Blog Archive

Tuesday, July 30, 2013

மருத்துவமனை அனுபவங்கள்


 எல்லா மருத்துவமனை அனுபவங்களும் கசப்பாக இருப்பதில்லை.
கடந்த புதன் கிழமை திடீரென்று மயங்கி விழுந்த மாமவுக்குக் கொடுக்கப்பட்ட வியாதியின் பெயர் மைல்ட் ஸ்ட்ரோக்.

இரண்டு நாட்களில் அறுவை செய்து அந்த இரத்தக் கட்டியை எடுக்கவேண்டும்.

உடனே எமார் ஐ.
அவரோ 81 வயது. மனைவியோ 72 வயது.
இருதய நோய் உள்ளவர். இருந்தாலும்  உறுதியான மனம் கொண்டவர்.
நான் தான் மனம் கலங்கினேன். அவர் ,அழாதேம்மா. எல்லாம் சரியாப் போயிடும்.
பெருமாள் பார்த்துப்பார்.' என்கிறார் என்னைக் கட்டியணைத்து ஆறுதல் சொன்னபடி.
மத்திய அரசிலிருந்து ஓய்வு பெற்றவர்.
என்ன  பென்ஷன் வருமோ தெரியாது.
ஆனால் மனைவி அமைந்தது அவர் பெற்றவரம்.

சிக்கன குடித்தனம்.
சேர்த்து வைத்த பணம் இப்போது உதவிக்கு வந்தது.

அதெல்லாம் கதையில்லை.
அறுவை சிகித்சை முடிந்துவிட்டது. நினைவு திரும்பி விட்டது. விழுந்துபோன கைகால்கள் இயங்க ஆரம்பிக்கின்றன.

வயது முதிர்ந்த நிலையில் மாமி இருந்தாலும் ஆஸ்பத்திரியில் பகல் நேரம் முழுவதும் கழிக்கிறார்.
மாமாவின்     உடல் உபாதைகளுக்கு மன்னிதான் உதவ முடியும்.
அவராலோ இவரை எழுப்பி உட்கார வைப்பது மிகவும் சிரமம்.
அவசர மணியை அழுத்தினால் ஏனென்று கேட்க ஆளில்லை.
இத்தனைக்கும்   சேவைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மருத்துவ மனை.

இது போதாதென்று திடீர் திடீர் என்று பத்தாயிரம் கொடுங்கள் நாற்பதாயிரம் கொடுங்கள் என்று  இன்ஸ்டண்ட்   டிமாண்ட்.

முதல் நாளே சொல்லி இருந்தால்   மாமி கொண்டு வந்திருப்பார்.
பணம் தவறி விடுமோ என்கிற பயம்.அதனால் அவசரத் தேவைக்கு மட்டும் எடுத்துக் கொண்டு வருவார். இதோடு அவரைப் பதற வைக்கிற மாதிரி இரண்டு மூன்றுதடவைகள் நடந்துவிட்டன.

மற்ற மருத்துமனைகளில் மருந்துகளை முதலில் கொடுத்துவிடுவார்கள். பிறகு நம்மை வாங்கி ரிப்ளேஸ்  செய்யச் சொல்வார்கள்.

இவர்கள் அப்படி இல்லை. இந்த மருந்து உடனே வேணும் யாராவது வாங்கி வாருங்கள்  என்று ஆர்டர் போடுகிறார்கள்.

பெரும்புகழ் படைத்த மருத்துவ மனைதான். டி.லக்ஸ்  வார்ட் தனிக்கவனம் பெறுகிறது.  அதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது.

இது எங்கள் அனுபவம். இன்னும் எத்தனையோ இருந்தாலும் மாமா  வீட்டுக்குக்
கிளம்பி வந்த பிறகுதான் எழுதவேண்டும்:(

இதில் வருத்தம் தரும் விஷயம்
மாமாவைக் கவனிக்க வேண்டிய வார்ட் பாய்
அவர் இருக்கும் அறையின் ஜன்னலிலேயே (கண்ணாடிக்கு அப்பால்) நாலைந்து தோழர்களோடு உட்கார்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருப்பதுதான்.!!

