும் நீ எப்போதாவது போய்ப் பாரேன்.                                                                        அவளை ஓய்வெடுத்துக்கவிடு என்று தொலைபேசியில் புத்திமதி.  சொல்லியாகி விட்டது.   ,பலமான யோசனைக்கப்புறம் சென்னைக்கு டிக்கட்கள் பதிவு செய்தார்.. பாத்ரூமில் குளிக்கப் போனால் தீவிரமாகப் பேச்சுக் குரல் கேட்கும். யாருடன் பேசுவார்  என்று தெரியாமல் வெளியே   நின்று கேட்டால் கல்யாணமானால்  என்ன   ,அப்படியே வழக்கத்தைக் கடைப்பிடிக்கணுமா. லண்டன்லியே  இருந்திருக்கலாம்.அங்க யாரும் வந்து இங்க போ அங்க வா என்று சொல்ல மாட்டார்கள்.  எல்லாம் ஆங்கிலத்தில்தான் ....உரத்த சிந்தனை.. வெளியே  வந்தவர் என்னைப் பார்த்ததும் கோபமாக முறைத்துவிட்டு     இரண்டாம் காபியையும் குடித்துவிட்டுக் கிளம்பிவிட்டார். ஜீப் கிளம்பும்  வேகம்  மண்சாலையில் தூள் பறந்தது.. மண்சாலையில்   இருந்து பிரியும் மெயின் ரோட்டில் பறந்தது       வண்டி..                                                                                         எனக்கே வருத்தமாகிவிட்டது.   நாளைக்குக் கிளம்பணுமே.  என்ன செய்யப் போகிறாரோ  என்று யோசனை.  அன்று மாலையும் பத்துமணிவரை   வீட்டுக்கு வரவில்லை..  வராந்தாவில் போட்டிருந்த     சோஃபாவிலேயே தூங்கிவிட்டேன்.   வராந்தா ஜன்னல்  திரைகளில்      ஜீப்பின் ஹெட்லைட்  வெளிச்சம்    பட்டதும்   விழித்துக் கொண்டேன்.                                                                                                   உள்ளேவந்தவர் குளிக்கப் போய்விட்டார். சத்தமில்லாமல் சாப்பிட உட்கார்ந்தார்.   சுடவைக்கக் கூட விடவில்லை. நீ சாப்பிட்டியா  னு கேள்வி. நான் எங்க சாப்பிடறது. இதோ வரேன் என்று இன்னோரு   தட்டை     எடுத்துவந்தேன்.  முதலில் சாப்பிடு. அப்புறம் சிம்மு உன்னைச் சரியாப் பார்த்துக் கொள்ளவில்லை என்ற பெயர்தான் தங்கும் என்றவர் முகத்தைப் பார்த்தேன்.                                                                                     சகிக்கவில்லை.   இன்னும் இரண்டு வாரத்தில்      நீங்கள்    பசுமலை வாருங்களேன். சனிக்கிழமை வரலாமே. ஸ்டேட் ட்ரான்ஸ்போர்ட் பஸ் தான் வரதே என்றேன்..  ஏன்  இங்க என் வேலையை யார் பார்ப்பது.  பாதி பொருட்கள் புது வொர்க்ஷாப்புக்க்ப் போயாச்சு. மிச்சத்தையும் ஏறக் கட்டணும். மெஷனரியெல்லாம் மூவ் பண்ணனும்.      இதுக்கு நடுவில் பேபி வரும்போது நான் அங்க இருக்கணும். அதற்கு லீவு வேண்டாமா.  தீபாவளிக்குப் போ  என்று அம்மா சொல்லி இருக்கிறார்..                                                                                படபடவென்று பேசி முடித்தார்..சரிம்மா. இதெல்லாம்  நடக்கிறது தானே.  உங்க அக்கா    எல்லாம்    பாரிஜாதத்தில் தானே  குழந்தை பெற்றுக் கொண்டார்கள்.    ஆமாம்.  அப்ப  எனக்கு மட்டும்  வேறமாதிரி நாம நினைக்கலாமா. பாப்பா  டிசம்பரில் வந்துவிடும். ஒருமாசத்தில் இங்க வந்துடறேன்மா.    உங்களுக்கு இவ்வளவு வேலை இருக்கும்போது   நானும் சங்கடம் கொடுத்தால் பாவம் இல்லையா  நீங்க..........என்று நிறுத்தினேன்.          சாப்பாடு உள்ள  போனதும்  கொஞ்சம் நிதானம்.    சரி   சூட்கேசை நீ எடுக்காதே. பெரிடில் உன் புடவைகள் எல்லாம் வச்சுக்கோ. நான் சின்ன சூட்கேசில் மூன்று நாளைக்கு வேணும்கறதை எடுத்துக்கறேன். சாயந்திரம் ஆறரை மணிக்கு    டவுன் ஸ்டேஷனில் போய் ஏறிவிடலாம். ஜங்ஷனில் படியிறங்கி ஏற உன்னால் முடியாது. குட்டிப்பையாவுக்கு வலிக்கும் என்றார். அதென்ன குட்டிப் பையா. குட்டிப் பொண்ணாஆ  இருந்தா.......  ஓ  ஐ நோ. இட்ஸ்  அ பாய்.  வரும்போதே டாடி எங்கேன்னு கேட்பான்  பாரு என்றவர் முகத்தில் கொஞ்சம் சிரிப்பு வந்தது..    ..............                                                             நானும் அப்பாடாவென்று  தூங்கப் போனேன்.  அடுத்தநாள்       சரியான நேரத்துக்குக் காரில் வந்து ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தோம். இரண்டு மூன்று நிமிடங்கள் தான் அப்போது வண்டி நிற்கும் என்று நினைக்கிறேன்.