Add caption |
இன்றலர்ந்த
மல்லிகைப் பூக்கள்
இறைவியின்
திருவடிகளில் சரணம் புகுந்தன.
பறித்து
அவள் பாதங்களில் இட்ட கைகளும்
புனிதமடைந்தன.
மலரின்
மென்மையையும் ,தூய்மையையும்,
மனம் அடைவது
எப்போதோAdd caption |
Add caption |
தனக்கு
எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணின் கர்வத்தை,அவளது பாட்டி எப்படி அடக்கிவிடுகிறாள்
என்பதே அந்தக் கதை.
வெகு
இதமாக !!!
ஒரு யானையின் பெரிய உருவம்
அதை மதம்
கொள்ள வைப்பதில்லை
அதற்குத்
துன்பம் நேரும்போதுதான் அதற்குக் கோபமும்
மதமும் கொள்கிறது.
அதே போல விக்னவிநாயகனை
வணங்கும்போது அந்த யானை முகத்தோன் நம் மனத்திலிருக்கும் மதத்தையும் அகற்றுகிறான்..
அவனிடம்
செலுத்தப்படும் பக்தி நம் மனத்தையும் அசைத்து
நல்வழி
நடக்க வழிகாட்டுகிறது. எப்பொழுதுமே நிற்கும்போது
ஆடிக்
கொண்டிருக்கும் யானையைப் போல
வேலை
இல்லாத மனம் பலவித சிந்தனைகளில் பேதலித்துத்
தவிக்கும்.
நேர்வழியில்
பாகனுடைய கையைப் பிடித்துக் கொண்டு நடக்கையில்
ஒருமனதாக ஒரே வழி செல்லும்.
யானைப்
பாகனாக ஒரு குருவைத் தேடிக் கிடைக்கப் பெற்றவர்களே
பாக்கியம்
செய்தவர்கள் என்று சொல்லிப் பூர்த்தி செய்தார்.
எத்தனை
தெரிந்திருந்தாலும் பெரியவர்களிடம் மரியாதையும்
அன்பும்
செலுத்தும்போதுதான்
வாழ்க்கை
பூரணமாகிறது என்பதையும் விளக்கினார் அந்தப் பாட்டி.
18 comments:
பதிவில் சில எழுத்துகள் வெண்மையாகவும்,சில எழுத்துகள்
கறுமையாகவும் பதிந்திருக்கிறன. எப்படி என்றுதான் புரியவில்லை.
பிள்ளையாரே நீயே கவனித்துக் கொள் என்று சொல்லி இருக்கிறேன்.
பிழைபொறுத்தருளவேண்டும்.
படங்கள் எல்லாம் அழகோ அழகாக உள்ளன.
எழுத்துகள் ஒன்றுமே சரியாகத் தெரியவில்லை.
அதனால் பரவாயில்லை. ;)
பகிர்வுக்கு நன்றிகள். மகிழ்ச்சி.
பாட்டி நன்றாகவே விளக்கி உள்ளார்கள்... பூக்கள் மனதை மிகவும் கவர்ந்தன... வாழ்த்துக்கள் அம்மா...
settings-ல் சிறிது மாற்றம் செய்ய வேண்டும்... செய்தால் சரியாகி விடும்... நன்றி...
dindiguldhanabalan@yahoo.com
இன்று பூத்த மலர்கள் வெகு அழகு. இறைவனின் பாதங்களை அலங்கரிக்கும் போது இன்னும் அழகு கூடுகிறது.
அன்புதான் அனைத்தும்,பாட்டி சொல்லும் கதை அருமை.
புது மாதிரியாக ப்ளாக் மாறி இருக்கிறதே! வேர்ட் ப்ரஸ் இல்லை போலிருக்கு. என்னனு சொல்ல முடியலை. டெம்ப்ளேட் மாத்தி இருக்கா?
அப்பாடா, ரொம்பக் கஷ்டப் பட்டு ஒரு வழியாக் கமென்ட்ஸைக் கண்டு பிடிச்சுட்டேன். :))) இவ்வளவு தொழில் நுட்பம் என்போன்றோருக்கு எல்லாம் ரொம்பக் கஷ்டம்! :((( எழுத்துக்கள் எல்லாமே வெள்ளைப் பின்னணியில் கறுப்பாகத் தான் தெரிகின்றன.
இந்தக் கமென்ட் பாக்ஸை எப்படிக் கண்டு பிடிப்பதுனு மட்டும் சொல்லிடுங்க. :))) இம்முறை எப்படியோ வந்துடுச்சு! மறுபடி போய் ஒளிஞ்சுண்டதுனா! கஷ்டம்!
நல்ல செய்தி.
என்ன, டெம்ப்ளேட் மாற்றி விட்டீர்களா!
படங்கள் அழகாவே இருக்கு வல்லிம்மா..
அந்த மலர்களைப் போலவே அழகு பகிர்ந்த செய்தியும். புது டெம்ப்ளேட் அருமை.
நன்றி வைகோ சார். அசராமல் வருகை தந்து பின்னூட்டமும் இடுகிறீர்கள் .மிகவும் நன்றி.
நன்றி தனபாலன்.இன்னும்விரிவான கதை அது. நேரம் இல்லாமல் விட்டுவிட்டேன்.
செய்துவிட்டேன் தனபாலன்.கூகிளில் என்னவோ பிரச்சினையாக இருக்கிறது.
அப்பாடா, பழைய மாதிரி வருது. இப்போத் தான் நிம்மதியா இருக்கு! :))))
அப்பாடா.. பொட்டி மறுபடி வந்துருச்சா.. ஏதாவது மாத்தினீங்களா வல்லிம்மா. போஸ்ட் இருந்தது கமெண்டுகள் எதையும் சில நாட்களாக பார்க்க முடியலையே.
அடுக்கு மல்லி மலர்கள் அழகாக இருக்கின்றன. கதையும் அருமை.
குண்டு குண்டு மல்லி!!!!!
ஹப்பா........ வாசனை இங்கே வீசுது!
Post a Comment