வெள்ளிமணிகளாகப்
பூக்கள்
மழை வந்து
காப்பாற்றியது கிணற்றுத்தண்ணீரை.
அடி வண்டல் நிலமைக்குப் போய்விட்ட்து. ஒரு மாதிரி நாற்றம் வேறு. தூறு எடுக்கும் கிழவனாரையும் காணோம். இருக்காரோ இல்லையோ.
அவர்
இறங்கினால் பழைய பொருட்கள் எல்லாம் கிடைக்கும்J
போர் வெல்லுக்குச் செலவழிக்க 59 ஆயிரம் கேட்கிறார் எஞ்சினீயர்.
எல்லாம்
இத்துப் போச்சு சார்(!)
தண்ணீர் எடுத்தீங்கனால் உங்க சாமர்த்தியம்.
நம் சிங்கத்துக்கோ
எல்லாமே அலுப்பாகத் தோன்றுகிறது.
காலையில்
இருவருக்கும் பம்ப் வேலை. ஒருவர் கை ஓய்ந்தால் மற்றொருவர் எடுத்துக் கொள்வோம்.:)
பக்கத்துவிட்டுக்கார்ருக்கு
அதுவே கசக்கிறது.
ஒங்களோட
வூட்லே மட்டும் தண்ணீ வர்தே. எங்கவீட்ல காணோம் சார்.
அவங்க
வீட்டு அம்மாவைக் கேட்டால்
அடியிலியே தண்ணீ நிக்குது. என்றார். சரி எப்படித்தான் இருக்கு
அவங்க வீட்டு சம்ப்,அதாவது நீர்த்தொட்டி என்று
பார்க்கப் போனால. ….ஒரு ஸ்விம்மிங் பூல் அளவுக்குத்
தொட்டி கட்டியிருக்காங்க.
வாழ்க
நீ அம்மான்னுட்டு வந்துட்டேன்.
எங்கள்
வீட்டில் கார்ப்பரேஷன் ரூல்ஸ் பிரகாரம் எப்பவொ கட்டின தொட்டி
ஆறடிக்கு
நாலடி.:)
பூக்கள்
கதைக்கு வருவோம்.
அடுக்குமல்லி
ஒரு நாளைக்கு ஆறு பூக்கிறது. ஷண்மதக் கடவுளருக்கும் அவை அர்ப்பணம்.
நீ வெள்ளை
அழகின்னால் நான் மஞ்சளழகி என்று கள்ளிச் செடி.
தம்பட்டம்
அடிக்கிறது.
அதைத்தவிர
பாலைவனத்தில் மட்டுமே வளரும் என்று நினைத்த யுகாடான் இப்போது நானும் தயார் என்று அழகுக்குஞ்சலமாகப் பூத்திருக்கிறது.
பேரனுக்கு
ஒரு அட்டைக் கத்தி தயார் செய்திருக்கிறார் தாத்தா,. அதை வைத்துக் கொண்டு சோட்டா பீமாகவே தன்னை உருவகம் செய்து பட படா வேஷம்
காட்டுகிறார் சின்னவர்.:)
அப்ப்ப்பா
அந்த வேகத்தை என்னவென்று சொல்வது.
இன்னும்
ஒரு வாரம் தான் இந்த பரபரப்பு. கோபம் தாபம் வருத்தம் சிரிப்பு எல்லாம். பரவாயில்லை
இந்தச் சொர்க்கத்தைக் கண்ணில் காட்டும்
கடவுளுக்கு
ஏக நன்றி.
|
12 comments:
ஆஹா அருமை, சென்னையில் மழை கொட்டுதுனு தம்பி சொன்னார். :))) நல்லாக் கொட்டட்டும். இங்கே மழை வேண்டி யாகம், யக்ஞம் செய்யறாங்க. :)))
பேராண்டி யாரோட கத்தியைத் தூக்கிட்டுப் போர் புரியறாப்போல?? தாத்தா அருகே உட்கார்ந்து ரசிச்சுட்டு இருக்கார். :)))) ஜூப்பர் ஜீன்! :)))))
யோவ் வருணா !!
எங்கேயோ இருக்கவேண்டிய நீ எங்கேயோ இருக்கிறாயே !!
இன்னிக்கு பாஸ்டன்லேந்து நியூ ஜெர்சி வர்ற வரைக்கும் 300 மைலுக்கு ஆங்காங்கே மழை பொழிந்து எங்கு பார்த்தாலும் வெள்ள அபாயம் என்று அறிவிப்பு.
இதெல்லாம் உனக்கு தேவைதானா ? நேரா போய் சென்னை ஆழ்வார் பேட் போய் ஒரு அரை அடி மழை அடுத்த அரை மணி நேரத்தில்
பெய் .அப்பத்தான் நீ சாமர்த்திய சாலி.
சுப்பு தாத்தா
www.subbuthatha.blogspot.com
பேரனையும் ரசித்தேன்...
உங்க வீட்டு சோட்டா பீம் அசத்தறார் :-)
படங்களும் பதிவும் அருமை. கத்தியோடு காட்சி தரும் பேரன்... :)
சுப்பு தாத்தா சொன்ன மாதிரி தமிழகத்தில் மழை பெய்தால் நன்றாகத் தான் இருக்கும்....
திருச்சி காவேரி ஆறு தண்ணீர் இல்லாது வறண்டு போய் பலகாலமாச்சு! மழை பெய்தாலாவது கொஞ்சம் நனையட்டும் ஆற்று மணல்....
வாவ்!!!!!!
ரஸித்தேன்.
முள்ளுக்கும் அழகுண்டு - கள்ளி(!) மலர்.
பேரனின் சண்டை போஸ் - ஆஹா... பயம்!
ஒரு வாரத்தில் ஊர் கிளம்புகிறார்களா? 'போர'டிக்குமே...!
குட்டி அரசன் ஜோர்.
கள்ளிமலர் அழகாக பூத்திருக்கின்றது.
தண்ணீர் வருணனை வேண்டுகின்றோம்.
அழகான தலைப்பு, விடைபெறவிருக்கும் விடுமுறை குறித்த வருத்தத்துக்குப் பொருத்தமாய். அட்டைக் கத்தி வீரர் அசத்துகிறார்:)!
ராஜ குமாரியேதான். வெள்ளி மணிகளேதான்! கள்ளியும் அழகு.
பேரன் குறும்பை ரசிக்கும் தாத்தா காட்சி அருமை.
மலர்கள் அழகு.
இன்னும் ஒரு வாரம் தான் இந்த பரபரப்பு. கோபம் தாபம் வருத்தம் சிரிப்பு எல்லாம். பரவாயில்லை இந்தச் சொர்க்கத்தைக் கண்ணில் காட்டும்
கடவுளுக்கு ஏக நன்றி.//
ஆம், கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ஒருவாரம் கழித்து அவர்கள் இருந்த போது கொடுத்த இன்பத்தை நினைத்து மகிழ வேண்டியது தான்.
Post a Comment