எப்படியோ                                                                                                ரயிலில் ஏறிவிட்டோம்.                                        காலையில் சென்னை    செண்ட்ரல். லஸ் சர்ச்  ரோட்   அமைதியில் மூழ்கி இருந்தது.   க்ட்டைத் திறந்து  முன்வாசலில் போய்நின்றதும்       மாமியாரின் குரல் கேட்டது.வாவா மெள்ளவா. என்று.  பெட்டிகளைத் தூக்கி மாடியில் எங்கள் அறைகளில் வைத்துவிட்டுக் குளித்துவிட்டு வந்தார். நான் மாமியாரிடம் வாங்கி வந்த சோஹன் அல்வா,ச்பின் ஹெச் என்ற  பிஸ்கட்கள்,   எல்லாம்                                                                                            கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மாடியேறினேன்.  கீழே     வந்த பிறகு   புரசவாக்கத்திலிருந்து    தொலைபேசி . அப்பாவால் வர முடியவில்லை. அம்மா மட்டும் வந்திருக்கிறார்  என்று தெரிந்தது.   நாளைக்கு வருகிறோம்    மா  என்று சொல்லிவிட்டுஃபோனை வைத்துவிட்டார்..                                                  அவ்வளவுதான் அப்போதெல்லாம்      .நிறைய பேசிக் கழிக்கக் கூடாது நேரத்தை.. தாத்தாவுக்குக் கோபம் வந்துவிடும்.  10   மணிக்கெல்லாம் மணக்க மணக்கச் சாப்பாடு. கல்யாணக் கூடம் சுற்றி  இலைகள்.         நாத்தனார்கள், அவர்கள் குழந்தைகள்,இவர் பெரியப்பா,சித்தப்பா பசங்க    எல்லாம் வீடு நிறைய    கூட்டம்.   .எங்கள் வீட்டு மனிதர்கள் சேர்ந்தாலே கல்யாணக் கும்பல்தான்... இனிதாகக் கழிந்தது அன்றையப் பொழுது. அடுத்தநாளுக்கான ஏற்பாடுகள் மாவிலைத் தோரணம் கட்டுவதிலிருந்து வாழை மரங்கள் நடுவது எல்லாம்  மாடுகளைக் கவனித்துக் கொள்ளும் முனுசாமியும் அய்யனாரும்.                                                                                                                                                                                                        புரோகிதர்கள் வரவும்,அம்மாவும் சின்ன மாமியும் சீர் வரிசைகளோடு வரவும் சரியாக இருந்தது.    அம்மா ஒரு பச்சைப் பட்டுப் புடவை  இரட்டை ஜரிகை போட்டு வாங்கி வந்திருந்தார்.  இங்கே நாத்தனார் பூச்சூட்டலுக்காகக் கத்திரிப்பூ வண்ணத்தில்  பனாரஸ்  புடவை.     தாத்தா ஆஜி தலைமையில் அத்தனை  விசேஷங்களும் நன்றாக நடந்து முடிந்தன. ஒன்பது கஜக் கூறைப் புடவை அநியாயத்துக்குக் கனத்தது. தல்யில் வேறு பூச்சுற்றி.எழுந்து உட்கார்ந்து நமஸ்காரங்கள்  எல்லாம் அந்த இளம்வயதில் சுலபமாக முடிந்தன. காலை  இவர்  சேலம் கிளம்ப என்னை அழைத்துக் கொண்டு அம்மா    , பாட்டிவீட்டுக்கு அழைத்துக் கொண்டுவந்துவிட்டார். அன்று இரவு மதுரை பயணம்..                                                                                                                                  விதவிதமாகப் பயணங்கள் திருமணத்துக்காக மதுரையில்  கிளம்பினவள் இப்போது அம்மா ஆவதற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.   என் நினைவெல்லாம் சேலத்துக்குப் போய்விட்டன.                                                             மதுரை ஜங்ஷனில் அப்பா வந்திருந்தார்.    டாக்சி பிடித்துப் பசுமலை வந்தோம். சின்ன தம்பிக்கு ஒரே மகிழ்ச்சி. இங்கயே இருக்கப் போறியா. பாப்பா எப்ப வரும். அத்திம்பேர்  ஏன் வரவில்லை. என்று சுற்றிச் சுற்றி வந்தான்.                                       அப்பா  பழைய புத்தகங்களும் நிறைய ஆங்கிலப் புத்தகங்களும் வாங்கிவந்திருந்தார். .....தினப்படி மாலையில் தம்பியுடன்  நடைப் பயிற்சி. மதியம் தூக்கம். மாலையில் சேலத்துக்குக் கடிதம். அடுத்த நாள் காலையில் அவருடைய பதிலுக்குக் காத்திருப்பது....இப்படி பொழுது    போனது,. தீபாவளியும் வந்தது.     தொடரும்.                                                         

