Add caption |
Add caption |
iNFINITY POOL |
Add caption |
தங்கிய விடுதி |
Add caption |
கறுப்புக்கடலும் வெள்ளை அலைகளும் |
மெரினா கடல் மண்ணைப் பார்த்துவிட்டு,அலைகளின் ஓரம் தேங்கும் குப்பைகளையும் மற்ற சொல்ல வேண்டாத வஸ்துக்களையும் கண்டு
பெண் தன் பசங்களைக் கடற்கரையை அண்ட விட மறுத்தாள்.
அதற்காக மாமல்லபுரம் போகத் தீர்மானம்.
அங்கேயும் கடல் சீற்றம். குழந்தைகளுக்கோ நீரில் ஆட வேண்டும்.
சுற்றிப் பர்த்தபோது விதவ்தமான நீச்சல் குளங்கள் தெரிந்தன.
அவ்வளவுதான் . நீச்சல் உடைக்குள் தாவினார்கள் பையர்கள்.
சின்னவன் நீச்சல் கற்கவில்லை. பெரியவன் சின்னவனை ஊக்குவித்தான்.
இறங்கு. ஜாலியாக இருக்கும் என்று எத்தனையோ கெஞ்சிப் பார்த்தான். இத்தனைக்கும் அது நாலடி ஆழம் கொண்ட குளம் தான்.
ஒரு விரலை நனைப்பதும் வெளியே வருவதுமாக இருந்தான்.
நாங்கள் கரையில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்தவண்ணம் அவனை
உள்ளே போய்ப் பாரு என்று கட்டளை போட்டுக் கொண்டிருந்தோம்.
அம்மாவை முறைத்தபடி பக்கத்தில் வந்தவன்,
''அம்மா இப்ப என்ன சொல்றே
நான் உள்ளபோக நாட்னு சொல்றியா வேண்டாம்னு சொல்றியா?
என்றதும் பெண்ணுக்குப் புரியவில்லை.
என்னடா கேக்கறே.
அதுதான் என் டிசிஷன். நாட் வேண்டாம்!!!!!!!!
அடுத்தாற் போல அவன் செய்ததுதான் வேடிக்கை. ஓரமாக இருந்த ஃப்ளோட்டரை தன் மேல் போட்டுக் கொண்டு அன்ண்ணாவின் கையைப் பிடித்துக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டான்!!
அண்ணா கையை விடாமல் குளத்தைச் சுற்றி வந்தான்.
ஐ காட் இட்''னு பெருமைக் கூச்சல் வேறு.
முடிவுரை
குழந்தைகள் மொழி வேறு:)
வெளியே வர இரண்டு மணி ஆச்சு. :)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
16 comments:
வாலுப்பசங்களுக்காகவே ஒரு தனி டிக்ஷனரி யாராவது கண்டுபிடிங்கப்பா :-))
குழந்தைகள் மொழியை ரசித்தேன்... படங்கள் அருமை...
நல்ல "நாட்" ஹிஹிஹிஹி!
இவர்களின் மொழி புரிந்து விட்டால்.......
புரியாமல் இருப்பதும் பல நேரங்களில் மகிழ்ச்சி தரும்....
ஆமாம் சாரல். அவனும் அவன் தமிழும் வேடிக்கை.:)
அவனுக்குத் தான் என்ன சொல்கிறோம் என்று நன்றாகவே புரியும். நாம்தான் ஞேன்னு முழிக்கணும் வெங்கட்:)
படங்களும் அழகு. குழந்தை பாஷையும் அழகு.
வால்மொழி வாய்மொழி.
நன்றி ஸ்ரீராம்.நாம் பெற்ற குழந்தைகள் மொழிப்பயிற்சி கூட மறக்க வழி இருக்கு.பேரன் பேத்திகளின் வார்த்தைகள் மறப்பதில்லை:)
ஆமாம் துரை. சரியான வாலு.வாய்மொழியும் திருத்தம்.
குழந்தைகள் மொழி வேறு:)
அழகு மொழி ..!
ஹைய்யோ!!! சூப்பர் குளம்!
நான் போய் பார்ப்பதா இல்லை நாட்டா?
குழந்தைகள் மொழி அழகு.
வரணும் இராஜராஜேஸ்வரி.நன்றி மா.
நீங்க இங்க வாங்கதுளசிமா!!!வாங்க நாம் போகலாம்:)
வரணும் கோமதி. உங்க பேரனும் என்னவெல்லாம் பேசறானோன்னு நினைத்துக் கொள்வேன்.:) வாழ்க வளமுடன்.
Post a Comment