Blog Archive

Tuesday, July 30, 2013

மருத்துவமனை அனுபவங்கள்


 எல்லா மருத்துவமனை அனுபவங்களும் கசப்பாக இருப்பதில்லை.
கடந்த புதன் கிழமை திடீரென்று மயங்கி விழுந்த மாமவுக்குக் கொடுக்கப்பட்ட வியாதியின் பெயர் மைல்ட் ஸ்ட்ரோக்.

இரண்டு நாட்களில் அறுவை செய்து அந்த இரத்தக் கட்டியை எடுக்கவேண்டும்.

உடனே எமார் ஐ.
அவரோ 81 வயது. மனைவியோ 72 வயது.
இருதய நோய் உள்ளவர். இருந்தாலும்  உறுதியான மனம் கொண்டவர்.
நான் தான் மனம் கலங்கினேன். அவர் ,அழாதேம்மா. எல்லாம் சரியாப் போயிடும்.
பெருமாள் பார்த்துப்பார்.' என்கிறார் என்னைக் கட்டியணைத்து ஆறுதல் சொன்னபடி.
மத்திய அரசிலிருந்து ஓய்வு பெற்றவர்.
என்ன  பென்ஷன் வருமோ தெரியாது.
ஆனால் மனைவி அமைந்தது அவர் பெற்றவரம்.

சிக்கன குடித்தனம்.
சேர்த்து வைத்த பணம் இப்போது உதவிக்கு வந்தது.

அதெல்லாம் கதையில்லை.
அறுவை சிகித்சை முடிந்துவிட்டது. நினைவு திரும்பி விட்டது. விழுந்துபோன கைகால்கள் இயங்க ஆரம்பிக்கின்றன.

வயது முதிர்ந்த நிலையில் மாமி இருந்தாலும் ஆஸ்பத்திரியில் பகல் நேரம் முழுவதும் கழிக்கிறார்.
மாமாவின்     உடல் உபாதைகளுக்கு மன்னிதான் உதவ முடியும்.
அவராலோ இவரை எழுப்பி உட்கார வைப்பது மிகவும் சிரமம்.
அவசர மணியை அழுத்தினால் ஏனென்று கேட்க ஆளில்லை.
இத்தனைக்கும்   சேவைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மருத்துவ மனை.

இது போதாதென்று திடீர் திடீர் என்று பத்தாயிரம் கொடுங்கள் நாற்பதாயிரம் கொடுங்கள் என்று  இன்ஸ்டண்ட்   டிமாண்ட்.

முதல் நாளே சொல்லி இருந்தால்   மாமி கொண்டு வந்திருப்பார்.
பணம் தவறி விடுமோ என்கிற பயம்.அதனால் அவசரத் தேவைக்கு மட்டும் எடுத்துக் கொண்டு வருவார். இதோடு அவரைப் பதற வைக்கிற மாதிரி இரண்டு மூன்றுதடவைகள் நடந்துவிட்டன.

மற்ற மருத்துமனைகளில் மருந்துகளை முதலில் கொடுத்துவிடுவார்கள். பிறகு நம்மை வாங்கி ரிப்ளேஸ்  செய்யச் சொல்வார்கள்.

இவர்கள் அப்படி இல்லை. இந்த மருந்து உடனே வேணும் யாராவது வாங்கி வாருங்கள்  என்று ஆர்டர் போடுகிறார்கள்.

பெரும்புகழ் படைத்த மருத்துவ மனைதான். டி.லக்ஸ்  வார்ட் தனிக்கவனம் பெறுகிறது.  அதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது.

இது எங்கள் அனுபவம். இன்னும் எத்தனையோ இருந்தாலும் மாமா  வீட்டுக்குக்
கிளம்பி வந்த பிறகுதான் எழுதவேண்டும்:(

இதில் வருத்தம் தரும் விஷயம்
மாமாவைக் கவனிக்க வேண்டிய வார்ட் பாய்
அவர் இருக்கும் அறையின் ஜன்னலிலேயே (கண்ணாடிக்கு அப்பால்) நாலைந்து தோழர்களோடு உட்கார்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருப்பதுதான்.!!

17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பணத்திற்கேற்ப வைத்தியம் தான் - எங்கும் இந்தக் கொடுமை உள்ளது...

விரைவில் அவர் பூரண நலமடைய வேண்டுகிறேன்...

இராஜராஜேஸ்வரி said...

விரைவில் அவர் பூரண நலமடைய பிரார்த்தனைகள்..!

ஸ்ரீராம். said...

எல்லா மருத்துவமனைகளுக்கும் ஒரே குணம். என்ன செய்ய! மாமா விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எங்கள் பிரார்த்தனைகள்.

Geetha Sambasivam said...

எல்லா மருத்துவமனைகளும் இப்படித் தான். :(

Geetha Sambasivam said...

மாமாவுக்கு எங்கள் பிரார்த்தனைகள். விரைவில் நலம் அடைந்துவிடுவார். கவலை வேண்டாம்.

கோமதி அரசு said...

மருத்துவ மனை வியபார தலமாக மாறி வெகு காலமாச்சு.
மாமா விரைவில் நலமடைய வாழ்த்துக்கள்., பிராத்தனைகள்.
வாழ்க வாளமுடன்.

வெங்கட் நாகராஜ் said...

பல மருத்துவமனைகளின் நிலை இது தான்....

உங்கள் மாமா பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப எனது பிரார்த்தனைகளும்....

ராமலக்ஷ்மி said...

தங்கள் மாமா சீக்கிரம் குணமடையப் பிரார்த்தனைகள்!

மருத்துவமனைகள் இயங்கும் விதம் வேதனை தருவதாகவே உள்ளது எல்லா இடங்களிலும்.

சாந்தி மாரியப்பன் said...

காசைக்கொட்டிக்கொடுத்தாலும் சரியான சிகிச்சை கிடைக்கிறது அவரவர் வாங்கி வந்த வரம்தான்..

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன். பண சரியாகத்தான் வாங்கிக் கொள்கிறார்கள். சேவை செய்யத்தான் ஓடி ஒளிகிறார்கள்:(

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி. அவர் சீக்கிரமே வீடு திரும்பி நடப்பார் என்றே நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்பிவிடுவார்.நடக்கப் பழகணும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா. பலவீனம் தான் நிறைய இருக்கிறது. குணமாக நாளாகும்.
தையல் பிரித்துவிட்டால் இரண்டு நாளில் வீடுபோகலாம்.அ ங்கேயும் நடந்தால்தானே குணமாகும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதிமா.
நோய்க்காகவே பல லட்சங்களை ஒதுக்கிவைக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.எங்கள் பிரார்த்தனகளும் அவர் மீளவும் நடக்கவேண்டும் என்பதே.

வல்லிசிம்ஹன் said...

எல்லோர் கருத்தும் இதே போல இருக்கிறதே!அனைவருக்கும் இந்த அனுபவம் தான் கிடைத்திருக்கிறது.இன்னும் ஓரிரு மாதங்களில் அவர் பூரண நலம் பெற்றுவிடுவார் என்றே நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி. அதுவும் வயதானவர்கள் பாடு மிகவும் சிரமம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல், அதென்னவோ உண்மை. ஆஸ்பத்திரியில் அறையே கிடைக்கவில்லை. அத்தனை நோயாளிகள்.
பார்த்துக் கொள்பவர்களும் நிறைய இருப்பதாகத் தெரியவில்லை.நல்ல இடம்தான். நம்வேளை சரியாக இருக்கவேண்டும்.