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// எங்கள் வீட்டு மனிதர்கள் சேர்ந்தாலே கல்யாணக் கும்பல்தான்... ///

இதை விட சந்தோசம் ஏது அம்மா...?

Geetha Sambasivam said...

தலை தீபாவளியா? அமர்க்களமாய் நடந்ததா? அருமையாக எழுதி இருக்கிறீர்கள். ஆனால் கண்ணன் வந்தான்னு எழுதி இருப்பதால் பையர் பிறந்துட்டாரோனு நினைச்சுட்டு வந்தேன். வந்தால் காணோமே! :))))

துளசி கோபால் said...

சில நினைவுகள் அலுப்பதே இல்லை, வாசிக்கவும் கூட!!!!

என்ன ஒரு அற்புதமான மனிதரப்பா சிங்கம்!!!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி . நிகண்டு.காம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தனபாலன். பெரிய குடும்பம். இவர் மேல் மிகவும் பாசம் வைத்திருப்பவர்கள். உள்ளூரிலேயே எல்லோரும் இருப்பதால் அத்தனை பேரும் வந்துவிடுவார்கள்.அப்போதைய பெரிய வீட்டில் அத்தனை பேருக்கும் இடம் இருந்தது.மகிழ்ச்சிக்குக் குறைவே இல்லை.

வல்லிசிம்ஹன் said...

தோள்பட்டை வலி நிறையா டைப் செய்ய விடுவதில்லை கீதா. ஏதோ மனதை நிலைப் படுத்தும் முயற்சி இந்தப் பதிவுகள். தலைதீபாவளி நன்றாக நடந்தது. அப்பா வீட்டில் படாடோபம் என்கிற வார்த்தைக்கே இடம் கிடையாது.>}}}

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,உண்மைதான். நினைவுகளில் இளைப்பாற வேண்டிய நேரம் இது. தனி மயில் ஒன்று அனுப்பி இருந்தேன். சேர்ந்துச்சோ சேரலையோன்னு கவலை. முடிந்தால் பதில்.

துளசி கோபால் said...

மயில் அனுப்பி ஒரு மணி நேரமாச்சு:-)

ராமலக்ஷ்மி said...

மிக அருமையாகச் சொல்லிக் கொண்டு வருகிறீர்கள். தொடருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

துளசிமா,மயில் வந்தது.மகிழ்ச்சி.>}

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி .மிக நன்றி மா.தொடருகிறேன்.

Ranjani Narayanan said...

உங்களது நினைவுப் பயணத்தில் நாங்களும் மதரை, சென்னை என்று போய்விட்டு வந்து கொண்டிருக்கிறோம், வல்லி.
இனிமையான நினைவுகள். உங்கள் கணவரை அறியாதவருக்கு அவரை வெகு அழகாக அறிமுகப் படுத்துகிறீர்கள்.

வாசிக்க வாசிக்க சந்தோஷமாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி,ஒரு 26 வயதும் 18 வயதும் சமைத்த சாம்ராஜ்யம். அன்பும் மகிழ்ச்சியும் ஆண்ட நாட்கள். அதில் குழந்தைகள் பங்கு நிறைய.எல்லோரும் சேர்ந்தே வளர்ந்தோம். அருமையான மனிதர். ஒருவருக்கும் துன்பம் நினைக்க மாட்டார். நன்றி ரஞ்சனி.

கோமதி அரசு said...

அருமையான அன்பான நினைவலைகள்.

வெங்கட் நாகராஜ் said...

உங்களின் இனிய நினைவுகளை படிக்க படிக்க மனதில் மகிழ்ச்சி... தொடரட்டும் நினைவுகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, நினைவுகளே எனக்கு மருந்து. அதுவும் நல்ல நாட்கள் என்னை நல்ல நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றன. ஆனால் எல்லோருக்கும் பிடிக்கும்படி எழுதுவதுதான் கொஞ்சம் சிரம. பரவாயில்லை. இது ஒரு டயரிதானே. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் வருகைக்கு நன்றி மா.

மாதேவி said...

இனிமையான நினைவுகள்.