பூப்பூவாய்ப் பறக்காத பட்டாம்பூச்சி.

Add caption
Add caption


 கடற்கரையும் அந்தக் காற்றினால் சிறிது கூட அஞ்சாமல்
 இலையில் ஆடிக்கொண்டிருந்த பட்டாம்பூச்சியும்
ஒரு மோனத்தவத்தை நினைவூட்டின,.

எது வந்தாலும் இறைவனடியைப் பிடித்துவிட்டால்
நாம்    காப்பாற்றப் படுவோம் என்பதே
எனக்குத் தோன்றியது.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Monday, July 29, 2013

NOTஆஆ வேண்டாமா...சொல்லு சீக்கிரம்

Add caption
Add caption
iNFINITY POOL
Add caption
தங்கிய  விடுதி
Add caption
கறுப்புக்கடலும் வெள்ளை அலைகளும்

 மெரினா கடல் மண்ணைப் பார்த்துவிட்டு,அலைகளின் ஓரம் தேங்கும் குப்பைகளையும் மற்ற சொல்ல வேண்டாத வஸ்துக்களையும் கண்டு
பெண் தன் பசங்களைக் கடற்கரையை அண்ட விட மறுத்தாள்.

அதற்காக   மாமல்லபுரம் போகத் தீர்மானம்.

அங்கேயும் கடல் சீற்றம். குழந்தைகளுக்கோ நீரில் ஆட  வேண்டும்.
சுற்றிப் பர்த்தபோது விதவ்தமான நீச்சல் குளங்கள் தெரிந்தன.
அவ்வளவுதான்  . நீச்சல் உடைக்குள் தாவினார்கள் பையர்கள்.

சின்னவன் நீச்சல் கற்கவில்லை. பெரியவன் சின்னவனை ஊக்குவித்தான்.
இறங்கு. ஜாலியாக இருக்கும் என்று எத்தனையோ கெஞ்சிப் பார்த்தான். இத்தனைக்கும் அது நாலடி ஆழம் கொண்ட குளம் தான்.

ஒரு விரலை நனைப்பதும் வெளியே வருவதுமாக இருந்தான்.

நாங்கள் கரையில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்தவண்ணம் அவனை

உள்ளே போய்ப் பாரு என்று கட்டளை போட்டுக் கொண்டிருந்தோம்.
அம்மாவை முறைத்தபடி பக்கத்தில் வந்தவன்,

''அம்மா இப்ப என்ன சொல்றே
நான் உள்ளபோக  நாட்னு சொல்றியா வேண்டாம்னு சொல்றியா?
என்றதும் பெண்ணுக்குப் புரியவில்லை.
என்னடா கேக்கறே.
அதுதான் என் டிசிஷன். நாட் வேண்டாம்!!!!!!!!

அடுத்தாற் போல அவன் செய்ததுதான் வேடிக்கை. ஓரமாக இருந்த ஃப்ளோட்டரை தன் மேல் போட்டுக் கொண்டு அன்ண்ணாவின் கையைப் பிடித்துக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டான்!!
அண்ணா  கையை விடாமல் குளத்தைச் சுற்றி வந்தான்.
ஐ காட் இட்''னு பெருமைக் கூச்சல் வேறு.

முடிவுரை
குழந்தைகள் மொழி வேறு:)
 வெளியே வர  இரண்டு மணி ஆச்சு. :)






 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, July 25, 2013

வராத நிலவு

தேய் பிறை நிலா26/7/2013
குரு பூர்ணிமா

 இந்த மாத முழுநிலவைப் பார்க்கவே முடியவில்லை.
ஒரே  மேக மூட்டம். 14ஆம் நாளாவது   எடுத்திருக்கலாம்.:(

அதற்குப் பதிலாக அமெரிக்க  நிலாவை அனுப்பச் சொன்னேன்
மகளிடம்.
 தாய் சொல்லைத் தட்டாமல் அனுப்பிவிட்டாள்.
சென்னையில் ஆடிக்காற்றைக் காணோம்.
ஏதோ வசந்த காலம் போல குயில்களும் இனம் அறியாத பறவைகளும் காலையில் மாமரத்தில் கூடுகின்றன. அவைகளே மழைக்காலமா வசந்த காலமா என்று திணறுவதாக எனக்குத் தோன்றுகிறது.

இந்த வருடம் என்ன!!!திரையுலகத் தாரகைகளுக்கும்,பாடகர்களுக்கும்,இசை அமைப்பவர்களுக்கும்,நடிகர்களுக்கும்  மறையும் வருடமா தெரியவில்லை.

ஒருவர் பின் ஒருவராக விடை பெறுகிறார்கள்.

அவர்கள்  நமக்குத் தந்த மகிழ்ச்சிகளுக்கு நன்றி.

வந்திருந்த குழந்தைகளுக்கு ஒரு மாறுதலாக இருக்கட்டும் என்று மஹாபலிபுரம் போனோம். அங்கும்   மேக மூட்டம்.
அலைகள் ,''கிட்ட வராதே'' என்று பயமுறுத்தின.
அவைகளின் ஆக்ரோஷத்திலும் ஒரு அழகு தெரிந்தது.

அங்கு காவல் இருந்தவர் சொன்னார். வழக்கத்துக்கு மாறாக
அலைகளின் வேகம் அதிகமாக இருக்கிறது.

ஆனால் எவ்வளவு மணலை அரித்து உள்ளே    கொண்டு  போனதோ அத்தனையையும்   மீண்டும் கொண்டு வந்து கரையில் சேர்த்துவிடும்.
அடடா. மணல்  கொள்ளை அடிப்பவர்கள் சகவாசம் இந்தக் கடலுக்கு ஏற்படவில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்:)
இயற்கையின் அதிசயம்.

மீண்டும் பார்க்கலாம்.
பழைய நிலா.








 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, July 23, 2013

தண்ணீராய்ச் செலவழிந்துவிட்ட நாட்கள்.!

ஆட்டத்திற்குக் காத்திருக்கும்  நாற்காலிகள்!
முகர்ந்து போ என்றழைக்கும் சம்பங்கி மலர்கள்
மழைக்கு ஒதுங்கும் காகங்கள்
வண்ண வண்ண மலர்கள் வாசனை மலர்கள் சாய்ந்து படிக்க படுக்க நாற்காலிகள் இதமாக வருடும் காற்று. வேறென்ன வேண்டும்?
கரையைத் தாண்டித் தென்னையைத் தொடவும் முயற்சித்தன அலைகள்.
கத்தும் கடலோசை சற்றே வந்து காதை நிரப்பும் இடம்   ..உணவு விடுதிதூரத்தில் தெரிவது கடற்கரைக் கோவில்
பொன்னைக்கண்ட பெண்ணைப் போல மண்ணை அள்ளவா இந்த ஆட்டம்?
பச்சையா நீலமா,கறுப்பா, பழுப்பா  என்னவண்ணம் இந்த நீர்?
அக்கரைப் பச்சை:)
நுரையும் மணலும் போட்டியிட்டன. வென்றது அலைகள் தான்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, July 17, 2013

வெண்மை மென்மை அழகு இறைவனுக்கு

Add caption
Add caption
 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இன்றலர்ந்த மல்லிகைப் பூக்கள்

இறைவியின் திருவடிகளில் சரணம் புகுந்தன.

பறித்து அவள் பாதங்களில் இட்ட கைகளும்

புனிதமடைந்தன.

மலரின் மென்மையையும் ,தூய்மையையும்,
மனம் அடைவது எப்போதோ
Add caption
Add caption





தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணின்  கர்வத்தை,அவளது பாட்டி எப்படி    அடக்கிவிடுகிறாள்

 என்பதே அந்தக் கதை.

வெகு இதமாக !!!

 ஒரு யானையின் பெரிய உருவம்

அதை மதம் கொள்ள  வைப்பதில்லை

அதற்குத் துன்பம்   நேரும்போதுதான் அதற்குக் கோபமும் மதமும் கொள்கிறது.

அதே போல  விக்னவிநாயகனை  வணங்கும்போது அந்த யானை முகத்தோன்  நம்  மனத்திலிருக்கும் மதத்தையும் அகற்றுகிறான்..

 

அவனிடம் செலுத்தப்படும்  பக்தி நம் மனத்தையும் அசைத்து

நல்வழி நடக்க வழிகாட்டுகிறது. எப்பொழுதுமே  நிற்கும்போது

ஆடிக் கொண்டிருக்கும்  யானையைப் போல

வேலை இல்லாத   மனம் பலவித சிந்தனைகளில் பேதலித்துத்

தவிக்கும்.

நேர்வழியில் பாகனுடைய  கையைப் பிடித்துக் கொண்டு நடக்கையில் ஒருமனதாக ஒரே வழி செல்லும்.

யானைப் பாகனாக  ஒரு குருவைத் தேடிக் கிடைக்கப் பெற்றவர்களே 

பாக்கியம் செய்தவர்கள்  என்று சொல்லிப் பூர்த்தி செய்தார்.

எத்தனை தெரிந்திருந்தாலும் பெரியவர்களிடம்  மரியாதையும்

அன்பும் செலுத்தும்போதுதான்

வாழ்க்கை பூரணமாகிறது என்பதையும் விளக்கினார் அந்தப் பாட்டி.

Sunday, July 14, 2013

நாணமோ தர்ம சங்கடமோ....

ம்ம் நான் வரமாட்டேன்  மேடைக்கு.....
என்ன சொல்ல வந்தேன்னு மறந்து போச்சே!!!!
Add caption
போங்கம்மா. இல்லாத்தையும் பொல்லாத்தையும் சொல்லிக்கிட்டு:)))))
நீங்க எல்லாம் பேசுங்க. நான் கேக்கறேன்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
எனக்கு ஃப்ரண்டே  இல்ல:(
அம்மா  பின்னாலியே இருக்கேன். நீங்க எல்லாரும் பேசுங்க:)
இதுல எல்லாவற்றிலெயும்  இருக்கும் எல்லோரும் ஒரு நாள் பிரமாதமாகப் பளிச்சிடுவார்கள். எனக்கே அதில் ஒருவரைத்  தெரியும்J


மழையும் வரும் வெயிலும் வரும் வாழ்க்கை ஒன்றுதான்

எங்கவீட்டின்  தண்ணீர்ப் பற்றாக்குறையாலயே   அழகாகப் பூத்த ராஜகுமாரி
கள்ளிச் செடியின் அழகு மலர்
யுகாடான் மரம்.அதில் முதலில் பூத்த பூக்கள்.  இதிலேயே பல வகைகள் உண்டு.
Bravo   paiya!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வெள்ளிமணிகளாகப் பூக்கள்
மழை வந்து காப்பாற்றியது கிணற்றுத்தண்ணீரை.
 அடி வண்டல் நிலமைக்குப் போய்விட்ட்து. ஒரு மாதிரி  நாற்றம் வேறு. தூறு  எடுக்கும் கிழவனாரையும் காணோம். இருக்காரோ இல்லையோ.
அவர் இறங்கினால்  பழைய பொருட்கள் எல்லாம் கிடைக்கும்J


 போர் வெல்லுக்குச்  செலவழிக்க 59 ஆயிரம் கேட்கிறார்  எஞ்சினீயர்.
எல்லாம் இத்துப் போச்சு சார்(!)
தண்ணீர்  எடுத்தீங்கனால் உங்க சாமர்த்தியம்.
நம் சிங்கத்துக்கோ எல்லாமே அலுப்பாகத் தோன்றுகிறது.
காலையில் இருவருக்கும் பம்ப் வேலை. ஒருவர் கை ஓய்ந்தால் மற்றொருவர் எடுத்துக் கொள்வோம்.:)
பக்கத்துவிட்டுக்கார்ருக்கு அதுவே கசக்கிறது.
ஒங்களோட வூட்லே மட்டும் தண்ணீ வர்தே. எங்கவீட்ல காணோம் சார்.
அவங்க வீட்டு அம்மாவைக் கேட்டால்
அடியிலியே  தண்ணீ நிக்குது. என்றார். சரி எப்படித்தான் இருக்கு அவங்க வீட்டு சம்ப்,அதாவது நீர்த்தொட்டி  என்று பார்க்கப் போனால. ….ஒரு ஸ்விம்மிங்  பூல் அளவுக்குத் தொட்டி கட்டியிருக்காங்க.
வாழ்க நீ அம்மான்னுட்டு வந்துட்டேன்.
எங்கள் வீட்டில் கார்ப்பரேஷன் ரூல்ஸ் பிரகாரம் எப்பவொ கட்டின தொட்டி

ஆறடிக்கு நாலடி.:)

 பூக்கள் கதைக்கு வருவோம்.
அடுக்குமல்லி ஒரு நாளைக்கு  ஆறு பூக்கிறது.  ஷண்மதக் கடவுளருக்கும் அவை அர்ப்பணம்.
நீ வெள்ளை அழகின்னால் நான் மஞ்சளழகி  என்று கள்ளிச் செடி.
தம்பட்டம் அடிக்கிறது.
அதைத்தவிர பாலைவனத்தில் மட்டுமே வளரும் என்று நினைத்த யுகாடான்  இப்போது நானும் தயார் என்று அழகுக்குஞ்சலமாகப் பூத்திருக்கிறது.

பேரனுக்கு ஒரு அட்டைக் கத்தி தயார் செய்திருக்கிறார் தாத்தா,. அதை வைத்துக் கொண்டு   சோட்டா பீமாகவே தன்னை உருவகம் செய்து பட படா வேஷம் காட்டுகிறார் சின்னவர்.:)
அப்ப்ப்பா அந்த வேகத்தை என்னவென்று சொல்வது.
இன்னும் ஒரு வாரம் தான் இந்த பரபரப்பு. கோபம் தாபம் வருத்தம் சிரிப்பு எல்லாம். பரவாயில்லை இந்தச் சொர்க்கத்தைக் கண்ணில் காட்டும்
கடவுளுக்கு ஏக நன்றி.

Tuesday, July 09, 2013

பை வாங்கலியோ பை

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இந்த மாத   படப் போட்டி  பிட்  படப் போட்டி  பைகள்.
பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் பை. தான் வெளியே போனால் கூடவே பையனோ பையோ வரவேண்டும். இல்லாவிட்டால்  நடை துவங்காது.:)

ஏனிப்படி? முதலில்  அம்மாவைப் பிடித்துக் கொண்டோம்.
பிறகு பால் கிண்டியைப் பிடித்தோம்.
பிறகு பள்ளிக்கான தோள் பையப் பிடித்தோம். ...

கல்லூரிக்குப் பைகிடையாது.(எல்லாம்  ஸ்டைலுதான்  காரணம்) இரண்டு பெரிய புத்தகங்கள். நடுத்தரமக்களுக்கான  ஒரு சின்ன டிபன்  பாக்ஸ்.
அதோடு பஸ்ஸில் ஏறி,
தோழிகளுடன் சேர்ந்து இடம் பிடித்து
நிற்கும் தோழிகளின் புத்தகங்களை வாங்கி வைக்க    இடம் செய்துகொண்டு
பஸ்ஸில் ஏற்றம் இறக்கம் வரும்போது  கிளுகிளுவெனச் சிரித்து,

ஏஏய் அங்க பாரேன் எக்மோர் ஸ்டாப்பில ,காலங்களில் வசந்தம் பாட்டுக்கு ஜெமினி போட்டுக் கொண்ட சட்டையைப் போட்டுக் கொண்டு
ஒரு பையன் நிற்கிறான்!

எல்லா முகங்களும் அந்தப் பக்கம் திரும்பும்.
ஹ்ம்ம்ம் என்ற பெருமூச்சு கிளம்பும்.

இதற்கப்புறம் திருமணம்.
எனக்குத் திருமணப் பரிசாக வந்தவை  ஐந்து  வகை  ஹாண்ட்பாக்  கள்தான்.
ஒன்று கையில் மாட்டிக் கொள்வது.
அதை வைத்துக் கொண்டு நான் பட்ட பாடு.:(
அதுவேண்டாம் என்று சிறிய  க்ளட்ச்  பையை எடுத்துக் கொண்டால் என்னவைப்பது அதில் . நாத்தனார்கள் அழகாக் கைக்குட்டை,லிப்ஸ்டிக்,
காம்பாக்ட் பவுடர் என்று நிறப்பி இருந்தினர்.
ஒரு நாள் தன் மேலதிகாரி வீட்டுக்கு ப்  போக  தயாராக இருக்கும்படி
ஆஃபீஸ் பையன் ஷண்முகம் சொல்லிவிட்டுப் போனான்.

படபடப்பு ஆரம்பித்தது.
மையிட்டுக்காதே. வட்டப் பொட்டு வாடாமல்லிக் குங்குமம்
பச்சை பனாரஸ்,முத்துமாலை  எல்லாம் சரி.
லிப்ஸ்டிக் எப்படிப் போட்டுக் கொள்வது?
போட்டுக் கொண்டேன் அசல்    கிளி மூக்குமாதிரிச் சிவப்பில் கலர் லிப்ஸ்டிக்.
அதைத் திறக்கவே ஒரு போராட்டம்.
திறந்தது வந்த  வண்ணக்குச்சியைப் பட்டையாக  உதட்டில் வர்ணம் போட்டாச்சு.
சிங்காரம்  செய்து கொள்ளும்கலை கற்காத நாட்கள். இப்பவும் ஒண்ணும் தெரியாது என்பது வேற விஷயம்:)

தசபுசா  புடவை கட்டியாச்சு.   என்  கைச்சாப்பாட்டினால் இளைத்த உடம்பு, தொளதொள சட்டை..
வாசலில் ஜீப்.
படபடன்னு பூட்ஸ் சத்தம் மாடி ஏறி வருகிறார்.
ஈ என போஸ் கொடுத்தபடி நான்   நிற்பதைப்    பார்த்ததும் அதிர்ந்து போனார் சிங்கம்:))))))))))))))))))))))))))))))))))))))))

ஏம்மா இப்படி லிப்ஸ்டிக் போட்டுண்டு இருக்கே.
அழகா இருக்கு. ஆனால் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு.
நீ என்ன பண்றே  அந்த டிஷ்யூ    கர்சீஃப் இருக்கு இல்லையா,அதனால

ஒத்தி எடுத்துடு. லிப்ஸ்டிக்  இல்லைன்னால் தப்பில்லை'' என்று முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுப் போய் தயாரானார்.

ஹைலைட் என்ன தெரியுமா. நாங்கள் சாப்பிடப் போன இடம் ஒரு பக்கா
வைணவ தம்பதிகளின்  வீடு.

வா வா என்று ஆரம்பித்த நட்பு வெகுநாட்கள் நீடித்தது.
எனக்கு    முதல் குழந்தை  பிறக்கப் போகிறது என்ற செய்தியை விளக்கியவரே
அவர்தான். முதலில் உன் மாமியாரிடம் ட்ரன்க் கால் போட்டுச் சொல்லு!
என்று அறிவுறுத்தியவரும் கூட..

பைகள் இப்போது இன்றி அமையாத   சாதனங்கள் ஆகிவிட்டன.
அருமையான லண்டன் கைப்பை  ஃபீடிங் பாட்டில் பால் கொட்டி வீணாகியது.

சிங்கம் ஒரு நிகழ்ச்சிக்கும் கோபித்துக் கொள்ளமாட்டார்.
இன்னோண்ணு வாங்கிக்கலாம்மா என்பார்.:)பாவம்.
இப்ப  அந்தப் பொண்ணு போயி      ,,வேறஅம்மாவா    மாறிட்டாங்க.
உலகமே என் கைப்பையில் தான்:)

நாட்டுப்புற மனைவியும் நாகரீகக் கணவரும்:)பை பைகவனியுங்கள்!!

Posted by Picasa